ஏற்கனவே இந்தப் பாடலையும் , அந்தக் காட்சிக்காகத் தான்
எடுத்துக் கொண்ட முயற்சியையும்
திருமதி .ஜானகி சொல்லி இருக்கிறார்.
அந்த பேட்டியும் மிக சுவாரஸ்யமானது தான்.
நேரில் அவரை தி நகரில் பார்த்த போது,
இந்த ஐந்தடி உருவமா அந்த ''இரு கோடுகளி''ல்
அவ்வளவு பிரமிப்பை ஏற்படுத்தியது
என்று சொல்லி இருக்கிறேன்.
பனகல் பார்க் காய்கறிக் கடைக்காரர்களுக்கு
எல்லா நடிகைகளையும் பார்த்து
பழக்கம் போலிருக்கிறது.
அவரவர் அவர்களின் வியாபாரத்தில்
கண்ணாயிருந்தார்கள்.:)
என்றும் வளமுடன் இருக்கட்டும் இந்த 91 வயது மங்கை.
13 comments:
நேற்று எதிர்பாராமல் ஒரு விடுப்பு வாய்த்தது. மூன்று படங்கள் பார்த்தேன்!!! ஒன்று தெலுங்கு. நானி நடித்த 'யார் அந்த மணி' என்று தமிழில் நாமகரணம் செய்யப்பட சுவாரஸ்யமான படம். 2019 ல் வெளிவந்திருக்கிறது. அதில் சௌகார் ஒரு மிகச்சிறு வேடத்தில் நடித்திருந்தார். ஆக, நேற்றுதான் சௌகாரை மறுபடி திரையில் பார்த்திருந்தேன். இன்று உங்கள் கட்டுரை!
அன்பின் ஸ்ரீராம்,
அட. இதுதான் ஒரே மாதிரி இரண்டு இடங்களில் நடப்பது.:)
சாவித்திரியையும் இவரையும் ரொம்பப் பிடிக்கும்.
எங்க நாத்தனார் இவரை மாதிரியே கட்ட திட்டமாகப்
பேசுவார்.
நன்றி மா.
நானி நடித்த யார் அந்த மணியா? சரி தேடிப் பார்க்கிறேன்.
நன்றி மா.
சௌகாரின் நகைச்சுவை நடிப்பு ரொம்பப் பிடிக்கும். அவரோட நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.ஹிஹிஹி, "நானி" யாருனே தெரியாது. அப்புறமாத் தானே படத்தைப் பத்தித் தெரியறதுக்கு! அது என்னமோ திரைப்படங்கள் பார்க்க இங்கே மனசே ஈடுபடுவதில்லை. அதே யு.எஸ்ஸில் என்றால் அநேகமாக ஒன்றிரண்டு படங்கள் ஒரு நாளைக்குனு பார்க்க முடிகிறது. :)))))
நல்லதொரு நடிகை. இவரது சில காணொளிகள் பார்த்திருக்கிறேன். இன்றைய பதிவில் வெளியிட்ட பாடல்களை ஒவ்வொன்றாய் பார்க்க வேண்டும்.
பனகல் பார்க் மார்க்கெட் ஸ்டார் மார்க்கெட் நுதானே சொல்வார்கள். விலையும் கூடுதலாக இருக்கும். ஆனால் எல்லா வகையும் கிடைக்கும். சாதாரண மார்க்கெட்டுகளில் கிடைக்காதவை கிடைக்கும்.
கீதா
சௌகார் ஜானகி அம்மவின் அந்த கம்பீரம் வாவ்!!! எனக்கு ரொம்ப பிடித்த விஷயம். சுயமரியாதை பளிச்சுனு தெரியும்.
ஆமாம் குட்டைதான் ஆனால் அதில் என்ன ஒரு கம்பீரம்...
கீதா
அவங்க பேச்சு ஷார்ப் அண்ட் ஷார்ட். செமையா இருக்கும். கட் அண்ட் ரைட் வெளிப்படை
கீதா
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
கௌரவமாக நடிப்பவர்களில் இவரை மிகவும்
ரசிக்க முடியும்.'
ஆரம்ப காலத்தில் அழுகை வேடங்கள்
கொடுத்து இவரது பன்முக நடிப்பை
இழக்க வைத்து விட்டார்கள்.நல்ல வேளை பாலச்சந்தர்
மீட்டார்.:)
எதிர் நீச்சலும் ,பாமா விஜயமும் எப்பொழுதுமே பிடிக்கும்.
உங்களுக்கும் பிடிக்கும் என்பதே மகிழ்ச்சி.
நானி முன்பு நான் ஈ என்ற படத்தில் நடித்தாரோ.
எனக்கும் தெரியாது.
அன்பின் வெங்கட்,
நலமுடன் இருங்கள்.
அவருக்கு அமைந்த பாடல்களில் சிறப்பானது
பார்த்த ஞாபகமும், அடுத்தாத்து அம்புஜமும்.
எல்லாவற்றையும் நினைவில் கொண்டு இந்த வயதில்
கம்பீரமாகப்
பேசுகிறார். அதுதான் பிடித்தது.
நன்றிமா.
அன்பின் கீதா ரங்கன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
''சௌகார் ஜானகி அம்மவின் அந்த கம்பீரம் வாவ்!!! எனக்கு ரொம்ப பிடித்த விஷயம். சுயமரியாதை பளிச்சுனு தெரியும்.
ஆமாம் குட்டைதான் ஆனால் அதில் என்ன ஒரு கம்பீரம்..''
ஆமாம் வாழ்க்கையில் மிகக் கஷ்டப்பட்டவர்.
நல்ல வேளை உச்சாணிக் கொம்பில் ஏறாமல்
சாதாரணமாக இருக்கிறவர்.
ஆமாம் மா,
பனகல் பார்க்கில் நான் முக்கால் வாசி பட்டர் பீன்ஸ் வாங்கப் போவேன்.
பெங்களூர்க் காய்கறிகளும் அங்கே கிடைக்கும்.
நன்றி கீதாமா.
செளகார் ஜானகி படங்கள் பிடிக்கும் அவரையும் பிடிக்கும்.
அவர் பொம்மையில் தொடர் எழுதி படித்து இருக்கிறேன். விகடனில் அவரின் சமையல், அழகு குறிப்புகள் வரும்.
தைரியமும், திறமையும் நிறைந்தவர்.
பகிர்ந்த அனைத்தும் அருமை.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
எந்த வகையிலும் தன் சுய நம்பிக்கையைக் கைவிடாமல் இருக்கிறார்.
வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களைச் சந்தித்தும்
திடமாக இருப்பது நமக்கு நல்ல பாடம்.
உங்களுக்கும் அவரைப் பிடித்திருப்பது மிக மிக மகிழ்ச்சி மா.
Post a Comment