About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, February 08, 2014

தை மாதம் 21 1966 மாப்பிள்ளை அழைப்பு ஃபெப்ரவரி 3ஆம்தேதி

ஆஜிப்பாட்டி ஆரத்தி எடுக்கிறார்   இடது  பக்கம் நீண்ட பின்னல் மல்லிகைப் பூவோடு  அம்மா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மலரும்   மங்கையும்  ஒரு ஜாதி                                                                                                                                                                 இரவு  வரும் பகலும் வரும் உலகம்       ஒன்றூதான்                     உறவும் வரும் பிரிவும் வரும் வாழ்க்கை ஒன்றுதான்.             சத்திரத்திற்குக் கிளமப   நேரம் வந்துவிட்டது. சித்தப்பா     மதுரை டி வி எஸ் சில் வேலையாய் இருந்தது ம்   வருங்கால மாமியாருக்கு அவர்கள் நெருங்கின பந்தமாக இருந்ததும் பலவகையில் உதவின. இரு பெரிய வண்டிகள் எங்கள் குடும்பத்துக்காக ஒதுக்கப் பட்டன. இப்பொழுது நன்றியுடன் நினைக்கிறேன்.                                                  கல்யாணப்புடைவைகள் வேஷ்டிகள் மாப்பிள்ளையின்   உடைகள்.சம்பந்திகளுக்கான  சீர்வரிசைகள்  எல்லாம் பக்குவமாக அப்பாவின் கையால் விதவிதமான பெட்டிகளில்  அடுக்கப் பட்டன. எனக்காக வாங்கப்பட்ட சூட்கேஸ். அதில் என் பொருட்கள்.              எதிர்காலக் குடித்தனத்துக்காக அப்பாவும் அம்மாவும் வாங்கிய விதவிதமான  புடைவைகள். அப்பாவுக்கு   தினம் கடிதம் போட விலாசம் எழுதிய  இன்லாண்ட் கவர்கள். நல்ல பேனாக்கள் இரண்டு. படிக்க  எனக்குப் பிடித்த புத்தகங்கள்.பெருமாள் ஸ்ரீராமனின் படம்.  என்று   பல விஷயங்கள்     அப்பவுக்குத் தெரிந்த நண்பர் நாகப்பட்டினத்திலிருந்து அனுப்பிய நீல நிறப் பெட்டி. ட்ரங்குப் பெட்டி.அதில்   ரேவதி நரசிம்ஹன் பெயர் பொறிக்கப்பட்டது.           தம்பி கூடக் கேலி செய்தான். ஏய்  உனக்கு இனிஷியல் மாறவே இல்லை. அப்பவும் என் .ரேவதி. இப்பவும் என்.ரேவதி    என்று.  நானும் பெருமையுடன் சிரித்துக் கொண்டேன்மூன்று நாட்கள் பாடுபட்டுச்  செய்த திரட்டிப்பால்,எட்டு சுற்று முறுக்கு.  முறுக்குகளில் எங்கள் பெயரையும் சுற்றி இருந்தார் பெரிய அத்தை.  எவ்வளவு உழைப்பு இந்தக் கல்யாணத்தில் சென்றிருக்கிறது. ஒருவருக்காவது நன்றி சொல்லி இருப்பேனா.                                     இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பவேண்டிய  பட்சணங்கள்.   வெகு நாளைக்கு ஆஜிப்பாட்டி சொல்லிக் கொண்டிருந்தார்.    உங்க சீனிம்மாப் பாட்டி கைவண்ணமே தனி. திருநெல்வேலிப் பக்குவம் என்று சிலாகித்துக் கொண்டிருந்தார்.   இதைத்தவிர எங்கள் புதுக்குடித்தனத்துக்கு         வேண்டிய பாத்திரங்கள்  .எவெர்சில்வர், பித்தளை வெண்கலம்     என்று  தனிப்பெட்டி.         அம்மாவுக்கு அவருடைய அப்பா கொடுத்தது.   இவையெல்லாம் திருமணம் முடிந்த அடுத்த நாள் சதர்ன் ரோட்வேஸ் லாரியில் புதுக்கோட்டைக்கு அனுப்பப் பட்டன.  என் உடைகள் கொண்ட சூட்கேஸ் என்  கையில் கொடுக்கப் பட்டது.     அப்பா அதிகம் பேசவில்லை. பாட்டி புத்தி மதி சொல்வதை நிறுத்தவில்லை. அம்மாவோ நான் எந்த நேரத்தில் என்ன எடக்கு மடக்காகப் பேசிவிடுவேனோ என்று பயம்..அவர்கள் கவலைப் பட்டிருக்கவே வேண்டாம். வாயே திறக்கவில்லை நான் பாரிஜாதம் சென்ற பிறகு.......

.                    
 சத்திரம் வந்து சேர்ந்தோம்.மதிய உணவு காத்திருந்தது. சத்திரம் கட்டியது திரைத்துறையின் பிரபல கதாநாயகி சாவித்திரி.   எனக்கு அவகள் வீட்டையும் ரங்கராவ் வீட்டையும் பார்க்க ஆசை.   மூச்  இது மாமா. உன் ரூமை விட்டு வெளிவரக் கூடாது.   நாங்கள் கூப்பிடும்போது  வந்தால் போதும். பெரியம்மா  புதுக் குஞ்சலம் வாங்கி வந்திருக்கிறார் அதை வைத்துப்  பூப்பின்னல் போட்டுக்கொள்.மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்ததும் நீ மேடைக்கு வரணும்.          தொடரும்

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள் அம்மா...

கோமதி அரசு said...

பழைய படம் மிக அற்புதம், அம்மாவின் பின்னல் அழகு, அந்த கொடி போன்ற உடலில் அந்த நீண்ட சடையும் பூவும் அழகு.

மலரும் நினைவுகள் அருமை.
தொடர்கிறேன் நினைவுகளை ரசிக்க.

Geetha Sambasivam said...

நீண்ட பின்னல் வெகு அழகு. சென்னையில் தான் கல்யாணமா? தொடர்ந்து பகிர்ந்து வாருங்கள். நாங்களும் தொடர்கிறோம். பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும் நினைவுகள்!

ஸ்ரீராம். said...

மலரும் நினைவுகள் அற்புதம். திருமணத்துக்குப் பின்னும் இன்ஷியல் மாறாத ராசி சிலருக்கு உண்டு. என் மனைவிக்கும் உண்டு! இன்னும் சிலர் திருமணத்துக்குப் பின்னும் அப்பாவின் இனிஷியலையே வைத்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்.

பட்சணத்தில் பெயரா... அட!

ராமலக்ஷ்மி said...

படமும் பகிர்வும் அருமை வல்லிம்மா. தொடரக் காத்திருக்கிறோம்.

Geetha Sambasivam said...

ஶ்ரீராம், பக்ஷணத்தில் பெயர் 1963 ஆம் வருஷம் என் சித்தி (அசோகமித்திரனைக் கல்யாணம் செய்து கொண்டவர்) கல்யாணத்திலேயே எங்க வீட்டில் அறிமுகம் ஆச்சு. :))))))

சாந்தி மாரியப்பன் said...

அற்புதமான நினைவுகள் வல்லிம்மா..

வல்லிசிம்ஹன் said...

தவறாமல் வருகைதரும் தனபாலன்.நன்றி மா. மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி அம்மாவுக்கு வெகு அழகிய முகம். என் திருமணத்தின் போது 37 வயது. அப்பாவுக்குப் பிடித்த மாதிரிதான் நடந்து கொள்வார்.நானும் அந்த மாதிரி மாற முயற்சிக்கிறேன். கூடுமா என்று தெரியவில்லை. நன்றி மா.வளமே வாழ்க.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா.சென்னையில் வைத்துக் கொள்ளச் சொல்லி இவரின் பாட்ட்டி சொல்லிவிட்டார். இல்லாவிட்டால் மதுரைக்கு எல்லோரும் வரணும். எங்க கூட்டம் பெரிசுன்னு சமாதானம் சொல்ல அப்பாவும் சம்மதித்தார்.இரட்டிப்படி செலவு. அம்மாவின் அம்மா,மாமாக்கள் எல்லோரும் நிறைய உதவினார்கள். ஆபட்ஸ்பரியில் திருமணம்னு சொல்லி எஸ்ஜி எஸ் சபா,ஹபிபுல்லா ரோடில் வந்து நின்றது சாய்ஸ். அம்மா என்றால் அழகுதான். ஸ்மைலி போட முடியவில்லை இந்தக் கணினியில்:*}

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். அப்பாவுக்கு எப்பவும் தன் பாதுகாப்பில் பெண் இருக்கவேணும் என்கிற எண்ணம் இருந்திருக்குமோ}}} பாவம். என் தோழி கூடத் தன் இனிஷியலை விட்டுக் கொடுக்கவில்லை. அவளைத் தேட நான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெகு காலம் கழித்தே பயன் கொடுத்தன.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. முடியும் போது தொடருகிறேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சாந்தி. அன்புக்கு மிகவும் நன்றி.

ஸ்ரீராம். said...

//ஶ்ரீராம், பக்ஷணத்தில் பெயர் 1963 ஆம் வருஷம் என் சித்தி (அசோகமித்திரனைக் கல்யாணம் செய்து கொண்டவர்) கல்யாணத்திலேயே எங்க வீட்டில் அறிமுகம் ஆச்சு. :))))))//


அப்போ சொல்லிடலாம் இன்னொரு "அட!"

கோமதி அரசு said...

அம்மா படங்கள் தான் நீங்கள் பகிர்ந்து இருக்கிறீர்களே! மிக அழகாய் இருப்பார்கள் வயதான பின் கூட அவர்கள் அழகுதான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி. மறந்துவிட்டேன். நன்றி அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :
அன்பின் பூ - இரண்டாம் நாள்

வெங்கட் நாகராஜ் said...

இனிய நினைவுகள்.... எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். இந்தத் தக்க சமயத்தில் சேதி சொல்வது மிக இனிமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். இதை எழுதுவதும் சிலசமயம் வருத்தம் தருகிறது. அதையும் மீறித்தான் பிடிவாதமாக பதிவிடுகிறேன். நீங்கள் எல்லாம் பின்னூட்டமிட்டு உதவி செய்வது ஒரு ஆறுதல்.