Blog Archive

Sunday, May 28, 2006

சில கனவுகள் சில நனவுகள்

Posted by Picasa தேன்நிலவு படம் வந்த போது நாங்கள்
பள்ளிப்படிப்பை முடித்திருக்கவில்லை.
காஷ்மீர் காட்சிகள், ஹவுஸ் போட்,வைஜயந்திமாலா,ஜெமினி கனேஷ்,தங்கவேலு என்று ஒரு அற்புதமான கதையுடன் பொழுதுபோக்கு சித்திரமாக இந்தப் படம் வந்த போது காஷ்மீரைக் கண்டு மயங்காதவர்கள் கிடையாது.


எல்லோருக்கும் கல்லூரியைப் பார்ப்போமா என்று தெரியாது. ஆனால் திருமணம் என்பது சீக்கிரம் நடக்கும் என்று மட்டும் தெரியும்.
அதனால் 11 ஆவது வகுப்பு தேர்வுகள் முடிந்து தோழிகளின் பட்டாளமே கூடி, அப்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த புதிய பறவை பார்த்து விட்டு வந்தோம்.
எல்லோருக்கும் சோகம். படமும் சுபமாகப் போகவில்லை.
எங்களுக்கும் நாயக நாயகி(எங்கள் இஷ்டப்படி) சேராததால் திருப்தி இல்லை.
அப்போதைக்குஎங்களுக்கு ஆதரவு சொல்லி மகிழ்ச்சியைக் கொடுத்தது 2 வருடம் முன்னால் பார்த்த "ஓஹொ எந்தன் பேபி "காட்சிகள் தான்.
அந்தக் கணத்தில் முடிவு செய்தோம். திருமணம் முடிந்ததும் தேன் நிலவு போக வேண்டும். ஏதாவது மலை பிரதேசமாக இருக்க வேண்டும். குதிரை சவாரி, போட்டிங் எல்லாம் செய்து விட்டு , முடிந்தால் டூயட் பாடிப் பிறகு தான் சமையல் அறைக்குள் நுழைவது என்று.


பதினைந்து வயதில் அவ்வளவு தான் கற்பனை.
திருமணத்தைப் பற்றி மேற்கொண்டும் ஒன்றும் தெரியாது
அதனால் தான் எங்கள் தலை முறையில் அதுவும்
தென் மாவட்டங்களில் பெற்றவர்கள் பேச்சுக்கு மறுபேச்சும் கிடையாது.


என் தோழிகளில் சிலர் திருமணம் முடிந்தே ஸ்கூலுக்கு வந்தார்கள். நிறையப் படிக்க நினைத்த நான், கல்லூரியில் ஒரு வருடத்துடன் திருமண வாழ்வில் புதுக்கோட்டை வந்தேன்.

பட்டம் முடித்த தோழி 4 வருடங்கள் கழித்து காஞ்சிபுரம் அருகெ ஒரு கடை முதலாளீயை மணம் முடித்தாள். இன்னொருவள் எங்கள் ஊருக்கும் மிஞ்சிய கிராமம் ஒன்றில் வயல்வெலி, மாடுகள் என்று குடி சென்றாள்.
15 வருட இடைவெளிக்குப் பிறகுத் தங்க மாளிகையில் ஒரு சினேகிதியை வங்கி மேலாளராகப் பார்த்து பிரமித்தேன்.

இவர்கள் ,என்னையும் சேர்த்து ஒருவருக்கும் எங்கள் திட்டமும் நினைவு இல்லை. ,தேன்நிலவுபோக வேண்டும் என்ற எண்ணமும் பொய்யாய்ப் போய் விட்டது.
பிறகு எதற்கு இந்த தலைப்பு/?


இது நாங்கள் இருவரும்(புருசனும் பொஞ்ஜாதியும்)
திருமணம் முடிந்து30 வருடம் கழித்து, சுவிட்சர்லாந்துக்குப் போகும் எதிர்பாராத பயணம் அமைந்தது, எங்கள் மகன் அங்கே வேலையாகிப் போன போது.
அப்போது அவன் வீட்டிலிருந்து எடுத்த புகைப்படம் இது.
20 வயதில் போயிருந்தால் கூட இத்தனை நிதானமாக அனுபவிக்க முடிந்திருக்காது. ஓட முடியாத, முழங்கால் கெஞ்சும் நேரம், நின்று தான் எல்லா காட்சிகளையும் கண்டோம்.

இப்போதும் கனவு காண நான் ரெடி. யோசித்து எந்த மண்டலத்துக்குப் போகலாம்னு பார்க்கிறேன்.நீங்க தான் சொல்லுங்களேன்.





Tuesday, May 23, 2006

SRI வஞ்சுளாவல்லி ஸமேத ஸ்ரீனிவாசன்

Posted by Picasa இவர்களை எழுந்தருளப்பண்ணும் போதுதான் ஸ்ரி பக்ஷிராஜனுக்கு கனம் கூடுகிறது.
ஆனைகள் அரசன் கஜேந்திரன் ஆதிமூலமே என்று கதறிய போது பெருமாள் கருடனின் வேகத்தைக் குறைத்து மதிப்பிட்டு விட்டாராம்.பக்தனுக்கு உதவி செய்ய கருடனின் மேலிருந்து இறங்கி விரைந்து பூமியைப் பார்த்து வந்து சக்கிர ஆயுதைத்தை முதலையின் மேல் பிரயோகித்து அந்த தருண பகவானாகக் காட்சி அளிக்கிரார்.
அதனால் அதற்குப்பிறகு கருட மூர்த்தி பெருமாளையும் தாயாரையும் கையிலேயெ ஏந்திகொண்டுவிட்டாராம்.
உன்னை என்மேல் ஏற்றீக்கொண்டால் தானெ இற்ங்குவாய்.
இதொ சிக்கெனப் பிடித்தேன் என்று சொல்வது போல் கைகளில் ஏந்திக் காட்சி அளிக்கிறார்.

Sunday, May 14, 2006

நாச்சியார்: ETHIR SEVAI

நாச்சியார்: ETHIR SEVAI
லின்க்- நாச்சியார் என்று இருப்பது எவ்வளவு பொருத்தம். ஸ்ரிவில்லிபுத்தூர் ஆண்டாள் தன்னை , மாலை சூடிய கோலத்தில் ஸ்ரி வடபத்ரசாயீ பார்க்க வேண்டும் என்று நினைத்து கிணற்றில் தன் உருவத்தை பார்த்து கொள்ளுவாளாம்.
இப்போது அவளது பக்தி மாலையோடு,மணமிக்க மாலையும், திருப்பதி,ஸ்ரிரங்கம் எல்லா திவ்ய தேச பெருமாள்களின் தோள்களை அலஙகரிக்கின்றன.
அதில் ஒரு நாள் மதுரை கள்ளழகரின் எதிர்சேவை அன்று அவர் உவந்து ஏற்கும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர்மாலையைச் சூட்டிக்கொண்டு கம்பீரமாக வரும் அழகு இதொ.

ETHIR SEVAI

 Posted by Picasa

Thursday, May 11, 2006

பெண்!

Posted by Picasaபரிவு, பிரிவு,கூடியிருத்தல்,சமாதானம் , சண்டை,விழைவு, வெறுப்பு எல்லாம் ஒன்று சேர்ந்த உருவம் தான் பெண் என நான் நினைக்கிறேன்.
இவ்வளவு பண்புகள் நிறைந்த complex வடிவு
எல்லா உணர்வையும் வெளிக்காட்ட முடியாமல்
போகும்போது சில சமையம் தேவதை யாகவும் சில நேரம் பத்ரகாளியாகவும் மாறுவது முன்னால் நிற்பவரின் அதிர்ஷ்டம் தான். வாழ்க பெண்களூம் அவர்களுடன் அவர்களால் உருவாக்கப் பட்ட மற்றவர்களும்.
அன்னையர் தின வாழ்த்துக்கள். எல்லா தினமும் நம் தினம் தானே?

Monday, May 08, 2006

sholingar yoga nrisimhan

sreemath bayonidhi nikethana chakrapaane
bogeendra bogamani ranjitha punya moorthe
yogeesa saaswatha saranya pavarthi bootha
lakshminrisimha mama dhehi karaavalambam
.
Ahobilae gaaruda saila

madhye
krupaavasaath
kalpitha sannidhaanam
lakshmiyaa samalingitha vaamabaakam
lakshminrisimham charanam prapathye. Posted by Picasa

Thursday, May 04, 2006

SRI KAAMAKSHI


ஸ்ரி காமாட்சி அம்மாவை சொல்ல நினைக்கும் போதே மகிழ்ச்சி வருகிறது. தன் மக்களை கருணைக்கண்ணால் பார்த்து அவர்களுடைய குறைகளை நீக்கி நல் வாழ்வைத் தரும் தாய்.
எம்.எஸ் அம்மா பாட்டைக்
கேட்டுதான் காஞ்சி அம்பாள் மேல் அதிகமாக பற்று வந்தது. ஸ்ரி காஞ்சி நடமாடும் தெய்வமாக அப்போது இருந்த ஸ்வாமிகளைப் பார்க்கப் போகும்போது இன்னும் அதிகமாகியது.
நமது நம்பிக்கை வளரும் விதமாக சில சமயங்களில் நடக்கும் மஹிமைகள் நம்மை மேலும் அவளுடைய ஆட்சியில் இழுத்துக்கொள்ளும்.
இதுவரை நாங்கள் காஞ்சிக்கு 4 அல்லது 5 தடவை தான் போய் இருப்போம்.
ஸ்ரி வரதராஜனும், காமாட்சியும் எங்களைப் பார்வை இடாமல் அனுப்ப மாட்டார்கள். எப்போதும் வேண்டும் இந்தக் கருணை.