வல்லிசிம்ஹன்
அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
அனைவரும் ஆரோக்கியத்துடன் அமைதியுடன் வாழ
இறைவன் அருள வேண்டும்.
எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருப்பது
என்பது இல்லை. இன்று அதுபோல ஒரு தினம்.
நான் பார்த்துப் பிறந்த என் நாத்தனாரின் மகள் (51)
தன் துணைவரை (52) இறைவனிடம் அடைக்கலம் கொடுத்த செய்தி
என்னுடைய காலை 10 மணிக்கு
வந்தது.
அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.
அந்தக் குழந்தையை என்ன சொல்லித் தேற்றுவது.
இப்போதுதான் வேலையில் சேர்ந்திருக்கும் மகள்.
கல்லூரியில் அடி எடுத்து வைத்திருக்கும்
இரண்டாவது மகள்.
டென்னிஸ் விளையாடி விட்டு வந்த கணவர்
நிலையில்லாமல் சரிந்தபோது,
என் நாத்தனார் மகள் தன் வேலை விஷயமாக
மும்பையில் இருந்திருக்கிறாள்.
என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கிறதோ
அந்த மன்ம்.
அவ்வளவு துடிப்பான, அழகான பெண்.
அன்பு நிறைந்த கணவர். என் நாத்தனார், கணவர் இருவரிடமும்
அத்தனை அன்பும் பாசமும் காட்டியவர்.
நல்ல ஆரோக்கியவான்.
எப்படி ஆறுதல் சொல்லப் போகிறோம் நாங்கள்.
சென்னையிலும் பங்களூரிலும் பேசிக் கொண்டிருக்கிறேன்.
யாருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
கல்லாகச் சமைகிறது மனம்.
இறைவா அந்தக் குழந்தைகளைக்கு
ஆறுதலாக இரு.
13 comments:
அடக்கடவுளே... இந்த சமயத்தில் அருகில் கூட இருக்க முடியாமல், வெளியூரில் இருந்ததும் சோகம்.
மறைந்தவர் ஆன்மா இறைவன் காலடியில் நற்கதி அடையவும், இழந்தவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு அதைத் தாங்கும் மனவுறுதியையும் அந்த இறைவன் வழங்க பிரார்த்திக்கிறேன்.
வேதனையான செய்தி! என்னவோ போங்க! :(
@ஸ்ரீராம். ஆமாம் ராஜா. எதையும் பதிவது வழக்கமாகி விட்டது.
ஸாரி மா. மிக நன்றி. நலமுடன் இருங்கள்.
என்னுடைய நினைவுக்காகப் பதிந்து கொண்டேன் அன்பு கீதாமா,.
நலமுடன் இருங்கள். நன்றி.
அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் எனது இரங்கல்கள் அம்மா.
மரணம் இடையே வந்து ஒரு அன்பான உறவை நம்மிடமிருந்து பிரித்தெடுத்து செல்வது மிகவும் கொடுமை! வலியுடனும் வேதனையுடனும் தொலைதூரத்திலிருந்து கொண்டு நீங்கள் தவிப்பது அதனினும் கொடுமை! மனதை தைரியமாக வைத்துக்கொண்டு உங்களுடைய நாத்தனார் மகளுக்கு ஆறுதல் சொல்லுங்கள். காலம் மட்டுமே அவர்கள் மனப்புண்ணை ஆற்றும் மருந்து.
மனம் கனத்து போனது செய்தி படித்து.
என் அப்பாவின் நினைவு வந்தது, 51 வயதில் டென்னிஸ் விளையாடி விட்டு வந்த போதுதான் நெஞ்சுவலி என்று இறைவனிடம் சென்றார்கள்.
நாத்தனார் குடும்பத்திற்கு இறைவன் தான் ஆறுதலை தர வேண்டும்.
குடும்பம் இந்த இழப்பை எப்படி சமாளிக்க போகிறார்கள்! அவர்களுக்கு இறைவன் தான் பக்கபலமாக இருக்க வேண்டும்.
அடக் கடவுளே என்ன இதுஇப்படி மனம் ஏற்கவே மறுக்கிறது.
பிரார்த்தனையைத் தவிர வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை அம்மா.
சின்ன வயசு.
கீதா
அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
இறைவன் நல்லோரை சட்டென்று தன்னிடம் அழைத்துக் கொள்கிறான்.அமைதி பெறட்டும்.
அன்பின் மனோ,
சரியாகச் சொன்னீர்கள்.
விரைந்து சென்று அந்தக் குழந்தையை அணைத்து ஆறுதல் சொல்ல மனம்
துடிக்கிறது.
ரொம்பப் பாசமான குழந்தை. மாமி மாமி என்று என்னைச் சுற்றி வரும்.
அவள் பெற்றோர்
மறைந்ததில் மிக மன வேதனையில் இருந்தாள்.
இறைவன் தான் அமைதி கொடுக்க வேண்டும்.
அன்பின் கோமதி ,
வாழ்க வளமுடன்.
சட்டென்று நீங்கள் முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது மா.
மிக மிக நல்ல ஆத்மா.
நாத்தனாரும் கணவரும் அவரை மிகவும் போற்றுவார்கள்.
இருவருக்கும் அவ்வளவு உதவி செய்வார்.
மனைவியின் உறவுகள்
தன் உறவுகள் என்று போற்றிவந்தார்.
மனம் ஆற மறுக்கிறது.
நனறி மா. நலமுடன் இருங்கள்.
அன்பின் கீதாரங்கன் மா,
பங்களூர் ஏர்போர்ட் பக்கம் இப்போது தான்
வீடு மாற்றி சென்றார்கள்.
அந்தப் பிள்ளையின் பெற்றோரைக் கவனித்துக் கொள்ள வேண்டும்
என்ற ஒரே காரணத்துக்காக.
மனம் அமைதி பெற இறைவனே துணை.
நன்றி மா. நலமுடன் இருங்கள்.
வேதனையான இழப்பு. காலம் தான் தக்க மருந்து.
Post a Comment