Blog Archive

Wednesday, October 12, 2022

.......சில பாடல்கள் மற்றும் பொன்னியின் செல்வன் பார்வை

  காதுகளுக்கு இனிமை கொடுத்த பழைய பாடல்கள்.

சோகம் இருப்பது போலத் தோன்றும். ஆனால் 
அழகான இலக்கியமும் 
ஒளிந்திருக்கும்.
பொன்னியின் செல்வன் கண்டு வந்தாச்சு.
படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை.

முடிந்ததும் தெரியவில்லை.
அசையாமல் மூன்று மணி நேரம் 
பார்த்திருக்கிறோம் 
இடைவேளையும் இந்த ஊரில் கிடையாது.

பொன்னியின்  செல்வனில் கல்கியை அடித்தளத்தில் மட்டுமே
காண முடிந்தது.
இயக்குனர் மணி ரத்தினத்தின் பிரம்மாண்டம்.


ரசித்த நேரத்தில் சட சடவென விழும் கொலைகளைத் தான்
சகிக்க முடியவில்லை.
பார்த்தவர்களின் விமரிசனங்களையும்
படித்து வருகிறேன். 

அத்தனை தீர்க்கமாகச் சொல்ல முடியவில்லை.
ஏதோ கொஞ்சம் ஏமாற்றம் கூடவே வந்தது.
மணி மேகலை இல்லை. 
பூங்குழலிக்கு இத்தனை மாறுபட்ட உடை வேண்டாம். அதைத் தவிர
வந்தவர்களும் ஐந்து நிமிடங்கள் ஜொலித்துவிட்டுக் கிளம்பிவிடுகிறார்கள்.

அடுத்தடுத்துக் காட்சிகள் மாறிய வேகம் பிடிபடவில்லை.   எல்லாப் பாடல்களும் நல்ல துடிப்பான பாடல்கள்.
படத்தில் பார்க்க முடியவில்லை:(
கேட்ட பாடல்கள் அடுத்த பாகத்தில் வருகிறதோ 
என்னவோ!!!!!
இசைப்புயலின் இசை வேகம் அபரிமிதம். அருமை. பாடலாசிரியர்கள்
கபிலன். இளங்கோ கிருஷ்ணன் இவர்களுடைய
தமிழ் மனதை நிறைக்கிறது.

 ஒரு  நடிகரும் சோடை போகவில்லை.
அனைவரும் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் படமாக வந்தது பெரிய முயற்சி. எழுப்பின கட்டிடத்துக்குப்
பழுது சொல்லி பயன் இல்லை.
அடுத்த பாகம் எப்படி வருகிறது என்று பார்ப்போம்.
அழைத்துச் சென்ற மகளுக்கு நன்றி.
அனைவரும் வாழ்க வளமுடன்.


22 comments:

ஸ்ரீராம். said...

படம் பார்த்து விட்டீர்களா?  ஏன் அங்கு இடைவேளையே கிடையாது?  சிறு ஓய்வுக்கோ, இயற்கையின் அழைப்புக்கோ பாடத்தைத் துறந்துதான் சென்று வரவேண்டுமா?

ஸ்ரீராம். said...

எனக்கு இந்தப் படத்தின் பாடல்கள் எதுவுமே மனதில் நிற்கவில்லை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நீங்கள் பொ. செ. படம் பார்த்து வந்தது பற்றி மகிழ்ச்சி. படத்தைப்பற்றி நல்லதொரு விமர்சனம் தந்துள்ளீர்கள். அந்தந்த கதாபாத்திரங்கள் படத்தில் அப்படியே வாழ்வதாகத்தான் சொல்கிறார்கள். இது இயக்குனரின் ஒரு சிறப்புதான். அடுத்த பாகம் அடுத்த வருட ஏப்ரலில் வருமென சொல்கிறார்கள். அதுவும் நன்றாகவே வரட்டும்./ வரும். நான் இன்னமும் படம் பார்க்கவில்லை. செல்லும் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன். நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடல்களை பிறகு கேட்கிறேன்.அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

நெல்லைத்தமிழன் said...

படத்தின் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பொன்னி ந்தி தவிர. இளையராஜா அதகளப்படுத்தியிருக்கக்கூடும்... ஆனால் வியாபாரம்...

படத்தை இரண்டாவது முறையும் பார்த்து இன்னும் ரசித்தேன். நெடுங்கதையைச் சுருக்கி எடுப்பது மிக மிக்க் கஷ்டம். யார் யார் எந்த நடிகர்கள் என்று கண்டறிவதும் கஷ்டம் (மற்ற பாத்திரங்கள்). நிறையபேருக்கு எதற்கு கடலுல் ஐஸ்வர்யாராய் முகம்போல் (ந்ந்தினி) வருகிறது கடைசித் தருணத்தில்.. என்பதே புரிந்திருக்காது.

பொசெ படிக்கலைனா தலையும் புரியாது வாலும் புரியாது

கரந்தை ஜெயக்குமார் said...

படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்.
நன்றி சகோதரி

Gayathri Chandrashekar said...

அன்புள்ள வல்லிம்மா, பொன்னியின் செல்வன் படம் சென்ற வாரம் பார்த்து வந்தோம். தாங்கள் கூறியது போல சிறிது ஏமாற்றம். என்றாலும் இவ்வளவு முயற்சி செய்து படம் எடுத்தது மகிழ்ச்சி. பூங்குழலியின் தலையில் ஒரு பூவை வைத்திருக்கலாம். படத்தில் வரவில்லை என்றாலும் பாடல்கள் அருமை!

Thulasidharan V Thillaiakathu said...

ஓ அம்மா உங்களுக்குப் பிடித்திருந்தது இல்லையா....

படத்தில் மணிரத்தினத்தின் பிரம்மாண்டம்தான் முன்னிற்கும் என்று தோன்றுகிறது. பாடல்கள் பொருந்தி நிற்கின்றனவா?

எனக்கு ஏனோ பாடல்கள் மனதில் நிற்கவில்லை பொன்னி நதி மட்டும் அதன் ராகம் முன்னரேயே ரோஜா படத்தில் வந்த ருக்குமணி ருக்கு௳னி போல இருப்பதால்...

இப்போதைய படங்களில் எனக்கும் கிரகிக்க முடியாததது காட்சிகள் சொடக்கு போடும் நேரத்தில் அடுத்ததற்குத் தாவுவது...நீங்கள் சொல்லியிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது..விக்ரமிலும் அபடித்தான் எனக்கு ஏனோ அது ஒத்துவருவதில்லை. இதிலும் அப்படியா?

நடிகர்கள் அத்தனைபேரும் (வானதி தவிர என்று நினைக்கிறேன்) உழைத்திருக்கிறார்கள் நன்றாகச் செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது விமர்சனம் மற்றும் ட்ரெய்லரிலிருந்து...

பூங்குழலி அருமையான கதாபாத்திரம் வானதியும் தான் ஆனால் அவை சரியாக இல்லையோ...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அடுத்த பாகத்தின் பாடல்கள் வந்துவிட்டனவா? அதைக் கேட்டுத்தான் அன்று எனக்குச் சொல்லியிருந்தீர்களோ வாட்சப்பில்?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நீங்களும் பொன்னியின் செல்வன் கண்டு வந்தது மகிழ்ச்சி. இடைவேளை இல்லை என்றால் சிரமமாக இருக்குமே.

பொன்னியின் செல்வன் நானும் கண்டேன். கல்கி அவர்களின் ஒரிஜினல் படைப்பைச் சற்று தள்ளி வைத்துவிட்டு.
என் மனைவிக்கும் மகளுக்கும் கதை தெரியாது என்பதால் புரியவில்லை அதுவும் நிறைய கதாபாத்திரங்கள் என்றனர்.

ஓகே என்று சொல்லலாம். மிகப் பெரிய நாவலைத் திரைப்படமாகக் காட்டுவது மிகவும் சிரமம்தான்.

//அடுத்தடுத்துக் காட்சிகள் மாறிய வேகம் பிடிபடவில்லை. //

எனக்கும் இது இப்போதைய பல படங்களில் பிடிபடுவதில்லை. பொன்னியின் செல்வன் உட்பட. ஆனால் கதை தெரியும் என்பதால் பிரச்சனையாக இல்லை.

துளசிதரன்

Geetha Sambasivam said...

இப்போல்லாம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்காது. பார்ப்போம். விமரிசனம் சுருக்கமாக இருந்தாலும் சரியாகச் சொல்லி இருக்கீங்க.

கோமதி அரசு said...

பட விமர்சனம் அருமை. பகிர்ந்த ஹிந்தி பாடல்கள் பிடித்தவை. கேட்டு மகிழ்ந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

ஆமாம் மா. பார்த்தாச்சு. பாடல்கள் பழகப் பழகப் பிடித்து விட்டது.

ஒரு மாசத்துக்கு ஓடும்.:) அதாவது மனசில்.

பொ.செ படித்தவர்களுக்குக் கொஞ்சமாவது புரிபடலாம். என்னுடன்
வந்தவர்களுக்கு வீட்டுக்கு வந்த பிறகு
கதை சொன்னேன்.
படு வேகத்தில் சீன் கள் மாறின.

கதையைச் சுருக்குவது கடினமே.

வல்லிசிம்ஹன் said...

இடைவேளை இல்லம்மா.
முடியாதவர்களுக்குக் கஷ்டம் தான். தியேட்டரில் எங்களைச் சேர்த்து ஆறு
நபர்கள் தான்.:)
இங்கே சில பேர் ஒரு டிக்கட் வாங்கி மூன்று படங்கள்
கூட பார்த்து விடுகிறார்கள். மல்டி தியேட்டர்ஸ் இருப்பதால்....

டிக்கட் செக் செய்பவர்கள் கிடையாது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஆமாம்மா, சில வருடங்களுக்குப் பிறகு தியேட்டருக்குப் போகும்
சந்தோஷம் கிடைத்தது.

படம் அற்புதமாக எடுத்திருக்கிறார்கள்.
எல்லோருடைய பங்களிப்பும் மிக மிக அருமை.
ஆனால் கதை திடீர்த்திருப்பங்களுடன் சொல்லப்
படுவதால்
புத்தகம் படித்தவர்களுக்குச் சீக்கிரம் பிடிபடும்.
இல்லாவிட்டாலும் சிரமம் இல்லை.
நீங்களும் பாருங்கள். பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தன
அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
எப்பொழுதும் நன்றாக இருங்கள்.
இரண்டாவது தடவை பார்த்து விட்டீர்களா,? அட!!!
நாங்களும் இந்த ஞாயிறு போக வேண்டும். யோகா வகுப்பு வேற இருக்கு.

ஊமைராணி. இப்படித் தலைவிரி கோலமாகவா
இருப்பார், பயமா இருக்கே.:(

ஆமாம் புத்தகம் படிக்கவில்லை என்றால் பொருந்துவது சிரமம்.
ஏகப்பட்ட நடிகர்கள்.
சட்டுனு காட்சி மாறி விடுகிறது.
பழுவேட்டரையர் பாத்திரத்துக்கு நெப்போலியன் நன்றாக
இருன்திருக்கும்னு தோன்றுகிறது.

இக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜயக்குமார்,
நலமுடன் இருங்கள்.
ஒரு முறை கட்டாயம் பார்க்கலாம்.
அழகாக எடுத்திருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் காயத்ரி,
நலமா ராஜா.

''பூங்குழலியின் தலையில் ஒரு பூவை வைத்திருக்கலாம். படத்தில் வரவில்லை என்றாலும் பாடல்கள் அருமை!''
அச்சோ இதையே நானும் நினைத்தேன்.
பொன்னியின் செல்வரைப் பார்க்கும் இடத்தில் சிறிது.
அலங்காரம் தெரிந்தது.

நிறைய எழுத நினைக்கிறேன். முடியவில்லை அம்மா.
பழக்க தோஷம் எழுதாமலும் இருக்க முடியவில்லை.
நீங்கள் ரசித்ததற்கு மிக நன்றி மா.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
எப்பொழுதும் நலமுடன் இருங்கள்.

''எனக்கு ஏனோ பாடல்கள் மனதில் நிற்கவில்லை பொன்னி நதி மட்டும் அதன் ராகம் முன்னரேயே ரோஜா படத்தில் வந்த ருக்குமணி ருக்கு௳னி போல இருப்பதால்...''

எனக்கு முக்காபுலா நினைவுக்கு வந்ததுமா.
அலைகடல் பாட்டு மிகவும் பிடித்தது.

வானதி தனியாக அழகா இருக்கிறார். பாத்திரத்திற்குப்
பொருந்தவில்லை.
மயக்கம் போட்டு விழும் வானதிக்கு, ஓங்குதாங்காக
ஒரு பெண்:(

வல்லிசிம்ஹன் said...

''இப்போதைய படங்களில் எனக்கும் கிரகிக்க முடியாததது காட்சிகள் சொடக்கு போடும் நேரத்தில் அடுத்ததற்குத் தாவுவது...நீங்கள் சொல்லியிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது..விக்ரமிலும் அபடித்தான் எனக்கு ஏனோ அது ஒத்துவருவதில்லை. இதிலும் அப்படியா?''

விக்ரம் நான் பார்க்கவில்லை.
மகளுக்கு அது கொஞ்சம் அதீதமாகத் தோன்றியதாம். நமக்குத் தான் ஒன்றும்
புரியவில்லைமா. கீதா ரங்கன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
நீங்கள் சொல்லி இருப்பது உண்மையே.
மலையாளத்திலும் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

''பொன்னியின் செல்வன் நானும் கண்டேன். கல்கி அவர்களின் ஒரிஜினல் படைப்பைச் சற்று தள்ளி வைத்துவிட்டு.
என் மனைவிக்கும் மகளுக்கும் கதை தெரியாது என்பதால் புரியவில்லை அதுவும் நிறைய கதாபாத்திரங்கள் என்றனர்.

ஓகே என்று சொல்லலாம். மிகப் பெரிய நாவலைத் திரைப்படமாகக் காட்டுவது மிகவும் சிரமம்தான்.''
ஏகப்பட்ட மனிதர்கள். எல்லாம் நிலைத்து மனதில் நிற்கவில்லை.
பழையகால

நியூஸ் ரீல் போல.
கார்த்தியின் நடிப்பு பிடித்தது மா.

நன்றி மா. என்றும் வளமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

நெட்ஃப்ளிக்ஸ், இல்லாவிட்டால் அமேசானில் வந்த பிறகு
பார்க்கலாம். ஒண்ணும் நஷ்டம் இல்லை.
கொஞ்சம் தான் எழுத முடிந்தது.
பொறுமை போதவில்லை.
எல்லோரும்தான் சொல்கிறார்களே,.

உடல் நலம்தான் முக்கியம்.
தியேட்டர் போவது அவ்வளவு உசிதமாக இருக்காது.
நன்றிமா.

மாதேவி said...

பொன்னியின் செல்வன் பார்த்து உங்கள் கருத்தை பகிர்ந்துள்ளீர்கள். கண்டு கொண்டோம்.

பேரனும் எங்களுடன் வந்து பார்த்தார்....டம் டம் டம் அவருக்கு பிடித்த பாட்டு :) சில வரிகள் பாடுவார்.