வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
மகனிடம் பேசிக் கொண்டிருந்த போதுதான்
இந்த இசை பற்றி நினைவு வந்தது.
ஒரு அறை நிறைய புத்தகங்களும்
பாடல்களும் ,இருந்தாலும் வேலைப்பளுவின் காரணமாக
ஒன்றுமே செய்யமுடிவதில்லை என்று தோன்றியது.
இசைதான் என் வாழ்வுக்கே பல விதங்களில் ஆதாரம்.
எத்தனையோ இடங்களில்
கணவர் வேலையிலிருந்து வரத் தாமதமாகும் போது,
வானொலியும், இசைத்தட்டுகளுமே என் தனிமையைப்
போக்கி இருக்கின்றன.
எங்கள் பசங்களுக்கும் அதே வழக்கம்
வந்து இருக்கிறது.
தந்தைக்கும் எனக்கும் பிடித்த பாடல்களிலிருந்து இவர்களின்
விருப்புகள் மாறி இருக்கின்றன.
சின்னவனுக்கு தமிழ்ப் பாடல்கள்,பெரியவனுக்கு
பக்திப் பாடல்களும், மகளுக்கு ஒன்றையுமே
கேட்க முடியாதபடி வேலைப் பளுவும்
இப்படித்தான் செல்கிறது வாழ்க்கை.
என்னால் பாடல்கள் கேட்காமல் இருக்க முடிவதில்லை.
இப்போது மற்றவர்களுக்கு இடையூறு
இல்லாமல் இருக்க ஹெட்ஃபோன்ஸ் உபயோகிக்கறேன்.
எல்லோருக்கும் ஒரே இசை பிடிக்க வேண்டும்
என்பது நியதி இல்லை.:)
நான் கேட்க வேண்டும் என்பதற்காக சிங்கம் முதலில் வாங்கித் தந்த
புஷ் டிரான்சிஸ்டர்... 15 வருடங்கள் உழைத்தது.
எல்லா சமையறைகளிலும் என்னுடன் சேர்ந்து வசித்தது.
பெரியமகன் வாங்கித் தந்த டூ இன் ஒன்,சின்னவன் வாங்கித் தந்த பாக்கெட்
ரேடியோ இன்னும்
சென்னையில் உட்கார்ந்திருக்கிறது.
ரேடியோ மிர்ச்சி, சென்னை எஃப் எம் இன்னும் பல
சானல்கள்.
விட்டுவிட்டு வந்த எத்தனையோ
நினைவுகளில் அதுவும் ஒன்று.
இங்கே இருக்கும் இன்னோரு புதிய ரேடியோ
கேட்கப் படாமல் அலமாரியில் உறங்குகிறது.
இன்னோன்று கூடத்தில் அவ்வப்போது தானே
இயங்குகிறது. எப்போதோ போட்டு வைத்த ஆணைப்படி!!!
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா.🙏🙏🙏🙏🙏🙏
20 comments:
புலி ஓவியம் அழகு. பாடல்கள் கேட்பது எனக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு.
ஆம், வேலைப்பளு காரணமாக பாடல்கள் கேட்க முடிவதில்லை, புத்தகங்கள் படிக்க ஓடுவதில்லை. இந்நிலையை சீக்கிரம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நானும் நினைத்துக் கொள்வேன்!
அந்தத் தயிரில் என்ன சுவை, என்னென்ன விசேஷம்? பாடல்கள் - ஒவ்வொருவர் ரசனை ஒவ்வொரு விதம். என் மகன்கள் அந்தக் காலப் பாட்டுக்கள் சிலவற்றையும் ரசிப்பார்கள். இப்போதைய பாடல்களையும் ரஸிக்கிறார்கள். அவர்களின் கடும் வேலைப்பளுவிற்கு நடுவிலும் அவர்கள் பாடல்களைக் கேட்டு ரசிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிதான் எனக்கு.
அன்பின் வெங்கட் ,
இனிய காலை வணக்கம்.
புலி வரைந்து ,பேரனிடம் கொடுத்து விட்டார்.
இப்பொழுது அவனது பழைய ஃபைல்ஸ்
பார்க்கும்போது கிடைத்தது.
பாவம் எத்தனையோ வரைந்தார்.
நன்றி மா.
நீங்கள் பாடல்கள் கேட்கிறீர்கள்,
ஆதியும் கேட்கிறார் என்று தெரியும்.
சிங்கம் வரைந்த புலி!
இந்த வரி என் முதல் கமெண்ட்டில் எழுத நினைத்து விட்டுப்போய் விட்டது!
அன்பின் ஸ்ரீராம்.
நான் ஓய்வு பெற்ற வயதில் இதை எல்லாம் செய்கிறேன்.
எல்லோருக்கும்ன் இசை இதம் தரும் என்றே நம்புகீறேன்.
இந்த ஊரில் வித விதமான தயிர்கள்.
ஆர்கானிக் தான்.
வனிலா பீன் கலந்தது இந்தத் தயிர்.
இது போல் 50 வகை.
இதுல ஸ்பெஷல் என்னன்னா அவரவர்க்குத் தனி கப்
மூடி போட்டு வந்திருக்கு.
அப்படியே சாப்பிட்டுவிட்டு அலம்பி வைத்து விடலாம்.கண்ணாடி
ஜார் நமக்கு லாபம்.
எனக்குப் பிடிக்காது.:)
ஓவியம் மிக அழகு. ப்ளஸ் டூ ஓவியப்போட்டி நினைவுக்கு வந்தது
ரேடியோ... பாடல்கள்... இவையெல்லாம் எப்படி ஓடிவிட்டன? நல்ல எழுத்து..ரசித்தேன்
அருமை. பாடல்கள் நானும் கேட்பேன். பெரும்பாலும் பக்திப்பாடல்களே! உட்கார்ந்து கேட்பதில்லை. போட்டுவிட்டு வேலைகளைப் பார்க்கப் போயிடுவேன். இங்கேயும் பகிர்ந்தமைக்கு நன்றி. புலி நன்றாக வரைந்திருக்கார். இனிமையான நினைவுகள். எங்க அப்பா வீட்டில் ரேடியோவே கிடையாது. அண்ணா வேலைக்குப் போனப்புறமா வாங்கிய ஃபிலிப்ஸ் ட்ரான்சிஸ்டர் தான் முதல் ரேடியோ.
அன்பின் முரளிமா,
இனிய காலை வணக்கம்.
பாராட்டுக்கு நன்றி மா.
பாடல்கள் அனைத்துமே பழசு.
அவருக்குப் பிடித்த பாடல்களைப்
பதிந்தேன். அவர்க்குத் தமிழ் பூரண்மாகத் தெரியாவிட்டாலும்
பழைய பாடல்களை அதுவும் ப வரிசைப் பாடல்கள்
மிகப் பிடிக்கும்..ஓ ...நீங்களும் வரைவீர்களா.!!!
அன்பின் ஸ்ரீராம்,
அவர் எல்லாவற்றையும் பார்த்தது பார்த்தபடி வரைவார்.
நன்றி மா.
உங்கள் கணவர் வரைந்த புலி அருமை. எனக்கு வேலை அதிகம் இருப்பதால் பாடல்கேட்க முடிவதில்லை.
இந்தத் தயிர் பற்றிப் படிச்சப்போ அப்போவே நினைச்சது சொல்ல மறந்துட்டேன். ஹூஸ்டனில் பையர் இருந்த ஷுகர்லான்ட் டவுன்ஹாலில் ஒரு கடையில் விதம் விதமான யோகர்ட், பல்வேறுவிதமான ஃப்ளேவர்களில், சாக்லேட் சிப்ஸ், மற்றும் ஜெம்ஸ் சாக்லேட், சாக்லேட் சிரப் போன்றவை சேர்த்தும் சேர்க்காமலும் கிடைக்கும். சுமார் 20 வகைகளில் யோகர்ட் இருந்தது. ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைப் போலவே இருக்கும்.
அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
நீங்களும் பாடல்களோடு இணைவது மிக மகிழ்ச்சிமா.
நான் காலை வேளைகளில் வேளுக்குடி, பாகவதம் என்று
கேட்டுக் கொள்வேன். மனம் லயிக்க வேண்டும் என்பதற்காக.
''பக்திப்பாடல்களே! உட்கார்ந்து கேட்பதில்லை. போட்டுவிட்டு வேலைகளைப் பார்க்கப் போயிடுவேன். இங்கேயும் பகிர்ந்தமைக்கு நன்றி. புலி நன்றாக வரைந்திருக்கார். இனிமையான நினைவுகள்.''
எனக்கும் இதேபோலத்தான்.
நடக்கும் போது இது போல இசை நம்மை ஊக்குவிக்கும்.
வெளியே போக முடிவதில்லை என்பது
இன்னோரு காரணம்.
நன்றி மா.
அன்பின் மாதேவி,
என்றும் நலமுடன் இருங்கள்.
அவரவர்க்கு வேலைப்பளு அதிகமாக
இருக்கிறது.
உங்கள் எல்லோரையும் பார்க்கும் போது அது தெரிகிறது.
ஓய்வுக் காலங்களில் கேட்டு ரசியுங்கள்.
நன்றி மா.
அன்பின் கீதாமா,
அவரின் நிறைய படங்களை மகளும் ,மகனும்
ஃப்ரேம் போட்டு வைத்திருக்கிறார்கள்.
நான் மட்டும் வரைந்தவரை நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.
ஐஸ்க்ரிம் இந்த ஊரிலும் ஸ்விஸ்ஸிலும்
நிறையப் பார்க்கிறேன்.
அவரவர்க்குப் பிடித்ததைப் பசி வேளையிலும்
ஸ்னாக் மாதிரியும் சாப்பிடுகிறார்கள்.
எனக்கு எதையும் சாப்பிட பயம்.
ஒளிந்திருக்கும் சர்க்கரையைப் பற்றி யோசனை வந்துவிடும்:)
எப்பொழுதும் காக்கும் இறைவனுக்கு நன்றி.
அம்மா தயிர், யோகர்ட் வெரைட்டி ஃப்ளேவர்ஸ்ரொம்பப் பிடிக்கும்..இங்கு அமுல் ஒரு சில ஃப்ளேவர் வரது அப்படியே ஐஸ்கிரீம் மாதிரியே இருக்கு. ஆனா எனக்குத்தான் அதிகம் சாப்பிட முடியாதே!! இங்கு இன்னும் டயபட்டிக் மக்களுக்கு வரலை...அங்கு விதம் விதமா கிடைக்கும்!!
அப்பா வரைந்த புலி செம..முகம் செம எக்ஸ்ப்ரஷன்ஸ் கண்ணு...அன்னிக்கும் ஷேர் செய்திருந்தீங்க இல்லையா? கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன் அன்றைய போஸ்ட் போய்ட்டேனா ந்னு...ஹிஹிஹிஹி...
கீதா
நிறைய புத்தகங்களும்
பாடல்களும் ,இருந்தாலும் வேலைப்பளுவின் காரணமாக
ஒன்றுமே செய்யமுடிவதில்லை என்று தோன்றியது.//
எனக்கும் அதே அதேதான் மா பாட்டு கேட்பது என்பது ரேர் ஹெட் செட் போட்டுக் கொண்டாலும் சில சமயம் ப்ளக் லூஸாகி வெளியில் கேட்டுவிடுகிறது!! ஸோ பார்த்து பார்த்துதான் கேட்க முடிகிறது.
புத்தகம் வாசிப்பது இணையத்தில்தான். அதுவும் நேரம் கிடைக்கும் சமயத்தில்...
ஆமாம் ஒவ்வொருவர் விருப்பம் ஒவ்வொரு மாதிரி. இங்கு எல்லாமே ஹாலில் தான் என்பதால் நமக்கென்ற தனி விருப்பங்கள் அவுட்!!!!! ஹெட் செட் போட்டு வால்யூம் கம்மியா வைச்சுக் கேட்டாலும் அதன் வழி கூட வெளியில் கேட்கிறது!! அப்படி ஷார்ப் காது....எனக்குத்தான் காது அவுட் !! ஹாஹாஹாஹா...மகன் இங்கு இருந்தவரையில் இருவரும் நிறைய ஷேர் செய்து கேட்டு படம் பார்த்து என்று....ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் மகனை...
LET US SWIM ALONG THE STREAM!! AGAINST THE STREAM! வராம இருந்தாலே போதும் இல்லையா!!!!
கீதா
பாடல்கள் மெதுவாகக் கேட்கிறேன் அம்மா...
கீதா
அன்பின் கீதாமா,
நிறைய வித விதமா இருக்கிறது.
யொகர்ட் .
சர்க்கரையை நினைத்து சாப்பிட முடிவதில்லை.
வாட்ஸாப்பில் அனுப்பி இருப்பேன் புலி படம்.
''எனக்கும் அதே அதேதான் மா பாட்டு கேட்பது என்பது ரேர் ஹெட் செட் போட்டுக் கொண்டாலும் சில சமயம் ப்ளக் லூஸாகி வெளியில் கேட்டுவிடுகிறது!! ஸோ பார்த்து பார்த்துதான் கேட்க முடிகிறது.''
புரிகிறதுமா. பிடிக்காதவர்கள் நடுவில் இசை கேட்பதும்
மிகக் கஷ்டம். பொறுமையே போய்விடும்.
'' மகன் இங்கு இருந்தவரையில் இருவரும் நிறைய ஷேர் செய்து கேட்டு படம் பார்த்து என்று....ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் மகனை...''
புத்தகம் வாசிப்பது இணையத்தில்தான். அதுவும் நேரம் கிடைக்கும் சமயத்தில்...''
சீக்கிரம் மகனைப் பார்க்கும் நேரம் வர வேண்டும்.
நலமுடன் இருங்கள்.
பாடல்களை மெதுவாகக் கேட்கலாம்.
Post a Comment