Blog Archive

Friday, April 08, 2022

அந்தக் காலம் ஒரு ஏப்ரில் மாதத்தில்

வல்லிசிம்ஹன்

   கங்கையைப் பற்றி, அதன் புனிதம்
கொஞ்சம் கொஞ்சமாகக் கரைவது 
பற்றி எழுதி இருந்த பதிவுக்கு வந்த 
பின்னூட்டங்கள்.  2009ஆம் வருடத்திய பதிவு என்று
நினைக்கிறேன்.

இப்பொழுது கங்கை புனர் ஜென்மம் பெறுகிறாள்.




45 CommentsClose this windowJump to comment form
1 – 45 of 45
Blogger வல்லிசிம்ஹன் said...
இதுவே சோதனையாப் போகிறதே. டெஸ்ட்.

12:01 PM Delete
Blogger KarthigaVasudevan said...
சீக்கிரம் எழுதுங்க ...தண்ணீர் தான் இங்க தணலாட்டம் பிரச்சினையா இருக்கே பக்கத்துக்கு ஸ்டேட்களோட.

12:26 PM Delete
Blogger துளசி கோபால் said...
மத நம்பிக்கைகள் மீது அதீத பற்று வச்சு, அதனால் நடக்கும் சீரழிவுதான் 'புனித கங்கை' அருவருப்பான நிலையை அடைஞ்சதின் காரணம்.

சுத்தம் இருக்கும் இடத்தில்தான் கடவுள் இருப்பார்ன்னு எதாவது சாமியார் சொன்னாலாவது கேப்பாங்களா இவுங்க.

நெஞ்சு பொறுக்குதில்லையே.....

1:21 PM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
தண்ணீர், தணலாச்சு.
கேக்க நல்லாத்தான் இருக்கு. மிஸஸ்.தேவ்.

அங்கேருந்து அத்தனை உத்சாகமாக் குதிச்சு வருகிற கங்கையைப் பார்க்கும்போது,
அந்த கங்கை இங்கே வராட்டாலும் போறது. நம்ம பெண்ணாறு,பாலாறு இவைகளைக் காப்பாற்றி இருக்கலாமே என்று தான் தோன்றியது.
நன்றிமா.

3:11 PM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
துளசி, இங்க டிவியில் பாரதப் புழாவைக் காண்பித்தார்கள். பித்ரு கார்யமெல்லாம் முடித்துவிட்டு அப்படியே இலைகளை விட்டு விட்டுப் போகிறார்கள்.
நூற்றுக்கணக்கில்!!!!
ஆனால் அதுகூடப் பரவாயில்லை, கங்கையைப் பார்க்கும்போது.

3:18 PM Delete
Blogger திவாண்ணா said...
சாத்திரங்களை மீறுவதும் ஒரு முக்கிய காரணம். நீர் நிலைகளை அசுத்தப்படுத்தக்கூடாது என்று அவ்வளோ விஷயங்கள் சொல்லி இருக்கு. கங்கை கரை முதலைகள் ஒழிச்சதும் ஒரு காரணம். இந்த சடலங்களை அவை தின்று வந்தன.
கங்கை வரும் வழி ந்கரங்கள் எல்லாமே சேர்க்கிற கழிவுகள் ஏராளம். ஏன் வாரணாசி சாக்கடை எல்லாமே கங்கையிலேதான் சேருது. :-(

4:13 PM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
எங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுக்க பெரியவர்கள் இரூந்தார்கள். செய்யக் கூடாத விஷயங்களில் , நதிகளில் எச்சில் துப்புவது போன்ற செய்யத் தகாத காரியங்களையும் உள்ளத்தில் எழுதாத குறையாகப் பதிய வைத்தார்கள்.
இப்போழுது நம் குழந்தைகளும் விழிப்புடன்தான் செயல் படுகிறார்கள். உலகமே விழித்துக் கொள்ளவேண்டும். நன்றி வாசுதேவன்.

4:55 PM Delete
Blogger ராமலக்ஷ்மி said...
//நீர் இருக்கும் இடத்தில் தான் நாகரீகங்கள்
நிலை பெற்று உயர்வடைய ஆரம்பித்தன.//

இது மிகச் சரியான பாயிண்ட் வல்லிம்மா.

அப்படியிருந்தும்...இன்று....

நீங்கள் திவாவுக்கான பதிலில் சொன்னா மாதிரி உலகம் விழித்துக் கொள்ள் வேண்டும்.

5:24 PM Delete
Blogger Geetha Sambasivam said...
திவா சொல்வதும் சரிதான், கங்கையில் பிணங்களை விடுவதைப் பார்க்கலை என்றாலும் மூழ்கி இறப்பவர்களும் நிறைய இருக்கின்றனர். ஆடு, மாடுகள் அடித்தும் செல்லப் படுகின்றன. அவற்றை முதலைகள் தின்று வந்தன. இப்போ முதலைகளை எல்லாம் அழிச்சாச்சு. முதலையின் உணவைப் பின்னே என்ன செய்வது? மீண்டும் முதலைகளை விடச் செய்யலாம்.

12:27 PM Delete
Blogger கவிநயா said...
ரொம்ப வருத்தமான விஷயம் வல்லிம்மா :(

9:59 PM Delete
Blogger pudugaithendral said...
மக்களுக்கு விழிப்புணர்ச்சி கட்டாயம் தேவை. உங்களின் அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்.

5:38 AM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
வாங்கப்பா ராமலக்ஷ்மி.
முன்னாட்களில் காசி யாத்திரை பிரமாதமாகக் கொண்டாடப்பட்டது.
முறைப்படி காசிக்குச் சென்று அங்கிருந்து மண்ணெடுத்து ராமேஸ்வரத்தில் கரைப்பதும். ராமேஸ்வரத்தில் எடுத்த கடல் மண்ணைக் கங்கையில் கரைப்பதும் வழக்கமாகச் செய்தார்கள்.
பழங்கதையாகப் போய்விட்டது.

7:49 AM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
வரணும் கீதா.எனக்கு முதலைகளை அழித்தது புது செய்தி.
சுற்றுப்புறச் சூழல் பற்றிய உணர்வே இல்லாமல் இப்படிச் செய்து விட்டார்களே.நீங்கள் சொல்வது போல் முதலைகள் நடமாட்டம் அதிகரிக்கச் செய்து
பாதுகாப்பு ஏற்பாடும் செய்யலாம். கங்கா மாதாவுக்கே முதலை தானே வாகனம்? சரியான்னு தெரியலை.

7:58 AM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
வாங்கப்பா தென்றல். ராமநவமி உற்சாகத்தில் இருந்து விட்டேன்.

எழுதிவிடுகிறேன். நன்றிம்மா.

8:00 AM Delete
Comment deleted
This comment has been removed by the author.

8:00 AM Delete
Blogger நானானி said...
அன்னியர் ஆட்சியின் போது கூவம் இருந்த நிலையைப் பற்றி சமீபத்தில் படித்தேன். சுத்தமான அவ்வாறு சென்னை நகரெங்கும் ஓடி அடையாறு வழியாக கடலில் கலந்தது அந்நாளில்.
சாக்கடையாகக் கலக்கிறது இந்நாளில். அன்னியர் ஆட்சியே இருந்திருக்கலாமோ? மக்கள் எல்லோரும் இந்தியர் என்ற உணர்வோடு இருந்திருப்பார்கள். இன்றோ? நாம் ஒருவருக்கொருவரே அன்னியப் பட்டுக்கொண்டிருக்கிறோம்.

நீராதாரத்தை மனசாட்சியில்லாமல் அழிப்பவர்களை என்ன செய்யலாம்?

"குடிநீர் வசதி செய்து கொடுப்போம்"
இதே பொன்மொழியைத்தான் நாம் ஒவ்வொரு தேர்தலிலும் கேட்டு வருகிறோம்.

8:35 AM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
அதானே நானானி. நம்ம ஊர்ல இருக்கிற கூவத்தைச் சொல்லணும்.

இவர் சொல்கிற கதையெல்லாம் கேட்டால் ஆசையாக இருக்கிறது. எனக்கு ட்ராம் ஒன்றுதான் நினைவில் இருக்கிறது.
குழாய்த்தண்ணிய அப்படியே குக்கிற நாளெல்லாம் வருமா. போரூர் மாங்காடு போகிறவழியில் இருக்கும் ஏரியில் நடக்கும் அட்டூழியங்களைப் பார்த்து சலித்துப் போய்த்தான் இந்த டீம் தண்ணியை வாங்க ஆரம்பித்தேன்.

9:26 AM Delete
Blogger துளசி கோபால் said...
நானானி,

//"குடிநீர் வசதி செய்து கொடுப்போம்"
இதே பொன்மொழியைத்தான் நாம் ஒவ்வொரு தேர்தலிலும் கேட்டு வருகிறோம்.//

ஏன்ப்பா... அதுதான் 'குடி'தண்ணீர் வசதி செஞ்சுட்டாங்களேப்பா. டாஸ்மாக் ஓஹோ ஆஹான்னு ரொம்ப ஜோரா நடக்குதாமே.

அதுலேதான் 'கொள்ளை' வருமானமாம்.

ஆகக்கூடி 'தாகசாந்தி'ஆச்சு.

9:58 AM Delete
Blogger திவாண்ணா said...
முதலை வருணன் உடைய வாகனம். கங்கா மாதவுக்குமா? தெரியலை கேக்கணும்.

சென்னை கூவத்திலே குளிச்சு கோவிலுக்கு போனதா டயரி ஒத்தர் எழுதியதை குமுதத்திலே ரொம்ப நாள் முன்னே படிச்ச நினைவு. நம்ப முடியுதா?

11:48 AM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
வரணும் வாசுதேவன்.
நானும் சன்ஸ்கார் சானலில் சாயந்திர வேளை ஆரத்தி போது முதலைமீது கங்கை உட்கார்ந்து இருப்பது காண்பிப்பார்கள். அதில் பார்த்துட்டுத்தான் சொல்றேன்.:)

12:24 PM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
துளசி டாப் கமெண்ட்:)

12:25 PM Delete
Blogger Geetha Sambasivam said...
//சென்னை கூவத்திலே குளிச்சு கோவிலுக்கு போனதா டயரி ஒத்தர் எழுதியதை குமுதத்திலே ரொம்ப நாள் முன்னே படிச்ச நினைவு. நம்ப முடியுதா? //

இப்படிக் குளிச்சது பச்சையப்ப முதலியார். கேள்விப் பட்டிருக்கேன்.

12:47 PM Delete
Blogger Geetha Sambasivam said...
//முறைப்படி காசிக்குச் சென்று அங்கிருந்து மண்ணெடுத்து ராமேஸ்வரத்தில் கரைப்பதும். ராமேஸ்வரத்தில் எடுத்த கடல் மண்ணைக் கங்கையில் கரைப்பதும் வழக்கமாகச் செய்தார்கள்.
பழங்கதையாகப் போய்விட்டது//

முதல்லே ராமேஸ்வரம் வல்லி, அப்புறம் அங்கே திரிவேணி சங்கமத்தில் ராமேஸ்வரத்து மண்ணையும், நீரையும் வைத்து, கரைச்சு சிவ வழிபாடுகள் முடிச்சு அங்கே இருந்து தீர்த்தம் எடுத்து வந்து திரும்ப ராமேஸ்வரம் கோயில் ராமநாதருக்கும், சமுத்திரத்திலும் விடுவதோடு வழிபாடுகள் நடத்தி முடியும் தீர்த்த யாத்திரை. இப்போவும் நடக்கிறது இம்மாதிரிப் பலரும் போகின்றனர். ஆனால் கங்கையைக் கழிவு நீராக்குகிறதுக்கு மட்டும் விடிவே இல்லையோனு தோணுது. :(((((((((((((((((((((

12:50 PM Delete
Blogger நானானி said...
துள்சி வர்ர்ர்ர்ர்றீங்களா? நாம ரெண்டு பேரும் அங்கு போய் தாக சாந்தி செய்து கொள்ளலாம்?

1:28 PM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
நானானி, கூடாதுப்பா. :))))
இப்பத்தான் அல்வா சாப்பிட்டேன்.
தாக சாந்திலாம் செய்தா பதிவெழுத முடியாது:))))

2:47 PM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
நானும் படித்திருக்கிறேன். சொல்லவும் கேட்டு இருக்கிறேன்.
நம்ம தண்ணீர்த்துறை அங்காடிக்கு படகிலேருந்து காய்கறியும், நெல்லூரிலிருந்து அரிசியும் வந்து இறங்குமாம்.

துர்நாற்றமில்லாத நாட்கள் அவை மனிதர்களும்,நதியும் சுத்தமாக இருந்த நாட்கள்.

2:50 PM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
ஆமாம் கீதா. உண்மை. நான் மாற்றி எழுதிவிட்டேன்.
அவ்வாறு அபூர்வமாகக் காசி போய்விட்டு உறவினர் வாங்கி வந்த பனாரஸ் பட்டுப் புடவை 15 ரூபாய்க்கு பாட்டி வாங்கி அம்மாவிடம் கொடுத்ததாகவும் 12 முழப்புடவை என்பதால் கட்ட முடியாமல் எனக்கும் என் ஒன்றுவிட்ட தங்கைகளுக்கும் பாவாடைகளாகத் தைத்தாகவும் சொன்னார்கள்.:)

2:54 PM Delete
Blogger துளசி கோபால் said...
கூவத்துலே அந்தக் காலத்துலே குளிச்சுட்டுக் கோயிலுக்குப்போனவர் பச்சையப்பர்.

இவருடைய நினைவுக்கோ அல்லது இவரே ஆரம்பிச்சதோ தெரியலை சென்னை பச்சையப்பர் கல்லூரி

3:53 PM Delete
Blogger G.Ragavan said...
ரொம்பச் சரியாச் சொன்னீங்க வல்லீம்மா. நீரின்றி அமையாது உலகுன்னு வள்ளுவரு சொல்லீருக்காரே.

நாகரீகங்கள் மூனு இடங்கள்ள வளந்தது. மலை....ஆற்றங்கரை...கடற்கரை... இந்த மூனு இடங்கள்ளயும் தண்ணி இருக்குற இடங்கள்ளதான்.

அதுனால தண்ணியை நல்லபடி பாத்துக்கனும். நீங்க சொன்ன மாதிரி ஐரோப்பாவுல தண்ணி ஓடுற அழகைப் பாக்குறப்போ... நம்மூர்ல இப்பிடியிருக்கனுமேங்குற எண்ணம் வர்ரதத் தடுக்க முடியலை.

4:01 PM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
துளசி அந்தப் பச்சையப்பராத்தான் இருக்கணும்.

4:14 PM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
ராகவன், எவ்வளவு நாளாச்சு பார்த்து!!
நல்லா இருக்கிங்களா.
உங்க ஊரில மழை எல்லாம் ஓய்ஞ்சுதா.

பையன் இருக்கிற ஊரில தண்ணீரில் கால்ஷியம் அள்வுக்கு மேல இருக்கு என்று வடிகட்டிச் சாப்பிடுவோம்.
என்ன இருந்தாலும் அந்த மலைக்கும் இயற்கை வளத்துக்கும் அவங்க மிகவும் பாதுகாத்துதான் வச்சு இருக்காங்க.

4:18 PM Delete
Blogger திவாண்ணா said...
//முதல்லே ராமேஸ்வரம் வல்லி, அப்புறம் அங்கே திரிவேணி சங்கமத்தில் ராமேஸ்வரத்து மண்ணையும், நீரையும் வைத்து, கரைச்சு சிவ வழிபாடுகள் முடிச்சு அங்கே இருந்து தீர்த்தம் எடுத்து வந்து திரும்ப ராமேஸ்வரம் கோயில் ராமநாதருக்கும், சமுத்திரத்திலும் விடுவதோடு வழிபாடுகள் நடத்தி முடியும் தீர்த்த யாத்திரை.//

வடக்கே இருக்கிறவங்களுக்கு மாத்தியோ?

//இப்பத்தான் அல்வா சாப்பிட்டேன். //
சுகர் பிரச்சினை இருக்குன்னு நினைச்சேனே?

//அவை மனிதர்களும்,நதியும் சுத்தமாக இருந்த நாட்கள்.//
வல்லி அக்கா டச்!

4:22 PM Delete
Blogger G.Ragavan said...
// துளசி கோபால் said...

மத நம்பிக்கைகள் மீது அதீத பற்று வச்சு, அதனால் நடக்கும் சீரழிவுதான் 'புனித கங்கை' அருவருப்பான நிலையை அடைஞ்சதின் காரணம்.

சுத்தம் இருக்கும் இடத்தில்தான் கடவுள் இருப்பார்ன்னு எதாவது சாமியார் சொன்னாலாவது கேப்பாங்களா இவுங்க. //

டீச்சர்... அதுக்கும் ஒரு புராணம் இருக்கு. ஆனா அதை எல்லாரும் வசதியா மறந்துட்டாங்க போல. இங்க சொல்றேன். தெரிஞ்சிக்கோங்க.

அழுகின்ற ஒரு குழந்தைக்காக பாற்கடலை உருவாக்கிய பரமேசுவரன்... குழந்தையின் பசி தீர்ந்தவுடன்... அதைப் பரந்தாமனுக்குப் பள்ளி கொள்ளக் கொடுத்தான். நீருக்கு உயர்வு தர வேண்டி.. கங்கையைத் தலையில் வைத்துக் கொண்டாடும் கடவுளே கங்காதரன்.

காசியின் ஒரு முறை புரோச்சன சர்மா என்ற கோயில் பூசாரி சிவலிங்கத்திற்குப் பூசனை செய்து... காசு வாங்கிக் கொண்டு.... திரவியங்கள் அனைத்தையையும் அனைத்து வேளைகளிலும் அபிடேகம் செய்தார். அதனால் சிவலிங்கத்தின் மீது பிசுக்கேறி அழுக்கடைந்தது. இதன் விளைவாக கயிலாயம் முழுவதும் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசியது. அங்கிருக்க முடியாமல் பார்வதி மிகவும் துன்புற்று... சிவனை நீங்கிப் பனிமலைகளில் தவம் செய்யப் புகுந்தார்.

இதற்கெல்லாம் காரணமான புரோச்சன சர்மாவைத் தண்டிக்க விரும்பி... புரோச்சனன் தொடும் பணம் அனைத்தும் அழுக்காக மாறச் சபித்தார். அப்படியே பாற்கடலுக்குச் சென்று மூழ்கி தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டார் பரமேசுவரன். தான் படைத்த கடலிலேயே தன்னைக் கழுவிக் கொண்ட காரணத்தினால்... பாற்கடல் நாறியது. ஆதிசேடனின் ஆலகாலத்தை விட அழுக்கின் நாற்றம் மிகவே ஆதிசேடன் பாற்கடலை நீங்கினான். இதற்குக் காரனமானவர் புரோச்சனன் என்பதால் நாராயணனும் லட்சுமியும் புரோச்சனனைச் சபித்தார்கள். அத்தோடு.. பணத்திற்காக திருக்கோயில்களையும் நீர்நிலைகளையும் இயற்கைச் சூழ்நிலைகளையும் கேடு செய்கின்றவர்கள்....ஆண்டவன் பெயரிலே செய்தாலும் கூட... அவர்கள் மண்ணைத் தின்னும் மண்புழுவின் நிலையிலும் கீழான பிறப்பெடுத்து அந்த மண்ணும் உண்ணக்கிடைக்காது உழல்வார்கள் என்று சபித்தார்கள்.

பிறகு கங்கை பெருகி பாற்கடலைத் தூய்மையாக்கியது. அதன்பிறகே ஆதிசேடன் வைகுண்டம் மீண்டது. மலைமகளும் கைலாயம் மீண்டாள்.

இந்தப் புராணம் நம் அனைவருக்கும் பாடம்.

4:27 PM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
அக்காவின் மேல் அக்கறை கொண்ட வாசுதேவனுக்கு ரொம்ப தான்க்ஸ்:)
நான் சொன்னது ஏட்டு அல்வா.!!

அதாவது பதிவு அல்வா.
ஆசை நரைக்கலைன்னு சொன்னாலும் சாப்பிடமுடியாதுன்னா முடியாதுதான்.. நீங்க சொன்னதால தயிரையும் விட்டாச்சு. மோர் உண்டு:)) நன்றி நன்றி. எல்லாப் புகழும் வாசுதேவனுக்கே!!

5:02 PM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
இந்தப் புரோச்சனன், அரக்கு மாளிகை கட்டினவனா இருக்குமோ ராகவன்?
அப்பா!! எவ்வளவு புராணம் இருக்கு!!!!

5:03 PM Delete
Blogger Geetha Sambasivam said...
அந்தப் பச்சையப்பர் பெயரிலே தான் கல்லூரி வல்லி,

@திவா, வடக்கே இருக்கிறவங்க ராமேஸ்வரம் வரும்போது கங்கை நீரைக் குடம் குடமாக் கொண்டு வருவாங்களே, பார்த்ததில்லை?? ஆனால் அவங்க குளிச்சாங்களானு எனக்கு சந்தேகமா இருக்கும்! :))))))))

5:14 PM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
கீதா,நான் பார்த்திருக்கேன் ராமேஸ்வரத்தில.
எனக்கும் அந்த சந்தேகம் வரும்:)

பாகவத அபசாரம் கூடாது...தப்பு தப்பு.

5:43 PM Delete
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...
//யாராவது சாமியார் சொன்னாங்கன்னா கேப்பாங்களா?//

அதான் இப்போ ஜிரா சொல்லிட்டாருல்ல! கேட்டுக்கறோம்! :))

11:30 PM Delete
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...
//இப்போ முதலைகளை எல்லாம் அழிச்சாச்சு. முதலையின் உணவைப் பின்னே என்ன செய்வது?//

கீதாம்மா...
முதலைகளை ஒழிச்சாச்சா?
பண "முதலைகள்" இன்னும் இருக்கே!
அவை தானே இன்னும் கழிவு நீரைக் கங்கையில் கலக்கின்றன? :(

கண்ணக்குத் தெரிவது: மக்கள் செய்யும் சிறு சிறு அசுத்தங்கள்!
ஆனால் பின்புலத்தில்: அதை விடக் கொடுமையான அசுத்தங்கள்!

இதுக்கெல்லாம் வெறும் வேப்பிலை அடிச்சாப் போதாது!
அத்தனை நீதிபதிகளையும், அதிகாரிகளையும் ஒரே மோசமான இடத்தில் கங்கா ஸ்நான பிராப்தி செஞ்சி வைச்சா, அப்போ வீரியம் உணரப்படும்! நீதித் துறை மாதிரி, தனிப்பட்ட அதிகாரம் கொண்ட துறை ஒன்றை கங்கை-க்குன்னே தனியா ஒதுக்கினா, அப்போ கொஞ்சம் நடக்க ஆரம்பிக்கும்!

12:24 AM Delete
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...
//வல்லிசிம்ஹன் said...
இந்தப் புரோச்சனன், அரக்கு மாளிகை கட்டினவனா இருக்குமோ ராகவன்?
அப்பா!! எவ்வளவு புராணம் இருக்கு!!!!
//

ஹிஹி!
வல்லீம்மா, ராகவன் சொன்னது புராணம் இல்லை! புருடா-ணம்! :)

டீச்சர், சாமியார் சொல்லியாச்சும் திருந்துவாங்களா-ன்னு கேட்டாங்க-ல்ல?
அதான் ஆம்ஸ்டர்டாம் ஆசிரமச் செம்மல் இப்பிடிச் சொன்னாரு-ன்னு நினைக்கிறேன்! :))))

1:12 AM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
அன்பு ரவி,

நியூயார்க் ஆழ்வார் வந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
வரணும் வரணும். இந்த வருஷம் ஊருக்கு வரலியா.
ராகவனை வம்புக்கு இழுக்காமல் பொழுது போகாதே உங்களுக்கு.:)உண்மையான வார்த்தை அம்மா. அதிகாரத்தில் இருப்பவர்களை அந்நியன் மாதிரி யாராவது வந்து கேட்டாத்தான் நடக்குமோ என்னவோ.

வார்த்தை விளையாட்டுச் சித்தரே உம் வரவு நல்வரவாவுக. ரொம்ப நன்றிம்மா.

6:45 AM Delete
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...
//ராகவனை வம்புக்கு இழுக்காமல் பொழுது போகாதே உங்களுக்கு.:)//

அடக் கடவுளே!
அது நெஜமாலுமே எந்த புராணமும் இல்ல வல்லீம்மா! சும்மா கட்டி விட்டது! ஜிரா கிட்டயும் பேசினேன்! ஐயா சிரிச்சாரு! வேணும்னா வந்து சொல்லச் சொல்லறேன்! :)

10:54 PM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
ரவி, நிஜமாவா!!!
அட ராமா ராகவா.

சரி போ. எல்லாப் புராணமும் கதைகட்டுரைன்னு நேத்திக்குப் படிச்சேன். இன்னிக்கு நீங்க ஜிராவே கதைவிட்டதாச் சொல்றீங்க. யாரைத்தான் நம்புவதோஓஓஓஓஓஓஓஓஓஓஒ:))

6:43 AM Delete
Blogger கவிநயா said...
//யாரைத்தான் நம்புவதோஓஓஓஓஓஓஓஓஓஓஒ:))//

அதானே? அச்சோ!! நானும் ஜிரா சொன்னதை நம்பிட்டேன்!

6:50 AM Delete
Blogger வல்லிசிம்ஹன் said...
நீங்களுமா.
கவிநயா:)

ராகவன் சந்தேகம் தீர்க்க வரவில்லைன்னா, ரவி சொன்னதை எடுத்துக்க வேண்டியதுதான்:)))
 
 

14 comments:

கோமதி அரசு said...

கங்கை ஆரத்தி காணொளி அருமை.
பழைய பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் எல்லாம் அருமை.

ரசித்து படித்தேன்.
இப்போது என் அண்ணி போய் வந்தார்கள். காசியில் புதிதாக கட்டிய கட்டிடம் படங்கள் எல்லாம் அனுப்பி வைத்தார்கள்.

ஸ்ரீராம். said...

2009...


நாங்கள் இந்த வருடம்தான் பதிவுலகுக்கு வந்தோம்! பின்னூட்டங்களை வைத்தே ஒரு பதிவு. கங்கை பற்றிய கவலை இப்போது தீர்ந்திருக்கும்.

நெல்லைத் தமிழன் said...

இந்தப் பின்னூட்ட பிளாகர்கள் பலர் இப்போது காணக்கிடைப்பதில்லை.

சுவாரசியமான பின்னூட்டங்கள்

நான் அலஹாபாத்தில், நதிக்கு அருகில் நிறைய பிணங்களை எரிப்பதற்காக எடுத்து வந்திருந்ததைப் பார்த்திருக்கிறேன். (போட்டோ எடுக்கணும்னு நினைத்தேன்... மனைவி..கண்டதெல்லாம் போட்டோ பிடிக்கக்கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்றாள்)

Geetha Sambasivam said...

அந்த நாட்களுக்கே போயிட்டு மறுபடி வந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

கங்கை இப்போது மிக சுத்தமாக இருப்பதாகச் சொன்னார்கள்.
உங்கள் அண்ணி அங்கு சென்று வந்தது
மிக மகிழ்ச்சி.
நானும் எப்போவாவது சென்று வருவோம்.
நலமுடன் இருங்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

ஆமாம் 2009 உங்கள் வரவு.
அப்போதைய பதிவுலகம் எப்படி இருந்தது
என்று நினைவு கொள்ளவே இந்தப் பதிவு மா.
கங்கை நலமாக இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

''இந்தப் பின்னூட்ட ப்ளாகர்கள் இப்போது காணக் கிடைப்பதில்லை"

ஆமாம் அன்பு முரளிமா.
எல்லோரும் ட்விட்டர் ,இன்ஸ்டாகிராமில்
இருக்கிறார்கள்:)

என்றும் வளமுடன் இருங்கோ மா.
உங்கள் மனைவி சொல்வது உண்மைதானே!!
வேண்டாத நினைவுகள் காமிராவில் பதிய வேண்டாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
பழைய நினப்பு தான் பேராண்டி பாட்டு நினைவுக்கு வருகிறது.

எல்லோருக்கும் நல்ல உத்சாகம் இருந்தது.

மிக நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

ஹயோ அம்மா என்ன சுவாரசியமான பின்னூட்டங்கள். ரசித்து ரசித்து வாசித்தேன்.

அம்மா கொரோனா டைம்ல கங்கை ரொம்ப சுத்தமா இருந்ததாகப் படமெல்லாம் போட்டிருந்தாங்க. அது தவிர கங்கையைச் சுத்தம் பண்ணியதாகவும் போட்டிருந்தாங்க.

நேரில் பார்த்தால்தான் தெரியும். ஆனால் கங்கை ரொம்ப அசுத்தமாகி இருந்தது என்பது உண்மை. கங்கையை விடுங்க நம்மூர்ல எந்த நீர் நிலைதான் உருப்படியா இருக்கு. இதோ இங்க ஏரி சுத்தி இருக்கற எல்லா வீட்டுக் கழிவு நீரும் ஏரிக்குள்ளதான் போகுது..

சுவாரசியமான பின்னூட்டங்கள் வைத்து பதிவு சூப்பர் அம்மா இப்படிக் கொஞ்சம் போடுங்க நல்லாருக்கு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கவிநயா இப்பவும் அம்மன்பாடல்கள் போடறாங்க. மற்றபடி அவங்களைப் பார்க்க முடிவதில்லை. சுப்புத் தாத்தாவும் அவர் ப்ளாகில் அவ்வப்போது ஏதேனும் பாடல்கள் பகிர்கிறார். மற்றபடி காண முடிவதில்லை

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கங்கை ஆரத்தி காணொளி அருமை.

ஓ பழைய பதிவிற்கான பின்னூட்டங்கள் இல்லையா? ரசனையான பின்னூட்டங்கள். அப்போது வலை உலகம் நன்றாக இருந்திருக்கிறதே. நாங்கள் வந்தது 2013ல்தான். அப்போது வந்த போது கண்ணபிரான் வலையில் அவர் சில எழுதியதுண்டு. பார்த்த நினைவும் இருக்கிறது. சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள், நீங்கள் இப்போதும் எழுதுகிறீர்கள்.

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

கவி நயா மீனா மிக நல்ல பெண்.
சுப்பு அண்ணாவும் அதுபோலத்தான். இருவரையும் நேரே
சந்தித்து இருக்கேன்.

வலையுலகம் மிக மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்த
காலம். எல்லோரும் எல்லாப் பதிவுகளும் வாசிப்போம் கருத்திடுவோம்.
அதனால் எழுதுவதே இன்பமாக இருக்கும்.
தாமதமாகப் பதில் இடுகிறேன்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

ஆமாம் மா. அது வலைப்பதிவுகளின் பொற்காலம்.
எல்லோரும் எல்லாரையும் கொண்டாடிக் கொள்வோம்.:)

நானும் கீதாசாம்பசிவமும் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில்
ஆரம்பித்தோம்.

நம் உணர்வுகளைப் பகிர ஒரு இடம்.
மிக நன்றி மா.

Geetha Sambasivam said...

தற்போது நம் பயணக்காதலர் திரு வெங்கட் வாரணாசியில் தான் இருக்கார். வாரணாசி பற்றிய அவர் அனுபவங்களை எழுதியும் வருகிறாரே! வாரணாசி முன்னிருந்தாப்போல் இப்போது இல்லை என்பதும் சுத்தமாக இருப்பதாகவும் எழுதி இருக்கார்.