வாழ்வின் மொத்த நாட்களில் ஒரு நாள்
மிக முக்கியமாக அமைகிறது.
அதன் சிறப்பை உடனே புரிந்து கொள்ள
கொஞ்சம் முதிர்ச்சி வேண்டும்.
திருமணங்கள் பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டாலும்
அதை முறைப்படி நடத்திச் செல்லும் அவசியம் தம்பதிகளுக்கே
அமைகிறது.
சரியாகப் புரிதல் நிகழும் ஒரு நாள்
வாழ்வின் சிறந்த நாள்.
அதுவரை மோகம், காதல் என்று என்ன சொல்கிறோமோ
அது நிலைக்க வேண்டும்.
மணத்துக்கு முன் வரும் காதலும், பின் வரும் காதலும்
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதிலும்
இணைந்து சிந்திப்பதிலும் தெரியும்.
அனைவருக்கும் தோழமை அவசியம்.
யானைக் காதல் என்று தி.ஜானகிராமன் சொல்வார்.
அதுபோல மணவாழ்வு அமைந்தால் சொர்க்கமே.
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
அன்பின் கோமதி அரசுவின் திருமண நாள்
ஃபெப்ரவரி ஏழாம் தேதி.
மனம் நிறைய இனிய நினைவுகளுடன்
ஸாரின் அன்புடனும்
நல் ஆரோக்கிய வாழ்வு அமைய வேண்டும்.
சுற்றம், குடும்பம் என்று
எல்லோரும் கோமதியின் மீது பரிவுடன் இருப்பதற்கு
அவரின் ஆழ்ந்த புரிதலே காரணம்.
வாழ்க வளமுடன்.
எழுதி வெளியிட்டப் பதிவுகளுக்குப்
பதில் அளிக்கத் தாமதமாகிறது.
இடைவிடா தலைவலி. வீட்டைச் சுற்றி இருக்கும் பனி
சுவர்களில் ஊடுருவி,
தலையில் இறங்குகிறது.
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
என்று பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
26 comments:
மாலை சூடும் மணநாள் பாடல் கூட பொருத்தமாயிருக்கும். ஒருநாள் பாடல்கள் யாவும் சிறப்பு. 'அன்புமனம் கனிந்தபின்னே' நீங்கள் பாடி அனுப்பியது நினைவுக்கு வருகிறது. கோமதி அக்காவின் திருமண நாளா? வணக்கங்களுடன் வாழ்த்துகிறேன்.
தலைவலியா? இடைவிடாமலா? ஏன் அம்மா? கண் பிரச்னையா? இல்லை வேறு ஏதாவதா?
அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
மாலை சூடும் மண நாள் ஏற்கனவே பதிவிட்டு விட்டேன் மா.
அவரைக்காய் பதிவுக்கு முன் பதிவு
எங்கள் மண நாளுக்கான பதிவு.
அன்பின் கோமதிக்கு 7 ஆம் தேதி மண நாள்.
பாடல்கள் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சிமா.
வீட்டைச் சூழ்ந்திருக்கும் பனி கூரையில் இறங்குவதால்
மாடியில் கீழே படுத்திருக்கும் எனக்கும்
தலையில் இறங்கி விடுகிறது.
அதனால் தான் இந்த தலைவலி.
ஒரு நாளைக்கு 3 ஆட்வில் எடுத்துக் கொள்கிறேன்.
என்ன செய்யறது.
நன்றி மா.
மற்றவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை.
ரேவதி, உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள். உங்கள் படுக்கை அறையைக் கீழே மாற்ற முடியாதா? எங்க பெண் வீட்டில் நாங்க கீழே உள்ள அறையில் தான் படுப்போம். கவனமாக இருக்கவும்.
கோமதி அரசுக்கும் உங்களுக்கும் திருமண நாள் வாழ்த்துகள்.
பாடல்கள் அனைத்தும் அடிக்கடி கேட்டு ரசித்தவை.
அன்பு கீதா மா.
நன்றி மா.கீழே குளிர் இன்னும் ஜாஸ்தி.மேலும் என்னைத் தனியே விட அவளுக்கு பயம். தலையில் குல்லா போட்டு கொள்ளணும் மா. கவனமா இருக்கேன்.மா.கவலை வேண்டாம்.
வணக்கம் சகோதரி
பதிவு அருமையாக உள்ளது. பகிர்ந்த ஒரு நாள் பாடல்களும் அருமையாக உள்ளது. மேஜர் சந்திரகாந்த் படப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. அன்பு மனம் கனிந்த பின்னே பாடல் ஜெமினி கணேசன் என நினைத்திருந்தேன். இன்றுதான் சத்தியன், எல். விஜயலட்சுமி நடித்தது எனத் தெரிந்தது.
நாளை திருமணநாள் காணும் சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு மனம் நிறைந்த திருமணநாள் வாழ்த்துகள்.
தற்சமயம் உங்கள் தலைவலி எப்படி உள்ளது? கொஞ்சம் குணமாகியுள்ளதா? உங்கள் உடல் நலத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். பின்னூட்டத்திற்கு முடிந்த போது பதில் தாருங்கள்.அவசரமேயில்லை. பதிவின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வல்லிம்மா உடல்நலன் தான் மிக முக்கியம். பதில்கள் தாமதமானால் என்ன? உங்கள் ஊரில் குளிரும் கூடுதலாக இருக்குமே. கவனமாக இருங்கள்.
பதிவின் கருத்து மிக அருமை. புரிதல் இருந்தால் மண வாழ்வு அருமைதான்.
சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு மணநாள் வணக்கங்கள்.
துளசிதரன்
அம்மா என்னம்மா தலைவலியா..குளிரினால்? வீட்டுக்குள் சரியான வெப்ப நிலை வைத்துக் கொள்ளலாம் இல்லையா? ஸ்னோ என்பதால் அதையும் தாண்டிக் குளிர் வருதோ உள்ளே?
கீதா
தோழமை என்று பதிவில் சொல்லியிருப்பதை அப்படியே டிட்டோ செய்கிறேன் அம்மா
பாடல்கள் வில்லன் பாட்டு தவிர மற்றதெல்லாம் கேட்டிருக்கிறேன் நல்ல பாடல்கள்
கீதா
மணவாழ்வுக்கு அவசியமான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி அம்மா.
இப்போது கட்டும் வீடுகளில் முழு வீட்டிற்கும் A/C, room heater வசதிகள் செய்யப்படுகின்றன.
இல்லாத பட்சத்தில் A/C, room heater பொருத்திக்கொள்ளலாம். அமேசானில் portable heater வாங்கிக்கோங்க. நான் உபயோகித்திருக்கிறேன். சிறியதாக எல்லா இடத்திற்கும் எடுத்து செல்லலாம்.
வைஷ்ணவி
அன்பின் வைஷ்ணவி நன்றி மா.
இங்கே எல்லாமே செண்டிரல் தான்.
ஹீட்டர் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும்.
78 டிகிரீ.
அந்த உஷ்ணத்தாலும் , மேலிருந்து வரும் சில்லிப்பினாலும் இந்த
தலைவலி.
இரண்டு விதத்திலும் ரத்த நாளங்கள் சுருங்குவதால்
வரும் பிரச்சினை.
வறட்சி, தொண்டை கமறல், தோல் சுருக்கம் எல்லாம் தான்.
பர்சனல் ஹீட்டர் will dry you more.
This chill will be here for 6 more weeks. Then its gone. Chicago is especially windy.
thank you.
//மனம் நிறைய இனிய நினைவுகளுடன்
ஸாரின் அன்புடனும்
நல் ஆரோக்கிய வாழ்வு அமைய வேண்டும்.
சுற்றம், குடும்பம் என்று
எல்லோரும் கோமதியின் மீது பரிவுடன் இருப்பதற்கு
அவரின் ஆழ்ந்த புரிதலே காரணம்.
வாழ்க வளமுடன்.//
அக்கா மீண்டும் நன்றி சொல்கிறேன். உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு .
என் புரிதலை விட அவர்கள் எல்லோரும் என்னை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். என் மனநிலை, மாறும் போது அதை மகிழ்ச்சியாக மாற்ற வழி தேடுகிறார்கள். இறைவனுக்கு நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.
யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என் மனஉளைச்சலில் என்று இறைவனை வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.
என் கணவர் என்னை குழந்தையை போல் பார்த்து கொண்டார்கள். வளர்ந்த குழந்தை என்று கிண்டல் செய்வார்கள்.
அது போல பிள்ளைகளும் சொல்கிறார்கள்.
என் மாமா பேரனுக்கு சென்னையில் இன்று திருமணம் நேரடியாக காணும் வசதி செய்து இருந்தார்கள். நேற்று மாப்பிள்ளை அழைப்பு வரவேற்பு. இன்று திருமணம் அதில் கலந்து கொண்டேன். உறவினர் அனைவரும் நானும், அவர்களும் இல்லாமல் நடக்கிறது திருமணம் என்று பேசி கொண்டு இருந்தார்கள்.
பழைய நினைவுகளை பேசி கொண்டு இருந்தார்கள்.
எனக்கும் இரண்டு நாட்களாய் தலைவலி.
பாடல்கள் எல்லாம் மிக அருமையான பாடல்கள்.
கேட்டு மகிழ்ந்தேன்.
அன்பு மனம் கனிந்த பின்னே நீங்கள் பாடி கேட்டது மீண்டும் அதை ஒரு நாள் பதிவு செய்யுங்கள்.
உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள். எனக்கும் குளிரில் தலைவலி, முதுகுவலி தொந்திரவு இருந்தது ஊரில்.
எனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.
உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் அம்மா. பாடல்களை ஒவ்வொன்றாக கேட்கிறேன். திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன்.
''என் புரிதலை விட அவர்கள் எல்லோரும் என்னை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். என் மனநிலை, மாறும் போது அதை மகிழ்ச்சியாக மாற்ற வழி தேடுகிறார்கள். இறைவனுக்கு நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.''
நம் குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல்
நாம் எங்கே?
பாசம் இன்னும் மிச்சம் மீதி இருப்பதால் தான்
நாம் வாழ முடிகிறது.
மதுரைக்கு நீங்கள் திரும்பியது மிக மிக நன்மை.
சகோதர சகோதரிகளும், கணவர் குடும்பமும்
நம் வாழ்வின் மைல்கற்கள்.
அவர்களின் ஆதரவும்,கனிவும் உங்களுடன் எப்போதும் இருக்க வேண்டும்.
அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
எனக்கு இந்தக் குளிர்காலம் கொஞ்சம் சோதனையாக இருக்கிறது.
எச்சரிக்கையுடன் தான் இருக்கிறேன்.''
வல்லிம்மா உடல்நலன் தான் மிக முக்கியம். பதில்கள் தாமதமானால் என்ன? உங்கள் ஊரில் குளிரும் கூடுதலாக இருக்குமே. கவனமாக இருங்கள்.''
நன்றி மா.
கவந்த்துடன் இருக்கிறேன்.
அன்பின் கமலாமா,
அன்பான மொழிக்கு மிக நன்றி.
''பதிவு அருமையாக உள்ளது. பகிர்ந்த ஒரு நாள் பாடல்களும் அருமையாக உள்ளது. மேஜர் சந்திரகாந்த் படப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. அன்பு மனம் கனிந்த பின்னே பாடல் ஜெமினி கணேசன் என நினைத்திருந்தேன். இன்றுதான் சத்தியன், எல். விஜயலட்சுமி நடித்தது எனத் தெரிந்தது''
இந்த இரண்டு பாடல்களும் என்றுமே மறக்க முடியாதது.
என் கணவருக்கும் மிகப் பிடித்த பாடல்கள் இவை எல்லாம்.
உங்களுக்கும் அவை இனித்திருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி.
அன்பின் கீதா ரங்கன் மா,
இந்தக் குளிர் மிகவும் படுத்துகிறது.
ஸ்னோ உருகி விட்டால் கவலை இல்லை. மலை மலையாகக்
குவிந்திருப்பதே தொல்லை.
சுவரெல்லாம் சில்லிட்டிருக்கிறது.
போன வருடம் இதே நேரம் குல்லா க்ளௌஸ் எல்லாம்
போட்டிருக்கிறேன்.
அதனால் நான் தான் கவனமாக இருக்க வேண்டியது தான்.
மிக நன்றி மா.
''தோழமை என்று பதிவில் சொல்லியிருப்பதை அப்படியே டிட்டோ செய்கிறேன்''
உண்மைதான். நட்பு இல்லாத உலகம் இருட்டானது.
அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.
''மணவாழ்வுக்கு அவசியமான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி அம்மா.''
அன்பும் பண்பும் ,மரியாதையும் இருந்தால் மண வாழ்க்கை
இனிமையுறும்.
அன்பின் கோமதி மா, வாழ்க வளமுடன்,
''எனக்கும் இரண்டு நாட்களாய் தலைவலி.
பாடல்கள் எல்லாம் மிக அருமையான பாடல்கள்.
கேட்டு மகிழ்ந்தேன்.
அன்பு மனம் கனிந்த பின்னே நீங்கள் பாடி கேட்டது மீண்டும் அதை ஒரு நாள் பதிவு செய்யுங்கள்."
பயிற்சி எடுக்க வேண்டும் தங்கச்சி.
பாடிப் பார்க்கிறேன் அம்மா. நினைவு கூர்ந்ததற்கு
மிக நன்றி.
நீங்களும் உடல் நலத்தில் கவனமாய் இருங்கள்.
அன்பின் வெங்கட்,
நீங்களும் நலமுடன் இருங்கள்
மெதுவாகக் கணினியின் பிடிப்பில் இருந்து விலக வேண்டும்.
வைத்தியரிடம் போனால் இப்படித்தான் சொல்வார்:)
அனைவரும் நலமுடன் இருக்க இறைவன் அருளட்டும்.
கோமதி அரசு அவர்களுக்கு வாழ்த்துகள்.
நன்றி மா. அன்பின் கோமதிக்கு வாழ்த்துகள்
சேரும். அன்பின் மாதேவி.
Post a Comment