Biggest carousel in the world.
இதோ தெரியும் வராந்தா ஒரே ஒரு பாறையின் மேல் அமர்ந்து இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா/
சின்னவன் பிறந்த போது, நானும் சிங்கமும் இங்கே
தங்கின ஆறு மாதங்களில்
பக்கத்தில் இருக்கும் சில நல்ல இடங்களுக்கு
வீட்டு வண்டியிலேயே போய் வந்தோம்.
தண்ணீரிலிருந்து, குழந்தை உணவு ஈறாகச் சகலமும்
வண்டியில் கொண்டது.
விஸ்கான்சின் மலைப் பங்களா, புதுவிதமாக
இருந்ததே தவிர பண விரயம் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை,.
ஒரே ஒருவரின் கனவுலகம், மற்றும் கடும் உழைப்பு.
அந்த கல்மலையின் ஒரு உயர்ந்த பாறையில்
இத்தனை பெரிய வீட்டையும் சுற்றும் தோட்டங்களையும்
வருடக் கணக்கில் உழைப்பைக் கொட்டி முடித்திருக்கிறார்.
பத்தாயிரம் விளக்குகள் ,நூற்றுக்கணக்கான வடிவங்கள் கொண்ட ஒரு குடை ராட்டினம் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்?
ஏறி உட்கார்ந்து ஒரு ரைட் போகலாம் என்றுதானே.?
அது முடியாது இந்த இடத்தில்.
பின்னணி இசை போய்க்கொண்டே இருக்கும்.
கரௌசல் சுத்தி வரும். பொம்மைக் குழந்தைகள் உட்கார்ந்திருக்க, மயில்களும் ,அன்னமும்,குதிரைகளும் யானைகளும் சுற்றி வரும்.
உலகிலேயே மிகப் பெரிய ராட்டினத்தை இந்த மலைப் பங்களா என்று நான் பேர் சூட்டின த ஹௌஸ் ஆன் த ராக், பார்த்தோம்,.
நாங்கள் இந்த ஏழு நாட்கள் விடுமுறையில், எங்கே போவது என்று தலையைப் பிய்த்துக்கொண்டு,
இணையத்தில் தேடி,
ஹோட்டல் வசதி பார்த்து கிளம்பும்போது வெள்ளியாகிவிட்டது.
மழை அதோடு கூட உபரியாக வரும் அக்கா தங்கச்சிகள் எல்லாம் எதிர்கொள்ளவேண்டி வரும்
என்று பெண்ணும் மாப்பிள்ளையும் எச்சரித்தார்கள்.
நான் செய்த பூஜாபலம் னு பாடிக்கொண்டே
வண்டி ஏறினேன்.
பீட்சாவிலும், அரையடி ரொட்டியிலும் எனக்கு
நிம்மதி கிடைக்காது என்று, கடுகு கொட்டி(வார்த்தை சிங்கம் சொன்னது) தயிர்சாதம்.
'அதென்ன, உங்க அம்மாவுக்கு தயிர் சாதத்தில்
கருவேப்பிலை,பெருங்காயம், இஞ்சி,கொத்தமல்லி,
உளுத்தம்பருப்பு இதைத தவிர சாதம்னு ஒண்ணு கலக்கணும்னு என் மாமியார் கத்துக் கொடுக்கவே இல்லை'
என்று ஒரு நாள் விடாமல் அலுத்துக் கொள்ளுவார்.:)))))))))))))))
தேவைதான்'
என்று நினைத்தாலும் நானும் விட்டுக் கொடுப்பதில்லை.
கடைக்காரனுக்கு நஷ்டம் வந்து விடாதா/ நான் கடுகு வாங்காமல் யார் வாங்குவார்கள்?
இத்யாதிகளோடு நாங்கள் ஸ்ப்ரிங் க்ரீன் போய் சேர்ந்தபோது இரவு பத்து.
காலையில்லெழுந்து '' டெல்ஸ் மைனிங்''+ இந்த மலை மேல் பங்களாவைப் பார்ப்பதாக ஏற்பாடு.
பேரனுக்குப் பாட்டியோட முட்டி கவலை.
''அப்பா, பாட்டிக்கு வேணா வீல் சேர் சொல்லலாமா'
ஏற்கனவே ஸ்ட்ரொல்லர் எப்படி எடுத்துப் போவது
என்ற யோசனையில் இருந்த மாப்பிள்ளை, இதென்னடா புது பிரச்சினை என்று அந்த மலையையும் என்னையும்
மாறி மாறிப் பார்த்தார்.
அம்மா ,உங்களால் முடியும்னு தான் நினைக்கிறேன் என்றார்.
ஆமாம், ஆமாம் இப்போதான் உடம்பு இளைத்துவிட்டதே.
இதெல்லாம் சும்மா ஊதித் தள்ளிடலாம் என்பது மாதிரி ஒரு பாவனை காட்டிக் கொண்டேன்.
மற்றவர்கள் வண்டியைப் பார்க் செய்து வரட்டும் நாம் முதலில் போகலாம் என்று இறங்கினேன்.
ஒரு ஊஉ என்று காற்று.
ஒரு பளார் மின்னல்.
காலுக்கு கீழே பாறையே நடுக்கம் கண்ட மாதிரி ஒரு இடி.
டிஸ்கவரில இந்த மானெல்லாம், சிறுத்தைக்கு முன்னால் ஓடுமே அந்த வேகத்தில் நான் அந்த முகப்பிற்குள் ஓடி விட்டேன்.
உள்ளே நுழைந்தபின்னால் தான் இந்த ஊரில் கடைப் பிடிக்க வேண்டிய அமைதி,வரிசை எல்லாம்
நினைவுக்கு வந்தது.
காலில் ஷூ,
நெத்தியில் வட்டப் பொட்டு.,
பச்சை சிகப்பு சுடிதார்,
ஒரு பெரிய பழுப்பு ஜாக்கெட்.
அடடா இந்திய அம்மாக்கள் கொடுக்கும் இமேஜ் தான்
என்ன என்ன.
அங்கே வரவேற்பறையில் இருந்தவர்கள் ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் தங்கள் வேலைக்குத் திரும்பினார்காள்.
எனக்கு முன்னாடியே அங்கே இன்னும் இரண்டு அம்மாக்கள் அப்பாக்கள் !
ஒரு பெண் ஒரு மகன்.
அப்பா, அந்த அம்மா முகத்தில் வந்த சிரிப்பைப் பார்க்கணுமே.
அவங்க சேலமாம்.
ஒண்ணு கவனித்துப் பார்த்தால் தெரியும்.
வரும் அப்பாக்கள் ஷூ போட்டுக் கொள்ளுகிறார்கள்/
அம்மாக்கள் செருப்புதான்.
ஏன் அவங்களுக்குக் குளிராதா?:-)
கொஞ்சம் அவங்களுடன் கதைத்துவிட்டு
வெளியில் எட்டிப் பார்த்தால் உறுமல் நின்றிருந்தது.
எல்லோருக்கும் சீட்டு வாங்கினோம்.
ஆளுக்கு 20$ பழுத்தது.
ஒரு ஆச்சரியமான உலகத்துக்குள் போனோம்.
அலெக்ஸ் ஜோர்டன் என்பவர் கட்டிய வீடாம்.
அவர் ஆரம்பித்து வைத்ததை அவரது மகன் முடித்து வைத்து இருக்கிறார்.
ஆயிரத்து தொளாயிரத்து நாற்பதில் ஆரம்பித்து இருக்கீறார்கள்.
அப்போதெல்லாம் இது வெறும் பிக்னிக் ஸ்பாட்டாக இருந்து இருக்கிறது.
இந்த அலெக்ஸுக்கு மட்டும் இங்கே வீடு கட்ட வேனும்னு ஒரு வித வெறியே வந்துவிட்டது.
அதீத ஆசையைத் தான் ஸ்ட்ராங்கா சொல்லிட்டேனோ:-0)
பதிமூன்று அறைகள் அந்த பாறைகள் மேல் கட்ட
பதிமூன்று வருஷம் ஆச்சாம்.
முதலில்,
தானே , தன் உழைப்பில், கற்கள் ,மரம் எல்லாம் முதுகில் சுமந்து போய் சேர்ப்பாராம்.
பணக்காரக் குடும்பம்தான்.
இங்கேதான் எல்லாம் டி ஐ.ஒய் ஆச்சே.
அப்படி ஆரம்பித்து இருப்பார் போல.
இதைப் பார்க்க வரேனு சொல்லரவங்க கிட்ட
50 செண்ட்ஸ் கட்டனம் வாங்குவாராம்.
அவர் ஏற்கனவே 'வில்லா மரியா' என்று பெண்களுக்கான பிரத்தியேகக் கட்டிடம் ,விடுதி
ஒன்று கட்டி இருக்கிறார்.
இரண்டு லெவலில் பார்க்கப் பட வேண்டிய அமைப்பு.
ஒருலெவல் பழைய காலத்துவீடு.
இன்னோண்ணு மியூசியம் மாதிரி உலகத்தில இருக்கிற அதிசயங்களீல் பாதியை செய்து வைத்து இருக்கிறார்.
அறைக்கு அறை ஒரு இசை உலகம். காசுபோட்டால்
ஜாஸ் இசை வெள்ளம்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இருந்த ஃபையர் ப்ளேஸ்.
அடுப்படியில் பெரிய பெரிய அண்டாக்கள்.
எல்லாம் ஒரே பளபளா.
குழந்தைகளுக்குத் தனி உலகம்.50 வருடங்களுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட செல்லுலாய்டு
பொம்மைகள் பெரிய கண்களோடு சர்வ அலங்காரத்தோடு நம்மைப் பார்க்கின்றன.இன்னும் சைன பொம்மைகள், ஜப்பானிலிருந்து தயாரித்த ஓவியங்கள்,
அதுதான் கருப்பு வெள்ளை மட்டும்
வண்ணம்னு சொல்கிற ஒரு விதமான
சோக ஹைகூ மாதிரி இருக்கும்.
அதுவும் அந்த மழை பெய்யும்போது வண்டி இழுக்கும் விவசாயியின் படம் தத்ரூபம்.
மழைபெய்ய,
கால் வழுக்க, பாரம் இழுக்கக்
கஷ்டப்பட்டு வேலையை முடிக்கணும்.
சாமி ! இதுதான் வாழ்க்கையானு
தோன்றிவிடும்.
மிச்சம் டூர் அப்புறம் பார்க்கலாமா?
விதம் விதமான பொம்மைகள்.
ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு இசை.
20 comments:
புதுமையான இடமாய் இருக்கிறது. வர்ணனைகள் சுவாரஸ்யம், கொஞ்சம் பயமுறுத்துகின்றன!
எங்கள் வீட்டில் பாஸிடம் நான் சொல்வது கடுகு சாதம் என்பேன். கடுகில் கொஞ்சம் சாதம் போட்டிருக்கிறாய் என்பேன்!
குடை ராட்டினமா? நானெல்லாம் ஏறவே மாட்டேன். அந்த ஆசையும் வந்ததில்லை எனக்கு.
ஆண்கள் எல்லாம் ஷூ. பெண்கள் செருப்பு.. நல்ல அவதானிப்பு. டி ஐ வொய் என்றால்? வில்லா மரியா... எங்கேயோ கேட்ட பெயர்... தஞ்சையில் ஒரு பள்ளியின் பெயரா?/ இதைய நினைவுக்கு கொண்டு வரமுயல்கிறது நினைவடுக்குகள்.
அன்பின் ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.
நலமுடன் இருங்கள்.
இது ஒரு வித்தியாசமான இடம்.
வலைப்பதிவு ஆரம்பித்து ஒரு வருடம் ஆகி இருந்தது.
காமிராவும் கையுமாகப் படம் எடுப்பது வழக்கம்.
எனக்கு அவ்வளவாக ஈடுபட முடியவில்லை.
புதிதாக இருக்கவே பதிந்தேன் மா.
ஓஹோ உங்கள் வீட்டிலும் கடுகு பிரதானமா:)சரிதான்!!!
ஆமாம் .மெர்ரி கோ ரௌண்ட் தான்.
சின்னதாக இருந்தாலே இனிமையாக
இருக்கும்.
இது ராட்சச வடிவம்.:)
டி ஐ ஒய். DIY do it yourself:)
இங்கே நிறைய இது போலப் பார்க்கலாம்.
நம் சிங்கத்துக்கு மிகப் பிடித்த வேலை.
அப்போதெல்லாம் நான் பார்க்கும் பெண்கள்
செருப்புக் காலுடன் குளிரில் நடுங்கியபடி
வருவதைப் பார்த்திருக்கிறேன்.
முதன் முதலில் இங்கே வரும்போதே
நல்ல ஷூ வாங்கின பிறகே கிளம்பினோம்.
பெற்றோரை இங்கே வரவழைக்கத் தெரிந்த பெண்களுக்கும்
பிள்ளைகளுக்கும் அவர்கள் காலணி சரியாக இருக்க வேண்டுமே என்று
தோன்றுவதில்லை.
இப்பொழுது தேவலை. நன்றி மா.
வில்லா மரியா,அவர் கட்டிய வில்லா.
நம் ஊரிலும் அது போல வீடுகள் பெயரும்
இருக்கலாம்.
படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது தகவல்கள் அருமை அம்மா.
எனக்கு என்னோட செருப்புத் தான் சரியா இருக்கும் சாக்ஸ் போட்டுக்கொண்டு விடுவேன். நல்ல இடம்! ஆனால் கேள்விப் பட்டதில்லை. அதிகமான பயமுறுத்தல்கள். குடை ராட்டினம் போன்றவற்றில் எல்லாம் நான் ஏறவே மாட்டேன். நம்மூர் ஊஞ்சலே தலை சுத்தும். இதிலே இது வேறேயா? கட்டிடங்களை எப்படித் தான் கட்டினாரோ! ஆச்சரியம் தான். இங்கெல்லாம் போனதே இல்லை. (என்னமோ எல்லாவற்றையும் பார்த்துட்டாப்போலத் தான்.)
நம் வீட்டில் கடுகை எண்ணித் தான் போடணும். நம்மவருக்குப் பிடிக்காது. அப்பா வீட்டிலும் அப்படித்தான் ஐந்தாறு கடுகுகள் தான் போடணும். ஆனால் மாமியார் நேர் எதிரிடை! நூறு கிராம் கடுகு ஒரு மாசத்துக்குனு வாங்கினால் மூன்றே நாட்களில் தீர்ந்துவிட்டது என்பார்! :)
அது சரி, நயாகராவை முடிச்சதே தெரியலை. அப்புறமாய் வந்து பார்க்கிறேன்.
அன்பின் தேவ கோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
16 வருடங்களுக்கு முன் ஆர்வமும் தெம்பும் இருந்தது.
இப்போது ஆர்வம் இருக்கும் அளவு
அவ்வளவு பதிவிட முடியவில்லை:)
மிக நன்றி மா.
அன்பின் கீதாமா,
நம்ம வீட்டிலயும் அதே சொல் தான்.
அவருக்கும் ,பெரியவனுக்கும் பிடிக்காது. பல்லில் மாட்டிக் கொள்ளும்
தொந்தரவு காரணம்.
கடுகைத் தாளித்துக் கலக்காமல் இருப்பேன்.
என் கலத்துக்கு மட்டும் கடுகு நிறைய வரும்:)
கடுகு, புளி இவருக்கு அலர்ஜி!!!!!
@GeethaSambasivam,
எனக்கு என்னோட செருப்புத் தான் சரியா இருக்கும் சாக்ஸ் போட்டுக்கொண்டு விடுவேன். நல்ல இடம்! ஆனால் கேள்விப் பட்டதில்லை. அதிகமான பயமுறுத்தல்கள். குடை ராட்டினம் போன்றவற்றில் எல்லாம் நான் ஏறவே மாட்டேன். நம்மூர் ஊஞ்சலே தலை சுத்தும். இதிலே இது வேறேயா? கட்டிடங்களை எப்படித் தான் கட்டினாரோ! ஆச்சரியம் தான். இங்கெல்லாம் போனதே இல்லை. (என்னமோ எல்லாவற்றையும் பார்த்துட்டாப்போலத் தான்.)"
மாப்பிள்ளைக்கும் இவருக்கும் வண்டி ஓட்டப்
பிடிக்கும்.
மாறுதலுக்காக வேற வேற இடங்களுக்குப்
போகலாம் என்று இருவருமாகத் திட்டம் இடுவார்கள்.
இது அடுத்த மாநிலம் என்பதால் ஒரு நாலு மணி நேரப்
பயணத்தில் சென்றோம் மா.
சிரமம் உண்டு தான்.
இந்த இடம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
அவர்களுக்குப் பிடித்தது:)))
சாக்ஸ் போட்டுக் கொண்டாலாவது தேவலை.
இப்போது நிறைய மாறி விட்டதுமா.
நயாகராவை முடிக்க வில்லை.
பழைய படங்களைத் தேடி எடுக்கணும் அம்மா.
சட்டென்று ஜுரம் வந்ததில் மறந்து விட்டேன்.
வித்தியாசமான புதிய இடம்.
அன்பு மாதேவி.
என்றும் நலம் பெறுக.
அதுதான் உண்மை. எல்லா இடங்களும் இயற்கையின் வனப்புடன் அழகாக இருக்கும் .
இந்த இடம் புதுமையாக இருந்தது.
படங்களும் நீங்கள் சென்ற இடம் பற்றிய விவரங்களும் அருமை. அந்த வீட்டைக் கட்டியவர் சுவாரசியமான மனிதர் போலும்!
துளசிதரன்
அம்மா படங்கள் வாவ்! என்ன அழகாக எடுத்திருக்கீங்க! உங்களுக்கா எடுக்க வரவில்லை என்று சொல்லிக் கொள்வது? ரொம்பத்தான் தன்னடக்கம் போங்க!
அந்த பொம்மைகள் இருக்கும் படம் எல்லாம் அழகு.
அருமையாக மலை மீது கட்டியிருக்கிறார் இடம் என்னவோ அழகாக இருக்கிறது. கடின உழைப்பும் தெரிகிறது. பரவாயில்லை போய் வர ஒரு பொழுது போக்கு ஒரு அவுட்ட்டிங்க் என்று எடுத்துக் கொள்ளலாம். சுற்றிலும் பசுமை அது ஈர்க்கிறது.
கீதா
இனிமையான பயணம், அதை சொன்னவிதம் அருமை.
வித விதமான பொம்மைகள் பார்க்க அழகு.
ஒவ்வொரு பகுதியிலும் இசை அற்புதம்.
குளிர் காலத்தில், மலையேற ஷூ அவசியம் தேவை படுகிறதே!
Post a Comment