Blog Archive

Thursday, May 05, 2022

எண்ணமும் எழுத்தும்.

வல்லிசிம்ஹன் படிப்பது எவ்வளவு பயன் தரும் என்பதை நாம் எழுதுவதைச் சிறிது நிறுத்தினால் தான் தெரிகிறது:)  #கீதா சாம்பசிவம்,#எல்கார்த்திக்.
2011 இல் எழுதிய பதிவு


நாச்சியார் பதிவில் படங்களை ஏற்றுவதில் இருக்கும் சுலபம்,

எழுதுவதில் இல்லை.

இ கலப்பையும் உதவ முடியாத இந்த நேரங்கள் மற்ற பதிவுகளைப் படிக்கத் தோதாக அமைகிறது.

முக்கால்வாசி நேரம் மழலைகளுடன் செலவாகிவிடுகிறது.

ஓய்வெடுக்க ஒரு மணி.

மீண்டும் வேலைகள். மருமகளைப் பார்த்தால் அனுதாபம்தான் தோன்றுகிறது.

நம் ஊரைப் போல இஸ்திரி செய்ய ஒரு ஆள். வீடு பெருக்கித் துடைக்க ஒரு ஆள் என்றெல்லாம் இங்கு இல்லை.

தெரிந்த விஷயமே.



இருந்தாலும் கையில் ஏழு மாதக் குழந்தையுடன் எல்லாவற்றையும் கவனிப்பது

கடினம்..
(அந்தப் பிள்ளைக்கு இப்போது 11 ஆகப் போகிறது:)  )

இருந்தும் எனக்குக் கிடைக்கும் சில மணித்துளிகளில் கமலா சடகோபனின்

"என் இனிய மந்திரக் கோலே" படித்தேன்.

பக்கத்துவீட்டில் நடப்பதை நேரில்பார்ப்பது போல இருக்கிறது.



எண்ணங்களில் கீதாவின்  பெண் எழுத்து 
+++++++++++++++++++++++++++++++++++++++++
படித்தேன் அருமையாக பெண்களின்  எழுத்துப் பரம்பரையையே அலசி இருக்கிறார்.

இந்தப் பதிவிலேயே     .எல்.கார்த்திக்
*********************************************

அவர்கள் என்னை எழுத அழைத்த  பெண்களின் எழுத்தைப் பற்றிய என் கருத்துகளைப் பதிவிடுகிறேன்.

நாங்கள் பள்ளியில் படிக்கும் காலங்களில் எழுதிய பெண்கள் குறைவாக இருந்தாலும்  எங்களுக்குப் பழகிய சூழ்நிலைக் களமாகக் கொண்டே
கதைகள் அமைந்தன.மிகவும்...பிடித்தவர்....லக்ஷ்மி.....பிறகு///சிவசங்கரி

அதில் புதுப்பாணியைக் கொண்டு வந்தவர் ஆர். சூடாமணி.
பெண் மனசில் உள்புகுந்து அழகுகளையும் விகாரங்களையும் தைரியமாக எழுதியவர்.
பின் என்னைக் கவர்ந்தவர்  ராஜம் கிருஷ்ணன்.
முறுக்கு,சீடை,மைசூர்பாகு என்று உழலாமல்  வேறு  நிலைக்கு எடுத்துவைத்தார்.
அதற்குப் பின்னர் வந்தவர்களின் கதைகளில் , கண்ணம்மா,,டார்லிங் இவைகள் முக்கிய வார்த்தைகளாக உயர் மட்டக் காதல்களும் தியாகங்களும்
வேறொரு பார்வை பார்க்க வைத்தன.
கண்ணம்மா  என்றழைக்கும் கணவன் வேண்டும் என்று என் தோழி ஒருத்தி கனவு காணுவாள்:):சிவசங்கரி,வாஸந்தி,இந்துமதி..)

ஆறடி உயரம் ரிம்லெஸ்  கண்ணாடி,,பியட் கார் என்று வலம் வந்த கதா நாயகர்கள். படித்த காதலி, இப்படிப் போகும் கதை..
இப்பொழுது இணையத்திலும் காதல் கவிதைகளுக்குக் குறைவில்லை.

அதில்லாவிட்டால் உலகம் இல்லையோ.
இல்லைதான் என்று நினைக்கிறேன்.:)
பிறகுபடித்தவர்கள்....வித்யாசுப்ரமணியம்,உஷாசுப்ரமணியம்.
கமலாசடகோபன்.....அனுராதாரமணன்.

பாட்டியின் பார்வையில் வேறென்ன தெரியும்!
படிக்க அனைத்து எழுத்துகளுமே நன்றாக இருக்கின்றன.
நேரம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இலவசமாகக் கரும்பு போல இனிக்கும் எண்ணங்களையும்,ஆழ் நோக்குடன் பதியப்படும் முற்போக்குக் கதைகளையும் வாசிக்கக் கிடைக்கின்ற ஒரே இடம் இணையம்.

பெண்பேசும்   தமிழுலகம் இன்னும் விரியும்.
ஆன்மீகத்திலிருந்து, ,பற்பல சுற்றுலா சென்று நம்மை மகிழ்விக்கும்
***************************************************************************
 பதிவுகளிலிருந்தும்,
படித்தாலே சிந்தனையைக் கிளரும் ராமலக்ஷ்மி போன்றவர்களின் தீர்க்கமான கருத்துகளும், லக்ஷ்மியின் மலர்வனமும்,
சித்ரா,அன்புடன் அருணா, மாதங்கி மாலி,அப்பாவி புவனா,ஹுசைனம்மா,மாதேவி,சிறுமுயற்சி   முத்துலட்சுமி,
இவர்களெல்லாம் இளைய தலைமுறை.

பெரியவர்களாக நம் துளசி,கீதா,நானானி,கோமா,கோமதி அரசு, திருமதி
************************************************** லக்ஷ்மி பூனாவிலிருந்து
***************************************************************** எழுதும் பதிவுகள்
***********************************************
 எல்லாமே அள்ள அள்ளக் குறையாத இன்பம் தரும்  எழுத்துகள்.

இவர்களைப் பற்றி  மதிப்பிடவோ,கருத்துக் கூறவோ
 நான் இன்னும் நிறைய தொலைவு கடக்க வேண்டும்.
தெரிந்ததை எழுதி

விட்டேன் கார்த்திக்.!!
 நேரக் குறைவு காரணமாக நிறைய
பதிவர்கள் விட்டுப் போயிருக்க வாய்ப்பு அதிகம்
நம் சின்ன அம்மிணி அகிலா மாதிரி.:)
மற்றவர்கள் மன்னிக்கணும்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
at May 03, 2011 23 comments:  

22 comments:

ஸ்ரீராம். said...

ஒரு கதம்பம் போல எழுதி இருக்கிறீர்கள்.  நிறைய தெரிந்த பதிவர்கள்.  நிறைய பேர் இப்போது தொடர்வதுமில்லை.

ஸ்ரீராம். said...

ஆமாம், நாங்கள் வந்து இரண்டு வருடம் ஆகியிருந்தது போலவே அப்போது..  எங்களைப் பற்றிக் க் காணோமே...  அப்போது நம் இருவர் பதிவுகளுக்கும் ஒருவருக்கொருவர் வணததில்லையோ...   உங்கள் தளம் நான் எப்போது முதல் முறை வந்தேன் என்று நினைவில்லை!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள் .
2009 ல நீங்க வந்து ,கேட்டு வாங்கி போட்ட கதை

எபிக்குக் கதை எல்லாம் எழுதினோமே.

அடிக்கடி போக்கு வரத்து இல்லையோ.
தமிழ் மணம் இருந்தது. அங்கே நிறைய பதிவர்கள் நண்பர்கள்.

விட்டுப் போனவர்கள்னு ஒரு பட்டியல் போட வேண்டியதுதான்:)
ஸாரி மா.

வல்லிசிம்ஹன் said...

''நிறைய தெரிந்த பதிவர்கள். நிறைய பேர் இப்போது தொடர்வதுமில்லை.''

எல்லோரும் முக நூலில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஸ்ரீராம் மிக நன்றி மா. நிறைய தெரிந்த பதிவர்கள். நிறைய பேர் இப்போது தொடர்வதுமில்லை.

ஸ்ரீராம். said...

கேட்டு வாங்கிப் போடும் கதை 2015 வாக்கில்தான் தொடக்கம் அம்மா.  உங்கள் தளத்துக்கும் உங்களுக்கும் நான் தாமதமாகத்தான் அறிமுகம் ஆனேன்.

ஸ்ரீராம். said...

// விட்டுப் போனவர்கள்னு ஒரு பட்டியல் போட வேண்டியதுதான்:)ஸாரி மா. //

இதில் ஸாரி சொல்வதற்கு என்ன அம்மா இருக்கிறது?

Geetha Sambasivam said...

ரேவதியின் இந்தப் பதிவு பழைய நினைவுகளை மீட்டு எடுத்தது. ரேவதி தான் எங்கள் ப்ளாகில் அடிக்கடி தொடர்பில் இருந்தார் என நம்புகிறேன். ஏதோ ஒரு போட்டிக்குப் பாடல் கூடப் பாடி அனுப்பி இருந்தார். அப்போது நானும் அம்பேரிக்கா! அவரும் சிகாகோவில் இருந்தார். பத்துவருஷங்கள் இருக்குமோ? ஆனால் நான் அதிகம் எ.பியின் தொடர்பில் வந்தது அவரை/துவரை போட்டிக்குப் பின்னரே! அப்போதெல்லாம் கௌதமன் அடிக்கடி எழுதிக் கொண்டிருந்தார். கேஜிஎஸ் படங்கள் போடுவார். ஒரு வாரம் போட்டிருந்த அவர் பேரன்/மனைவியின் படம் இன்னமும் மனதில்.

Geetha Sambasivam said...

ரேவதி சொன்ன பதிவர்கள் அனைவரையும் தெரியும். ஆனாலும் சிலரிடம் தான் பழக்கம். இப்போதெல்லாம் அனைவரும் முகநூலிலேயே பதிவும் போடுகின்றனர். வலைப்பக்கம் யாரும் வருவதே இல்லை. அது ஏன் என்பதும் புரியவில்லை.

கோமதி அரசு said...

பெண் எழுத்து பற்றி அழகாய் சொன்னீர்கள்.

//கண்ணம்மா என்றழைக்கும் கணவன் வேண்டும் என்று என் தோழி ஒருத்தி கனவு காணுவாள்://

அவர்களுக்கு அப்படி அமைந்ததா?

வலைத்தளத்தில் அப்போது எழுதி கொண்டு இருந்தவர்கள் பேரை பகிர்ந்து கொண்டதில் என் பேரும் இடம் பெற்றது மகிழ்ச்சி.

தொடர் பதிவுகளும், பதிவில் அரட்டைகளும் என்று அருமையான நாட்கள்.
மீண்டும் வருமா என்று ஏங்க வைக்கும் காலங்கள்.

பழைய நினைவுகளை புரட்டிப்பார்ப்பது ஆனந்தம் தான்.

மகன் வீட்டில் இருக்கும் போது எழுதிய பதிவா? எல்லா வேலைகளையும் அவர்களே பார்ப்பது பார்த்து கொண்டு இருக்கும் நமக்கு கஷ்டமே. நம்மால் முடிந்த உதவிகளை செய்து கொடுப்போம்.
சின்ன அம்மணி, கோமா எல்லாம் நகைசுவையாக எழுதுவார்கள். என்னை வலை பக்கம் இழுத்தவர்களில் நீங்களும், கோமாவுக்கும் பெருபங்கு உண்டு.

சென்ஷி, கோபி, இலவச கொத்தனார், அம்பி, தெகா, ஆதவன், இன்னொரு கோபி , அபி அப்பா, ஆயில்யன், நேசமித்ரன், ஐயனார், கணேஷ் பாலா என்று நிறைய பேர் வருவார்கள் வலைத்தளம்.
இன்னும் இருக்கிறார்கள் .

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. நிறைய பதிவர்களைப்பற்றி இன்று உங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன்.ஆம். உண்மை. இவர்களின் எழுத்துக்கள் நம் சிந்தனைகளை வளர்த்து விடுகின்றன.நிறைய பதிவுகளின் மூலம் நமக்கு தெரியாததை படித்து கற்று, அவர்கள் வெளியிடும் கோவில்,பயணம் குறித்த படங்களைப் பார்த்து தெரிந்து கொள்கிறோம்.நன்றி தாங்கள் வெளியிட்ட அத்தனை பதிவர்களுக்கும். தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

நாங்கள் வலையுலகில் நுழையாத காலம். என்றாலும் பலர் தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள். பெண் எழுத்தாளர்கள் பற்றிய பதிவுகள் கருத்துகளோ? இவை எல்லாம்?

தொகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள் இல்லையா அம்மா?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இப்போது இவர்களில் பலரைக் காணவில்லை. ஒரு சிலர் எப்போதேனும் கருத்துகளில் பார்க்க முடிகிறது. குறிப்பாக ஹுசைனம்மா. அப்புறம் அப்பாவி தங்கமணி இப்போது சஹானா பாடிக் கொண்டிருக்கிறார்கள்! நன்றாகவே இருக்கிறது. கார்த்திக்கும் தெரியும். கீதாக்கா கோமதிக்கா எல்லாரும் இப்போதும் இருக்கிறார்கள். நீங்களும் நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்!

கீதா

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை எத்தனை பதிவர்கள், எத்தனை எத்தனை பதிவுகள்.... அது ஒரு கனாக்காலம். எண்ணங்கள் சிறப்பு.

மாதேவி said...

படிக்கும்போது பழைய ஞாபகங்கள் வந்து போயின.

வல்லிசிம்ஹன் said...

கே வாபோ 2015?
கீதா சொல்கிற தவளை அதுக்கு முன்னாடி இல்லையோ ஸ்ரீராம்.
நானும் போய்ப் பார்க்கிறேன். நன்றி மா.
ஆமாம் இது கதம்பம் தான்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

நீங்கள் சொல்வது சரிதான். எனக்கும் நினைவு இருக்கிறது.
கேஜீஎஸ் படம்.

நமக்கு நல்ல நினைவுகளைக் கொடுத்து எழுதும்படி வைத்த
பெருமை கௌதமன் ஜிக்கு உண்டு.
எனக்கும் நிறைய பதிவர்களோடு இப்போது
தொடர்பு இல்லை.

துபாய் போன போது சந்தித்த நண்பர்கள்
சில நாட்கள் தொடர்பில் இருந்தார்கள்.
அதில் பம்பாய் லக்ஷ்மி அம்மா, திருமதி ருக்மணி சேஷசாயி(ஸ்ரீரங்கம் ? )
உண்டு.
ஏதோ நம்மாலாவது வாட்ஸாப்பில் இருக்க முடிகிறது.
கடவுளுக்குத் தான் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்லி இருப்பது அத்தனையும்
உண்மை.
கோமாவை மறக்கவே முடியாது.
ஹா ஹா ஹாஸ்யம் எழுதுவார் இல்லையா.
நானானி, கோமா, ராமலக்ஷ்மி, , நானானியோட அண்ணா
வடிவேல் எல்லோரும் அத்தனை அழகாக
எழுதுவார்கள்.
நம்ம கயல் நல்ல திரைப்பாடல்கள்
பதிவிடுவார். இரண்டு தம்பி, சென்ஷி, இரண்டுகோபி ,கோபினாத்,
ஆசிஃப்,ஜசீலா எல்லோரும் ஒரு குடும்பம் மாதிரி பழகினோம்.
டோண்டு சார் இருந்தார்.
வலைச்சரம் சீனா மறக்க முடியுமா.
திருமதி இராஜேஸ்வரி எத்தனை அழகாக எழுதுவார்!!
டெட்டிராய்ட்டில் ப்ரேமலதா என்பவர் எழுதுவார்.
கணக்கே இல்லாமல் தோழிகள், நண்பர்கள்.
பொற்காலம் தான். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

?'மகன் வீட்டில் இருந்தபோது எழுதிய பதிவுதான் மா.
அப்போதான் சின்னப் பேரனுக்கு
7 மாதங்கள் ஆகி இருந்தது.
முடிந்த உதவிகளை நானும் இவரும் செய்வோம்.
இரண்டு மாதங்கள் தான் இருக்க முடியும்.
அன்பு கோமதி, நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் வாழ்க வளமுடன். தாமதமாகப் பதில் சொல்கிறேன்.

''விடுகின்றன.நிறைய பதிவுகளின் மூலம் நமக்கு தெரியாததை படித்து கற்று, அவர்கள் வெளியிடும் கோவில்,பயணம் குறித்த படங்களைப் பார்த்து தெரிந்து கொள்கிறோம்.நன்றி தாங்கள் வெளியிட்ட அத்தனை பதிவர்களுக்கும். தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.''

அன்பு கீதா முதலில் பதிவிட்டார். பீன்னாலேயே நானும் எழுதினேன்.
பதிவர்களின் கொண்டாட்ட விழாக்காலம். அது.
எல். கார்த்திக் இப்போது யூடியூபில் மனைவியுடன்
கலக்குகிறார்,

அனைத்துத் தோழமைகளிடமிருந்தும் அன்பும்
விசாரிப்புகளும் வந்த வண்ணம் இருக்கும்.
முக நூலில் சிலர் இருக்கின்றனர்.

நானும் நிறைய எழுதுவதில்லை. நம்மை ஊக்குவித்தது
பெண் எழுத்தாளர்களின் சிறந்த பகிர்வுகள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்மா,
என்றும் நலமுடன் இருங்கள்.

ஆமாம் பதிவுலக நட்பு மிகச் சிறந்து விளங்கிய காலம்.
பல குழுக்கள் உருவாகிய காலம்.

நம் கார்த்திக் ஆரம்பிது,கீதா சாம்பசிவம் எழுதி நான்
பின்னர் எழுதினேன்.

பல எண்ணங்களை எழுதாமல் விட்டு விட்டேன். அன்னையர் தினத்தை
ஒட்டியோ, மகளிர் தினத்தை ஒட்டியோ
வந்த பதிவு இது.

ஸ்விஸ்ல இருந்த போது அவசரக் கோலமாகத்
தெளித்துவிட்டேன். மிக நன்றிமா.

நான் உங்கள் மூவரையும், கோமதி ,கீதா எஸ், கீதா ஆர்...
என் 3 ஜி என்று மகளிடம் குறிப்பிடுவேன்:)
நன்றி கன்னா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்மா,
அருமையான நட்புகளின் காலம்.

இப்பொழுதும் நட்புக்குக் குறைவில்லை. எழுத்துதான் கொஞ்சம் குறைந்து விட்டது. அதனால் என்ன. மன்ம் இருக்கும் வரை மறக்காத தமிழ். நன்றி மா.
எப்பவும் நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
என்றும் வளம் சூழ வாழ வேண்டும்.
நம் சொத்தான நட்பு பல்லாண்டுகளாக
நம்மைப் பிணைத்திருக்கிறது. எப்பொழுதுமே அன்பு நம்மைத் தொடர்ந்து
காக்கும்.
நன்றி மா.