October 31st 1965
வருடா வருடம் நினைக்காமல் விட்டால்
ஏதோ தவறு செய்த மாதிரி இருக்கிறது.
நமக்கென்று காத்திருந்த ஒருவர் அவர்தான்.
சிங்கத்துக்கு முன் ,சிங்கத்துக்குப் பின்
இதுதான் வாழ்க்கை.
அழகான புன்னகையுடன் கம்பீரமாக அவர் உட்கார்ந்து இருந்தது,
ஒரே நோக்கிலேயே இவர்தான்
என்று தீர்மானித்தது
பூர்வ ஜன்ம புண்ணியம்.
என்றும் அவர் நினைவில் .
ஏன் அவர் சட்டென்று கிளம்பி இறைவனை அடைந்தார்?
இன்னும் புரியாத மர்மம். ஒன்பது வருடங்களும் கடந்தாச்சு.
எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
9 comments:
வணக்கம் சகோதரி
பதிவு மனதை நெகிழ்ச்சியூட்டி கலங்க வைக்கிறது. பழைய நினைவுகள் என்றுமே மறைவதில்லை..மாறுவதில்லை நம் நினைவுகள் அற்றுப் போகும் வரை. மனதை தேற்றிக் கொள்ளுங்கள். வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை.இறைவன் மன ஆறுதலை தர வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
நாளும் அவர் நினைவில் இருக்கும்பொழுது வருடா வருடம் எப்படி நினைக்காமல் இருக்க முடியும்? அவர் உங்களுடனேயே இருக்கிறார். தேவைப்படும் சமயங்களில் மனதில் எண்ணங்களாக வந்து யோசனை சொல்கிறார், உதவுகிறார்.
அருமையான, மிக அருமையான இரண்டு பாடல்களை பகிர்ந்திருக்கிறீர்கள்.
என்றும் நினைவுகளில் இருப்பார்கள். சந்தித்த நாள்,மறைந்த நாள் எப்படி மறக்க முடியும்!
//ஏன் அவர் சட்டென்று கிளம்பி இறைவனை அடைந்தார்?
இன்னும் புரியாத மர்மம். ஒன்பது வருடங்களும் கடந்தாச்சு.//
ஆமாம், அதுதான் இன்னும் தெரிய மாட்டேன் என்கிறது இறைவனின் அழைப்பு வேறு என்ன சொல்வது?
படத்தில் மடியில் இருக்கும் குழந்தை யார்?
பாடல் இரண்டும் பிடித்த பாடல்.
கடைசி பாடல், இந்தி , தமிழ் இரண்டும் பாட்டும் பிடிக்கும்.
என்றென்றும் நினைவில் வாழ்வார்.
வணக்கங்கள்
அன்பின் சகோதரி கமலாமா,
உண்மைதான். நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்
பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
மிக நன்றி மா.
எண்ணங்களை எழுதி விடுவது மனசுக்கு நிம்மதி.
அன்பின் ஸ்ரீராம்,
நீங்கள் எல்லோரும் வந்து கருத்து சொல்வதே
மனதுக்கு ஆறுதல். ஏதாவது ஒரு விதத்தில் நினைத்துக்
கொண்டிருக்கிறேன்.
.அவர் என்னைப் புரிந்து கொண்ட அளவு
நான் அவரைப் புரிந்து கொள்ளவில்லை.
தினமும் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
என்றும் நலமுடன் இருங்கள்.
பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்றே தெரியும். நன்றி மா ஸ்ரீராம்.
''என்றும் நினைவுகளில் இருப்பார்கள். சந்தித்த நாள்,மறைந்த நாள் எப்படி மறக்க முடியும்!
//ஏன் அவர் சட்டென்று கிளம்பி இறைவனை அடைந்தார்?
இன்னும் புரியாத மர்மம். ஒன்பது வருடங்களும் கடந்தாச்சு.//
ஆமாம், அதுதான் இன்னும் தெரிய மாட்டேன் என்கிறது இறைவனின் அழைப்பு வேறு என்ன சொல்வது?''
அன்பு தங்கச்சி உங்களையும் நினைத்துக் கொண்டே
எழுதினேன்.
உங்கள் இழப்பும் சாதாரணமாக நடக்கவில்லையே.
கடப்போம் அம்மா. வாழ்க வளமுடன்.முதல் பாடலும் கடைசிப்பாடலும் அவருக்கு மிகப் பிடித்த பாடல்கள்.
ஜெயலலிதா பாடலும் சுசீலாம்மாவின் குரலில் அமிர்தமாக இருக்கும்.
அன்பின் ஜயக்குமார்.
என்றும் நலமுடன் இருங்கள்.
மிக நன்றி மா.
Post a Comment