அனைவரும் மனம் நிறை அமைதியுடன்,
நோய் இல்லா வாழ்வுடன் வாழ இறைவன்
அருள வேண்டும்.
இந்த ஊரில் இயற்கை ஒருபுறம், மன நலம் கெட்ட
மனிதர்கள் ஒருபுறம் நிம்மதியைக் கலைக்கிறார்கள்.
தெய்வ நம்பிக்கை இல்லையா , சகமனிதர்களிடம் வெறுப்பா
ஒன்றுமே கணிக்க முடியவில்லை.
உலகிலேயே பெரிய வளங்கள் கொண்ட
தேசம். மண் வளம், பண வளம், ஏழைகள்
என்பவர்கள் கூட அரசாங்கம் கொடுக்கும்
இலவச சேவைகளில் நல்ல படியாக
வாழமுடியும்.
இதே நலத்துக்கு ஆசைப்பட்டு, உலகம் எங்கிருந்தும்
இங்கே வந்தவர்கள் சிலரின்
குணம் கெட்ட செயல்களினால் சேதம் ஏற்பட்டு இருக்கிறது.
இறைவன் அனைவரையும் நல்ல முறையில் காக்க
வேண்டும்.
வெளியே சென்று வருவதே பயத்தைக் கொடுக்கின்றது. மிகையாகத் தோன்றுகிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++நல்ல செய்திகளும் சேர்கின்றன.
பல சமூக சேவை நிறுவனங்களும் சேர்ந்து நடத்தும்
At least one meal a Day'' charity.
இந்த ஊருக்கு வந்து சேர்ந்தும் இன்னும் வேலையோ,
அதன் பலனாக சம்பளமோ,
தங்கும் இடங்களோ இல்லாதவர்களுக்கு அவர்கள்
இருக்கும் இடங்களுக்குச் சென்று பண உதவி, ஒரு வேளைக்கான
உணவு, சுத்தமான சமூகப் பொதுக் கூடங்களுக்கு
அழைத்துச் சென்று விடுவது, மருத்துவ உதவி செய்வது
இரண்டு மூன்று டிவிஷனில் இருப்பவர்கள் சேர்ந்து
வாரம் ஒருமுறை சனிக்கிழமை சென்று கவனிக்கிறார்கள்.
அவர்கள் வாழ்க்கையும் பரபரப்பான குடும்ப சூழலும் அவர்களை
அந்த ஒரு நாளுக்குத் தான் அனுமதிக்கிறது.
அந்தக் குடும்பத் தலைவிகள் நல்ல படியாக
வாழ வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொடரும் உயர் ரத்த அழுத்தம் , குடும்பத்தில் சிலரின் உபாதைகளும்
பதிவு எழுதுவதில் அக்கறை இல்லாமல் போகிறது.
அன்பின் கோமதி, அன்பின் கீதா ரங்கன் எல்லோருடைய கோவில் பதிவுகள்,அன்பு கீதா சாம்பசிவம் அவர்களின் எண்ணங்கள்,
மனதுக்கு நிம்மதி அளிக்கின்றன.
அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.
20 comments:
உலக அளவில் மனிதநேயம் அழிந்து கொண்டு வருகிறது அம்மா.
அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
நீங்கள் சொல்வது உண்மை. இரக்கம், நேயம்
கருணை இந்த வார்த்தைகளுக்கு அர்த்ஹ்தம் தேட வேண்டிய நேரம்
இது. நன்றி மா.
பேராசை கொண்டோரால் மற்றவர்களின் நிம்மதி கெடுகிறது. நாடு வித்தியாசமில்லாமல் எல்லா நாடுகளிலும் இதுபோன்ற மக்கள் இருக்கிறார்கள்... நீங்கள் சொல்வதுபோல நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளாமல் இருக்க மாட்டீர்கள் என்று தெரியும். ஆயினும் ஏன் படுத்துகிறது? ஸ்ட்ரெஸ்ஸா? மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். ஒய்வு எடுங்கள். சரியான தூக்கம் இல்லாவிடினும் அழுத்தம் ஏற்படும். உடனே கவனிக்க வேண்டிய விஷயம்.
வணக்கம் சகோதரி
நல்லவர்கள் அல்லாத உலகில் தெய்வம் துணையாக நின்றிருக்கும்.எல்லாமே அவன் செயல்தானே.. விபரங்கள் அறிந்து கொண்டேன். தங்கள் உடல்நலம் பார்த்துக் கொள்ளவும். இதை உபாதைகளினால்தான் இப்போது நானும் அவதிப்படுகிறார். இறைவன் அனைவரையும் நலமாக வாழ வைக்கவேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் ஸ்ரீராம்,
என்றும் வளமுடன் இருங்கள்.
இப்போதெல்லாம் செய்திகளைப் பார்ப்பதில்லை என்று தீர்மானித்து விட்டேன் அப்பா.
பிரார்த்தனைகள் மட்டுமே செய்ய முடியும்.
உயர் ரத்தம் அழுத்தம் உள்ளதுதான் .
37 வருடங்களாக எடுத்துக் கொள்கிறேன். இப்போது அடிஷனல் மருந்து கொடுத்திருக்கிறார்.
கவலைகள் உண்டு. தூக்கமும் போதாது.
சரியாகட்டும்.
நன்றி மா. இறைவன் துணை. Thanks Sriram.
Dear Kamala Hariharan,
''இதை உபாதைகளினால்தான் இப்போது நானும் அவதிப்படுகிறார். இறைவன் அனைவரையும் நலமாக வாழ வைக்கவேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
''
நீங்களும் கவனத்துடன் இருங்கள். இறைவன் காப்பான் நன்றி மா.
வல்லிம்மா.... எல்லா இரவுகளுக்கும் ஒரு பகல் உண்டு. விரைவில் நலம் பெறுவீர்கள்.
உலகில் சுயநலம் அதிகரித்தவண்ணம் உள்ளது. இது போன்ற சாரிட்டி, பாசிடிவ் செய்திகளைப் படிக்கும்போது மனம் அமைதிகொள்கிறது.
மனதை திடப் படுத்திக்கொள்ளுங்கள். மருந்து எடுத்துக்கொள்ளுகிறீர்கள்தானே மருத்துவ ஆலோசனை எடுங்கள். நலமாக இருங்கள்.
அம்மா ஒன்றே ஒன்று அந்த ஊர் என்றில்லை. எல்லா ஊரிலும் நாடுகளிலும் நல்லவர்களும் உள்ளனர். கெட்டவர்களும் இருக்கிறார்கள்தான். உலகில் நல்லதும் ஒரு புறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது நம் கண்ணிற்குக் கெடுதல் அதிகம் படுகிறது. என்ன செய்ய? பாசிட்டிவ் செய்திகள் எபியில் வரும் போது சில மனதிற்கு இதம் கொடுக்கும் அது போல இங்கு நீங்கள் சொல்லியிருக்கும் அந்த பாசிட்டிவ் செய்திதான் இதம்.
கீதா
நல்லதை மட்டும் வாசியுங்கள் கேளுங்கள். தேவையற்றது வேண்டவே வேண்டாம். மனதை பாதிக்கும் செய்திகள் வேண்டாம்.
மிக்க நன்றி அம்மா நான் போட்ட பதிவு உங்களுக்கு மனம் இதம் என்று. அடுத்தும் பெரும்பாலும் பள்ளி கொண்டீஸ்வரர் கோயில் பற்றிய பதிவு அல்லது பறவைகள் பறக்கும். இன்னும் படங்கள் தொகுக்க வில்லை. பறவைகள் இயற்கை எல்லாமே மனதிற்குஇதம்தானே!!
மிக்க நன்றி அம்மா. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
கீதா
பாடல் அருமையான பாடல்.
உலகில் நல்லது , கெட்டது நடந்து கொண்டுதான் இருக்கும்.
நல்லது நடந்தால் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
நல்லது செய்பவர்களை பாராட்டி வாழ்த்தி மகிழ்வோம்.
கெட்டது நடந்தால் இறைவா! இனி இப்படி ஒரு போதும் நிகழ கூடாது என்று வேண்டிக் கொள்வோம்.
நம்மால் அது மட்டுமே முடியும்.
பதிவில் என்னை பற்றி குறிபிட்டதற்கு நன்றி.
எனக்கும் உடல் நிலை சரியில்லை. பல்வலி, தலைவலி. பற்களை எடுக்க வேண்டும் என்கிறார் .
மருந்துகள் கொடுத்து இருக்கிறார். மூன்று நாட்களுக்கு அதன் பின் பற்களை எடுப்பார்.
உங்கள் உடல்நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.
ஊருக்கு வேறு போய்வர வேண்டும் .
எல்லாம் இறைவன் விருப்பபடி நடக்கும் கவலை இல்லாமல் இருங்கள்.
அனைவரும் உடல் நலத்துடன் ஆரோக்கியத்துடன் நிம்மதியாக வாழப் பிரார்த்தனைகள் செய்கிறோம். பதிவைப் படிக்கையிலேயே மனம் வேதனைப் படுகிறது. ஏன் தான் இப்படி எல்லாம் நடக்கிறதோ தெரியலை.
அன்பின் முரளிமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
உண்மையான நம்பிக்கை நம்மை காக்கும் என்றே நினைக்கிறேன்.
கவலைப் படத் தெம்பு இல்லை.
இறைவன் அருள் காக்க வேண்டும். நன்றி மா.
அன்பின் மாதேவி,
உங்கள் விசாரிப்பும், அன்பும் மிக ஆறுதல்.
வைத்தியர் மருந்து கொடுத்து நாலு நாட்கள் ஆகிறது.
மெதுவாகத்தான் அழுத்தம் இறங்கும் என்றிருக்கிறார்.
உங்களுக்கெல்லாம் இல்லாத கவலையா.
இறைவன் அருள் காக்கட்டும். நன்றி மா.
அன்பின் கீதா ரங்கன்,
எந்த வித சத்தத்தையும் காதில் போட்டுக் கொள்வதில்லை.
ஊருக்கு வருவதற்கான மருந்துகள்
கிடைக்க வேண்டும்.
மாஸ்க் அணிவதில் சிரமம். சின்னச் சின்ன
தொந்தரவுகள் தான். எல்லாம் சரியாகும்.
'' பாசிட்டிவ் செய்திகள் எபியில் வரும் போது சில மனதிற்கு இதம் கொடுக்கும் அது போல இங்கு நீங்கள் சொல்லியிருக்கும் அந்த பாசிட்டிவ் செய்திதான் இதம்''
அதே தான் இறை வழிபாட்டில் தான் நிம்மதி.
கிடைக்கும். நன்றி அம்மா.
நலமுடன். இருங்கள்
அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது உண்மைதான்.
நம்மால் ஏற்க முடியாத செய்திகளை
மறக்க வேண்டியதுதான்.
அழகாகச் சொல்கிறீர்கள்.
''எனக்கும் உடல் நிலை சரியில்லை. பல்வலி, தலைவலி. பற்களை எடுக்க வேண்டும் என்கிறார் .
மருந்துகள் கொடுத்து இருக்கிறார். மூன்று நாட்களுக்கு அதன் பின் பற்களை எடுப்பார்.''
ஓ!!
மீண்டும் வேறு பற்கள் பொருத்துவார்களா.
மகளுக்கும் பல் வைத்தியம் நடக்கிறது.
வலி தாங்க முடியவில்லை.
நீங்களும் பத்திரமாக இருங்கள். உதவிக்கு யாராவது வருவார்கள் என்று நம்புகிறேன்.
நலமுடன் இருங்கள் அம்மா.
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
செய்தி
கேட்கத்தான் பொறுமை இல்லை.
''அனைவரும் உடல் நலத்துடன் ஆரோக்கியத்துடன் நிம்மதியாக வாழப் பிரார்த்தனைகள் செய்கிறோம். பதிவைப் படிக்கையிலேயே மனம் வேதனைப் படுகிறது. ஏன் தான் இப்படி எல்லாம் நடக்கிறதோ தெரியலை.''
நம் தலைமுறைக்கு அடுத்த தலைமுறை, அவர்களது குழந்தைகள்
எல்லாமே நலமுடன் இருக்க பகவான் தான் அருள வேண்டும்.
நன்றி மா.
எல்லா இடங்களிலும் இதே நிலை தான் அம்மா. அப்படியான விஷயங்களை கவனத்தில் கொண்டு வரவேண்டாம். அப்படியே தெரிந்தாலும் உடனுக்குடன் மறந்து விடுங்கள். நல்லதே நடக்கட்டும்.
உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
Post a Comment