இ
லக்கியத்தின் ஆளுமை!
*****************************
கம்ப ராமாயணம் - அயோத்தி காண்டம் - நகர் நீங்கு படலம் 129 வது பாடல்
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது? என்றான்.
ராமன் காட்டுக்கு செல்ல இருப்பதை தெரிந்து கொண்ட லக்ஷ்மணன் கோபத்தால் அனைவரையும் பழி வாங்குவேன் என்று சூளுரைப்பதை கேட்கும் ராமன், லக்ஷ்மணனுக்கு அறிவுரை கூறுவது போல இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது. நதியில் நாம் நீராட செல்லும் போது நதியில் நீரில்லாமல் வற்றி போய் விட்டால் அதற்காக நதியின் மீது கோபம் கொள்ளலாமா, அது நம் விதி என்று எண்ணிக்கொள்ள வேண்டும் என்று ராமன் அறிவுரை கூறினான்.
கவிசக்கரவர்த்தி கம்பர் எழுதிய இந்த பாடலை பாமரனுக்கும் புரியும் வண்ணம் கவியரசர் கண்ணதாசன் "தியாகம்" திரைப்படத்தில் "நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி" என்ற பாடலில் அழகாக எடுத்து சொல்லியிருப்பார். அந்த வரிகள்....
"நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா"...
செய்யாத குற்றத்திற்காக, வாழ்க்கையை இழந்து நிற்கும் நாயகன், தன் மன வேதனையை வெளிப்படுத்தும் பாடல் இது...
"பறவைகளே பதில் சொல்லுங்கள்...மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்"...
"தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே...
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே"...
அற்புதமான வரிகள் இவற்றினை கவியரசரை போன்ற ஞானிகளாலன்றி வேறு யாராலும் எழுத முடியாது!
மிக சிறப்பான சொற்றொடரில், மனதை தொடும் அருமையான பாடல்!
Viji
3 comments:
ஆம். எனக்கும் மிகவும் பிடித்த பாடல் அது. அந்தப் பாடல் வரிகளை கம்பராமாயணப் பாடலோடு தொடர்பு படுத்தி சொல்லி இருப்பது சிறப்பு. நன் கரா படித்ததில்லை. படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் உண்டு. மனதில் ஏறாது என்று பயம்!
அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
சில பெரியவர்களின் உதவியால் கம்ப ராமாயணம் சில நாட்கள்
கற்க பாக்கியம் கிடைத்தது.
மேலே இருக்கும் ஃபார்வர்ட் தங்கை அனுப்பியது.
கண்ணதாசன் இலக்கியத்திலிருந்து
கருத்துகளை நமக்குக் காட்டியது
நம் அதிர்ஷ்டம்.நன்றி மா.
அருமையான பாடல். கம்பராமாயணப் பாடலோடு அழகா சொல்லியிருக்கீங்க. தவறு செய்யாமல் தண்டனை அனுபவிப்பது பலர் வாழ்க்கையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஏன் இப்படி என்ற கேள்விகளுக்கு விடை இல்லை.
பதிவை ரசித்து வாசித்தேன் அம்மா...
கம்பராமாயணம் கொஞ்சம் வாசித்ததுண்டு. பாடல்கள் நினைவில்லை...ஆனால் பொருள் ஏறியதுண்டு. முழுவதும் வாசிக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. இணையத்தில் இருக்கிறது
கீதா
Post a Comment