Blog Archive

Thursday, November 25, 2021

சில செய்திகள் 2

வல்லிசிம்ஹன்

அனைவருக்கும் இறைவன் அருள் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.

வண்ணங்கள் நன்மை தருகின்றன. 
வெளியே 7 மணி அளவில் காலை விடிகிறது.
மாலை நாலு மணிக்கு இருள் 
கவியத் தொடங்குகிறது.

இன்னும் ஒரு ஐந்து மாதங்களுக்கு 
இதுவே நிச்சயம்.

அதனால் வீட்டுக்குள்ளும் வெளியேயும் 
விளக்குகளையும் வண்ணங்களையும் சேர்த்து
மனதை உற்சாகமாக வைக்க

முயற்சிக்கிறோம்.
நிறைய உணவு, உடை எல்லாவற்றையும் 
அருகிலிருக்கும் நல் உதவி செண்டரில்
சேர்ப்பதும் இன்னும் மகிழ்ச்சி.

வீட்டில் இருக்கும் விளையாட்டு பொருட்கள், கேம்ஸ்,
தேகப் பயிற்சிக்கான மெஷிங்கள் என்று 
எல்லாம் வெளியேறி தேவையானவர்களை அடையும் போது

எத்தனை நிம்மதி!! 
மனதில் குவியும் குப்பைக்களையும்,
பழைய வருத்தங்களையும் அகற்றும் போதும்
கிடைக்கும் கலகலப்பு அளவிட முடியாதது.

சென்ற நவம்பரில் இறையடி இணைந்த அன்பு கோமதி அரசுவின் கணவருக்கு
அஞ்சலிகள்.
அன்பின் கோமதி கலக்கங்கள் நீங்கி தன் மக்களோடு
அமைதிவாழ்வு பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

  நான் கேட்டுவரும் ஆடியோக்கள் மனதுக்கு
இதம். வாழ்வை அப்படியே  ஏற்றூக்கொண்டு

வார்த்தைகளை வெளியே விடாமல் இருப்பதும்,
கடும் வார்த்தைகளுக்குக் காது கொடாமல்
இருப்பதும்,
குழந்தைகளுக்கு நல வார்த்தைகள் சொல்வதும் நம்மால்
செய்யக் கூடியதே என்பதை உணர்ந்து வருகிறேன்.
இனியும் தொடர்ந்து இறையுடன் அமைதியாக
இருக்கவே விருப்பம்.
 
கண்களின் எரிச்சல் ஒன்றே  நான் படிக்காமல்
இருக்கக் காரணம்.
எத்தனையோ நல்ல செய்திகளை தவற விடுகிறேன்.
மீண்டும் படிக்க ஆரம்பிக்கலாம் என்று 
வைத்தியர் சொன்னதும் தொடர்கிறேன்.
அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும்.








11 comments:

Bhanumathy Venkateswaran said...

உங்கள் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள். என்றும் அன்புடன்

Bhanumathy said...

உங்கள் பதிவை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் என்றும் அன்புடன்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. நலமா? இப்போது எப்படியுள்ளீர்கள்.நினைவுகளை தொகுத்து பதிவை அருமையாக எழுதியுள்ளீர்கள். அனைவரும் நலம் பெற வேண்டும். உடல்நிலையை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். உடல் பூரண குணமாகி தானாக மனதுள் உற்சாகம் வந்ததும், மருத்துவரின் ஆலோசனை பேரில் பதிவுகளை தாருங்கள்.படிக்க ஆவலாக உள்ளேன்.விரைவில் நலம் பெற இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

இந்தமாதம் நாம் பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்வது போல வேண்டாதவைகளை களைந்து வீட்டை மிக அழகாய் அலங்காரம் செய்கிறார்கள்.

ஒருத்தருக்கு ஒருத்தர் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.


பேரனும் வாழ்க்கை என்றால் நன்றிதெரிவித்தல் என்கிறான்.

நானும் உங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் கண்வர் இறந்த போது தினம் ஆறுதலும், தேறுதலும் தந்தவர் நீங்கள்.

இன்றும் எனக்காக பிரார்த்தனை செய்து இருக்கிறீர்கள்.
நன்றி அக்கா.

நேற்று முழுவதும் அவர்கள் நினைவுகளை , இரு பக்க உடன்பிறந்தோர்கள், உறவினர், நண்பர்கள் பேசினார்கள்.

ஆறுதல் அடை பேசி கொண்டே இருந்தார்கள், அன்பான சொந்தங்கள், நட்புகளை கொடுத்த இறைவனுக்கும் நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.


நீங்கள் தகுந்த ஓய்வு எடுத்து கொண்டு முடிந்த போது வலை பக்கம் வாருங்கள்.

உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்.

நெல்லைத்தமிழன் said...

வல்லிம்மா நலம் என்பதில் மகிழ்ச்சி

விரைவில் இருட்டு. சூரியனுக்கு நேரமாகிறது. படித்துப்பார்க்க, நல்ல காலநிலை போல் தெரிகிறது.

ஸ்ரீராம். said...

நம்மிடமிருந்து பொருட்கள் வேறு சிலருக்கு உதவியாவதிலும் மகிழ்ச்சி இருக்கிறது.  மெதுவாய் விடிந்து சீக்கிரமே இருள் கவியும் நாட்கள் மனதைச் சோர்வாக்குமோ..  அனுபவமில்லை.  உங்கள் கண்களின் எரிச்சல் விரைவில் நீங்க பிரார்த்தனைகள்.  

Geetha Sambasivam said...

உடல் நலத்தைக்கவனித்துக் கொள்ளுங்கள். கோமதி அரசுவின் கணவர் திரு அரசு சாருக்கு எங்கள் மனமார்ந்த அஞ்சலிகள். கோமதி அரசுவும் நினைப்பிலேயே வாழ்ந்து வருகிறார். அவருக்கும் எங்கள் கனிவான விசாரிப்புகள். விரைவில் கண்கள் குணம் அடையப் பிரார்த்திக்கிறேன். மெதுவாக வாங்க. ஒண்ணும் அவசரம் இல்லை.

Tamil said...

வலைதமிழ் நடத்தும் கதை மற்றும் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு 1000 ரூபாய் வரை வெல்லுங்கள். https://valaithamil.com
இனி தமிழில் டைப் செய்வது மிகவும் எளிது https://valaithamil.com/phonetic.html

மாதேவி said...

உடல் நலமாகி வாருங்கள்.

திருமதி கோமதிஅரசு அவர்கள் கணவரின் ஆண்டு நினைவுக்கு அஞ்சலிகள்.

மாதேவி said...

உடல் நலமாகி வாருங்கள்.

திருமதி கோமதிஅரசு அவர்கள் கணவரின் ஆண்டு நினைவுக்கு அஞ்சலிகள்.

வல்லிசிம்ஹன் said...

அனைவருக்கும் நன்றி.

இருட்டு எப்போதுமே ரசிக்கப் படுவதில்லை.
அந்த வயது இப்போது தாண்டி விட்டது.
உடல் நலம் பேணாவிட்டால் நம்மைப் பார்த்துக் கொள்கிறவர்களுக்கு
அவதி.
அதற்காகவே மன உளைச்சலிலிருந்து
விலகுகிறேன்.

கண்களின் எரிச்சல் தலை வேதனையையும் அதிகரிக்கிறது.
இதுவும் சொல்ப காலத்தில்
சரியாகிவிட இறைவனையும் சமயபுர அம்மனையும்
பிரார்த்திக்கிறேன்.
வெளியே சொல்ல முடியாத சில உடல்வேதனைகள்.
அவைகள் நிவர்த்தியாக வேண்டும்.

@Kamala Hariharan,
@Geetha Sambasivam,
@ Nellai thamizhan,
@ Gomathy Arasu,
@Sriram BalasubramaNiyam,
@ Bhanumathy Venkateswaran,💛
@ Maadhevi.