நம்பிக்கையே வாழ்க்கை. நலம் நாடி
நல்ல செய்திகள் கொடுத்து
நாமும் நலம் பெறுவோம்.
அதற்கு இறைவனும் துணை நிற்பான்.
யார் நீ மிக்க வரவேற்பைப் பெற்றது.
அதற்கு முன் வந்திருந்த சாதனா ,மனோஜ்
நடித்த வோ கௌன் தி ? படப்பாடல்கள்
விவித பாரதியிலும்
சிலோன் வானொலியிலும் முழங்கும்.
மறக்க முடியாத நாட்கள் அவை.
சுதந்திரமாக இசையை ரசித்துத் தோழிகளுடன்
பகிர்ந்து ,பாடி மகிழ்ந்த நாட்கள்.
சாதனாவை விட அழகான நம் ஜெய லலிதா
மனோஜ் குமாரைவிட சுறு சுறுப்பான ஜெய்ஷங்கர்
என்று இனிமையாகச் சென்ற படத்தைப் பார்த்ததென்னவோ
தொலைக் காட்சி வந்த பிறகுதான்:)
இந்தி நடிகர்களுக்கு நல்ல இயக்குனர்கள் கிடைத்தால் மட்டுமே
முக பாவங்கள் சரியாக அமையும்.
இயல்பாகவே நல்ல நடிப்பைக் கொடுக்க
முடிந்தவர்கள் சஞ்சீவ் குமார், தர்மேந்திரா,ராஜ் கபூர் .
எங்க காலத்து ஹீரோக்கள். :)))))))))))))))))))))))))))))
ஓம் பிரகாஷ், அஸ்ரானி இவர்களுடன் அமிதாப், ஜயா பாதுரி, ஷர்மிளா,தர்மேந்த்ரா நடித்த
சுப்கே சுப்கே மிக மிக ரசிக்கும் படம்.
மேலே இருக்கும் அனாமிகா படப் பாடல்
திருச்சிக்கு நாங்கள் வந்த புதிதில்
கேட்ட பாடல்.
இன்னோரு அழகான நடிகை வஹீதா ரஹ்மான்.
நம் சாவித்திரி மாதிரி இன்னோரு நடிகையை
இன்னும் பார்க்கவில்லை.
சுசீலாம்மா குரலில் மயங்கிய இன்னோரு பாடல்.
தஞ்சாவூருக்கு ஒரு திருமணத்துக்காக
அத்தை,சித்தப்பாவுடன் பெரிய வண்டியில்
பயணித்தபோது,
திருவெறும்பூர் ரயில்வே கேட் அருகே
நின்றோம். அருகே இருந்த
அந்த டீக்கடையில் முதன் முதலில்
கேட்டு ரசித்த பாடல். 1961 ஆம் வருடமாக இருக்கலாம்.
அப்பா தான் கேட்டு ரசிப்பார்.
நான் வாய் விட்டுப் பாட அனுமதி கிடையாது:)
எனக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்தவர் என் கணவர் மட்டுமே.
அனைவரும் வாழ்க வளமுடன்.
இன்று எங்கள் மகளின் பிறந்த நாள்.
அவளின் இல்லறம் வளர இறைவன் அருள் செய்ய வேண்டும்.
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
15 comments:
நல்ல செய்திகள் காதில் விழட்டும். பிரார்த்திப்போம்.
சாதனாவைவிட ஜெ அழகுதான். சுசீலாம்மாவின் குரலும் இந்தப் படத்தில் மிக அழகாய் இருக்கும்.
சுப்கே சுப்கே, அனாமிகா பார்த்திருக்கிறேன். அடுத்த படத்தின் பாடல்கள் மட்டும் கேட்டிருக்கிறேன். எல்லாமே இனிய பாடல்கள். உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஆரம்பிக்கும் வருடம் அனைவருக்கும் நன்மை
கொடுக்கட்டும்.
சங்கடமே இல்லாத வாழ்வை இறைவன் அருள வேண்டும்.
பாடல்களை ரசித்துக் கேட்டதற்கு மிக நன்றிமா.
வஹீதா பாடிய பாடல் Guide படத்தில் வந்தது. ஆர் கே நாராயணன்
நாவல். கதையைக் கொஞ்சம் மாற்றி விட்டார்கள்.சுசீலாம்மாவை எவ்வளவு கேட்டாலும் அலுப்பதில்லை.
// Guide படத்தில் வந்தது. ஆர் கே நாராயணன்நாவல். கதையைக் கொஞ்சம் மாற்றி விட்டார்கள். //
தெரியும் அம்மா. இந்தப் படத்தில் Gaaththaa Rahe எனக்கு மிகவும் பிடிக்கும். ரொம்ப நாள் மஹால் கிஷோர் பாடலும் கைட் படத்தில் என்றுதான் நினைத்திருந்தேன். பின்னர் தெரிந்தது அது மஹால் படத்தில் என்று. . அந்தப் பாடலும் பிடிக்கும். அந்தப் பாடல் 'யே துனியா வாலே பூச்சேங்கே...'
அன்பின் ஸ்ரீராம்,
நீங்கள் இன்னோரு படம்னு சொன்னதும்
நான் கைட் தான் சொல்கிறீர்கள் என்று நினைத்தேன் மா.
ஸாரி.
யே துனியாவாலே பூச்சேங்கே..தேவ் ஆனந்த், ஆஷா பரேக் பாட்டு இல்லையா. மிக மிக
இனிமை.
கைட் ல காதே ரஹே மேரா தில்
மிகவும் ரசித்துக் கேட்பேன்.
மிக நன்றி மா.
உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ஆசிகள். எல்லாப் பாடல்களுமே அடிக்கடி கேட்டவைதான். கைட் படத்தின் வஹீதாவின் அழகு வர்ணிக்க முடியாதது. ஹிந்தி நடிகைகளில் அவர் அழகு எனில் தமிழ் நடிகைகளில் ஜெயலலிதா. அதுவும் ஜெய்சங்கரோடு நடித்த படங்கள் எல்லாமே அவர் அனுபவித்து நடித்திருப்பார்.
// வஹீதாவின் அழகு வர்ணிக்க முடியாதது //
:)))
ஸ்ரீரங்கத்துத் தமிழர் என்பதால் சொல்கிறீர்களோ?!
அம்மா உங்கள் மகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். காட் ப்ளெஸ்!
ஹிந்தி சினிமா பரிச்சயம் இல்லை. இனியேனும் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். தமிழ்பாடல்களில் முதல் பாடல் கேட்டிருக்கிறேன் ஆனால் இரண்டாவதுஇப்போதுதான் கேட்கிறேன் அம்மா
நன்றாக இருக்கிறது
கீதா
தமிழ்ப்பாடல்கள் இரண்டுமே கேட்டு ரசித்த பாடல்கள்.
நல்லவை நடக்கட்டும். எல்லோரும் நலமுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
உங்கள் மகளுக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துகள்! அவரும் அவரது குடும்பமும் மகிழ்ச்சியாய் இருந்திட இறைவன் அருள பிரார்த்தனைகள்
துளசிதரன்
அன்பின் கீதாமா,
நன்றி மா. பெரியவர்கள் ஆசி என்றும் குழந்தைகளுக்கு வேண்டும்.
ஆமாம். வஹீதா நல்ல அமைப்பான அழகு. அதுவும் சௌத்வின் கா சாந்த்
படத்தில் அத்தனை நன்றாக இருப்பார்.
ஜெ எத்தனை அருமையாக இருப்பார். எப்படி மாறிவிட்டார்.
நீங்கள் தான் அருகிலேயே பார்த்திருக்கிறீர்களே மா.
பாவம்.
வஹீதா ஹைதரபாத் இல்ல?
அன்பின் கீதா ரங்கன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
அன்பு வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா.
எல்லாமே 70 களில்,60 களில் வந்த பாடல்கள் மா.
நீங்கள் மொழி வல்லுனராச்சே.
இந்தியின் கவிதை வரிகள் மஹா அருமையாக
இருக்கும்.
எனக்குத் தமிழ் புரிவது போல அந்த இந்தி
புரியாது.
இசைக்கு மனதை அடைவது தான் இலக்கணம்.
அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக நன்றி.
வானொலி வழியே தான் எல்லாப் பாடல்களையும்
அப்போது கேட்டுஅறிந்தேன் அப்பா.
அப்போதெல்லாம் வீட்டை விட்டு வெளியே போக முடியாது.
அது இப்போதும் பயன் படுகிறது.
கணினியும் பாட்டும் தான் நமக்கு மருத்துவம்.
ஶ்ரீராம் ஜெயலலிதாவைச் சொல்கிறார் வல்லி. வஹீதா ஹைதராபாத்காரர் தான். இப்போ இருப்பது "பெண்"களூரில் என்றார்கள்.
ஓ. ஓகே. சரிதான் கீதாமா.
வஹீதாவைத் தான் சொல்றார்னு நினைத்தேன் மா.
நன்றி.
பாடல்கள் அருமையான பகிர்வு.
அடிக்கடி கேட்ட பாடல்கள்.
மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
Post a Comment