[3:27 AM, 2/6/2022] Chandra P.S.: "சும்மா", "சும்மா"
தி.மு.க.வில் இருந்தபோது, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு சொற்பொழிவில் "சும்மா" என்ற தலைப்பில் நீண்டநேரம் உரையாற்றினார். அந்த மலரும் நினைவுகளை இங்கே பார்ப்போம்...
சும்மா:-
"சும்மா இதைப் படியுங்கள், நிச்சயம் நீங்கள் அசந்துதான் போவீர்கள்!!
உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து, இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன!
தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக்கொண்டிருக்கின்றது.
"சும்மா" சொல்லுவோம் தமிழின் சிறப்பை!!
அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான், இந்த "சும்மா".
அதுசரி "சும்மா" என்றால் என்ன?
பேச்சுவழக்குச் சொல்லாக இருந்தாலும், தமிழ்மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை தான் இந்தச் "சும்மா".
"சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 க்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு என்றால் பாருங்களேன்...
வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த "சும்மா" என்ற வார்த்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது...
1. கொஞ்சம் "சும்மா" இருடா?
(அமைதியாக / Quiet)
2.கொஞ்சநேரம் "சும்மா" இருந்துவிட்டுப் போகலாமே? (களைப்பாறிக் கொண்டு / Leisurely)
3.அவரைப் பற்றி "சும்மா" சொல்லக் கூடாது!
(அருமை / infact)
4.இது என்ன "சும்மா" கிடைக்கும் என்று
நினைத்தாயா?
(இலவசமாக / Free of cost)
5. "சும்மா" கதை விடாதே?
(பொய் / Lie)
6. "சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்.
(உபயோகமற்று / Without use)
7. "சும்மா", "சும்மா", கிண்டல் பண்ணுகிறான்.
(அடிக்கடி / Very often)
8. இவன் இப்படித்தான், சும்மா சொல்லிக்கிட்டே இருப்பான்.
(எப்போதும் / Always)
9.ஒன்றுமில்லை "சும்மா" தான் சொல்லுகிறேன்-
(தற்செயலாக / Just)
10. இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை "சும்மா" தான் இருக்கின்றது.
(காலி / Empty)
11. சொன்னதையே "சும்மா" சொல்லாதே.
(மறுபடியும் / Repeat)
12. ஒன்றுமில்லாமல் "சும்மா" போகக்கூடாது .
(வெறுங்கையோடு / Bare)
13. "சும்மா" தான் இருக்கின்றோம்.
(சோம்பேறித்தனமாக / Lazily)
14. அவன் "சும்மா" ஏதாவது உளறுவான்.
(வெட்டியாக / Idle)
15. எல்லாமே "சும்மா" தான் சொன்னேன்.
(விளையாட்டிற்கு / Just for fun)
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த *"சும்மா" என்கிற ஒரு சொல், நாம் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றபடியும், தொடரும் சொற்களுக்கு ஏற்றபடியும் 15 விதமான அர்த்தங்களை, இங்கே கொடுக்கிறது என்றால், அது "சும்மா" இல்லை.
👍 Whatsapp message from dearesr P.S.Chandra friend of 57 years.
[6:38 AM, 2/6/2022] Revathi Narasimhan: 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁Summa adhiruthilla:)
20 comments:
ஆம் அம்மா... வாட்ஸாப்பில் எங்கள் க்ரூப்பிலும் வந்திருந்தது. சும்மா வை வைத்து நானும் முன்...னர் ஒரு பதிவு எழுதி இருந்தேன்!
தானும் படித்தேன்.
நீங்களும் சும்மா இருக்க முடியாமல் பகிர்ந்துகொண்டுவிட்டீர்கள்.
இது கொஞ்ச நாட்களாக வாட்சப்பில் சுற்றிக் கொண்டிருக்கு! :))))
வணக்கம் சகோதரி
பதிவு அருமை. சும்மா பதிவை சும்மாவேனும் படிக்காமல், சுகமாக ரசித்தே படித்தேன். இது எனக்கும் முன்பு வாட்சப்பில் சுற்றி வந்தது. நானும் அதை வைத்தே ஒரு பதிவாக என் வலைத்தளத்தில் முன்பு பகிர்ந்துள்ளேன். தங்கள் பதிவும் நன்றாக உள்ளது பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சும்மா ஸ்வாரசியம். சும்மா என்றதுமே தேனம்மை அவர்களின் வலை நினைவுக்கு வந்தது. அவங்க வலைத்தளம் பெயர் சும்மா
கீதா
சும்மா சொல்லக்கூடாது எத்தனை சும்மாக்கள்.
Jayakumar
சும்மா, வாசிச்சேன், சும்மா சொல்லக் கூடாது சூப்பர்!!!! ஹாஹாஹா
கீதா
சும்மா இருப்பது என்பது ஒரு பெரிய விஷயம் தத்துவம் அடங்கிய ஒன்று! அது ஒரு பெரிய நிலை...சும்மா இல்லாமல் மனசு அலை பாய்வதால்தான் மனக்குழப்பங்கள் பிரச்சனைகள்!
கீதா
ரசித்தேன். சும்மா என்ற ஒரு சொல்லுக்கு எத்தனை அர்த்தங்கள்! நாம் அதை வெகு இயல்பாகப் பிரயோகப்படுத்துகிறோம்.
துளசிதரன்
சும்மா அசத்தலான பதிவுதான்.
அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.
அதனால் தெரிய வருவது என்னவென்றால்
நாம் சும்மா இருக்கவில்லை:)
வருடங்களாக வாட்ஸாப்பில் சொல்கிறோம்!!!!
அன்பின் முரளிமா,
எது ஆரம்பித்ததோ அது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
என்பது தான் வாட்ஸாப்பின்
நிலைத்தகவல் நிலையாக எல்லோரையும்
வந்து சும்மாத் தொட்டுவிட்டுப் போகிறது மா.
நன்றி.
அன்பின் கீதாமா,
ஆமாம் மா.
படித்தவுடன் நானும் தோழியிடம் சொன்னேன். இரண்டு வருடங்களுக்கு
முன் நீ தானே அனுப்பினே என்றாள்:)
சுத்தி சுத்தி வந்தீஹ பாட்டுப் போல.:)
அன்பின் கமலாமா.
என்றும் நலமுடன் இருங்கள்.
ஆஹா. இது யாரையும் சும்மா விட்டு வைக்கவில்லை
போல இருக்கும். நீங்களும் ஸ்ரீராமும் எழுதி இருக்கிறீர்கள்.
நான் படித்தேனா தெரியவில்லை.
ஆனால் எனக்கு நினைவுக்கு வராமல்,
சும்மா இருக்க முடியாமல் அனுப்பி விட்டேன்.
நம் வாசிப்புத் தளமாகி விட்டது.
நன்றி மா.
அன்பின் கீதா ரங்கன் மா,
தேனம்மையை மறக்க முடியுமா.
மிக நல்ல பெண்மணி.
அனைவரையும் கவர்ந்து இழுப்பவர்.
முன்னெல்லாம் இரவு நேரங்களில் கூட
பேசிக்கொண்டிருப்போம்.
சுகமாக இருக்கட்டும்.
நன்றி மா. நலமுடன் இருங்கள்.
அன்பின் ஜெயக்குமார் ஸார்,
நலமுடன் இருங்கள்.
மீள் செய்தியாக எனக்கு வந்தது.
சும்மா இருக்க முடியாமல் பகிர்ந்து வைத்தேன்.
எல்லோருக்கும் பிடிக்கிறது என்றால் அது சும்மா
இல்லை. வார்த்தை விளையாட்டுக்கு எப்பொழுதுமே
மதிப்பு.
நன்றி மா.
ஜி ஆர்,
ஹாஹா. சுற்றி வலம் வரும் சும்மா:)
அன்பின் கீதாமா,
சும்மா இருக்க முடியுமா.
பெரிய தத்துவம் ஆச்சே அது.
அப்படி ஒரு மன நிலை வாய்த்து விட்டால்
அது பெரிய அதிர்ஷ்டம்.
அன்பின் துளசிதரன்,
நமக்கு எல்லாம் வலைப்பதிவுகள் எத்தனை கற்றுத்
தருகின்றன.
சும்மா இருந்தால் கிடைக்குமா அறிவு:)
ஆமாம் சும்மா இருக்க முடிவதில்லை.
நன்றி மா.
அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடனிருங்கள்.
சும்மா நலத்துடன் இருக்கலாம்.
சும்மா சோம்பேறியாக இருக்க முடியாது.
சும்மா வாயைக் கட்டுப் படுத்தலாம்.
சும்மா நினைவுகளை நிறுத்த முடியாது.
Post a Comment