அக்டோபர் 31.
இன்றோடு 60 வருடங்கள் பூர்த்தியாகித் தொடர்கிறது எனக்கும் சிங்கத்துக்குமான
மானசீக உறவு.
இப்போதும் அவர் எப்போதும் விரும்பும் பாடல்களைக் கேட்டுக்கொண்டு
அவர் இங்கிருந்தால் எத்தனை இனிமையாக இருந்திருக்கும் என்று எண்ணி
இதுவும் கடக்கும் என்று நடந்து கொண்டிருக்கிறேன்.
இதைப் பரிபூரணம் என்று சொல்லாவிட்டாலும்
மறுபாதியாக அவர் நினைவு என்னிடம் எந்தத் தருணத்திலும்
இருந்து கொண்டே இருக்கிறது.
ஆதரவாக என்னைச் சுற்றி இருந்தவர் சட்டென விலகினாலும்
ஒரு சிறு சிரமம் கூட அனுபவிக்காமல்
மறைந்தார்.
மீண்டும் நாங்கள் சந்திப்போம் நம்பிக்கையுடன்.
அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.
5 comments:
அம்மா... அவர் இப்போதும் உங்கள் நினைவுகளில் இருந்து கொண்டேதான் இருக்கிறார் இல்லையா?
நீங்கள் பகிர்ந்துள்ள மிக இனிமையான நெய்னா பர்ஸே பாடல் இங்கு தளத்தில் வரவில்லை. பாடல் என்ன என்று கண்டுபிடித்து கேட்டேன்!
//இன்றோடு 60 வருடங்கள் பூர்த்தியாகித் தொடர்கிறது எனக்கும் சிங்கத்துக்குமான
மானசீக உறவு.//
ஆண்டுகள் கடந்தும் அன்பு நிலைத்து இருக்கும் அக்கா.
பாடல் வரவில்லை ஆனால் யூடியூப் போய் பாடலை கேட்டேன் நல்ல பாடல். நினைவுகள் இனிமையானது.
https://www.youtube.com/watch?v=9w5iETwBs2o
வணக்கம் சகோதரி
தங்களின் வருத்தம் புரிகிறது. ஆண்டுகள் பலவாயினும், நினைவுகளை என்றும் அழிக்க முடியாது. பதிவை படிக்கையில் மனம் கனத்துப் போனது. கண்டிப்பாக உங்களவர் உங்களுடனேதான் இருக்கிறார். கவலைப்படாதீர்கள். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மன தைரியத்துடன், நோயில்லாமல் ஆரோக்கியத்துடன் வல்லிம்மா வாழ்க்கை தொடர ப்ரார்த்தனைகள்
//மறுபாதியாக அவர் நினைவு என்னிடம் எந்தத் தருணத்திலும்
இருந்து கொண்டே இருக்கிறது.// உங்கள் இருவருக்கான நேசம் புரிகிறது __/\__
Post a Comment