Blog Archive

Wednesday, June 08, 2022

பசி பொறுக்காத கண்ணன்.

வல்லிசிம்ஹன்




 Muguntan Rajagopal: ஓம் நமோ நாராயணாயா 🙏




கேரளாவில் கோட்டயம் அருகில் திருவார்ப்பு ஸ்ரீகிருஷ்ணன் கோவில்🙏:-

கிரகண நேரத்திலும், நள்ளிரவிலும் கூட மூடப்படாத கோயில் எங்குள்ளது தெரியுமா?- ஓயாமல் பசி எடுக்கும் சுவாமி இதோ. திருவார்ப்பு
ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம். கோட்டயம்.

கேரளாவில் கோட்டயம் அருகில் திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில் மூடப்படுவதே இல்லை அதுமட்டுமல்லாமல், எல்லா கோயிலும் மூடப்படும் கிரகண காலத்தில் கூட திறந்திருக்கும் அதிசயம் நிறைந்த கோயிலின் ரகசியம் என்ன என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்...

கேரளாவில் கோட்டயம் அருகில் திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில் மூடப்படுவதே இல்லை அதுமட்டுமல்லாமல், எல்லா கோயிலும் மூடப்படும் கிரகண காலத்தில் கூட திறந்திருக்கும் அதிசயம் நிறைந்த கோயிலின் ரகசியம் என்ன என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்...
விதிகளுக்கு அப்பாற்பட்ட கோயில்

ஒவ்வொரு கோயிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. அப்படி வித்தியாசமான சிறப்புகளுடன் இருக்கும் கோயில் தான் திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில்.

அனைத்து இந்து கோயில்களும் இரவில் மூடப்படுவது வழக்கம். அதுவும் கிரகணம் என்றால் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டு, கோயிலை சுத்தம் செய்து பின்னர் சிறப்புப் பூஜை செய்த பின்னர் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு விடுவது வழக்கம். ஆனால் திருப்பதி போன்ற சில கோயில்கள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக வருவதால் நள்ளிரவில் கூட தரிசிக்கலாம். ஆனால் திருப்பதி கோயில் கூட ஒரு குறிப்பிட்ட மணி நேரம் மூடப்பட்டுத் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கேரளாவில் உள்ள ஒரு கிருஷ்ணர் கோயில் இந்த விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, எல்லா நாட்களிலும், எல்லா நேரமும் கோயில் திறந்திருக்கக் கூடிய அதிசய கோயிலாக உள்ளது. வாருங்கள் கோயில் குறித்த விபரத்தை முழுமையாக பார்ப்போம்.

#கோயில் #பெயர்: திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில்

கோயில் அமைந்துள்ள இடம்: திருவார்ப்பு, கோட்டயத்திலிருந்து 6-8 கிமீ தொலைவில் உள்ளது.

#மூலவர் :  ஸ்ரீகிருஷ்ணன்

கோயில் திறக்கப்படும் நேரம்:

அதிகாலை 2 மணிக்கு கோயில் திறக்கப்படுகிறது.

3 மணிக்கு சிறப்பு பூஜை அதாவது உஷ பாயசம் எனும் உணவு கிருஷ்ணருக்கு படைக்கப்படுகிறது.

இந்த திருவார்பு கோயில் 1500 வருடங்கள் பழமையான கோயில். இந்த கோயிலில் இருக்கும் கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருப்பதாக ஐதீகம். அதனால் மற்ற கோயில்களைப் போல் இல்லாமல், ஆண்டின் எல்லா நாட்களும், பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும்.

சம்பிரதாயத்திற்காகக் கோயில் இரவு 11.58 மணி முதல் 12 மணி வரை என வெறும் 2 நிமிடங்கள் மட்டும் மூடப்படுவது வழக்கம்.

#பசியை #தாங்காத #கிருஷ்ணர்.

மற்றொரு சிறப்பாக இந்த கோயில் அர்ச்சகர் கோயில் நடை சாற்றும் வேளையில் கையில் கோடாரி ஏந்திய படி இருப்பார். கோயில் நடை மூடப்பட்டதும். தந்திரியிடம் கோடாரி கொடுக்கப்படுகிறது.

கிருஷ்ணர் பசியை தாங்கிக் கொள்ள மாட்டார் என நம்பப்படுவதால், ஒரு வேளை  ஜெர்மன் வகையான ஜி நிமிடத்திற்குப் பிறகு கோயில் கதவு திறப்பதில் ஏதேனும் தடங்கல் வந்தால் கதவை உடைப்பதற்காக அந்த கோடாரி பயன்படுத்தலாம் என்பதற்காக அந்த கோடாரி கொடுக்கப்படுகிறது.

அரக்கன் கம்சனை கொன்ற கிருஷ்ணன் மிகவும் உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையில் அந்த கிருஷ்ணரே இந்த கோயிலில் மூலவராக அமர்ந்தார் என பக்தர்கள் நம்புகின்றனர்.

​அபிஷேகம் முடிந்ததும் நைவேத்தியம்:
தினமும் கிருஷ்ணருக்கு அதிகாலையில் அவரின் உஷ்ணத்தை குறைக்க அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் மூலவரின் தலை துவட்டப்படுகிறது. அவர் பசியாக இருப்பார் என்பதால், பின்னர் உடனே நைவேத்தியம் படைக்கப்படும். அதன் பின்னர் தான் அவரின் உடல் உலர்த்தப்படும்.

#கிரகணத்தின் #போது #மூடப்படாத #கோயில்:

திருப்பதி, மீனாட்சி அம்மன் கோயில் என இந்து கோயில்கள் அனைத்தும் கிரகண நேரத்தில் மூடப்படுவது வழக்கம். ஆனால் இந்த திருவார்ப்பு கிருஷ்ணன் கோயில் மட்டும் கிரகணத்தின் போது கூட மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் கிருஷ்ணர் பசியை தாங்கிக் கொள்ள மாட்டார் என்பது ஐதீகம்.

ஒரு முறை கிரகண நேரத்தில் கோயில் மூடப்பட்டது. அப்போது கிருஷ்ணரின் இடுப்புப் பட்டை கீழே வீழ்ந்திருப்பது கண்டனர். அந்த நேரத்தில் வந்த ஆதி சங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் இப்படி நடந்ததாக கூறியுள்ளார். அதன் காரணமாக, அப்போதிலிருந்து, கோயில் நடை தினமும் வெறும் 2 நிமிடங்கள் மட்டும் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

​பிரசாதம் பெறாமல் போகக் கூடாது
இந்த கோயிலில் நித்தமும் பிரசாதம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் பிரசாதம் பெறாமல் வெளியே செல்ல அனுமதி இல்லை.

இரவு 11.58 மணிக்கு கோயில் மூடப்படுவதற்கு முன்னர் அங்குள்ள தந்திரி, இங்கு யாராவது பசியுடன் இருக்கிறீர்களா? என சப்தமாக கேட்பார்.

அதே போல் இந்த கோயிலில் பிரசாதம் வழங்குவதில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க வேண்டும் என்பது ஐதீகம்.

#பசியால் #வாட #மாட்டீர்கள்:

இந்த கோயிலில் வழங்கப்படும் கிருஷ்ணரின் பிரசாதத்தை உண்டால், அதன் பின்னர் நீங்கள் பசியால் எப்போது வாட மாட்டீர்கள் என்றும், வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப் பிரச்சினை வராது என்பது ஐதீகம்.

#திருவிழா, #சிறப்பு #நாட்கள்:

ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

​கோயில் முகவரி:

திருவார்பு கிருஷ்ணன் கோயில், திருவார்பு - 686 020

கோட்டயம் மாவட்டம், கேரளா.

கோட்டயம் ரயில் நிலையத்திலிருந்து வெறும் 8 கிமீ தொலைவில் திருவார்பு கோயில் அமைந்துள்ளது.

விமானம் மூலம் செல்ல வேண்டுமென்றால், கொச்சி விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து, கோட்டயம் வந்து கோயிலுக்கு செல்லலாம்.

தமிழ் நாட்டிலிருந்து கோட்டயத்திற்கு பேருந்து வசதிகளும் உள்ளன.

ஹரே கிருஷ்ணா
குருவாயூரப்பா உன் திருவடிகளே சரணம் 🙏

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் 🙏
[3:24 PM, 6/7/2022] Revathi Narasimhan: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

13 comments:

Geetha Sambasivam said...

கேள்விப்படாத கோயில். முழுதும் புதிய தகவல்கள். இதை எல்லாம் இனி நினைத்துப் பார்ப்பதோடு நிறுத்திக்கணும். போவது சிரமம். :(

ஸ்ரீராம். said...

இந்த மாதிரி நடைமுறைகள் உள்ள கோவில் பற்றி முதல் முறையாக கேள்விப்படுகிறேன்.    எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு வரும் அரசுகள் இந்த முறையையும் மாற்ற முற்படவில்லையா?  ஓ...  இது கேரளாவில் உள்ளதா?

நெல்லைத் தமிழன் said...

என்ன பிரசாதம் கொடுப்பார்கள் என்றும் அந்த வாட்சப் செய்தியில் கொடுத்திருக்கலாம். ஒருவேளை கடுசர்க்கரை பாயசமாக (சர்க்கரைப் பொங்கல்) இருக்குமோ?

மாதேவி said...

திருவார்ப்பு கிருஷ்ணன் புதுமையான கோவில்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா,
நானும் அவனிடம் கேட்டேன். என் இன்னோரு தங்கை அங்கே
போய் விட்டு வந்தாளாம். அவர்களுக்குப் பால் பாயாசம் கிடைத்ததாம்.

அவர் கணவருக்கு வயிற்றுப் பிரச்சினை இருந்தது.
அங்கே பணம் கட்டி விட்டு வந்ததும் தேவலையாம்.
கிருஷ்ணா காப்பாத்துன்னு நினைத்துக் கொண்டேன்.
எங்கேயாவது வெளியே போக வேண்டும் என்று நினைத்தாலே

யோசனையாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
அங்கெல்லாம் எல்லோர்க்கும் இன்னும்
பகவானிடம் நம்பிக்கை இருக்கிறது.

நம்மூரில் அவரே சொப்பனத்தில் வந்து கேட்டாலும் கொடுப்பார்களோ மாட்டார்களோ:(

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
தங்கை அப்படித்தான் சொன்னாள்.
குருவாயூரில் அந்தப் பால் பாயசம் சாப்பிட்ட நினைவு இருக்கிறது.
கண்ணனின் மகிமையே மகிமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நலமுடன் இருங்கள்.
கோயில் பெயரும் புதுமையாக இருக்கிறது.

கிருஷ்ணனும் உயிர்ப்புடன் இருக்கிறார்,/
மகிமை தான். நன்றி மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. இதுவரை அறிந்திராத கோவில்.படிக்கப்படிக்க பக்தி பெருகுகிறது.பார்க்க வேண்டும் போல் உள்ளது. கோவிலுக்கு எங்கிருந்து பார்க்கப் போவது? சமயத்தை அவனே தந்து அழைத்தால்தான் உண்டு. குருவாயூருக்கு இரண்டொரு தடவை சென்றிருக்கிறேன். அருமையான தரிசனங்கள் கிடைத்திருக்கின்றன. இன்னொரு முறையும் செல்ல வேண்டுமென மனம் நினைக்கிறது. சந்தர்பத்தை அவனே அமைத்துத் தர வேண்டும்.அருமையான இந்த திருவார்ப்பு கண்ணன் கோவில் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

பதிவு மிக அருமை.கேள்வி பட்டிராத செய்திகள்.

பிரசாதம் பெற்றபின் தான் வெளியே போக வேண்டுமென்பது சிறப்பு.

திருவார்ப்பு கிருஷ்ணரை வேண்டி கொள்கிறேன்.
ஹரே கிருஷ்ணா உன் திருவடிகள் சரணம்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
கண்ணனின் கருணை என்றும் நம்முடன்.

கேரளாக் கிருஷ்ணன் கோவில்களில் எப்பொழுதும்
ஒரு சான்னித்யம் அதிகமாகத் தெரியும்.
கண்ணன் தங்கள் குழந்தை என்று ஒவ்வொருவரும்
உணர்வது போலத் தோன்றும்.

இந்தக் கோவிலைப் பற்றிப் படித்ததும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்ததுமா.
தங்கள் கருத்துக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்

கண்ணன் எப்பொழுதுமே கவரும் தெய்வம்.
அவருக்கே பசி என்றால் நாமெல்லாம் என்ன செய்வது:)

நான் இருக்கிறேன் என்று உணர்த்திக்
கொண்டே இருக்கிறார்.
கருத்துக்கு மிக நன்றி மா.

Bhanumathy said...

இதுவரை கேள்விப்படாத புதிய கோவில் தகவல்.