Blog Archive

Friday, March 18, 2022

வட்டத்துக்குள் வட்டம்........




வல்லிசிம்ஹன்

அனைரும் நலமுடன் இருக்க வேண்டும்.

தோழியின் திருமண நாள் மார்ச் 18. 
50  ஆண்டுகள் ஆகின்றன.  

சுதா  மற்றும் அவளின் இனிய கணவர்  மஹாதேவனுக்கும்
எங்களின் வாழ்த்துகள்.
வரும் நல் எதிர்காலத்தில் அவர்கள் மேலும் 
நல் ஆரோக்கியமும்,மகிழ்ச்சியும், ஆரோக்கியமும்
பெற்று  நிறை வாழ்வு வாழ வேண்டும்.







   அவளும் நானும் திருச்சியில் பார்த்த படங்கள் சில.

ஆங்கிலப் படம் இரண்டு, இந்திப் படம் இரண்டு.
பாலக்காட்டைச் சேர்ந்த தம்பதியர் இருவரும்.

ஏன் பிரிந்தோம் , பிறகு ஏன் சந்திக்க முடியவில்லை
என்பதும் தெரியவில்லை,.

ஆனால் ஒவ்வொரு மார்ச் பதினெட்டும் 
அவள் நினைவு வராமல் இருப்பதில்லை.:)
பார்த்த படங்களை விட, வானொலியில் சேர்ந்து கேட்ட 
பாடல்களே அதிகம்.
அவற்றில் சில இங்கே .

   அன்பின் சுதாவுக்கும் அவள் கணவருக்கும் மீண்டும் 
வாழ்த்துகள் சொல்கிறேன்.

12 comments:

ஸ்ரீராம். said...

திருமதி சுதாவுக்கும் மஹாதேவன் அவர்களுக்கும் நமஸ்காரங்கள்.  இந்திய திருமண நாள் வாழ்த்துகள்.  தேர்ந்தெடுத்த அருமையான பாடல்களால் வாழ்த்து சொல்லி இருப்பது சிறப்பு.

ஸ்ரீராம். said...

'இனிய' என்று படிக்கவும்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம்
நலமுடன்்இருங்கள் மா.

திருச்சியில் நாங்கள் மயங்குகிறாள் ஒரு மாது படமும் சூரிய காந்தி படமும்,ஜவானி திவானி படமும்
பார்த்தோம். மற்றவை எல்லாம் வீட்டு மாடியில் உட்காரந்து வானொலியில் கேட்டது:)

மிக நன்றி மா. அவர்கள் மும்பைக்குத் மாற்றிப் போனார்கள். நலமுடன் இருக்கட்டும்.

Geetha Sambasivam said...

இத்தனை வருஷங்களாக நினைவு வைச்சிருக்கீங்களே! ஆச்சரியம் தான்! உங்கள் தோழிக்கும் அவர் கணவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள். பாடல்களை மத்தியானமாக் கேட்டுக்கறேன்.

கோமதி அரசு said...


தோழியின் திருமண நாள் மார்ச் 18.
50 ஆண்டுகள் ஆகின்றன. //

அவர்களுக்கு வாழ்த்துகளும், வணக்கங்களும்.

இந்த பாடல்கள் எல்லாம் கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது. வானொலியில் முன்பு வைப்பார்கள்.
முதல் பாடல் அடிக்கடி கேட்போம்.

படம் பார்த்தேன் இந்த பாட்டுக்காக தொலைக்காட்சியில் ஓரே சோகம்.

இந்தி பாடல்களும் மிக அருமை.
எல்லா பாடல்களும் நல்ல தேர்வு.

இனிமையான நினைவுகள். உங்கள் வாழ்த்து அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் தோழிக்கும் அவர் கணவருக்கும் எங்கள் வாழ்த்துகளும் அம்மா.

நீங்கள் இருவரும் சேர்ந்த்து படம் பார்த்தது, பாடல்கள் கேட்டது ஆஹா நல்ல இனிமையான நினைவுகள். ஆமாம் அம்மா அப்புறம் சந்திக்க முடியாமல் ஆகிவிடுகிறது. கல்லூரிக்குப் பிறகு ஒவ்வொருவரின் வாழ்வும் ஒவ்வொரு மாதிரி ஆகிவிடுகிறது.

இப்போது பழைய தோழிகளை, நட்புகளைக் கண்டுபிடித்து வாட்சப் குழு கூடத் தொடங்குவதுண்டே. அப்ப்டியும் கண்டு பிடிக்க முடியவில்லையோ..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பாடல்கள் அருமை. அதுவும் நீங்கள் இருவரும் சேர்ந்த்து கேட்ட பார்த்தவற்றைப்பகிர்ந்து வாழ்த்தியிருப்பது அருமை. அவர்கள் பார்க்க வழி உண்டா?

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
திருச்சி மன்னார்புரத்தில் ,
ஒரு உயர்னிலைப் பள்ளியின் ஆசிரியருக்குச்
சொந்தமான வீட்டில் குடி இருந்தோம்.
அவர் மகள்தான் இந்த சுதா.
என் வயதே என்றாலும் நாங்கள் அங்கே
போன பிறகே திருமணம் ஆனது.
அதன் பிறகு அவளுக்கு விசா கிடைக்கும் வரை

இரண்டு வருடங்கள் இருந்தாள்.
அப்பொழுது பார்த்த, கேட்ட பாடல்கள்
இவை.
சகோதரிகள் கல்லூரிக்குப் போய் விடுவார்கள்.
அவள் எங்கள் வீட்டோடு இருப்பாள்.
எப்படி மறக்க முடியும்:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
இளமை வயது தோழமை.
இந்தப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம்
அவளை நினைப்பேன்.

இதோ இதோ ' பாடலை நம்பி நானும் ஏமாந்து போனேன்.:)

ஆனால் படம் பிடித்த இடங்கள் நன்றாக
இருக்கும்.
நமக்கு வானொலி செய்த நன்மை போல இனிக்
கிடையாது. ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்புடன்
செல்லும். இரவில் தூக்கம் வரும் வரை கேட்போம்.
நல்ல நினைவுகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன்,
நலமுடன் இருங்கள்.
ஆமாம் இப்போது எத்தனையோ
வழிமுறைகள் வந்திருக்கின்றன.
என் கல்லூரிப் பள்ளித் தோழிகளைக் கண்டுபிடித்திருக்கிறேன்.
இவள் எங்கள் திருமணத்துக்குப் பிறகு
சந்தித்துப் பிரிந்தவள்.

கணவருடன் அமெரிக்கா வந்தவளைப் பிறகு
காணவில்லை.
இப்போது திருச்சியில் எங்களுக்குத் தெரிந்த ஒருவரின்
அறிமுகம் கிடைத்தது.
அவர்கள் வழியே அவர்கள் மும்பைக்குத் திரும்பி விட்டதாகத்
தெரிந்தது.
அவ்வளவுதான். என்ன என்று தேடுவது:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

இல்லைமா கீதா,
அவள் தங்கை ஜெனிவாவில்
இருப்பதாகத் தெரிந்து அங்கூ நேம் சர்ச்
போட்டுப் பார்த்தேன்.
ம்ஹூம் கிடைக்கவில்லை.

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் தோழமைக்கு திருமண நாள் நல்வாழ்த்துகள். பாடல்களை பிறகு தான் கேட்க வேண்டும்.