எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
வைடமின் பி 12 குறைபாடு
++++++++++++++++++++++++++++
இந்தியாவில் நாம் தினசரி உண்கின்ற உணவுகள் ஆரோக்கியமானதாக கருதப்பட்டாலும் பல்வேறு காரணங்களால் இன்றும் அந்த உணவுகளில் பல குறைபாடுகள் உள்ளன. இரும்பு, வைட்டமின் டி, வைட்டமின் ஏ மற்றும் அயோடின் போன்றவற்றால் ஏற்படும் குறைபாடுகள் அதிகமாக மக்களுக்கு தெரிந்த குறைபாடுகளாகும். உண்மையில் இந்திய உணவில் தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளன.
இந்தியர்களில் சுமார் 74 சதவீதத்தினர் வைட்டமின் பி 12 ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாக உள்ளனர். மேலும் 50 முதல் 55 சதவீத மக்கள் வைட்டமின் பி 12 குறைபாடு காரணமாக மருத்துவ குறைப்பாட்டை கொண்டுள்ளனர்.
வைட்டமின் பி 12 என்றால் என்ன?
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வைட்டமின் பி 12 நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். ஆனால் வைட்டமின் பி 12 ஐ நமது உடலால் இயற்கையாக தயாரிக்க முடியாது. இந்த வைட்டமின் மூளை ஆரோக்கியம், நரம்பு திசு ஆரோக்கியம் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக்கம் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு வைட்டமின் பி 12 முக்கிய பங்களிக்கிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களின் ஆற்றல் உற்பத்தியிலும் இது முக்கிய பங்கை வகிக்கிறது. வைட்டமின் பி 12 ஃபோலிக் அமிலத்தை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவி செய்வதால் உடலின் ஆற்றல் அளவு அதிகரிக்கிறது.
வைட்டமின் பி 12 நன்மைகள்
சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது.
உடலின் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துகிறது.
உடல் செயல்திறனை மேம்படுத்துகிறது.
அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது மற்றும் மூளை பாதிப்பை தடுக்கிறது.
மனசோர்வை தடுக்கிறது.
கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
வைட்டமின் பி-12 குறைபாட்டின் அறிகுறிகள்
-12-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வைட்டமின் பி 12 குறைப்பாட்டால் பல்வேறு வகையான அறிகுறிகள் ஏற்படுகின்றன. அவற்றில் உடனே தெரியும் அறிகுறி என்றால் நமது தோலானது வழக்கத்திற்கு மாறாக வெளிர் அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பது. மேலும் உணவில் வைட்டமின் பி 12 குறைப்பாட்டால் உடல் சோர்வு, மன சோர்வு, நினைவக பிரச்சனைகள் மற்றும் குழப்பம் ஆகியவை ஏற்படுகிறது. மலச்சிக்கல் மற்றும் பசியின்மையும் இதில் அடங்கும்.
மேலும் தொடர்ச்சியான வைட்டமின் குறைபாடுகளால் கடுமையான அறிகுறிகள் ஏற்படுகின்றன. கை மற்றும் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு,
இரத்த சோகை மற்றும் நரம்பு பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. எனவே நமது உணவில் போதுமான அளவில் வைட்டமின் பி 12 சேர்த்துக்கொள்வது மிக முக்கியமாகும்.
வைட்டமின் பி 12 உணவுகள்
-+++++++++++++++++++++++++++++++++++++++++உணவுகளில் இருந்து மட்டுமே கிடைக்க கூடியது. இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றில் அதிக அளவு
வைட்டமின் பி 12 கிடைக்கிறது. ஆனால் சைவ உணவு உண்பவர்கள் தங்கள் தினசரி தேவையான வைட்டமின் பி 12 அளவை பெறுவது கடினமாகும்.
சைவ விரும்பிகளுக்காக சந்தைகளில் கிடைக்கும் வைட்டமின் பி 12 பொருட்களாலும் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. மேலும் அவற்றில் வைட்டமினின் அளவு மிக குறைவாகவே உள்ளன. இரைப்பை அசெளகரியம், வீக்கம் போன்றவை
இதனால் ஏற்படும் பக்க விளைவுகளாக உள்ளன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேற்கொண்ட விவரங்கள் சென்னையில் அறிந்து கொண்டவை.
முன்பெல்லாம் பி12 இஞ்செக்ஷன் மூன்று தடவை
போட்டுக் கொண்டாலயே தெம்பு வந்துவிடும்.
எனக்கு, மகன் மருமகளுக்கு இந்தக் குறைபாடு
இருப்பதாகச் சொன்னார்கள்.இன்னும் இந்த வலிகள் தொடர்கின்றன.
சென்னை ரத்தப் பரிசோதனையில் தெரிந்து கொண்ட குறைபாடுகளைச்
சீக்கிரமே சரி செய்ய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..
நானாவது பரவாயில்லை. ஓய்வாக உட்காரலாம்.
மற்றவர் ஓடும் வயதாயிற்றே!!!
நம் வழியில் இதைச் சரிப்படுத்த முயற்சிக்கலாம்.
வெகு நாட்கள் ,அதாவது கிட்டத்தட்ட 42 நாட்கள்!!
எழுத்தை விட்டு விலகி இருந்ததில்லை.
நிறைய எழுத்தை, எங்கள் ப்ளாகை ,நட்புகளின் பதிவுகளைப்
படிக்கவில்லை.
அனைவரிடமும் என்ன சொல்வது என்று
தெரியாமல் விலகி இருந்து விட்டேன்.
அதிக அளவு அசதியே காரணம்.
நிம்மதி கொடுத்தது சென்னை நாட்கள். சென்னையின் சத்தம்,
தமிழில் பேசிய விடுதி பணியாளர்கள்
எல்லாமே போனஸ்.
வீட்டின் முழு சீரமைப்பு காரணமாக மகனால் என்னை வெளியே
அழைத்துச் செல்ல முடியவில்லை.
கடைசிவாரம் வீட்டுக்குச் சென்று வர முடிந்தது.
எத்தனையோ கோட்டைகள் கட்டியபடி ஆரம்பித்த
விடுமுறை பண செலவழிப்பு +உறவினர்களைக் காண
முடியாத நிலையில் பூர்த்தியானது.
மீண்டும் சென்னை நாட்கள் எப்போதாவது கிடைக்கும்
என்று நம்புகிறேன். அன்பு நட்புகளுக்கு வணக்கம்.
வைட்டமின் பி 12 மனிதர்களுக்கு இன்றியமையாத ஒரு வைட்டமின் ஆகும். எனவே அவற்றை பெறுவதற்கான சரியான உணவை தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். மேலும் அவற்றை தேவையான அளவில் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவும். தினசரி குறிப்பிட்ட அளவு வைட்டமின் பி 12 எடுத்துக்கொள்ள வேண்டும்