வல்லிசிம்ஹன்
குரு வாழ்க
தமிழ் வாழ்க
நாம் வாழ்க.... இது பழைய நாட்களின் பள்ளி
கடைசி வகுப்பில் சொல்வது.
தில்லு முல்லு தேங்காய் ஸ்ரீனிவாசன் அளவுக்கு
சொல்ல வரவில்லை.
சில பாடல்களைக் கேட்கும் போது
சொல்ல வைத்து விடுவார்கள்.
நான் மிக ரசிக்கும் இந்த நாளையப் பாடகி ஷ்ரேயா கோசல்.
குரல் மட்டும் இனிமை என்று சொல்லி
நிறுத்த முடியாது.
அவருடைய தமிழ் உச்சரிப்பு பிரமிக்க வைக்கிறது.
மற்றும் ஒருவர் இல்ல இல்ல உதித் நாராயணன் இல்லை,
நம்ம தமிழ்க்
காரர். ண கரம் ன கரம் ஆகிறது.
உள்ளே .... உல்லே ஆகிறது.
உனக்கு ஸ வும் வராது ஷவும் வராது. பலக்கமும் இல்லையா?
என்று கேட்கத் தோன்றுகிறது
ஞ ண ந ம ன
நுனி நாக்கு ஆங்கிலம் போல நுனி நாக்கு
தமிழ்:(
மது ஷ்ரீ வங்காளக்காரர்
அவர குரலில் எனக்கு ஒரு ஈடுபாடு.
தமிழ்க்காரர்னு நினைத்தேன். அவர் பாடிய தமிழ்
அப்படி!!
தமிழ் வளரட்டும்.
இவரும் வேற்று மொழிக்காரர் தான்.
அனந்தரா.
5 comments:
விசுவின் கைவண்ணத்தில் தில்லுமுல்லு வசனமெல்லாம் ரொம்ப நன்றாய் இருக்கும். அதிலும் இந்த நிர்முகத்தேர்வு காட்சி நானும் ரொம்ப ரசிப்பது. வசனங்களே மனப்பாடம். தேங்காயின் கம்பீரமான தோற்றம் கூடுதல் சிறப்பு.
ஷ்ரேயா கௌஷலின் குரல் எனக்கும் மிகவும் பிடிக்கும். நினைத்து நினைத்து பார்த்தேன், மன்னிப்பாயா போன்ற அவரது பாடல்கள் நான் அடிக்கடி கேட்பது.
கணினி ஒலிப்பான்கள் (!) சரியில்லாமல் போய்விட்டதால் புதிய ஒலிப்பான்கள் வாங்கும்வரை கணினியில் சத்தம் கேட்க முடியாது
அருமை
பாடல், மற்றும் தில்லு முல்லு காணொளி அருமை.
Post a Comment