Blog Archive

Sunday, April 17, 2022

நயாகரா 2008 பயணம்


வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
2008இல் மகள் மருமகன் , நான் சிங்கம் 
பேரக்குழந்தைகள் என்று சென்று வந்த இடங்களில் 
கனடா நாட்டின் நயாகரா நீர்வீழ்ச்சியும் ஒன்று.
இறைவனின் கொடைகளில் மிகப் பெரிய இயற்கை வளம்
இந்த பிரம்மாண்ட அருவி.இந்த  இடத்தில் எம்பசி டவர்ஸ் என்ற விடுதி
நயாகரா அருவிக்கு மிக அருகில் 
அறையிலிருந்து எட்டிப் பார்த்தால் அருவியின் சத்தமும் 
பச்சை நீல நிறமும் 
தெரியும் வண்ணம் மாப்பிள்ளை அறை
பதிவு செய்திருந்தார்.
அவருக்கு இன்றும் நன்றி சொல்கிறேன்.
அருவியுனூடே சென்ற படகுப் பயணம் இன்னும்
நினைவில்.

அனைவரும் நலமுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.
இப்போ நயாகராவுக்கு வந்துவிடுவோம்:) (ஆகஸ்ட்  2008) மீள் பதிவு
வாடகைக்காரில் வந்து எம்பசி ஸ்வீட்ஸில் 34ஆவது மாடிக்குப் போகையில் பேரனுக்கு இருந்த சந்தோஷம் சொல்லீ முடியாது:))))))
அதுவும் அறைக் கதவைத் திறந்ததும் தெரிந்த காட்சி ....நயாகரா நயாகரா.
எல்லோரும்
ஓடிவிட்டோம் அந்த ஜன்னல் பக்கம்.
அப்போதிருந்து எடுத்த படங்கள்
இன்னும் (வலையில் ஏற்றாதது) நிறைய இருக்கின்றன.முதல்
நாள்நாங்கள் போக விரும்பிய இடம் காசு நிறைய புழங்குமே காசினோ...அங்க.
ஆளுக்கு பத்து கனடியன் டாலர் மாற்றிக் கொண்டோம்.
நான் கவனமாக கைக்கடிகாரத்தைக் கழட்டீவைத்தூவிட்டேன்.
எல்லாம் ஒர்
முன்னேற்பாடு தான். நம்மை மீறி தர்மபுத்திரர் வெறி வந்துவிட்டால்:)

மாப்பிள்ளை அழைத்துப் போனார். அப்ப நேரம் இரவு10 இருக்கும். பெண் அரை மணி
நேரத்தில் வரலை என்றால் கதவு திறக்கப் படாது என்று சிரித்தாள்.
பெரிய பேரனுக்கு ஒரே வருத்தம்.
இதெல்லாம் தப்பு தாத்தா. யூ ஷுட் நாட் டூ இட். வேனுமானால்
நான் ஹெல்புக்கு வரேன். என் கிட்ட 100 டாலர் இருக்கு என்றானே பார்க்கணும்:)
அவன் வயசுப் பையன்களை விட மாட்டார்கள்
என்று தெரிந்ததும் சப்பென்று போய் விட்டது:)

அத்தனாம் பெரிய இடத்தை நான் பார்த்ததே இல்லை.
வரிசை வரிசையாக ஸ்லாட் மெஷின்கள். இரவு பகல் என்று பாராமல் விளையாடும் மனிதர்கள் மனுஷிகள். பாட்டி தாத்தாக்கள்.
அவர்களுக்கு வேண்டும் என்பதை தர பணியாளர்கள். பூம் பூமென்று அலறும் இசை.
கர்மமே கண்ணாயினாராக ஏதோ ஒரு கணக்கோடு விளையாடும்
அவர்கள், ஒரு ஆயிரம் பேராவது இருக்கும்.

மாப்பிள்ளை எப்படி விளையாடவேண்டும் என்று காண்பித்தார்.
பத்தே நிமிடத்தில் எங்கள் பத்து டாலரை அந்த யந்திரம் முழுங்கிவிட்டது.
சரி நமக்குக் கட்டுப்படியாகாது என்று நினைத்தவாறு எழுந்துவிட்டோம். பக்கத்திலிருந்த
பணக்காரப் பாட்டி, இன்னோரு நூறு டாலரை
மாற்றிக்கொண்டிருந்தாள்.:)
ஏற்கனவே ஜெயித்த பணத்தை அழகாகப் பையில் போட்டுக் கொண்டாள்.அவள் அநேகமாக அடுத்த நாள் காலை வரை இருப்பாள் என்று நினைத்தபடி ,காலாற அருவியைப் பார்க்க நடந்தோம்.










Labels: நயாகரா முதல் நாள்
Friday, August 29, 2008

18 comments:

ஸ்ரீராம். said...

// நம்மை மீறி தர்மபுத்திரர் வெளிவந்து விட்டால்? //


ஹா.. ஹா.. ஹா... நல்ல முன்ஜாக்கிரதை.


சூதாடிய நினைவு ஜோர். நீங்கள் பணத்தை இழந்தது எந்த வகை விளையாட்டில் என்று சொல்லி இருக்கலாம். ஏதோ ஒன்றில் பணத்தை வைப்பர். ஒரு அம்புக்குறி சுற்றி வந்து நிற்கும். அது காட்டினாள் வெற்றி என்பது போல ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பார்த்திருக்கிறேன்!

KILLERGEE Devakottai said...

நயாகரா அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்.நலமுடன் இருங்கள். நாங்க விளையாடியது கணினி கேம்ஸ் மா. டிக் டாக் டோ மாதிரி.எல்லாம் ஒரே மாதிரி வந்தால் பணம்.இல்லாவிட்டால் ஒரு ஒரு டாலர் ஆகப் போய்விடும்.நீங்கள் சொல்வது சூதாட்டம்:).அதுக்குத் தனியாக உடை உடுத்தி அங்கே போகணும். அதெல்லாம் நம்மால் முடியாது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டை ஜி.நலமுடன் இருங்கள். நிறைய எழுத வேண்டும். பாதி எழுதி இருக்கிறேன் அப்பா.

Anuprem said...

அருமையான காணோளி மா ...ரசித்து பார்த்தேன் ...அழகு

வெங்கட் நாகராஜ் said...

முன் ஜாக்கிரதை..... :) நல்லது தான். பயணம் குறித்த தகவல்கள் நன்று. தொடர்கிறேன்.

Geetha Sambasivam said...

நல்லா இருக்கு நயாகராப் பயணம். முன்னர் படிச்ச நினைவு இல்லை. காசினோக்கள் அங்கே இருவிதமாக இருப்பதை இப்போத் தான் கேள்விப்படுகிறேன். நல்ல அனுபவங்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

ஆளுக்கு பத்து கனடியன் டாலர் மாற்றிக் கொண்டோம்.
நான் கவனமாக கைக்கடிகாரத்தைக் கழட்டீவைத்தூவிட்டேன்.
எல்லாம் ஒர்
முன்னேற்பாடு தான். நம்மை மீறி தர்மபுத்திரர் வெறி வந்துவிட்டால்:)//

ஹாஹாஹாஹாஹாஹா டைம்லி!!!!!!

ஆம்மா னானும் பார்த்திருக்கிறேன் இப்படியானதை ஆனால் விளையாடியதில்லை. அதான் நமக்குத்தான் சின்ன வயசிலேயே தலையில் ஆணி அடித்து வைத்திருக்கிறார்களே! சீட்டே கண்ணால் பார்க்கக் கூடாது!! சூது கவ்வும்!

ஹாஹாஹாஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஓ அம்மா அதானே பார்த்தேன் ஸ்ரீராமிற்கு உங்கள் பதில் பார்த்துவிட்டேன். அதானே பார்த்தேன்....நம்ம அம்மாவாவது இதுக்கெல்லாம் போவதாவது...இது கணினி கேம்...ஆமாம் இதுவும் பல இடங்களில் இருக்கிறது.

உங்கள் அனுபவம் சிரிக்க வைத்துவிட்டது.

நயாகரா ஆஹா போட வைத்தது. ஏன் படங்களை அப்லோட் செய்யலை அம்மா...ப்ளீஈஸ் போடுங்கள் படங்கள்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நயாகரா பற்றி பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். உங்கள் அனுபவமும் அருமை. அதுவும் ரூமில் கதவைத் திறந்ததும் நயகரா காட்சி! மனக்கண்ணில் நினைத்துப் பார்க்கிறேன்.

அங்கு காசினோ ஆங்காங்கே இருக்கும் என்று கேள்விப்பட்டதுண்டு ஆங்கிலப்படங்களில் பார்த்ததுண்டு. அதற்குப் பார்ட்டி etiquettes போல உண்டு இல்லையா?

காசினோ அனுபவம் சிரிப்பை வரவழைத்தது எங்கள் எழுத்து. ரசித்தேன்

துளசிதரன்

கோமதி அரசு said...

பழைய நினைவுகள் பதிவு அருமை.
நாங்களும் விளையாடி தோற்று இருக்கிறோம்.நயாகரா பதிவு நானும் போடவில்லை.
நிறைய படங்கள் இருக்கிறது என்னிடமும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் அனுப்ரேம்,
நலமாப்பா.
என்றும் நலமுடன் இருங்கள்.

பழைய நிகழ்ச்சிகளை அசைபோட்டவண்ணம்
இந்தப் பதிவை எழுதினேன். நீங்கள் பின்னூட்டம் இட்டது
மிக மகிழ்ச்சிமா.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள் பா.

ஆமாம் அவ்வப்பொழுது நல்லறிவு
நம்மைக் காப்பாற்றுகிறது:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா. முன்னாடி சென்று வந்த பயணத்தை
இப்போது மீண்டும் எழுதுகிறேன். எழுத்து புதிது.

2008க்கான பதிவுமா.
பெரிய பேரன் பிறந்த போது ஒரு தடவையும்
சின்னப் பேரன் பிறந்த போது ஒரு தடவையும் போய் வந்தோம் மா,

என்றும் நலமுடன் இருங்கள் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

உங்கள் அனுபவம் சிரிக்க வைத்துவிட்டது.

நயாகரா ஆஹா போட வைத்தது. ஏன் படங்களை அப்லோட் செய்யலை அம்மா...ப்ளீஈஸ் போடுங்கள் படங்கள்."


அன்பின் கீதாரங்கன் மா,
நீங்கள் சிரித்தது தான் எனக்கு மகிழ்ச்சி. ஆமாம் பெரியவர்கள் நமக்கு எல்லாம் சொல்லி வளர்த்ததால் தான்
நாம் இந்த மட்டாவது இருக்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,
''ஓ அம்மா அதானே பார்த்தேன் ஸ்ரீராமிற்கு உங்கள் பதில் பார்த்துவிட்டேன். அதானே பார்த்தேன்....நம்ம அம்மாவாவது இதுக்கெல்லாம் போவதாவது...இது கணினி கேம்...ஆமாம் இதுவும் பல இடங்களில் இருக்கிறது''

ஸ்லாட் மெஷின்ஸ் மா. இதுவும் தினம் விளையாடினால் அடிக்ஷன்
போல ஆகிவிடும்:(
நிறைய குடும்பத்தலைவிகள்
பொழுது போகாமல் இப்படி ஆடி வீட்டுப்
பணத்தைக் கூட இழந்திருக்கிறார்கள்.

அதை எல்லாம் கேள்விப்பட்டு தான் நாங்கள் ஜாக்கிரதையாக
வெளியே வந்துவிட்டோம். நமக்கு இயற்கையாக இருக்கும்
எச்சரிக்கை உணர்வு நம்மைக் காக்கும் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

''நயாகரா பற்றி பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். உங்கள் அனுபவமும் அருமை. அதுவும் ரூமில் கதவைத் திறந்ததும் நயகரா காட்சி! மனக்கண்ணில் நினைத்துப் பார்க்கிறேன்.''

அடுத்த பதிவில் படங்கள் போடுகின்றேன் மா. மிக உன்னதமான பயணம் அது.
'''
காசினோ அனுபவம் சிரிப்பை வரவழைத்தது உங்கள் எழுத்து. ரசித்தேன்''''''

நீங்கள் ரசித்ததே மகிழ்ச்சி , நன்மைகளை மறக்கக் கூடாது இல்லையா அப்பா.


வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.

''பழைய நினைவுகள் பதிவு அருமை.
நாங்களும் விளையாடி தோற்று இருக்கிறோம்.நயாகரா பதிவு நானும் போடவில்லை.
நிறைய படங்கள் இருக்கிறது என்னிடமும்.''

நல்ல வேளையாக அப்போதே இந்தப் படங்களைப்
பதிந்தேன் மா.
இவரும் நானும் குழந்தைகளுடன் நிறையப் படங்கள் எடுத்திருந்தோம்.

மகளிடமும் சில படங்கள் இருக்கின்றன.
நன்மையை நினைத்து மகிழ்வோம் அம்மா.