பயணங்கள் ரயிலில்..மகத்தான நினைவுகளைக் கொண்டு வருபவை அதில் சில பாடல்கள்.பிவிஆர் சாரின் சென்ட்ரல். புத்தகமும்் நினைவில் அருமையான நேரங்களைத் தரும் எழுத்து.
ஸ்ரீரங்கம் ரயில் பற்றிய பதிவு ஒன்று தங்கை
திருமதி ஜயந்தி கண்ணன் +இன்னோருவரும்
அனுப்பி இருந்தார்கள்.
பதிவர்கள் அனைவருக்கும் அவரவர் ரயில் பற்றிய நினைவுகள்
மனதோரம் வருவதை எங்கள் ப்ளாகில்
ஸ்ரீராமின் பதிவில் காண முடிந்தது. என் பதிவைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்
ஸ்ரீராம். மனம் நிறை நன்றி.
எனக்கு தான் இங்கே என்று சுட்டி கொடுக்கத் தெரியவில்லை:)
சென்னைக்கு வருவது ஒன்றே கோடைகாலத்தின் விடுமுறை
நோக்கமாக இருக்கும். மார்ச் 31 ஆம் தேதி பள்ளிகள் மூடப்படும். அடுத்து
ஜூன் முதல் வாரம் தான் ஊருக்குத் திரும்புவோம்.
அம்மாவுடைய அம்மா, மற்றும் மாமாக்களின் அன்பு மழையில்
நனைந்த நாட்கள்.
திண்டுக்கல், திருமங்கலம் இந்த ஊர்களைவிட சென்னை
உண்மையில் உஷ்ணம் குறைந்தே காணப்படும்.
கடல் காற்றும் மதியம் 12 மணி அளவில் வீச ஆரம்பிக்கும்.
தோழிகளோடு வீட்டுக்குள் விளையாடுவது,
புரசவாக்கம் ஹைரோட்டில் உலா போவது, நேரு பார்க்கில்
ரயில் பார்க்க செல்வது,
புதிதாக வரும் தமிழ் , இந்திப் படங்களுக்கு
மாமாக்கள் மாமிகளோடு செல்வது
என்று திரும்பிப் பார்ப்பதற்குள் இரண்டு மாதங்களும் ஓடிவிடும்.
Row houses என்று அழைக்கப்பட்ட அந்த இடத்தில்,
குளியறையில் ஒரு குழாயிலும், சமையல் உள்ளில் ஒரு குழாயிலும் நல்ல தண்ணீர்
வந்த வண்ணம் இருக்கும்.
கீழ்ப்பாக்கம் தண்ணீர் நிலையம் அருகில் இருந்ததால்
இந்த சௌகரியம்.
மார்ச் 31 அல்ல்து ஏப்ரில் 2 தேதிகளுக்குள்
டிக்கெட்டுகளைப் பதிவு செய்ய,
அப்பா சொல்படி , மாணவர்களுக்கான
கன்செஷன் ஃபார்ம் வாங்கி , ஏற்கனவே அரை டிக்கட்
ஆக இருந்த எங்கள் பயண செலவு
இன்னும் குறைக்கப்படும்.
அப்பா அத்தனை கச்சிதமாகச் சிக்கனமாகச் செய்வார். (to be continued):)
20 comments:
கோடை விடுமுறையும் ரயில் பயணமும் இனிய அன்றைய பொழுதுகள்.
விடுமுறை, இரயில் பயணம் தொடர்கிறேன்.
சுவாரசியமான பகிர்வுகளுக்கு நன்றி.
ரயில் பயணம், கோடை விடுமுறை இனிமையான நினைவுகள் அம்மா. ரயில் பயணம் ஒரு காணொளி பார்த்தேன். மற்றவை இனிதான் பார்க்க வேண்டும்.
நாங்கள் கோடை விடுமுறைக்குப் பாட்டி தாத்தா வீட்டிற்குச் செல்வது பேருந்தில்தான்!!! வள்ளியூர், பாட்டி தாத்தா திருக்குறுங்குடிக்குச் சென்ற பின் திருக்குறுங்குடிக்கு என்று...
கீதா
தேனி ரயில் அருமை. எல்லோரும் இரண்டு , மூன்று முறை போனால் நல்லது என்கிறார்கள்
. தொடர்ந்து இயங்கினால் நல்லதுதான்.
பேரனும் மலைரயில் பயணம் செய்தான் நேற்று மகன் படங்கள் அனுப்பினான்.
ரயில் பயணம் மிகவும் பிடித்தமானது.
இப்போது ரயிலில் பாட்டு கேட்க முடிவது இல்லை. முன்பு ரயிலில சாதா கோச்சில் போவோம் நிற்கும் இடங்களில் எல்லாம் விற்பவர்கள் ஏறுவார்கள் எல்லாம் வாங்கி சாப்பிட்டு அக்கம் பக்கம் உள்ளவர்களுடன் பேசி மகிழ்ந்து வருவோம்.
ஜன்னல் ஓர இருக்கை கிடைத்தால் வேடிக்கை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இப்போது ஏசி கோச்சில் பயணம் செய்தால் அந்த இன்பம் இல்லை.
கலைவாணர் "கிந்தன் சரித்திரம்"ரயில் பார்க்க போகும் பாடல் பிடிக்கும்.
ரயிலே ரயிலே பாடல் நன்றாக இருக்கும்.
நீங்கள் பகிர்ந்த பாடலும் காணொளிகளும் அருமை.
உங்கள் மலரும் நினைவுகளும் அருமை.
கடைசி பாடல் கேட்டதே இல்லை.
உங்கள் ரயில் பயணமும் நினைவுக்கு வந்தது, சாரை பார்த்த நினைவுகளை சொல்லி இருப்பீர்கள் அல்லவா?
அன்பின் மாதேவி,
என்றும் நலமுடன் இருங்கள்.
பயணங்கள் என்றுமே இனிமை. உங்கள் ஊரின் இயற்கையடு இணைந்த ரயில் பயணத்தையும்
யூ டயூபில் பார்த்திருக்கிறேன் மா.
அன்பின் முரளி நன்றி மா.
என்றும் நலமுடன் இருங்கள்..
வந்து படித்ததுக்கு. மிக நன்றிமா.
அன்பு கீதாமா,
என்றும். நலமுடன்
இருங்கள்.. இங்கு வந்து படித்ததற்கு மிக நன்றி. நீங்கள் தான் பயணக் கட்டுரைகளில்
சிறந்தவர். நீங்கள் வெங்கட், கீதா, கோமதி அரசு எல்லோருமே நல்ல பதிவுகளைப் பதிந்து வருகிறீர்கள்.
நம் திவாஜி கூட. இப்போது காசிப் பயணம் எழுதிக் கொண்டு இருக்கிறாரே.
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஏதோ பழைய நினைவுகள் அப்பா அம்மாவுடன், பயணித்தது. இவருடன் ,குழந்தைகளுடன் ரயிலைப் பிடித்தது{ ஆமாம் பிடிப்போம்"}
நீங்கள் , திவாஜி, வெங்கட், நம் கீதா ரங்கன்
எல்லோருமே அருமையாக எழுதுகிறீர்கள்.
வந்து படித்ததற்கு மிக நன்றி மா.
அன்பின் கீதா ரங்கன் மா,
என்றும் வளமுடன் இருங்கள்.
''நாங்கள் கோடை விடுமுறைக்குப் பாட்டி தாத்தா வீட்டிற்குச் செல்வது பேருந்தில்தான்!!! வள்ளியூர், பாட்டி தாத்தா திருக்குறுங்குடிக்குச் சென்ற பின் திருக்குறுங்குடிக்கு என்று...''
எங்கள் அப்பா வழித் தாத்தா பாட்டி திரு நெல்வேலியில் இருந்த போதும், மதுரையில் இருந்த போதும் நாங்களும் பஸ்ஸில் தான் செல்வோம்.
அம்மாவின் அம்மா சென்னையில் இருந்ததால்
இந்த ரயில் பயணம் என் 17 வயது வரை நீடித்தது. மனோஹரமான நாட்கள்.
காணொளிகளை மெதுவாகப் பார்க்கலாம். என் நினைவுக்காகப்
பதிந்தேன் அம்மா. நன்றி.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
இப்போதெல்லாம் ரயிலில் சுத்தம் குறைவு
என்று தோன்றுகிறது.
நீங்கள் சொல்வது போல் ஜன்னல் வழி வரும் காற்று எல்லாம் இல்லை.
ஏஸீ வந்து குளிர்தான் அதிகம்.
''பேரனும் மலைரயில் பயணம் செய்தான் நேற்று மகன் படங்கள் அனுப்பினான்.
ரயில் பயணம் மிகவும் பிடித்தமானது.
இப்போது ரயிலில் பாட்டு கேட்க முடிவது இல்லை. முன்பு ரயிலில சாதா கோச்சில் போவோம் நிற்கும் இடங்களில் எல்லாம் விற்பவர்கள் ஏறுவார்கள் எல்லாம் வாங்கி சாப்பிட்டு அக்கம் பக்கம் உள்ளவர்களுடன் பேசி மகிழ்ந்து வருவோம்.''
பேரனின் மலை ரயில் பயணம் ரசனையாக இருந்திருக்கும்.
இந்த மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் நிறையப்
பயணங்கள் செய்கிறார்கள்.
சூடான காப்பி ,டீ,வடை முறுக்கு
சத்தம் காதில் விழுகிறது.:)
''ஜன்னல் ஓர இருக்கை கிடைத்தால் வேடிக்கை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இப்போது ஏசி கோச்சில் பயணம் செய்தால் அந்த இன்பம் இல்லை.
கலைவாணர் "கிந்தன் சரித்திரம்"ரயில் பார்க்க போகும் பாடல் பிடிக்கும்.''
கலைவாணரின் கிந்தனார் சரித்திரம் மிக அருமையான கருத்துகளைச் சொல்லும்.
அவர் பாடும் ரயில் பாட்டும் அதே போல சுவை.
மிகப் பிடித்த படம் நல்ல தம்பி.
அவர் தொடாத பொருளே இல்லை.
சரியான நினைவுகளைச் சொன்னீர்கள்.
மிக நன்றிமா. என்றும் நலமுடன் இருங்கள்.
வெளியூரில் இருப்பவர்களுக்கு கோடை விடுமுறையில்தான் (பள்ளிப் பருவத்தில்) ரயில் பயணங்கள் வாய்க்கும். சென்னை, மும்பை காரர்களுக்கு தினசரி அலுவல் பயணமே ரயிலில் வாய்க்கும்!
நன்றி அம்மா, என்னைக் குறிப்பிட்டிருப்பப்பதற்கு. நான் ரயில் பயணம் பற்றி எழுதி ஷெட்யூல் செய்து முன்னரே வைத்து விட்டேன். அப்புறம் உங்கள் பதிவைப் படித்ததும்தான் நான் எவ்வளவு சப்பென்று எழுதி இருக்கிறேன் என்று தெரிந்தது!
ரயிலில் பாடும் பாடல்கள் நிறைய உள்ளன. சொல்ல பதிவு போதாது!
தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மா
காணொளிகள் அனைத்தும் கண்டேன்.
அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
பதிவு போடவும் பதில் சொல்லவும் தாமதமாகிறது.
மன்னிக்கவும்.
ரயில் பாடல்கள் பலசமயம் வேதனையோடு இருக்கும். சில சமயம்,
''சித்திரை மாதம் ;'''' போல ஜாலியாக இருக்கும்.
கோடை காலத்தில் இரவுப் பயணம் ரயிலில் செல்வது
மிக இனிமை. ரயிலின் முக்கியமாக
நீராவி ரயிலில் கட கட வென்று செல்லும் இனிமை
எந்த ஸ்விஸ் ரயிலிலும் கிடைக்காது.
இப்போது கரப்பான் பூச்சிகளுடன்
பயணித்த அனுபவம் என் ரசனையைக் குறைத்து விட்டது
அப்பா.
நீங்கள் வந்து படித்து கருத்து இட்டதில் மிக மகிழ்ச்சி.
உங்கள் பதிவு தான் என்னை பழைய
நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது.
அதனால் உங்களுக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
அந்த ரயில் குறிப்பு என் தங்கை அனுப்பிய ஃபார்வர்ட் அப்பா.
நான் எழுதியது இல்லை.
மிக நன்றி ஸ்ரீராம்.
அன்புன் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
உங்கள் சோகக் காலங்களிலும் இங்கு வந்து படித்துப்
பின்னூட்டம் இட்டது என்னை நெகிழச் செய்கிறது.
மிக நன்றி அப்பா.
இனிமையான கோடை விடுமுறை நினைவுகள். நாங்கள் ஒவ்வொரு வருடமும் விஜயவாடா சென்று விடுவோம். பெரியம்மா வீட்டிற்கு. இனிய நினைவுகள் அவை.
அன்பு வெங்கட் ,
என்றும் நலமுடன் இருங்கள்.
நீங்கள் சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எங்கள் பசங்களுக்கு தாத்தா பாட்டி உள்ளூரிலேயே
இருந்ததால் பத்து வயதுக்கு மேல்
வேறெங்கேயும் செல்ல முடியவில்லை.
எங்கள் குடும்பத்தில் உறவினர்கள் வெளியூர்களில் இருந்ததால்
அடிக்கடி போக முடிந்தது.
உங்கள் ஹைதராபாத் பயணங்கள் மறக்க முடியாதவையாக
இருந்திருக்கும்.
நன்றி மா.
Post a Comment