Monday, November 02, 2009

விழா புதுசு மனசு பழசு

திருப்பரங்குன்றம்
பைபாஸ் ரோட்மதுரை டவுன் ரோடு


ஒரு கிராம ரயில் நிலையம் .பசுமலைசதங்கா அழைப்பு விடுத்து வெகு நாட்கள் சென்று விட்டன. தாமதத்திற்கு மன்னிக்கணும் சதங்கா.


சதங்கா கேட்டிருக்கும் முதல் கேள்வி

1,உங்களைப் பற்றிச் சிலவரிகள்.
-----------------------------------------------------------------


பெரிய நோட்டுப் புத்தகங்களில் கிறுக்கிக் கொண்டிருந்ததைப் பதிவுகளில் எழுதலாமே என்று நினைத்தாதுதான்.

தந்தை பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பின் வரும் தலைமுறைக்காக. முடிக்கவில்லை. முடிக்க முடியவில்லை.
இப்பொழுது நான் எழுதுவதைப் பிற்கால குடும்ப அங்கத்தினர்கள் யாராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கை.

2,தீபாவளி என்றதும் நினைவுக்கு வரும் மறக்க முடியாத சம்பவம்.....
-------------------------------------------------------------------------------------------------------------------------------நாங்கள் எல்லாரும் உறங்கிய பிறகு அம்மாவும் அப்பாவும் எங்கள் தீபாவளிப் புதுத்துணிகளுக்கு மஞ்சள்,குங்குமம் வைப்பதும், அடிக்குரலில் அடுத்த தீபாவளிக்கு இன்னும் நல்லதாக உடைகள் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று பேசிக்கொள்வது,.
அம்மாவுக்கு எப்பவும் ஒரு சின்னாளப்பட்டுச் சேலைதான். அப்பாவுக்கு அதே எட்டு முழம் வேஷ்டியும் ஒரு பூத்துவாலையும்.

மறக்க முடியாதவற்றை எழுதத் தனிப் பதிவு போடவேண்டும்.:)3, 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருந்தீர்கள்/இருப்பீர்கள்.
------------------------------------------------------------------------------------------------------------

தருமமிகுச் சென்னையில் தான்.

4,தற்போது இருக்கும் ஊரில் தீபாவளி கொண்டாடும் முறையைப் பற்றி?
---------------------------------------------------------------------------------------------------------------------------

ஆளுக்கொரு தரைச் சக்கரம், இரண்டு சீனிச்சரம், புஸ்வாணம், கம்பி மத்தாப்புகள் வெடித்துவிட்டு மற்றதைப் பார்க்க வரும் சிறுவர்களுக்குக் கொடுத்துவிடுவது.
போன வருடம் சிகாகோவில் பட்டாசு வெடிக்காதபோதும் குழந்தைகளோடு இருந்ததால் ஆனந்தம் கொண்டாடியது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டியக் காலத்தின் கட்டாயத்துக்கு வந்துவிட்டது.

எல்லோரிடமும் மணிக்கணக்கில் வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டது.

5,புத்தாடை எங்கு வாங்கினீர்கள், தைத்தீர்கள்.?
-----------------------------------------------------------------------------

நல்லியில் புடவை பட்டும் பருத்தியும் கலந்தது.

சிங்கத்துக்கு வேஷ்டியும் ஆயத்த உடை சட்டையும்.

6,உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள், வாங்கினீர்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------

செய்தது ஓமப்பொடியும்,க்ஷீரா எனப்படும் கோதுமை மாவு கேசரியும், வாங்கினது மிக்ஸரும்,லட்டுவும் மற்றவருடன் பகிர்ந்து கொள்ள.

7,உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துகள் எவ்வாறு தெரிவிக்கிறீர்கள்.?
---------------------------------------------------------------------------------------------------------------

முக்கால்வாசி தொலைபேசி.
இணையத்துக்குப் பதிவின் மூலம்.

ஈமெயில் வாழ்த்துகளும் உண்டு.
பெரியவர்களை நேரில் சென்று வணங்குவதும் வழக்கம்.
8,தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா
---------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டும் தான். வெளியே மற்றவர் வீட்டுக்குப் போனாலும் அவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி இருப்பார்கள்:))))

9,இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?
------------------------------------------------------------------------------------------------------
வீட்டில் நமக்கு உதவியாக இருப்பவர்கள் குடும்பங்களுக்கு புத்தாடைகளும் ,பட்டாசும் தருவது வழக்கம்.
அதைத்தவிர உதவி கேட்டு வருபவர்களுக்கும் கொடுப்பதுண்டு.
10,நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
****************************************************************
அனைவரும் எழுதலாம். ஏனெனில் எல்லோரும் எழுதி முடித்திருப்பார்கள்.
நான்தான் கடைசி என்று நினைக்கிறேன்.
நன்றி சதங்கா. உங்களால் ஒரு டைம் மெஷின் எனக்குக் கிடைத்தது. நினைவுகளில் மூழ்கி எழுந்திருக்க இன்னோரு சந்தர்ப்பம். அனைவருக்கும் நன்றி.
சக்கரவர்த்தினி என்று முடிசூட்டிய சீனா ஐயாவுக்கும் நன்றி.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.