Blog Archive

Tuesday, May 03, 2022

நாகலிங்கப்பூ

வல்லிசிம்ஹன்
நாகலிங்கப்பூ - விசேஷங்கள்:

நாகலிங்கப்பூ.   இதுவே கடவுள்.   இந்தப் பூவுக்குள்ளே தானே இறங்கி வந்து குடியிருக்கிறான். அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.
நாகமுமிருக்கிறது. உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன. உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு மினியேச்சர் கைலாயமே கைக்குள் இருப்பது போல் இருக்கும். ஒரு சில நிமிடங்கள் நம் கவனத்தை ஒழுங்குபடுத்தி இந்தப் பூவின் மத்தியப் பகுதியில் இருக்கும் சிவ லிங்கத்தை உற்று நோக்கி அப்படியே நம்மை தியானத்தில் கொண்டு சென்று விட்டால் உடல் சிலிர்க்கும். உள்ளம் அமைதி பெறும். கயிலாயம் கண்ணுக்குள் விரியும்
சிவபூஜைக்கு உரிய அஷ்ட மலர்களில் இது இடம் பெற வில்லை. பூமிக்கு வந்த சிவ மலர் என்பதாலோ என்னமோ விசேஷமான நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க வடிவத்தைப் பெற்றுள்ளது.  பாம்புகள் விரும்பி தஞ்சம் புகும் மரமாக நாகலிங்க மரம் உள்ளது .  விசேஷத்திலும் விசேஷமாக மரத்தில் பூக்கும் பூவாக  வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று, தான் பூப்பதற்கு  என்று பிரத்யேகமாக ஒரு கிளையை உருவாக்கிக் கொண்டு பூக்கும் மலராக நாகலிங்கப்பூ உள்ளது.
“ஷல்பூல்” என்றும் “கைலாஷ்பதி” என்றும் வடநாட்டவரும்  “நாகவல்லிப்பூ”  மல்லிகார்ஜுனப்பூ” என்று தெலுங்கர்களும் பய பக்தியுடன் அழைக்கிறார்கள். வந்காலமோ இதனை “நாககேஷர்” என்கிறது. நாகலிங்க மரத்திற்கு ஏனைய தாவரங்களைப் போல பருவகால மாற்றங்கள் கிடையாதாம். என்றும் பசுமையான மரம் என்று போற்றப்படுகிறது. ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்குமாம்.
நாகலிங்கப் பழம் மகா விசேஷம்  ஒவ்வொரு பழமும் ஒரு கால்பந்து அளவுக்கு இருக்கும். அதில் 65 முதல் 550 விதைகள் வரை இருக்கும். இவைகள் முதிர்ச்சி அடைய சுமார் 12 லிருந்து 18 மாதங்கள் வரை ஆகுமாம். அமேசான் காட்டுப் பகுதிகளில் இந்த மரம் துர்தேவதைகளிலிருந்துகாக்கும் மரமாகவும் ஆசிய கண்டத்தில் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. மேலும் இந்த மரம் மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது. காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துமாம்.
கடன் நீக்கி வல்லமை தரும் இந்த மரத்தின் இலைகளை அரைத்து தோல் நோய்களுக்கு மருந்தாகவும் இலைகளை மென்று தின்பதால் பல்வலிக்கு மருந்தாகவும் பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ ஜுரத்துக்குமருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.

சிவாயநம!







16 comments:

ஸ்ரீராம். said...

நாகலிங்கப்பூவைப் பார்ப்பதே விசேஷம். நீங்கள் சொல்வது போல கண்ணைக்கவரும் பூ. என்ன ஒரு வெளிப்படு இத்துனூண்டு பூவுக்குள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ,
அன்பின் ஸ்ரீராம். மிக விசேஷம். பழைய வீட்டில் இரண்டு மரங்கள் இருந்தன.
அவற்றைத் தாண்டும் போதே
அத்தனை வாசனையாக இருக்கும். நன்றி மா.

இராய செல்லப்பா said...

இளஞ்சிவப்பு நாகலிங்க மலர்கள் வீட்டிலுள்ளவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும், அடர்சிவப்பு நாகலிங்க மலர்கள் செல்வ வளத்தை வீட்டில் கொண்டுசேர்ப்பதற்கும் உதவி புரிவதாக ஸ்ரீ அரவிந்த அன்னை அவர்கள் எழுதியிருக்கிறார்கள். குருநாதர் கர்மயோகி அவர்கள் மூலம், இது போன்ற எண்ணற்ற மலர்களின் தன்மைகளை அன்னை தியான மையத்தில் பங்குபெற்ற இலட்சக்கணக்கான மக்கள் அறிந்துகொண்டிருக்கிறார்கள். பலன்களை அனுபவித்தும் இருக்கிறார்கள், நான் உள்பட.அரவிந்த ஆசிரமத்தில் ஸ்ரீ அன்னை எழுதிய 'மலர்களும் அவற்றின் குணங்களும்' என்ற பெரிய புத்தகம் ஒவ்வொரு பூவின் படத்துடனும் கிடைக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய புத்தகம்.

ஏதேனும் ஒரு புதிய பூவின் பெயர் தெரியவில்லை என்றால், இந்த நூல் மிகவும் திணையாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

திரு ராய.செல்லப்பா வணக்கம்.
என்னிடமும் அன்னையின் மலர்கள்
புத்தகம் இருக்கிறது என் அம்மாவுக்கு அன்னையிடம் மிக நம்பிக்கை.


எல்லாப் புத்தகங்களையும் இங்கே கொண்டு வர முடியவில்லை.
நீங்கள் சொல்லும் கருத்துகள் உயர்வானவை.
மலர்களால் நம் மனம் செழிக்கட்டும்.
மிக நன்றி மா. என்றும் வளமுடன் இருங்கள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது.நாகலிங்கபூவை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அதன் சிறப்புகள் குறித்து எங்கள் அப்பா சொல்லியும் கேட்டிருக்கிறேன். இறைவனின் படைப்பில் எத்தனை விந்தைகள். இன்று தங்கள் பதிவில் மரத்தோடு பூக்களையும் பார்க்கும் போது மனது வியந்துதான் போகிறது.நாகலிங்கபூ பற்றிய நிறைய தகவல்களை தங்கள் பதிவிலும் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

நாகலிங்கப் பூ குறித்த தகவல்கள் நன்று. நெய்வேலி பள்ளிக்கு அருகில் இந்த நாகலிங்க மரம் இருந்தது. இப்போது திருவரங்கத்திலும் வீட்டின் பின்னர் இந்த மரம் இருக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

நாகலிங்கப்பூவே மிக அழகு அதுவும் சிவலிங்க வடிவில் நடுவில் இருப்பது மிகவும் உன்னதமான படைப்பு

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா சென்னையில் வீட்டருகில் இருந்தது இந்த மரம் அதாவது மத்யகைலாஷ் கோயில் அருகில் ஆனால் பாருங்கள் பழைய மகாபலிபுரம் ரோடு அடையார் ரோட்டுடன் இணைக்க அந்த இடத்தில் ரோடு அமைக்க எல்லாம் வெட்டிவிட்டார்கள் நிழல் தரும் பெரிய மரமும் கூட இருந்தது அதையும் வெட்டிவிட்டார்கள். என்ன சொல்ல?
//மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது. காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துமாம்.//

பாருங்க இதைப் போய் வெட்டியிருக்கிறார்கள் என்ன சொல்ல?

இங்கு வீட்டருகில் மரம் இருக்கிறது இதோ கொத்துகொத்தாகப் பூத்திருக்கிறது படமும் எடுத்திருக்கிறேன். அழகான பூ. எனக்கு மிகவும் பிடித்த பூ.

அம்மா, நீங்கள் எழுதியிருக்கும் தகவல்கள் அருமை பல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.


இறைவனின் படைப்பில் இந்த நாகலிங்கப் பூ மிக உயர்த்தி.
விசேஷமான குணம் உடைய இந்த மரத்தை நட்டு வைத்துப்
போற்றியவர் என் கணவரின் தாத்தா.
வில்வ மரம், நெல்லி மரங்கள் என்று வீடே
பொலிவுடன் இருக்கும்.

இவ்வளவு நற்குணங்கள் கொண்ட மரங்களை
வைத்துப் போற்றவும் ஒரு கொடுப்பினை சிலருக்கு
இருக்கிறது.
மரம் வளர்ப்போம்.
அன்பான கருத்துக்கு மிக நன்றி சகோதரி/.

வல்லிசிம்ஹன் said...

@ Venkat Nagarajan,

இப்போது திருவரங்கத்திலும் வீட்டின் பின்னர் இந்த மரம் இருக்கிறது."

இது மிகப் பிடித்த செய்தி அன்பு வெங்கட். மரங்கள்
நிறைய இருந்தால் நம் வாழ்வும் வளம் பெறும்.
சந்தோஷம் ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
மிக உண்மை மா. அற்புதமான பூ. அற்புதமான மரம்.
நமக்கெல்லாம் கிடைத்தவரம். நம் சந்ததிகளுக்கும் கிடைக்க வேண்டும்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்மா,

''மத்யகைலாஷ் கோயில் அருகில் ஆனால் பாருங்கள் பழைய மகாபலிபுரம் ரோடு அடையார் ரோட்டுடன் இணைக்க அந்த இடத்தில் ரோடு அமைக்க எல்லாம் வெட்டிவிட்டார்கள் நிழல் தரும் பெரிய மரமும் கூட இருந்தது அதையும் வெட்டிவிட்டார்கள்.''

இது ஒன்றுதான் எல்லோராலும் செய்ய முடிந்தது. படைப்பை
அழிப்பது. :(
அடையாறு ,காந்தி நகர் எல்லாம் எவ்வளவு வளப்பமாக இருக்கும். என் பெரிய மாமனார் வீட்டுக்கு முன் ஒரு ஆலமரம் ஒன்று இருந்தது.
அதனடியில் தான் எத்தனை குடும்பம் குடி இருந்தது.!!

சலசல் என்று குருவிகள் சத்தம் ரம்மியமாக இருக்கும்.
எல்லாம் நினைவில் தான்.

இங்கு வீட்டருகில் மரம் இருக்கிறது இதோ கொத்துகொத்தாகப் பூத்திருக்கிறது படமும் எடுத்திருக்கிறேன். அழகான பூ. எனக்கு மிகவும் பிடித்த பூ.''

அப்பாடி நம் பதிவில் இரண்டு மரம் வந்து விட்டது. அதிர்ஷ்டம் தான்.
நன்றி கீதாமா. நலமுடன் இருங்கள்.

Geetha Sambasivam said...

மதுரை வண்டியூர்த் தெப்பக்குளம் எதிரே இருக்கும் தியாகராஜா கல்லூரி வளாகத்தினுள் இந்த மரம் உண்டு. இப்போ இருக்கானு தெரியலை. அங்கே போகும்போதெல்லாம் பூக்களைச் சேகரம் செய்து வருவேன். ஆனால் இத்தனை விபரங்கள் அப்போதும்/இப்போதும் தெரியாது. தகவலுக்கு மிக்க நன்றி.

மாதேவி said...

நாகலிங்கப் பூ பற்றிய சிறப்பான பகிர்வு. இப்பொழுது இம் மரங்களைக் காண்பது அரிது. எங்களுக்கு அண்மையில் அம்மன்கோவிலில் இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

நாகலிங்க மரம் அங்கே இருந்தது.அத்தை வீடு தெப்பக்குளம்
போகும் வழியில் இருந்தது.
தெப்பக்குளத்தை சுற்றி நடக்கப் போவோம்.
எனக்கு தான் நினைவில்லை.

தாத்தா வீடு பழங்கானத்தில் இருந்தது.
அங்கே தோட்டத்தில் இருந்த மரங்களில்
இதுவும் ஒன்று. நாசியை நிரப்பும் மணம் இன்னும் நினைவில்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி உங்கள் ஊரில்
இந்த மரம் இருப்பது மிக நன்மை. இத்தனை மருத்துவ குணங்கள்
இந்த நாகலிங்க மரத்துக்கு இருப்பதை எண்ணி இன்னும் வியப்பாக இருக்கிறது மா.
என்றும் நலமுடன் இருங்கள்.