Blog Archive

Monday, November 15, 2021

ஷேய்ல உக்காயலாமா:)மீள் பதிவு 2014







''போன உடணே ஷேய்ல உக்காயணும். அப்பா மடில.
சலோன் லேடி தலைல சில் சில் மயுந்து போடுவா.
கியுக் கியுக்னு சிஸர்ஸ் வச்சு ஹேய் எல்லாம் ஸ்னிப் செய்து, கண்ணு குத்தாம கட் செய்துடுவா''
யாக்கெட் தயுவா. எல்மோ தயுவா''
இவ்வளவு வீர வசனங்கள் பேசிய சின்னவன் நேற்று தலைமுடி சீர்திருத்தம் செய்ய, குழந்தைகளுக்கான இ ஸ்னிப்ஸ் என்ற கடைக்குள் நுழைந்ததிலிருந்து
மெல்ல சிணுங்கலோடு ஆரம்பித்த ஆலபனையை,
கேவிக் கேவி அழுது,
முழு கச்சேரியாகச் செய்து,
அம்மா அப்பா கைகளையும் மீறி, தேமேனு ரொம்பப் பொறுமையாக அவனது தலை முடியைச் சீர் செய்தவர்களையும் தள்ளி அமர்க்களப் படுத்தி இருக்கிறான்.

எங்க பெண் மாப்பிள்ளை இருவரும் வீட்டிலியே
தலைமுடியைச் சீர் செய்யும் கலையை ஒழுங்காகக் கற்றுக் கொள்ளப் போகிறார்களம்:)
இதெல்லாம் எனக்குத் தெரியாது. அவனோடு வெப்காமிராவில் பேசக் கூப்பிட்டபோது, அழகாக வந்து உட்கார்ந்து கொண்டு தலையை எலா ஆங்கிளிலும் காண்பித்தான். அடச் சம்த்தே ஹேர்கட் பண்ணிக் கொண்டாயா என்று நான் பெருமிதப் பட,
அவன் தான் அழுத கதையெல்லாம் நடித்துக் காட்டிச் சிரிக்கிறான்.
அவன் அம்மா அப்பாதான் இந்த கலாட்டாவிலிருந்து இன்னும் மீளவில்லை:)
பி.கு. அவனுக்கு மற்ற மழலையெல்லாம் தெளிந்தாலும் இன்னும் ர னா மட்டும் வரவில்லை.
லெக்டாங்கிள்...ரெக்டாங்கிள்
ஸ்குவீ...ஸ்குவேர்.
டாலகன்...ட்ரையாங்கிள்
தன் பேர் கிஷா. ..கிருஷ்ணா.
பின்
திருத்தங்கள்.!!!!
ஷேயர்...சேர்..நாற்காலி
மயுந்து...மருந்து..லோஷன்.
கிருஷ்ணாவுக்காக ,வாசுதேவன் சொன்ன மாற்றம்.:)
கிஷாவுக்கு மழலை அழகு.
பாட்டி எழுதும்போது நல்ல தமிழ் வந்துவிட்டது. அதனால மீண்டும் எடிட் செய்தேன்!!!
சயியா தி.வாசுதேவன் சார்??









17 comments:

Geetha Sambasivam said...

ஹாஹாஹா,நாங்களும் எங்க அப்புவோட மழலையையும் இப்போது குட்டிக் குஞ்சுலுவின் மழலையையும் இப்படித் தான் நினைத்துப் பார்த்துக் கொள்கிறோம். குஞ்சுலுவுக்கும் மழலை மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. :)))))

ஸ்ரீராம். said...

படிக்கும் போது தகுந்த இடங்களில்  'ர' வை போட்டு படிக்க முடிந்தது.  சுவாரஸ்யம்தான்.  முஹல் இருமுறை என் மகன்களுக்கு கடையில் (அதுவும் பாஸ்தான் சென்றார்) செய்த பிறகு அப்புறம் அப்பறம் நானே செய்து விட்டு விடுவேன்!  மழலை அழகு.

வெங்கட் நாகராஜ் said...

மழலை என்றைக்கும் ரசிக்கத் தக்கது. என் மகளின் மழலை குறித்தும் பதிவாக எழுதி இருக்கிறேன்.

கோமதி அரசு said...

அருமையான மழலை பேச்சு.
மலரும் நினைவுகள் தரும் சுகம் அதை நினைத்து பார்க்கும் போது மனம் மகிழும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.

இப்போ படிக்க நன்றாக இருக்கு.
நல்ல வேளை எழுதி வைத்தேன்.

மழலை இனிது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

குழந்தைகளின் மழலை எப்பவுமே இனிமை.
அதுவும் இப்ப எல்லாமே பெரிசாகிவிட்டது.
குட்டிக் குஞ்சுலுவுக்குக் கொஞ்சமாவது இருக்கணுமே. வயசாகலியே.

எல்லாவற்றையும் வீடியோ எடுக்காமல் விட்டேனே
என்று எனக்குத் தோன்றுகிறது.
இவர்கள் எடுத்து வைத்திருப்பார்கள்.
யாருக்கும் எதுவுக்கும் நேரம் இல்லை
இப்போது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,

நீங்களும் எழுதி இருக்கிறீர்களா.
பத்து வருடங்களுக்கு முன்னால்
எழுதி இருப்பீர்களோ.

முடிந்தால் எனக்கு லிங்க் அனுப்புங்கள்.

குழந்தைகள் எல்லா வயதிலும் இனிமை தான்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

குழந்தைகளின் மழலை ரொம்ப நன்றாக இருக்கும். உங்கள் பேரனை நன்றாக கவனித்து எழுதியுள்ளீர்கள். படிக்கும் போது இனிமையாக இருக்கிறது.ஒரு வார்த்தையின் உச்சரிப்புக்கு பதிலாக அவர்கள் வேறு பல வார்த்தைகளை இணைத்து பேசும் போது நமக்கு சிரிப்பாக வரும். அவர்கள் வளர்ந்த பின் அதை சொன்னால் கூட நம்ப மாட்டார்கள்.சிலசமயம் அதுவே பெரியவர்களான நமக்கும் நம் வார்த்தைகளோடு ஒப்பந்தம் செய்து கொண்ட மாதிரி வாழ்நாள் முழுக்க நம்மோடு ஒட்டிக் கொண்டு விடும். அப்படித்தான் இன்னமும் சில வார்த்தைகள் எங்களோடு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.:)

இப்போதும் எங்கள் பேரன், பேத்திகள் மழலையை ரசிக்கிறோம்.ஆனால், சிலசமயம் நம் மழலையை அவர்கள் விவரமாக திருத்துகிறார்கள்.:) பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

நெல்லைத் தமிழன் said...

நீங்கள் போட்டிருக்கும் பதிவின் படம் (முகப்பில்), ஸ்ரீரங்கபட்டினம் ரங்கநாதர். நான் இந்த சனிக்கிழமை சென்று, காவிரியில் துலா ஸ்நாநம் செய்து அந்தப் பெருமாளைச் சேவித்துவிட்டு வந்தேன் (மனைவியுடன்)

நெல்லைத் தமிழன் said...

என் மகனின் மழலைப் பேச்சுகளை காணொளியாக எடுத்திருக்கிறேன்.
என் பெண் பேசும்போது, யுனிக்ஸ் டெக்னாலஜிதான் வீட்டில் இருந்தது. அதனால் MP3 யாக பிறகு கன்வர்ட் பண்ணி அவளின் 6 நர்சரி ரைம்களை எடுத்தேன் (அவளே ரொம்ப வெட்கப்படுவாள் அதனைக் கேட்டு)

மாதேவி said...

மழலை அமுதம்.

நாங்களும் பேரனுடன் ரசிக்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளி மா,

குழந்தைகளுக்குக் குழந்தைகள் வரும்போது
இன்னும் சுவையாக இருக்கும் பாருங்கள்.

பேரன் கள், பேத்திகள் வீடியோக்களை
நானும் எடுத்திருக்கிறேன்.

இப்போதும் சில சமயம் பார்த்து மகிழ்கிறேன்.
அதில் சிங்கமும் இருப்பார்.
அதுவும் ஒரு இனிமை தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
எங்கள் குழந்தைகளைப் படம் தான் எடுத்திருக்கிறோம்.
பேரன் பேத்திகளின் குறுகிய நேர வீடியோக்கள்
இருக்கின்றன.

இப்பொழுது எல்லோரும் வளர்ந்து விட்டார்கள்.

பேரனுக்குப் படித்துக் காண்பித்தேன்.
சிரிக்கிறான்.

எல்லா வயதும் இனிமைதான்.
சில ஆங்கிலச் சொற்பிரயோகங்களை
அவனைக் கேட்டு உச்சரிக்கிறேன்:)))

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
ஆஹா. இன்று நினைத்துக் கொண்டிருந்தேன். துலா மாதம் முடிகிறதே.

யாரெல்லாம் சென்று ஸ்னானம் செய்தார்களோ என்று.!!
ஆமாம் அந்த ரங்க நாதர்தான் இவர். நாங்கள் 52 வருடங்கள் முன்பு சென்றோம்.
அருமையான இடம்.
அன்பின் கோமதி அரசு கூட அதைப் பற்றி
எழுதி இருப்பார். மாயவரத்தில் அவர்கள் இருந்தார்கள் இல்லையா.
நீங்கள் சென்று தரிசித்ததுதான் மிக மகிழ்ச்சி.
எல்லா வருடங்களும் இதே போல் சென்று வர
இறைவன் அருள வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
நாம் பெற்ற குழந்தைகளின் மழலை நினைவில். இந்தப்
பேரக் குழந்தைகளின் மழலை இன்னும் இனிது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
ரசித்து, ரசிக்கும் வேலையில் பதிவும் செய்யுங்கள்.
என்னாளும் மறக்காது மா.
நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

https://venkatnagaraj.blogspot.com/2010/10/blog-post.html

https://venkatnagaraj.blogspot.com/2010/11/blog-post_26.html

இந்த இரண்டு பதிவுகளிலும் எழுதி இருக்கிறேன் மா. நீங்களும் ஒரு பதிவினை படித்து இருக்கிறீர்கள்.