Blog Archive

Thursday, April 14, 2022

சித்திரைத் திரு நாள் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக இருக்க வேண்டும்.
சுபகிருது வருடம் அனைவருக்கும் இனிய செய்திகளையும்  வளங்களையும் கொண்டு வரவேண்டும்.


வித விதமான புத்தாண்டுகளைக் 
கடந்து வந்திருக்கிறோம். இனியாவது 
 நடக்க வேண்டிய நல்ல செய்திகள்
காதில் விழவேண்டும்.
உறவுகள் மகிழ்ந்திருக்க வேண்டும்.
நட்புகளின் இல்லங்களில்  குழந்தைகளும் பெரியவர்களும் 
மகிழும் வண்ணம் இறைவன் கருணை
காட்ட வேண்டும்.

14 comments:

ஸ்ரீராம். said...

இந்த வருடத்தின் பெயருக்கு விளக்கம் கொடுத்திருந்தார்கள்.  எங்கோ படித்தேன்.  இனி எல்லாம் சுகமே என்று சொல்லப்பட்டிருந்தது.

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

புத்தாண்டு நல் வாழ்த்துகள் அம்மா

மாங்காய்ப்பச்சடி மனதை ஈர்க்கிறது

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஓ மை ஆஞ்சு! மை லார்ட்!!! இதே படம் தான் என் பிறந்த வீட்டிலும் இருந்தது. இப்போது இது கிடைக்குமா என்று தெரியவில்லை.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

விஷு வாழ்த்துகள்! வல்லிம்மா.

இந்த வருடம் உலகிற்கு நன்மைதர வேண்டும் என்று பிரார்த்திப்போம்

துளசிதரன்

Geetha Sambasivam said...

அனைவருக்கும் இந்த வருடம் அனைத்து நலங்களையும் கொடுக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.
இறைவன் கருணையால் அனைவரையும் காக்க வேண்டும்.

மாங்காய் பச்சடிக்கு இஞ்சி சேர்க்க மாட்டோம், அரிசி மாவு சேர்க்க மாட்டோம். வித்தியாசமாக சொல்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
இந்த நாளும் எல்லா நாட்களும் இனிதே நடக்க
இறைவன் அருள வேண்டும்.

நலமுடன் இருங்கள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

என்றும் நலமுடன் இருங்கள் மா.
என் அம்மா, கொஞ்சம் மலையாள வாசனையுடன்
புத்தாண்டு கொண்டாடுவார்.

பாட்டி சொல்வது மாதிரிதான் நாங்கள் செய்வோம்.
வாழ்த்துகள் மா.

Geetha Sambasivam said...

நாங்களும் மாங்காய்ப் பச்சடிக்கு இஞ்சி சேர்ப்பதில்லை. ஆனால் என் மாமியார் மாவு கரைத்து விடுவார். அவருக்குக் குழம்பு, சாம்பார், கூட்டுனு எல்லாவற்றிற்கும் மாவு நிறையவே கரைத்து விடவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன் நல் வாழ்த்துகள். விஷு கண்டு மகிழ்நதீர்களா. .
என்றும் நலமுடன் இருங்கள் மா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன் மா.
இன்று செய்த மாங்காய்ப் பச்சடிக்கு நானும் மாவு கரைத்து விடவில்லை.

வேப்பம்பூவை நெய்யில் வறுத்துப் போட்டேன்.
எல்லோரும் சாப்பிட்டு தீர்ந்தும்
போய்விட்டது:)
பேசாமல் அதையே படம் எடுத்துப்
போட்டிருக்கலாம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா, முறைப்படி செய்துவிட்டால்
மாவு கரைத்துவிட வேண்டிய அவசியமே
இல்லையே.
நானும் பச்சடிக்கு இஞ்சி,மாவு சேர்க்கவில்லை.

பிரமாதமாக வந்தது. வேப்பம்பூ மட்டும் வாங்கினது.

நன்றி மா. என்றும் நலமுடன் இருங்கள் மா.

வெங்கட் நாகராஜ் said...

புத்தாண்டு வாழ்த்துகள் வல்லிம்மா. நல்லதே நடக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,

நல் வாழ்த்துகள்.
நாம் அனைவருமே பத்திரமாக இருக்க அந்த ஶ்ரீரங்கனே அருள்வான்.