Blog Archive

Sunday, May 01, 2022

May...........2022

வல்லிசிம்ஹன்


எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.

நேற்று  வந்த சூறாவளி,சத்தம் நிறையப் போட்டுவிட்டு அண்டை மானிலத்துக்குச் சென்றது.

அந்த நேரம் கீழே சென்று காதில் ஹெட்ஃபோன் போட்டுக் கொண்டு
 பிடித்த பாடல்களைக்
கேட்டுக் கொண்டிருந்தேன்.
மற்றவர்கள் அவர்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

பெரிய பேரனுக்கு என் பயத்தைப் பார்த்து வருத்தம்.
மேல வா பாட்டி . ஒன்றும் ஆகாது 
என்று வற்புறுத்தினான்.
பிறகு தான் செய்தியில்  இந்தக் காற்றின் அட்டூழியம் தெரிந்தது.

கீழே நான் கேட்ட பாடல்கள்.:)







14 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

உங்கள் பதிவை பார்த்ததும் மே ஒன்றை நாம் மறந்து விட்டோமோ எனத்தோன்றியது. ஓ.. அங்கு கனத்த சூறாவளியா? எச்சரிக்கையாக இருங்கள். இனி தட்ப வெட்பங்கள் ஆங்காங்கே மாறும்.இங்கும் இரு தினங்களாக மாலையில் நல்ல மழை பெய்கிறது. ஒரு மாதம் அடித்த தகித்த அனல் வெப்பம் சற்று குறைய வாய்ப்பு.

நீங்கள் கேட்ட பாடல்கள் அனைத்தும் அருமை. அதில் கொஞ்சும் சலங்கை படப்பாடல் எப்போது கேட்டாலும் நன்றாக இருக்கும்.அம்பிகாவதி படப்பாடலுந்தான். என் கைப்பேசியில் எந்தப்பாடலை கேட்டாலும் உடனே சுவிஸ் ஆப் ஆகி விடுகிறது. என் ஃபோனுக்கு வயதாகி விட்டது போலும். வாங்கி ஐந்து வருடங்கள் கூட ஆகவில்லை.சரியாக வரும் சமயம் பாடல்களை கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

@KamalaHariharan
அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

ஆமாம் சூறாவளி இரண்டு தடவை வந்தது. பல வீடுகளின் கூரைகள்
பறந்து போயின. அத்தனை வேகம். நல்ல வேளையாக இங்கே பயமுறுத்திவிட்டு
அங்கே போய் விட்டது.

உங்கள் அன்பான விசாரிப்புகள் அருமருந்து மா. நன்றி.
இசை ஒன்றே எனக்கு நல் மருந்து.

நீங்கள் கணினியில் வலைப்பதிவுகளைக்
காண்பீர்கள் என்று நினைத்தே மா.

மொபைல்களுக்கு இப்போது இரண்டு மூன்று வருடங்கள்
காரண்ட்டிதருகிறார்கள்.
அதனால் தான் அவை அந்தப் பாடு படுத்துகின்றன.
நன்றி மா.

ஸ்ரீராம். said...

சூறாவளி நம்மை ஒன்றும் செய்யாவிடினும் பார்க்கும்போது அதன் வேகமும் வீரியமும் மனதை அலைக்கழிக்கும். நல்லது, நீங்கள் அதைப் பார்க்காமல் இருந்தது.

ஸ்ரீராம். said...

அழகிய முருகன் பாடல்கள். முருகன் பாடல்களுக்கு நடுவே ஒரு எஸ் பி பி பாடல் - நம்ம ஊரு சிங்காரி!

Geetha Sambasivam said...

Tornado வந்திருந்ததா? இங்கே செய்திகளில் ஒண்ணும் சொல்லக் காணோம். கவனமாக இருங்க ரேவதி. உடம்பு இப்போப் பரவாயில்லையா? அங்கெல்லாம் அடிக்கடி இப்படி இயற்கையின் கோரத்தாண்டவங்கள் நடந்து வந்தாலும் மக்கள் விரைவில் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். இதே நம் நாடு அதிலும் தமிழகம் எனில் ஏதோ மத்திய அரசு தான் திட்டம் போட்டு இதை எல்லாம் செய்ததாகச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்களில் முதலாம் வீடியோ வழக்கம் போல் வரலை. :) மற்றவை எப்போவுமே ரசித்தவை/ரசிக்கின்றவை. பகிர்வுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம், என்றும் நலமுடன் இருங்கள்.

பார்க்கவும் கேட்கவும் கோரமாக இருக்கும் பா.

வயதானால் தெளிவு வரும் என்பார்கள்.எனக்கு அது வரவில்லை! முன் ஜன்மத்தில் என்னவாக இருந்தேனோ
தெரியவில்லை. நன்றி அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அழகிய முருகன் நாமம் பாடல்கள் கேட்டால் பயம் தெளியும் .
டிரம்ஸ் இசையில் இடி சத்தம் குறைந்தது:) ஶ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

கருமேகம் வந்ததுமே டொர்னேடோ வாட்ச் என்று சொல்லி விட்டார்கள். அதாவது வரக்கூடும் என்று படங்கள். ஆளை விடு என்று கீழே போய்விட்டேன் மழையும் காற்றும் முடிந்த பிறகு அதன் மேலே வந்தேன்
பெண் கேட்கிறாள்
அப்பா இருக்கும் போது இவ்வளவு பயப்படமாட்டியே என்று கவலைப் படுகிறாள்.

நம்ம ஊர் கதையே தனி மா. எதற்குத் தான் இத்தனை அபத்தம் என்று தெரியவில்லை.

Thulasidharan V Thillaiakathu said...

ஓ சூறாவளி வந்ததா? மகன் சொல்லவே இல்லையே.

நல்ல காலம் அது கடந்து சென்றுவிட்டதே. தைரியமாக இருங்கள் அம்மா ஒன்றும் ஆகாது.

பாடல்கள் அருமையான பாடல்கள். இடையில் எஸ் பி பி பாடல் சொல்லணுமா!!ஆது தனி ரகம்

ரசித்தேன் அம்மா

கீதா

கோமதி அரசு said...

சூறாவளி உங்கள் பக்கம் பாதிப்பை ஏற்படுத்தி விட்டதா?
இங்கும் நேற்று காற்றுடன் மழை பெய்தது அரைமணி நேரம்.

பாடல்கள் எல்லாம் அருமையான தேர்வு.
உங்கள் உடல் நிலை இப்போது நலமாகி வரும் என்று நினைக்கிறேன். உடம்பை பார்த்து கொள்ளுங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

சூறாவளி..... இதுவும் கடந்து போகும்.....

நல்லதே நடக்கட்டும்......

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,
என்றும் நலமுடன் இருங்கள்.

சனிக்கிழமை மதியத்திலிருந்து விஸ்கான்சின்,கான்சாஸ் இங்கே எல்லாம்
மோதி,

இல்லினாய்க்கும் வந்தது.

மிச்சிகனுக்கு போகவில்லை என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால்
மழை மத்திரம் இருந்து இருக்கும் அம்மா.
ஸ்ப்ரிங் ஷவர்ஸ்.

சத்தமாக இருந்தது. எங்களுக்குத் தெற்கே
நிறைய சேதம்.
எனக்கு தான் மா பயம்.
நன்றி மா.எஸ்பி பிக்குக் கேட்பானேன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி கோமதி,
வாழ்க வளமுடன்.

வெறும் ஜலதோஷம் இத்தனை பாடு படுத்துகிறது.
இப்போது தேவலை அம்மா.

இந்த ஊர் சீதோஷ்ணம் இது போலத்தான் இருக்கிறது.

நமக்குத் தான் தாங்கும் சக்தி குறைந்து விட்டது.
நன்றி மா.மதுரையில் மழை என்று பார்த்தேன்மா.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஆமாம் பா, இதோ இன்று வெயில். நாளை மீண்டும் மழை.
கடக்கத்தான் வேண்டும் .நீங்கள் வெய்யிலில் அந்த
சிரமத்தை அனுபவிக்கிறீர்கள். சென்னை மற்றும் எல்லா
இடத்திலும் இந்தக் கோடையின் வெப்பம்
அதிகரித்திருக்கிறது. நன்றி மா.