அனைவருக்கும் நல் வணக்கம். இறைவன்
அருளால் ஆரோக்கியம் அமைதியும்
நிறைய வேண்டும்.
சில காலங்களாக உடல் நான் சொன்ன
பேச்சு கேட்பதில்லை.
வெள்ள செய்திகளின் பாதிப்பும், வயதான உறவினர்களின்
ஆதரவு குறைந்த நிலையும்
இங்கே நிலவும் கடும் குளிரும்
நம் மனதையும் பாதிப்பதாலோ என்னவோ
வயிறும் கெடுகிறது,.
ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது.
கூடவே சர்க்கரை அளவும் நர்த்தனமாடி
நடப்பதும் சிரமமாகிறது.
எல்லாவற்றிலும் ஒரு நல்லதும் இருக்கிறது.
கண் பரிசோதனைக்கு முயற்சி செய்கிறோம்.
அந்தத் தனியாக இருக்கும் முதியவர்கள் என்னை விட வயதானவர்கள்.
இங்கே ஏன் என்று கேட்க என் மகள் இருக்கிறாள்.
தத்துவ போதனைகளின் வழி , எது வந்தாலும் அமைதியாக
ஏற்றுக் கொண்டால்
துணிவு நமக்கு வழிகாட்டும்.
சில நாட்களில் மீளலாம்.
அதுவரை விலகி இருக்கிறேன். நமஸ்காரம்.
17 comments:
நலம் பெற வாழ்த்துக்கள்
அப்படீல்லாம் விலகியிருக்காதீங்க. அவ்வப்போது எழுதுங்க.
நலமே விளையப் ப்ரார்த்திக்கிறேன்.
உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள் அக்கா.
மனதை தளரவிட வேண்டாம். உங்களுக்கு சொல்வதுதான் எனக்கும் சொல்லி கொள்கிறேன்.
கால மாற்றம் வேறு, குளிர் அதிகமாக இருக்கும் போது அப்படித்தான் இருக்கும் வெயில் இருக்கும் போது கொஞ்சம் நடந்து விட்டு வாருங்கள்.
வயிறு எனக்கும் குரல் (இரைச்சல)கொடுத்து கொண்டு இருக்கிறது. கை வைத்தியங்கள் பார்த்து கொண்டு இருக்கிறேன்.
ரத்த அழுத்தம் அதிகரிக்க விட வேண்டாம்.
உங்கள் உடல் நலத்திற்கு இறைவனை வேண்டுகிறேன்.
அடக் கடவுளே! உங்கள் உடல்நிலை சரியாகி மன உளைச்சலும் தீர்ந்து நல்லபடி ஆரோக்கியமாக இருக்கப் பிரார்த்திக்கிறேன். ஜாக்கிரதையாக இருங்கள் ரேவதி.
வணக்கம் சகோதரி
உங்கள் உடல் நிலை மாற்றங்கள் விரைவில் சரியாக வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். இங்குள்ள (பெங்களூர்) மழை குளிரே எனக்கு இப்போதெல்லாம் பல சிரமங்களை தருகிறது. அங்குள்ள குளிருக்கு கேட்கவா வேண்டும்..? அந்த குளிருக்கு நீங்கள் படும் வேதனைகள் புரிகிறது. ஆனாலும் உங்கள் விலகல் என்ற வார்த்தை எங்களுக்கு வேதனைத் தருகிறது கூடுமானவரை முடிந்த போது வாருங்கள். உங்கள் வருகையே எங்களுக்கு மகிழ்ச்சி. விரைவில் அனைத்தும் சரியாகி, நலம் பெற பிராத்திக்கிறேன். உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
நலம் பெற வேண்டுகிறேன் அம்மா.
அடடா! மகள் அருகில் இருக்கிறார். கவலை வேண்டாம்.
அன்பின் தீஜ் துரை,
நலம் சேர்க்கும் சிந்தனைகளே அவசியம்.
மிக நன்றி மா.
அன்பின் முரளிமா,
நன்றி மா. நான் எழுதுவதை இட மற்ற பதிவுகளைப்
படிக்க முடியவில்லை என்பதே வருத்தம். ஹீட்டர், உடலை உஷ்ணப் படுத்தி கண்கள் எரிகின்றன.
நிலை மாறும்.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
மன வருத்தம் உடலில் வலி கொண்டு வருகிறது.
நிறைய நல் கதைகளைக் கேட்கிறேன்.
சுற்றத்தை மாற்ற முடியாத போது நாம் தான் மாற வேண்டும்.
மிக மிக நன்றி மா.
நீங்கள் நலமுடன் இருங்கள்.
இந்த நாட்களையும் கடக்கலாம்.
வயிற்று உபாதை நீங்க பிரார்த்தனைகள்.
அன்பு கீதாமா,
உங்கள் பதிவு இன்னும் படிக்காமல் அப்படியே
இருக்கிறது. பெண்ணிடம் உங்கள் படங்களைக் காட்டிப்
பெருமைப் பட்டுக் கொண்டேன்.
நீங்கள் படாத தொந்தரவா. இப்போது பொறுமையும் இல்லை.
கோபம் வந்து சுள்ளேன்று பேசிவிடுகிறேன்.
ரத்த அழுத்ததின் எதிரொலி.
ஓய்வெடுத்தால் எல்லாம் குறையும்.
நன்றி மா. நீங்கள் கவனமாக இருங்கள்.
அன்பின் பானுமா,
உண்மைதான்.
மாப்பிள்ளைக்கும் அவளுக்கும் தொந்தரவில்லாமல் இருக்க வேண்டும்.
விரைவில் நலம் பெறப் பிரார்த்திக்கிறேன். கவனமாக இருங்கள். உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அன்பின் தேவகோட்டைஜி,
மிக மிக நன்றி மா. அனைவரும் நலம் பெறுவோம்.
அன்பின் ராமலக்ஷ்மி,
சில நாட்கள் விலகி இருப்பதால் கண்களுக்கு ஓய்வு கொடுக்க
நினைக்கிறேன்.
ஆடியோ மட்டும் போதும் என்கிற நிலைமை.
நன்றி உடல் சரியானதும்
மீண்டும் கட்டாயம் பார்க்கலாம்.
உடல்நிலை சரியில்லாதது மனதையும் பாதிக்கும்தான். உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது தேவலாமா? ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
நலமாக வேண்டுகிறேன். மகிழ்சியாக இருக்க முயலுங்கள்.
Post a Comment