Blog Archive

Saturday, October 15, 2022

புரட்டாசி கடைசி சனிக்கிழமை,மாவிளக்கு

வல்லிசிம்ஹன்




இறைவன் அருளால் அனைவருக்கும் உடல் நலம், மன சந்தோஷம்
அமைதி எல்லாம் பெருக வேண்டும்.

இன்னோரு புரட்டாசி பூர்த்தியாகிறது.
துலா மாதம், ஐப்பசி மாதம் பிறக்கப் 
போகிறது.
பூர்வ ஜன்ம புண்ணியம் செய்தவர்கள்
காவிரியில் நீராடி ,இறைவனை இடையறாது சிந்தித்து
உய்யப் போகிறார்கள்.

அப்படி பாக்கியம் கிடைக்கப் பெறாதவர்களுக்கு 
இருக்கும் இடமே கங்கை ,காவிரி,சரயூ 
எல்லா நதிகள் வடிவாகக் கிடைக்கும் நீரை
மதித்துத் துதிக்க வேண்டும்.
இறைவன் நாமமே நமக்கு சகல மருந்து.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இங்கே கடின குளிர் ஆரம்பித்து விட்டது.
சற்றே கழுத்துக்கு அரணாக ஒரு கம்பளியைச் சுற்றிக் 
கொள்ளாமல் வெளியில் தலை காட்டிவிட்டால்,
பனி தொண்டையைக் கவ்வி விடுகிறது.
நமக்கும் சிரமம். கவனித்துக் கொள்கிறவர்களுக்கும் சிரமம்.

என்னை  விட வயதான தம்பதியினர்
மிக உற்சாகமாகக் கோவிலில் நாம சங்கீர்த்தனம் செய்வதைப் பார்க்கிறேன்.
வெகு காலமாக  இங்கே இருப்பவர்கள்.
உடல் உழைப்பும், உற்சாக மனதும் 
கொண்டு பெருமாளைப் பாடும் அழகு
அதிசயிக்க வைக்கிறது.
வாழ்க அவர்கள் நலம்.




🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஸ்ரீ ஸ்ரீனிவாசம் ஸ்ரீ வெங்கடேசம் நம்மைக் காப்பான்.


12 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமே விளைக. பதிவு அருமையாக உள்ளது. புரட்டாசி மாதத்தின் கடைசி சனிகிழமையன்று பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் தந்தமைக்கு மிகவும் நன்றி. காணொளி கண்டேன். பெருமாளின் நாம சங்கீர்த்தனம் கேட்டு மகிழ்ந்தேன். வேங்கடவவன் அனைவரையும் நலமுடன் காத்தருள நானும் அவன் பாதம் பற்றி பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

நானும் நினைத்தேன் மாவிளக்கு பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் செய்யவில்லை.
மூன்றாவது சனிக்கிழமை வடை பாயாசம் செய்து கும்பிட்டேன். உறவினர்கள் வந்தார்கள்.

ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீராடி மகிழ்வார்கள். ஐப்பசி முழுக்கு என்று மக்கள் கூட்டம் மாயவரத்திற்கு வருவார்கள்.

கடும் குளிரில் உடம்பை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரி

Geetha Sambasivam said...

இங்கே இடி, மின்னல், மழைனு கொட்டித் தீர்க்கிறது. அங்கே குளிர். ஹூஸ்டனில் இன்னமும் சூடு தான் என்கிறாள் பெண். என்னவோ இயற்கையின் விசித்திரங்கள்! புரட்டாசி கடைசி சனிக்கிழமைக் கொண்டாட்டங்களும் பெருமாள் தரிசனமும் அருமை. மிக்க நன்றி. உங்களோட முந்தைய பதிவுக்குப் போட்ட கருத்து மாறி வந்திருக்குப் போல! :)))))))))) துரைக்குப் போக வேண்டியது. உங்களுக்குப் போட்டது எங்கேனு தெரியலை. கௌரி ராம்நாராயணனின் பேட்டியை நானும் யூ ட்யூபில் பார்த்தேன். அழகாகச் சொல்லி இருக்கார்.

Thulasidharan V Thillaiakathu said...

மாவிளக்கு ஏற்றியது சூப்பர்....குளிர்...உடம்பைப்பார்த்துக்கோங்க. படங்களும் காணொளியும் சூப்பர்


கீதா

ஸ்ரீராம். said...

ஆம், இந்த வருட பெருமாள் மாதம் நிறைவுக்கு வருகிறது.  அனைவரும் அவன் தாள் வணங்கி அவனருள் பெறவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சகோதரி கமலாமா,
என்றும் வாழ்க நலமுடன்.
அன்பு பின்னூட்டத்துக்கு மிக மிக நன்றி.

திருமலை வெங்கடேசன் அருளால்
சனிக்கிழமை மாவிளக்கு இனிதே பூர்த்தியானது.

இந்த மாதம் மட்டும் இல்லாமல்
எல்லா மாதங்களிலும் அவனை வழிபட
அவனே அருள வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.

உங்கள் மனதில் எப்பொழுதும் இறைவன் வாழ்கிறார்.

வடை பாயாசம் செய்து வழிபடுவதும் ஒரு
முறைதானே.
என்ன செய்தாலும் அவர் சந்தோஷம் அடைவார்.

என் மாமியார் ஒரே ஒரு தடவை தான்
இந்த நோன்பை அனுசரித்தார்.
எனக்கு அதை நோன்பாகக் கொடுக்கவில்லை.
நானும் பின்பற்றவில்லை. மகள் புகுந்த இடத்தில்
முறையாகச் செய்கிறார்கள்.

ஸ்வாமி மலையேறும் வரை காத்திருந்தோம். மதியம் இரண்டாகி
விட்டது.பல் வைத்தியரிடம் போய் வந்ததில் காய்ச்சல்
தொற்று வந்து விட்டது.
பத்திரமாகத் தான் இருக்க வேண்டும். நலமுடன் இருங்கள்
அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார்,
நன்றி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
எப்பவும் நலமுடன் இருங்கள்.
நானும் நினைத்தேன். வேற இடத்துக்குப் போக வேண்டியது
இங்கே வந்துட்டது என்று:)
அவரவர் கவலை பெரிதாகத் தான் இருக்கிறது.

''இங்கே இடி, மின்னல், மழைனு கொட்டித் தீர்க்கிறது. அங்கே குளிர். ஹூஸ்டனில் இன்னமும் சூடு தான் என்கிறாள் பெண். என்னவோ இயற்கையின் விசித்திரங்கள்! புரட்டாசி கடைசி சனிக்கிழமைக் கொண்டாட்டங்களும் பெருமாள் தரிசனமும் அருமை. மிக்க நன்றி''

ஹூஸ்டனில் சூடாக இருக்கிறதா?
இங்கே குளிரினால் சகலருக்கும் இருமல், சளி,ஜுரம்
என்று ஓடிக் கொண்டிருக்கிறது.
பெருமாள் கருணையுடன் வந்து போனார் அம்மா.
தெய்வீக அனுபவம்.

புரட்டாசி முடிந்ததும் இடி மின்னல் நின்றால் தேவலை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன் மா,
என்றும் நலமுடன் இருங்கள்.
இங்கே புதுப்புது வைரஸ் நடமாட்டம் இருக்கிறது. நாலாவது
பூஸ்டர் போட்டுக் கொள்ள வேண்டும்.
குளிரோ, மழையோ தாண்டி வர வேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள் மா.

ஒவ்வொரு நாளும் அவன் கருணையால்
தான் நகருகிறது.

நன்றி மா.