வல்லிசிம்ஹன்
அமாவாசை ,திருவோண நட்சத்திரம் சேர்ந்து வரும் நாள் அம்மாவுக்கு 94 வயது
பூர்த்தியாகிறது.
நான் இப்போது நினைப்பதெல்லாம்,
;நல்ல வேளை நிறைய சிரமம் பார்க்காமல்
போய் சேர்ந்தாள் என்பதை மட்டும் தான்.
சிரித்த முகத்துடன் மகாலக்ஷ்மியாக இருந்த
அம்மா,
எத்தனையோ சோதனைகளுக்கு நடுவில் தான் புன்னகை முகம்
காட்டினார்.
அசராத மனோ தைரியம், சலிக்காத கடவுள் பக்தி,
கணவரின் மேல் வைத்திருந்த நம்பிக்கை,
குழந்தைகளின் மேல் திடமான பாசம்
சிக்கன வாழ்க்கை, தினமும் கணக்கு எழுதும்
வழக்கம், ஹிண்டு பேப்பரை அத்தனை பக்கங்களில் வரும்
செய்திகளையும் மதிய தூக்கத்துக்கு முன் படிக்கும் சாமர்த்தியம்
தினமும் அலுக்காமல் சமைக்கும் அழகு, அவளைச் சுற்றீ
அத்தனை பொருட்களும் மின்னும்.
அவ்வளவு சுத்தம். சோம்பல் என்ற வார்த்தைக்கு
அர்த்தமே தெரியாது.
இப்போது எழுதும் இந்தப் பதிவை அவள்
உயிருடன் இருக்கும் போது எழுதிக் கொடுத்திருந்தால்
மகிழ்ச்சியுடன் கொஞ்சம் வெட்கப் பட்டிருப்பால்.
இனிய பிறந்த நாள்.வாழ்த்துகளும், வணக்கங்களும் அம்மா.
நீயே எப்பொதும் துணை.
10 comments:
அம்மாவின் நினைவுகள் அருமை.அம்மாவுக்கு வணக்கங்கள்.
Our humble prostrations Valli.
அம்மான்னா அம்மாதான் இல்லையா? குறிப்பிட்ட என்றதில் குடும்பத்தின் தேவைகளை கவனித்து அப்புறம் மற்ற வேலைகளையும் பார்த்து... வணக்கங்கள்.
அம்மாவின் நினைவுகள் எப்போதுமே மனதிற்கு மகிழ்வளிப்பவைதான் இல்லையா? எப்போதும் உங்களுடனே இருப்பாங்க...மேலே மகிழ்ச்சியாக இதைப் பார்த்துக் கொண்டிருப்பாங்க....உங்கள் குழந்தைகள் அவங்க குழந்தைகள் எல்லாரையும் வாழ்த்திக் கொண்டும் இருப்பாங்க!
கீதா
உங்கள் தாயை நன்கு வெளிக்காட்டி உள்ளீர்கள்.வணங்குகின்றோம் உங்கள் அன்னையை.
அன்பின் கோமதி மா,
என்றும் வாழ்க வளமுடன்.
நம்ம எல்லோருக்கும் அம்மா என்றால் முதலில் மன உருக்கம் தான்.
ஏதோ ஒரு விதத்தில் அவளை
நாளுக்கு பல தடவை நினைக்கிறோம்.
அவள் இருந்த போது இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாமே
என்ற குற்ற உணர்வு
இருந்து கொண்டே இருக்கிறது.
நன்றி மா.
அன்பின் கீதாமா,
எப்பவும் நலமாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் அம்மாவுக்காகப்
பட்ட சிரமங்கள் நினைவுக்கு வருகிறது.
அவளேதான் பேத்தியாக வந்து விடுகிறாளோ என்றும் தோன்றும்.
நன்றி மா.
ஆமாம் மா. ஸ்ரீராம்.
எப்பவும் நலமுடன் இருங்கள்.
அம்மா தான் ஆக்க சக்தி. அவள் கட்டமைத்த பிம்பம் அப்பா.
அவரை முன்னிறுத்திப்
பின்னால் இயங்குபவள் நம் அம்மா.
அவள் இல்லாமல் ஒன்றுமே இயங்கி இருக்காது நம் வாழ்வில்.
பத்திரமாக இருங்கள் அப்பா. நன்றி.
அன்பின் கீதாரங்கன் மா,
எப்பவும் நலமுடன் இருங்கள். உங்களைப் போல எல்லோரிடமும் கனிவும் பாசமும்
வைக்கும் பெண் எல்லா அம்மாவுக்கும் கிடைத்தால் பெரிய பாக்கியம் தான்.
பலப் பல விஷயங்களை
அம்மாவிடம் இருந்து தினமும் கற்றுக் கொள்கிறேன்.
அளவுக்கு அதிகமாகப் பாதிக்கப் படும்போது
அம்மா நினைவு தான் வருகிறது.
பொறுமையாக இரு என்று அவள் சொல்வாள்.
மிக நன்றி மா. சௌக்கியமாக இருங்கள்.
அன்பின் மாதேவி,
என்றும் நலமுடன் இருங்கள்.
அம்மாக்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரிதான்.
உங்களை மாதிரி அன்பும் பாசமும் கொண்ட மகள்கள் நல்ல அம்மாக்கள் ஆகிறார்கள்.
நீங்களும் உங்கள் செல்வங்களும் மிக நன்றாக
இருக்க வேண்டும். நன்றி மா.
Post a Comment