Blog Archive

Sunday, May 08, 2022

அன்னையர் தின வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன்



 உலகத்தின் தாயார் காஞ்சி காமாக்ஷியில் ஆரம்பித்து 
அலர்மேல் மங்கை முதலாக
அனைத்து அன்னையருக்கும் வணக்கங்கள். 

  அன்பு ஒன்றே ஆதாரமாக நம்மைப் பெற்று வளர்த்த
அம்மா,  கவனித்துக் காப்பாற்றிய அப்பா, 
 மதித்து இணைந்த கணவர்,
கருத்துடன்  நடத்தும் நாம் பெற்ற மக்கள்,
இணைய வழி சேர்ந்த சகோதர சகோதரிகள்
நட்புகள்  எல்லோரின்  அன்புக்கும் , எப்பொழுது வேண்டுமானாலும்
காத்தருள தயாராக இருக்கும் தாய் உள்ளங்களுக்கும்

இனிய வாழ்த்துகள்.
 எல்லோரும் நலம் பெறுவோம்.




14 comments:

KILLERGEE Devakottai said...

தங்களுக்கும் வாழ்த்துகள் அம்மா.

ஸ்ரீராம். said...

ஓ.. இன்று அன்னையர் தினமா?  இனிய வாழ்த்துகள் அம்மா.

கோமதி அரசு said...

அருமையான பதிவு.
அம்மாவும் உங்கள் பேரனும் உள்ள படம் பார்க்கவே அருமை.
அன்னையர் தின வாழ்த்துக்கள் அக்கா.நான் புது போஸ்ட் போடவில்லை. பழைய பதிவை அப்படியே போட்டு விட்டேன்.
படங்கள் எல்லாம் அழகு.

Thulasidharan V Thillaiakathu said...

அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

//அன்பு ஒன்றே ஆதாரமாக நம்மைப் பெற்று வளர்த்த
அம்மா, கவனித்துக் காப்பாற்றிய அப்பா, //

அருமையான் அழகான வார்த்தைகள்!

அன்னையர் தின வாழ்த்துகள்.

துளசிதரன்

வெங்கட் நாகராஜ் said...

அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா!

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பின் தேவகோட்டைஜி.
என்றும் நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்.
என்றும் நலமுடன் இருங்கள்.
ஆமாம் மா. நம் ஊரில் அமர்க்களப் படுமே.
தொலைக்காட்சியில். நினைவிருக்கிறது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

அம்மாவுக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளைப்
பிரியம்.

பெரிய பேரனுக்கும் அவரிடம் ஒட்டுதல் அதிகம். அதற்குத்
தானே பாட்டிகளாக இருக்கிறோம்.

நானும் பழைய பதிவையே போட நினைத்தேன்.
மனம் வராமல் எழுதி விட்டேன்.:)
எழுத ஒன்றுமே இல்லை!!!!
படங்கள் பழையவை தான்.
என்றும் நலமுடன் இருங்கள் தங்கச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன் மா,

நலமுடன் இருங்கள்.
நான் இருக்கும் போது அங்கே பிரமாதமாகக்
கொண்டாடுவார்கள்.
:))))0

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

அன்பு வாழ்த்துகளுக்கு மிக நன்றி.
தங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து
அன்னைகளுக்கும் என் வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

அன்னையர் தினம்ங்கற விஷயமே மறந்து போச்சு! எங்க வீட்டில் இதுக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லும் வழக்கமும் இல்லை/ :)))) உங்களுக்கும் ,உங்கள் மகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் தாமதமாக.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
உங்கள் பதிவுகளை இன்னும் படிக்கவில்லை அப்பா.

உங்களுக்கும், உங்கள் அம்மாவுக்கும், ஆதிக்கும்,பின்னாட்களில் தாயாகப்
போகும் ரோஷ்ணிக்கும் இனிய வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
இந்த ஊரில் இதெல்லாம் நிறையக் கொண்டாடுகிறார்கள்.

நம்மூரில் ஜயா டிவியிலும் , சன் டிவியிலும்
நிறைய பார்த்திருக்கிறேன் மா.

அலுத்துப் போகும் அளவுக்கு வரும்.:)