Blog Archive

Saturday, April 02, 2022

பெற்றோர் நினைவில் ஒரு பதிவு

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

 ஸ்ரீரங்க நாதரும் பங்குனி ரேவதியும்


ஸ்ரீரங்க விமானத்துடன் விபீஷணன் 
மாத்யான்னிகம் , மதிய நித்யானுஷ்டானம்
செய்ய ,
காவேரிக்கரையில் இறங்கிய நாள் பங்குனி மாதம் 
ரேவதி நக்ஷத்ரம்.
அதற்கப்புறம் ரங்கஸாயி எழுந்து பயணத்தைத்
தொடரவில்லையாம்!!!! 
அதுவரை சேஷபீடமாக இருந்த ஊரில் 
பகவான் ஜம்மென்று ஏறிப் படுத்துக் 
கொண்டுவிட்டாராம்:)

இந்த விஷயம் எங்களுக்கு 2003 ஆம் வருட
ஸ்ரீரங்கப் பயணத்தில் தான் தெரிந்தது.
விட்டகுறை தொட்ட குறைதான் என்று 
அப்பா எப்பொழுதுமே சொல்வார்.

அவர் உபாசித்த ராமரே  ஸ்ரீரங்கத்தில் உற்சவர்
என்றும்.

சயனித்திருக்கும் அரங்கன் தாமோதரனாக
வயிற்றில் யசோதை  கட்டிய கயிற்றுடன்
இருப்பதாகவும் அப்போது அங்கிருந்த
பட்டாச்சாரியார்  சொன்னார்.

50 களில் பார்த்த ரங்கன், 70 களில் தரிசனம் செய்த ரங்கன்
மீண்டும் 2003 மார்ச்சில் தரிசனம் கொடுத்த ரங்கணை
மீண்டும் தரிசிக்க ஆசை.
நிறைவேற்றி வைப்பான் என்றே நம்புகிறேன்.

ரொம்ப முக்கியமான தோழியையும் 
பார்த்தே ஆகணும்:)
எல்லோரும் வாழ்க வளமுடன்.



12 comments:

வெங்கட் நாகராஜ் said...

திருவரங்கம் வரும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திட வாழ்த்துகள். நல்லதே நடக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.

நன்றி மா. திருவரங்கம் வரும் போது
உங்களையும் ஆதியையும் ரோஷ்ணியையும் , கீதாமாவையும்
சந்திக்க முடிந்தால்
மகிழ்ச்சியாக இருக்கும்.

ஸ்ரீராம். said...

எல்லா விருப்பங்களும் நிறைவேற அரங்கன் அருள் புரிவான். அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்... நல்லதே நடக்கட்டும் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

என்றும் நலமுடன் இருங்கள்.
உண்மைதான் மா. கடவுள் உள்ளம் அதே போல் இருக்க வேண்டும்.
நோய்த் தொற்றுக்கு முன் இங்கே வந்தேன்.

இப்போதுதான் அடி எடுத்து வைக்கப் போகிறோம். அனைவருக்கும்
எதிர்பார்ப்புகளும் அச்சங்களும் இருக்கின்றன.

அந்த ரங்கன் தான் பார்த்துக் கொள்ளவேண்டும்.
அது ஒரு இனிமையான பாடல் மா.

Geetha Sambasivam said...

உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ரேவதி. நீங்கள் சொல்லும் இந்தத் தகவல் எனக்கும் புதிது தான். வயிற்றில் யசோதை கட்டிய கட்டுடனா இருக்கான் அந்த ரங்கன்? போயே 2 வருஷங்கள் ஆச்சு! விரைவில் போகும்படியான சூழ்நிலை வரணும். உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசத்தில் கேட்டதுதான்
மா.
அவரது மேனியில் அந்தத் தழும்பு இருக்கிறது என்று
சொன்னார்.

அதனால் தான் ரோகிணி நக்ஷத்திரத்தன்று
உத்சவம் ஆரம்பிப்பது வழக்கமாம்.
எப்பொழுதோ கேட்டது.
உங்களுக்குத் தெரியாததா அம்மா.எல்லாம் நல்லபடியாகப் பயணம் அமைய வேண்டும்.
அவர்தான் அருள வேண்டும்.

நெல்லைத்தமிழன் said...

ஆஹா... சென்னை, திருவரங்கம் விஜயமா? நன்றாக அமையட்டும். கொரோனா பயமெல்லாம் கிடையாது. கொஞ்சம் எச்சரிக்கையா இருந்தாலே போதும்.

பயணம் சிறக்கட்டும். அரங்கனைப் பார்க்கணும்னா நம்மை நிறைய நடக்க வைப்பான்.

கோமதி அரசு said...

பயணம் நல்லபடியாக நடந்து உங்கள் விருப்பம் நிறைவேற ரங்கன் அருள்வார்.

ரங்கனின் வரலாறு அருமை.

அன்புக்கு கட்டுப்பட்ட தாமோதரன் .

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா.,
ஆரம்ப காலத் திட்டங்கள்.
சரியாக அமைய வேண்டும்.
எல்லோருக்கும் விடுமறை சரியாக
அமைய வேண்டும். இத்தனை டும் டும் களுக்குள்
என் விருப்ப லிஸ்ட் இருக்கு:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

அங்கே ஸ்ரீரங்கத்தில் முரளி பட்டர் என்பவர் இருந்தார்.
அவர் வழியாத் தெரிந்து கொண்டு உறவில் ஒருவர் சொன்னார்.

முன்பு போல அத்தனை அருகிலும் செல்ல
செல்ல முடியவில்லையே.

பார்க்கலாம். அவன் அருள் கிடைக்க வேண்டும்.
மிக நன்றி மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமா? எப்படி இருக்கிறீர்கள்? மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு. தாங்கள் ரங்கனைப் பற்றி தந்த விபரங்கள் உண்மையிலேயே என் மெய் சிலிர்க்க வைத்தது. தங்களின் விருப்பத்தை ரங்கன் கண்டிப்பாக நிறைவேற்றி வைப்பார்.அவன் தரிசனம் தங்களுக்கு இனிதே கிடைக்க நானும் அவனை மனப்பூர்வமான வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சகோதரி கமலா,
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

நாம் எல்லோரும் பங்குனி மாதக் குழந்தைகள்:)
என்றும் நலமுடன் இருங்கள்.
சில பல விஷயங்களிலிருந்து நானும் மீண்டு கொண்டிருக்கிறேன்.
ஸ்ரீரங்க நாதன் துணை நமக்கு என்றும் இருக்க அவனே

அருள வேண்டும். தங்கள் மகன் மகள் குடும்பத்துக்கு
ஆசிகள்.