நட்புகள் அனைவரிடமும் என் அன்பு விசாரிப்புகளைச்
சொல்லிக் கொள்கிறேன்.
எழுதும் காலம் ஒன்றிருந்தது போல
ஓயும் காலமும் இருக்கிறது.
நடந்த நல் நிகழ்வுகள், மனத்தில் எழுதிக் கொண்ட சம்பவங்கள்
பல பதிவுகளுக்கு ஆதாரமாகி இருக்கும்.
போதும் என்ற எண்ணமே வலைப் பக்கம் வராமல் தடுக்கிறது.
என்றும் உற்சாகத்தோடு வலம் வந்து அனைவரையும் நேசித்த என் கணவருக்கு
83 வயது பூர்த்தியாகிறது.
என்னுடனேயே ஒன்றி இருப்பதால்
வாழ்த்துகளைச் சொல்லி,
எங்கள் மக்களை அன்புடன் பாதுகாப்புடன்
வழி நடத்திச் செல்ல அவரிடம் பிரார்த்திக்கிறேன்.
வல்லிசிம்ஹன்
8 comments:
சிங்கத்தின் பிறந்தநாளை நினைவுகூர்ந்தது சிறப்பு. அவரின் நல்லெண்ணம் உங்கள் எல்லோரையும் வழிநடத்தும்.
அனுபவத்தை எழுதுவதற்கு எதற்கு போதும் என்ற மனநிலை? தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கவேண்டும்.
சாருக்கு பிறந்த நாள் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.
என்றும் குடும்பத்தினரை வாழ்த்தி வழி நடத்தி செல்வார்கள்.
உங்கள் விசாரிப்புகளுக்கு நன்றி.
முடிந்த போது எழுதுங்கள் அக்கா.
வணக்கம் சகோதரி
நலமா? பதிவு நன்றாக உள்ளது. தங்கள் கணவருடன் வாழ்ந்த வாழ்வை மறவாமல் ஒவ்வொரு நொடியும் அவரை மனதில் இருத்தி வைத்துக் கொண்டேயிருக்கும் உங்களுக்கு என் அன்பான வணக்கங்கள். உங்கள் கணவர் இத்தகைய நற்பண்புகள் கொண்ட உங்களை விட்டு பிரியாமல் கண்டிப்பாக உங்களுடன்தான் வாழுகிறார்.கண்டிப்பாக உங்கள் குடும்பத்தை நேசித்து அனைவருக்கும் உறுதுணையாய் இருப்பார்.அதில் ஐயமேதுமில்லை. அதுபோல் தங்களின் எழுத்துக்கள் என்றும் ஜீவனுள்ளது.அந்த அன்பான எழுத்துத் திறமைக்கும் தலை வணங்குகிறேன். உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்று இயன்றவரை எழுதுங்கள் அம்மா.
அம்மா. ஓய்வெடுங்கள். ஆனால் வலைப்பக்கம் வராமலிருக்க வேண்டாம். இடைவெளி விட்டாவது வந்து செல்லுங்கள். எங்களுக்கும் உற்சாகம் வேண்டுமல்லவா?
அனைவரையும் நேசித்த உங்கள் கணவரை வணங்குகின்றோம்.
என் நமஸ்காரங்கள்! மானசீகமாக....
கண்டிப்பாக வழிகாட்டியாக இருப்பார் அம்மா உங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும்...
கீதா
எங்கள் நமஸ்காரங்கள். என்றென்றும் உங்களையும், குடும்பத்தினரையும் வழிநடத்திக் கொண்டிருப்பார்.
Post a Comment