Blog Archive

Monday, February 06, 2023

அழகன், குமரன், கந்தன், ...............................

வல்லிசிம்ஹன்

 கதிர்காமம்கந்தன்









 கோவில்

கதிர்காமம் கோயில் (Kataragama temple,) இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இலங்கையின் உள்ள சமயத் தலங்களில் ஒன்றான இது தமிழர்கள், சிங்களர், சோனகர் மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் வழிபடப்படுகிறது.

இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் தமிழ் இந்துக்கள் இந்த இடத்தை கதிர்காமம் என்று குறிப்பிடுகின்றனர். கதிர்காமன் சைவக் கடவுளான முருகனுடன் தொடர்புடைய பெயராகும். தென்னிந்தியாவின் சைவ இந்துக்கள் இவரை சுப்ரமண்யர் என்றும் அழைக்கிறார்கள். இவர் கந்தசாமி, கதிரதேவன், கதிரவேல், கார்த்திகேயன், தாரகாசிதன் என்று அழைக்கப்படுகிறார். இந்த பெயர்களில் சில கதிர்காமத்திலிருந்து வேரான கதிரிலிருந்து பெறப்பட்டவை. "கதிர்" என்றால் உருவமற்ற ஒளி எனப்பொருள். தெய்வம் ஆறு முகங்கள் மற்றும் பன்னிரண்டு கைகள் அல்லது ஒரு முகம் மற்றும் நான்கு கைகளால் சித்தரிக்கப்பட்டுள்ளது. முருகன் மீதான அன்பின் காரணமாகவும், வினைப்பயன்களைத் தீர்ப்பதற்காகவும், பக்தர்கள் தம் கன்னங்களிலும், நாக்கிலும் கூரிய வேல்களால் குத்திக் கொண்டு, முருகன் சிலையைச் சுமந்து செல்லும் பெரிய தேர்களை பெரிய கொக்கிகள் கொண்டு முதுகின் தோலால் துளைத்துக் கொள்வார்கள். இந்த நடைமுறை அலகு குத்துதல் (காவடி) என்று அழைக்கப்படுகிறது.



இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் தமிழ் இந்துக்கள் இந்த இடத்தை கதிர்காமம் என்று குறிப்பிடுகின்றனர். கதிர்காமன் சைவக் கடவுளான முருகனுடன் தொடர்புடைய பெயராகும். தென்னிந்தியாவின் சைவ இந்துக்கள் இவரை சுப்ரமண்யர் என்றும் அழைக்கிறார்கள். இவர் கந்தசாமி, கதிரதேவன், கதிரவேல், கார்த்திகேயன், தாரகாசிதன் என்று அழைக்கப்படுகிறார். இந்த பெயர்களில் சில கதிர்காமத்திலிருந்து வேரான கதிரிலிருந்து பெறப்பட்டவை. "கதிர்" என்றால் உருவமற்ற ஒளி எனப்பொருள். தெய்வம் ஆறு முகங்கள் மற்றும் பன்னிரண்டு கைகள் அல்லது ஒரு முகம் மற்றும் நான்கு கைகளால் சித்தரிக்கப்பட்டுள்ளது. முருகன் மீதான அன்பின் காரணமாகவும், வினைப்பயன்களைத் தீர்ப்பதற்காகவும், பக்தர்கள் தம் கன்னங்களிலும், நாக்கிலும் கூரிய வேல்களால் குத்திக் கொண்டு, முருகன் சிலையைச் சுமந்து செல்லும் பெரிய தேர்களை பெரிய கொக்கிகள் கொண்டு முதுகின் தோலால் துளைத்துக் கொள்வார்கள். இந்த நடைமுறை அலகு குத்துதல் (காவடி) என்று அழைக்கப்படுகிறது.

அழகன், குமரன், கந்தன், கடம்பன், கார்த்திகேயன், கதிர்வேலன், கதிர்காமன் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் தமிழ்க்கடவுள் முருகனுக்கு மிகவும் உகந்த நாள் தைப்பூசம். மாதம்தோறும் வரும் பூசம் சிறப்புதான் என்றாலும் தைப்பூச நாளுக்குத் தனிச்சிறப்பு உண்டு. சூரியன் வட திசைப் பயணம் முடித்து, தென் திசைப் பயணம் தொடங்கும் உத்தராயன காலத்தின் தொடக்கமான தை மாதத்தில் வரும் முதல் பூசம்..

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியின் அம்பாந்தோட்டையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கதிர்காமம். வேட்டுவ குலப் பெண்ணான வள்ளியை காதலித்துக் கரம் பிடித்த இடமாகச் சொல்லப்படுகிறது. கதிர்காமம் முருகன் கோயிலில் சிங்களர்களும் வழிபடுகிறார்கள்.வைகாசி விசாகத்தில், சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளிலிருந்து அவதரித்த முருகக் கடவுள்.

கார்த்திகை மாதத்தில் அன்னை சக்தியின் அணைப்பால் ஒருவராகி, தைப்பூசத்தில் தன் அன்னையிடம் வேல்வாங்கி( புராணத்தில் பார்வதி என்றும், சில சங்க இலக்கிய நூல்களில் கொற்றவை என்றும் சொல்லப்படுகிறது) ஐப்பசி சஷ்டியில் அசுரனை அழித்து, பங்குனி உத்திரத்தில் வள்ளியை மணம் முடித்தான் நம் வேலன்.

இந்தத் தைப்பூச நன்னாளில் முருகப்பெருமானுடைய வேலின் ஒளியாகத் திகழும் கதிர்காமத்தில் இருக்கும் கந்தக் கடவுளின் திருக்கோயிலை தரிசிப்போமே...

முருகன் வள்ளியைச் சந்தித்து காதல் கொண்டு, கரம் பற்றிய இடம் தொண்டை மண்டலத்தில் உள்ள வள்ளிமலை என்றுதான் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஈழத்தமிழர்களின் நம்பிக்கையோ வேறு மாதிரியாக இருக்கிறது.

'முருகன் பிறந்தது வேண்டுமானால் தமிழ்நாட்டில் இருக்கலாம். ஆனால், மணம் முடித்தது கதிர்காமத்தில்தான். எனவே, முருகன் ஈழத்து மாப்பிள்ளை' என்கிறார்கள் ஈழத்தமிழர்கள்.

கதிர் என்றால் ஒளி; காம என்பது கிராமத்தின் திரிபு. வேலவனின் வேலின் ஒளியாகத் திகழும் கிராமம்தான் கதிர்காமம்.

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியின் அம்பாந்தோட்டையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கதிர்காமம். வேட்டுவ குலப் பெண்ணான வள்ளியை காதலித்துக் கரம் பிடித்த இடமாகச் சொல்லப்படுகிறது. கதிர்காமம் முருகன் கோயிலில் சிங்களர்களும் வழிபடுகிறார்கள்.

அருணகிரிநாதர் " வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே" என்று பாடியிருக்கிறார்.






9 comments:

வல்லிசிம்ஹன் said...

கந்தன் கதிர்காமம் உறை முருகன் பற்றிய செய்திகள்
இணையத்தில் இருந்து எடுக்கப் பட்டது. நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரி

ஸ்ரீராம். said...

தமிழ்நாட்டிலேயே ஆறுபடை வீடுகளில் மூன்றை நான் இன்னும் தரிசித்தது இல்லை.  என் இஷ்டதெய்வம் முருகன் என்று பெயர்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார்,
என்றும் வளமுடன் இருங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
மனசால் எல்லா இடங்களுக்கும் போக வேண்டியதுதான்.

உடல் நலம் சிறப்புடன் இருந்தால்
எல்லா வேலைகளும் இறைவன் அருளால்
செல்ல முடியும் அப்பா.
ஆரோக்கியத்துடன் இருக்க அவனே அருள்வான்.
நன்றி மா.

கோமதி அரசு said...

கதிர்காமம் சென்று வந்த நினைவுகள் மனதில் மலர்கிறது.பிடித்த பாடல், கேட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கச்சி,
வாழ்க வளமுடன்.
நீங்கள் கதிர்காமம் சென்றிருக்கிறீர்களா.
மிக மிக மகிழ்ச்சி மா.

ஆதி நாட்களிலிருந்து முருகன் மிகப் பிடிக்கும்.
என்றும் இறைவன் அருளே காக்கும்.

மாதேவி said...

கதிர்காமம் திரைமறைவில் முருகனுக்கு பூசை.முருகன் வள்ளியை மணம் புரிந்த இடம் (கதிர்காமக் குன்றில்)என்றுதான் வரலாறுகள் சொல்கின்றன.நீங்களும் கூறியுள்ளீர்கள்.

நாங்கள் சிறிய வயதில் கதிரமலைக்குன்று ஏறிச் சென்று வணங்கி இருக்கிறோம். சிறிய வேல் வைத்து பூசை . இக்குன்றுக்கு அருகே காட்டுப் பாதை சிறிய குன்றில் வள்ளிமலை. வள்ளிக்கு கோவில் இருந்தது. இப்போது எல்லாம் மாற்றலாகி புத்தர் அதி உச்சியில் கோவில்கொண்டுவிட்டார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
என்றும் வாழ்க வளமுடன்.
திரை மறைவில் திருமணம் என்பதையும் திரையை விலக்க மாட்டார்கள்
என்பதையும் இன்னோரு தோழி சொல்லி இருந்தார்..

அக்கறை எடுத்துப் படித்துக் கருத்தும் சொல்கிறீர்கள்.
நம் திருத்தணியிலும் வள்ளி மலை இருக்கிறது. உல்லாசப்
பயணமாகச் சென்றிருப்பார்களோ!!!
மிக மிக நன்றி மா.

''சிறிய குன்றில் வள்ளிமலை. வள்ளிக்கு கோவில் இருந்தது. இப்போது எல்லாம் மாற்றலாகி புத்தர் அதி உச்சியில் கோவில்கொண்டுவிட்டார்.''கால மாற்றம்.