Blog Archive

Tuesday, February 15, 2022

நடிகர் திலகம் சிவாஜியின் சில தனிப்பாடல்கள்







 வல்லிசிம்ஹன்,
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

60 களில் வெளியான  நடிகர் திலகம்
படங்கள் அனைத்தையுமே பார்த்திருப்போம் என்று நினைக்கிறேன்.

குடும்பமாகவோ ,நானும் அம்மா மட்டுமோ,
நானும் தோழிகள்  கூட்டமோ 
பார்த்துவிடுவோம். 60 பைசா  டிக்கெட்டில்,
அப்பா,அத்தை வந்தால் 2 ரூபாய் டிக்கெட்டில்
நல்ல மகிழ்ச்சியுடன் பார்ப்போம்.

தம்பி சிவாஜி அவர்களின் நடிப்பை 
அங்குலம் அங்குலமாக ரசிப்பான்:)
அவனுக்காக சிவாஜி ஸாரின் தனிப் 
பாடல்கள்.

இருவர் உள்ளம் படம் வந்த போது இரண்டாவது மாமாவுக்குத் திருமணம்
ஆகி இருந்தது. அவர் மனைவிக்கு என் மேல் அவ்வளவு பாசம்.
புத்மணத்தம்பதிகளாக அவர்கள் செல்லும் எல்லா
இடத்துக்கும் என்னையும் அழைத்துச் செல்வார்கள்.
விடாது அரட்டை அடித்து அவர்களுக்கு ஒரு
இணைப்புக் கொடுத்தேன் என்று நினைக்கிறேன்.:)
ஷாந்தி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு,
அன்று பௌர்ணமி என்று மெரினாவக்கும் போனோம்.
நான் அவர்களைவிட்டு தனியே கடலையும் நிலவையும்

நிலவின் ஒளிக் கிரணங்கள் கடலை நிறைப்பதை,

அந்த அழகில் மூழ்கியபடி  கரையில் உட்கார்ந்திருந்தேன்.
அது போல ஒரு இனிமையான தனிமை   பின்னாட்களில்

கிடைக்கவில்லை.:)














இத்தனை பாடல்கள் போதாது தான்.பின்னும்  ஒரு தடவைப் பார்க்கலாம். 
நடிகர் திலகம் என்றும் நம்முடன்.

  ஃபெப்ருவரி 15 மண நாள் காணும் மகளும்
அவள் குடும்பமும் மணம் சிறக்க , மனம் இனிக்க
நீடூழி வாழ வேண்டும்.






27 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தங்கள் மகள்,மருமகனுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள். வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வளமுடன் சீரும் சிறப்புமாக வாழ வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

சிவாஜியின் நடிப்புக்கு கேட்கவா வேண்டும்.? அவர் நடித்த எல்லா படத்தின் பாடல்களும் அன்றைய தினத்தில் பிரலமானதுதானே..! காட்சிகளுக்கு ஒன்றிய முக பாவங்களை தருவதில் அவர்க்கு நிகர் அவரே. பகிர்ந்த பாடல்கள் அத்தனையும் அருமை. முதல் பாடல் கேட்டேன். பாக்கியையும் பிறகு கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நலம் பெறுங்கள் அம்மா
ஓய்வு எடுக்க வேண்டிய நேரத்தில் நீங்கள்

இங்கே வந்து படித்து கருத்தும் எழுதியது
நல்லதுதான். இருந்தாலும்
குணமாகி வரும்போது உடல் சுகம் பேண வேண்டும் இல்லையாமா.
ஸாரி ,என்னை உங்கள் தமக்கையாக
நினைத்துக் கொள்ளுங்கள்.

ஆமாம் பா .சிவாஜிக்கு நிகர் வேறு யாரும் கிடையாது.

நானே நிறைய பாடல்களைப் பதிந்து விட்டேன்:)

மகளிடம் உங்கள் வாழ்த்துகளைச் சொல்கிறேன் மா.
மனம் நிறை நன்றி மா. நலமுடன் இருங்கள்.

நெல்லைத்தமிழன் said...

தங்கள் மகள் மருமகன் மற்றும் குடும்பம், பெரியோர்களின் ஆசியாலும் எம்பெருமான் அருளாலும் மகிழ்ச்சியோடு வாழட்டும்.

சிவாஜி போன்ற சகாப்தத்துக்கு நீங்கள் எத்தனை பாடல்கள் பகிர்ந்தாலும் இன்னும் நிறைய விட்டுப்போனதுபோலத்தான் தோன்றும்.

Geetha Sambasivam said...

உங்கள் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள். அநேகமாக இது இருபத்தைந்தாம் திருமண நாள் இல்லையா? எங்க பெண்ணிற்கும் இந்த வருஷம் 25 ஆவது வருஷம். உங்கள் மகள், மாப்பிள்ளைக்கு எங்கள் வாழ்த்துகளையும் ஆசிகளையும் சொல்லிவிடுங்கள். ஜிவாஜி படங்கள் பிடிக்காதுனாலும் நானும் அநேகப் படங்கள் பார்த்திருக்கேன். 70களுக்குப் பின்னர் வந்த படங்களில் கௌரவம், ராஜராஜசோழன் மட்டும் பார்த்த நினைவு. மற்றப் படங்கள் பார்த்ததில்லை. நல்லதொரு நினைவலைகளுடன் கூடிய பதிவுக்கு வாழ்த்துகள்/பாராட்டுகள்.

ஸ்ரீராம். said...

கண்ணெதிரே தோன்றினாள் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.  அது மட்டுமா, பகிர்ந்திருக்கும் எல்லா சிவாஜி பாடல்களும்தான்.  ஏதாவது ஒரு பாடல் வேண்டாம் என்று சொன்னால் அது எங்கள் கல்யாணம் பாடல்!

உங்கள் மகளுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

​//அது போல ஒரு இனிமையான தனிமை பின்னாட்களில் கிடைக்கவில்லை.:)/

ஆம்.. எல்லோருக்கும் இது மாதிரி ஒரு சிறப்பு நிகழ்வு அவரவர் வாழ்வில் இருக்கும். எனக்கும் உண்டு!

ஸ்ரீராம். said...

கமலா அக்கா..  உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.  உங்கள் பேத்திக்கு உடம்பு குணமாக எங்கள் பிரார்த்தனைகள்.  ஆனால் நீங்கள் ஒரு டைவெர்ஷனுக்குதான் வலைப்பக்கம் வந்திருக்கிறீர்கள் என்றும் தெரிகிறது.  ஓய்வெடுங்கள்.

Kamala Hariharan said...

வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

ஆமாம்.. நீங்கள் கூறுவது போல், ஒரு மனமாறுதலுக்காகத்தான் கடந்த ஒரு வார காலமாக பதிவுகளுக்கு விடாமல், என்னால் இயன்ற வரை வருகிறேன். மேலும் உங்கள் அனைவரின் அன்பான விசாரிப்புகளும், பிரார்த்தனைகளும் மன ஆறுதலை தருகிறது சீக்கிரம் என் பேத்திக்கு குணமாகி, அவள் பழையபடி சுறுசுறுப்பாக ஆக வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் அன்பான பிரார்த்தனைகளை அவள் பெறுகிறாள் என்பதே எனக்கு ஒரு ஆறுதல். மிக்க நன்றி.

அன்புடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharan said...

வணக்கம் வல்லி சிம்ஹன் சகோதரி.

எனக்கு நேற்றை விட இப்போது பரவாயில்லை. நாளை பேத்திக்கும் ஜுரம் இறங்கி விடுமென நம்புகிறேன். உங்கள் அன்பான ஆறுதலை தரும் பேச்சிற்கும், பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.உங்கள் அனைவரின் பிரார்த்தனைகள் எங்களை முற்றிலும் குணமாக்கி விடுமென்ற நம்பிக்கை உள்ளது. ஆனால்,இப்போது உங்கள் அனைவரையும் கலக்கப்டுத்தி விட்டேனோ என்ற கவலையும் சற்று கூடவே வருகிறது. உங்களனைவரின் பிரார்த்தனைகளில் கூடிய விரைவில் பேத்தியும் நலமடைந்து விடுவாள். உங்கள் அனைவரின் நட்புக்கும், அன்புக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

அன்புடன்
கமலா ஹரிஹரன்.

KILLERGEE Devakottai said...

தங்களது மகள், மருமகனுக்கு எமது வாழ்த்துகளும் கூடி...

நல்ல நினைவலைகள் மகிழ்ச்சி அம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் பெண் மாப்பிள்ளைக்கு திருமணநாள் வாழ்த்துகள்! காட் ப்ளெஸ்!

அம்மா பாடல்கள் கேட்டிருக்கிறேன். கண்ணெதிரே தோன்றினாள் பாட்டு ரசித்துக்கேட்டதுண்டு. எல்லாப் பாடல்களுமே...நல்ல பாடல்கள்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா கடலும் நிலவும் ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜெகமே ஆடிடுமே .....ரசித்திருக்கிறேன் ஆனால் கூட்டம் இருக்கறப்ப!!! மெரினாவில்...வேறு இடங்களிலும். தனிமை என்றால் ரொம்பவே ரசிப்பேன் கூட்டம் இருந்தா முடியாது...தனியா அமைதியா உக்காந்து ரசிக்க நீங்கள் சொல்வது போல் வாய்ப்பு கிடைக்குமா!!??

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான பாடல்கள் பகிர்ந்திருக்கிறீர்கள்.

உங்கள் மகளுக்கும் மருமகனுக்கும் திருமணநாள் வாழ்த்துகள்! இறைவன் என்றென்றும் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் நல்கிடட்டும்!

துளசிதரன்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
நலமுடன் இருங்கள்.

வாழ்த்துகளுக்கு நன்றிமா.
பகவான் அருளில் அவர்கள் வாழ்வு மேலும் சிறக்கட்டும்.

சிகரங்களை எல்லாம் தொட முடியுமா.
அடிவாரத்திலிருந்து சில படிகளைத் தாண்ட வேண்டியதுதான்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.

அன்பு வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி.
1996 இல் திருமணம் நடந்தது மா.
26 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

நல்ல ஆரோக்கியமும், பிள்ளைகளின் வளர்ச்சியும் தொடர வேண்டும்.

உங்கள் மகளுக்கு சில்வர் ஜுபிலி வாழ்த்துகள்.
அவர்களுக்கும் தை மாதம் தான் திருமணமா?
பேத்திகள் வாழ்வும் நன்றாக சிறக்க வேண்டும்.
நன்றி மா.
சிவாஜி படங்களை கௌரவம் வரை பார்த்திருப்பேன். சென்னை வந்த
பிறகு சினிமா செல்வது குறைந்து விட்டது.
பிடித்த பாடல்களைப் பகிர்ந்தேன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

நலமுடன் இருங்கள்.
அன்பு வாழ்த்துகளுக்கு மிக நன்றி.

எங்கள் கல்யாணம் பாட்டு பிடிக்காதா.

ஓ. கலாட்டா கல்யாணம் படம்
எனக்குப் பிடிக்கும்.
ஜாலியான பாட்டு என்பதால் பகிர்ந்தேன் மா.

சிவாஜி முக பாவங்களும் நடையும் எப்பொழுதும் பிடிக்கும்.
குடும்பமே அவருடைய விசிறி.

வல்லிசிம்ஹன் said...

ஆம்.. எல்லோருக்கும் இது மாதிரி ஒரு சிறப்பு நிகழ்வு அவரவர் வாழ்வில் இருக்கும். எனக்கும் உண்டு!"
ஏகாந்தம் இனிமையானது:)

அன்பின் கமலாவும் பேத்தியும் சீக்கிரம் நலம் பெறட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் அருமை கமலாமா,

'',இப்போது உங்கள் அனைவரையும் கலக்கப்டுத்தி விட்டேனோ என்ற கவலையும் சற்று கூடவே வருகிறது. உங்களனைவரின் பிரார்த்தனைகளில் கூடிய விரைவில் பேத்தியும் நலமடைந்து விடுவாள். உங்கள் அனைவரின் நட்புக்கும், அன்புக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.''

அதெல்லாம் இல்லமா. நாம் ஒருவருக்கொருவர் துணைதானே
அதற்காகத்தான் இணையத்துக்கு வருகிறோம்.
கண்டிப்பாக நீங்கள் வந்து மன அமைதி பெற வேண்டும்.
ஒன்று மாற்றி ஒன்று
படுத்தினால் வேறென்ன செய்ய முடியும்!
பேத்தி சுருக்க நலம் பெறட்டும். ஆஞ்சனேயன் அருளில்
அனைவரும் பூரண ஆரோக்கியம் பெற வேண்டும்.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
மிக மிக நன்றி மா. என்றும் நலமுடன் இருங்கள்.

உங்கள் வாழ்த்துகளை அவர்களிடம் சேர்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன் மா,


''உங்கள் பெண் மாப்பிள்ளைக்கு திருமணநாள் வாழ்த்துகள்! காட் ப்ளெஸ்!

அம்மா பாடல்கள் கேட்டிருக்கிறேன். கண்ணெதிரே தோன்றினாள் பாட்டு ரசித்துக்கேட்டதுண்டு. எல்லாப் பாடல்களுமே...நல்ல பாடல்கள்...''
நன்றி அம்மா. அவர்களிடம் சொல்லி விட்டேன்.
உங்களுக்கும் பாடல் பிடித்ததில் மகிழ்ச்சி மா.

வல்லிசிம்ஹன் said...

''மெரினாவில்...வேறு இடங்களிலும். தனிமை என்றால் ரொம்பவே ரசிப்பேன் கூட்டம் இருந்தா முடியாது...தனியா அமைதியா உக்காந்து ரசிக்க நீங்கள் சொல்வது போல் வாய்ப்பு கிடைக்குமா!!??''

நான் சொல்வது 1962 இல் அம்மா. அப்போது
மெரினாவே சுகமாக இருக்கும் கால் புதையும் மணல்

அதிக கூட்டம் இருக்காது. பௌர்ணமியன்று அவ்வளவு
சுகமாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
நலமுடன் இருங்கள்.

''''உங்கள் மகளுக்கும் மருமகனுக்கும் திருமணநாள் வாழ்த்துகள்! இறைவன் என்றென்றும் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் நல்கிடட்டும்!''''
மிக மிக நன்றி அப்பா. நீங்களும் என்றும் சுகமாக இருங்கள்.

ஸ்ரீராம். said...

// எங்கள் கல்யாணம் பாட்டு பிடிக்காதா. //

பிடிக்காது, வெறுப்பு என்றில்லை. விரும்பி இனிமையாகக் கேட்கும் லிஸ்ட்டில் இல்லை!!

:))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.

எல்லாம் அரை குறை. கல்யாணம் என்ற ஒரே
வார்த்தை அருமை.

I can see I am very biased.what ever my brother liked
I had to like it:)

வல்லிசிம்ஹன் said...

I meant the dress ma.

மாதேவி said...

உங்கள் பெண் மருமகனுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள் .

சிவாஜி படம் எங்கள் அப்பாவுக்கு பிடிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி
நன்றி மா.

ஆமாம் எங்கள் தலைமுறைக்கு சிவாஜி எம்ஜி ஆர் எல்லாம் பிடிக்கும் மா.