Blog Archive

Monday, October 04, 2021

ஒரு தோழியின் கதை இது.......

வல்லிசிம்ஹன்


ஒரு தோழியின் கதை இது.......

ஹெல்லோ !!  Will you marry me?"
இது  ஒரு மாலை நேரம்  பேரனின் 
பள்ளியில் காத்திருக்கும் போது கேட்டது:)

பக்கத்து மரத்தடியில் நின்றிருந்த பத்தாம் வகுப்பு மாணவனின் குரல்:)
உடனே கலீர் என்ற சிரிப்பு. கைதட்டல். அங்கே சென்று கொண்டிருந்த 
இன்னோரு பையன்.  'NO.  I will certainly not"  என்று 
சிரித்த வண்ணம் சென்று கொண்டிருந்தது எனக்கு இன்னும் 
வியப்பு.

என்ன பேசுகிறார்கள் என்று மகளிடம் கேட்டேன்.
'இதெல்லாம் சகஜம் மா. அவர்களுக்குள் 
ஏதாவது  மொழி இருக்கும்.
சும்மா வேடிக்கை தமாஷ்" என்று சொல்லி
அவளும் சிரித்தாள்.

தினம் ஒரு புதுமை இவர்களுடன் என்று நினைத்தபடி

த்ருஷ்யம் மோகன்லால் போலக் கண்களை மூடிக்கொண்டேன்:)
கண்ணாடி வழியாகச் சூரியன் 
கண்ணுக்கு நேராகத் தெரிந்தான்.
அதனால் கண்களை மூடிக் கொண்டேன் ....

வேறொன்றும் காரணம் இல்லை.:).

லிஸா மார்ட்டின்!!
 இன்று 70 வயது ஆகும் அவள் , 
.  அவள் கணவனும்இதையே தான்
இரண்டாவது தடவையாகக்     கேட்டிருக்கிறார். ஏன் இரண்டாவது தடவை?


நாங்கள்  சந்தித்த போது.....................................................5
 மிச்சிகன் டெட்ராய்ட்டில்  1998இல் அவளுக்கு 47 வயது ஆகி இருந்தது.
நடைப் பயிற்சியின் போது ஏற்பட்ட நட்பு.

பேரன்    பிறக்கும்போது,  உதவிக்காகச் சென்ற போது
 கிடைத்த தோழி  லிசா மார்ட்டின்.
அவளுடைய இனிய அறிமுகம் கிடைத்தது. 
அங்கிருந்த நாலு மாதங்களில்  விரைவாக
வளர்ந்த நட்பு. 
முதல் திருமணத்தில் பிறந்த மகளுக்கு அப்போது  27 வயது. இரண்டாவது கணவர் தான் மார்ட்டின். 

மகள் பிறந்த  ஐந்து வருடங்களில் முதல் கணவர்   ஜோசஃப் இறைவனடி 
செல்ல, 

தனித்து விடப்பட்ட  லிசா ,தன்  பள்ளித் தோழனை
சந்திக்கிறார்.சில காலங்களுக்குப் பிறகு

  பின் 'என்னைத் திருமணம்
செய்து கொள்வாயா' என்று கேட்கும் மார்ட்டினிடம்,
  மறுப்பு சொல்ல வலிமை இல்லை  அவளிடம்.
இதுதான் கதை சுருக்கம்.



லிஸா.. மார்ட்டின் கதை .........இருவரும்
பிறந்ததிலிருந்தே 
ஆரம்பமானது தான். மிச்சிகன் ஏரிக்கரையில்
அமைந்த வீடுகளில் அவர்களது பெற்றோர்கள்
நிலம் வாங்கிப் பக்கத்து பக்கத்து வீட்டைக் கட்டினார்கள்.

ஒரு மாத இடைவெளியில் லிஸாவும் மார்ட்டினும் பிறந்து
ஒரே பாத்டப்பில் குளித்து,விளையாடி
ஒரே பள்ளிக்குப் ப்ரைமரி சென்று  

உயர் படிப்பும் ஒரே பள்ளிக் கூடத்தில்  முடிக்க,
லிஸாவை டான்ஸ் பார்ட்டிக்கு   (home coming  party) (school Final)
முதலில் அழைத்துச் சென்றதும் அவன் தான்.அந்தக் கோடை முடியும் தறுவாயில்,,,

இவர்கள் என்றாவது ஒரு நாள் திருமணம்
புரிவதும் நிச்சயம் என்று இருக்கும் போது
லிஸாவின் தந்தை அவளை மேல் படிப்புக்கு




சிகாகோ அனுப்பி விட்டார்.மார்ட்டின் உலகம் இருண்டது,அவளைப் பற்றி
எந்த செய்தியும் கிடைக்கவில்லை.      அவன் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில்
சிவில் எஞ்சினீயரிங்க் முடித்தான்.

நாலு வருடங்கள் சென்று திரும்பி 
வந்த லிஸா  மூன்று வயது மகளுடனும்,
புதிய கணவனுடனும் வந்ததைப்
பார்த்து மனமுடைந்த மார்ட்டின்  தன் தந்தையின் தொழிலைக்
கவனிக்க நியூயார்க் சென்று விட்டான்.



நடுவில் மற்ற நண்பர்கள் வழியாக லிஸாவைப் பற்றி
செய்திகள் வந்தாலும் 
அவளுடன் பழகுவதைத் தவிர்த்துவிட்டார்.

அவருக்கே  இரண்டு திருமணங்கள் ஆகி விவாகரத்தும்
ஆகி இருந்த நிலையில்,
தந்தை நோய்வாய்ப்பட மார்ட்டின் 
மிச்சிகன் திரும்பினார்.

அவர் குடும்பமும்,லிஸா குடும்பமும் 
தொடர்பிலேயே இல்லை.
மகனின் வாழ்க்கை, துன்பமாக மாற
லிஸாவும் அவள் தந்தையும் காரணம் என்று
மார்ட்டினின் பெற்றோர் விலகினர்.

லிஸாவின் தந்தை யாருக்கும் எந்த விளக்கமும் சொல்லாமல்
இறுக்கமாக இருக்க 
லிஸா அந்த நகரத்திலேயே வேறு இடத்துக்கு
மாறி இருந்தாள். 

மார்ட்டினின் தந்தை இறந்த போது

லிஸாவும் மார்ட்டினும் 35 ஆவது வயதில்
சந்திக்கிறார்கள். மார்ட்டின்  தந்தையின்
 ஃபியூனரல் சர்வீஸுக்கு  அவளுடன்  வந்த அவள் மகளைப்
பார்க்கும் போது மார்ட்டினுக்கு 
அதிர்ச்சி ஏற்படுகிறது. ..... தொடரும்.













14 comments:

மாதேவி said...

லிசா மாட்டின் கதை நன்றாக செல்கிறது .மாட்டினின் அதிர்ச்சி திருப்பம் அடுத்து காண....பொறுத்திருப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
உடனே வந்து படித்து விட்டீர்கள்!!!

உங்களுக்கு இந்த நிகழ்வுகள் பிடித்ததா. ?
நம்மூரிலிருந்து மாறு பட்ட நிஜக் கதை இது.
நன்றி மா.

கோமதி அரசு said...

நிஜ கதை நன்றாக இருக்கிறது.
அடுத்து என்ன என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டது.

கோமதி அரசு said...

காணொளிகள் நன்றாக இருக்கிறது.
முதல் காணொளி எனக்கு பிடித்த காணொளி
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.

அந்த வாத்துகள் பறப்பதே ஒரு அழகு. சிலசமயம்
வழி தவறிய வாத்து அழைத்துக் கொண்டே
பறக்கும். பரிதாபமாக இருக்கும்.


அந்தத் திரைப்படத்தின் எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கும்.
இது எனக்கு மிகப் பிடித்த பாடல்.

லிசாவின் கதை எனக்கு முதலில் பிடிபடவில்லை.
முதல் பெண்ணுக்கும் இரண்டாவது
பையனுக்கும் 15 வயது வித்தியாசமா என்று அதிசயமாக
இருந்தது:)

வாழ்க்கை முறையை எத்தனை சுலபமாக்கிக்
கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது.

படித்ததிற்கு மிக நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

திருஷ்யம் படம் பார்த்தீர்களா? நல்ல படம்.

நல்ல சஸ்பென்ஸ். அவர்கள் ஊர் வாழ்க்கை முறையே வேறு விதமாகத்தான் இருக்கிறது.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

ஓ அம்மா கதை நிஜம் என்றாலும் நீங்கள் அதை அழகாக எழுதுகிறீர்கள்.

சஸ்பென்ஸ் மண்டை குடைகிறது...கொஞ்சம் யூகிக்க முடிகிறது மார்ட்டினின் அதிர்ச்சி...பார்ப்போம் என்ன என்று.

அம்மா நிறைய கதைகளுக்குக் கரு உங்களிடம் இருக்கிறதே நாவலே எழுதலாம் போல இருக்கிற்தே அந்த ஊர் அனுபவங்களை வைத்து.

ஏன் நீங்கள் எழுதக் கூடாது? நிஜம் என்பதைச் சொல்லாமலேயே அழகா குறுநாவலாகவோ சிறுகதையாகவோ நீங்கள் எழுதிடலாம் அம்மா. உங்களுக்கு நன்றாக எழுதுவும் வருகிறது!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

காணொளி பார்க்கிறேன் அம்மா.

மிச்சிகன் மாநிலத்தைச் சுற்றி பெரிய ஏரி கடல் போல் இருக்கிறதே!! மகன் அங்கு சென்றதும் மேப் பார்த்தேன்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா முதல் காணொளி பறவைகள் பறப்பது செம அழகு. கோமதிக்காவும், வெங்கட்ஜியும் போடுவது நினைவுக்கு வருகிறது.

இங்கும் நாங்கள் நடைப்பயிற்சி செல்லும் ஏரிகள் இரண்டிலுமே பறவைகள் பார்க்கலாம். நான் எடுத்திருக்கிறேன் ஆனால் இப்படிக் கூட்டமாக இல்லை. என் கேமரா பவர் கம்மி ஜூம் செய்தாலும் அத்தனை தெளிவாக வராது. இருப்பதில் எடுத்து வைத்திருக்கிறேன் இனிதான் பார்த்து பார்த்து பகிர வேண்டும்.

ரசித்தேன் காணொளியை

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
த்ருஷ்யம் படம் பார்த்தேனாவா.
எல்லா டயலாகும் தெரியும்.
"நரியோடும் போது நடுவில் நாமளும் ஓடணும்"ஹாஹ்ஹா/
நாடோ நரியோ. 20 தடவையாவது பார்த்திருப்பேன்.
இன்னும் அலுக்கவில்லை.
இரண்டாவது த்ருஷ்யம் பார்க்கவில்லை.

ஆமாம் இவர்கள் வாழ்க்கை முறை வேறுதான்.
வெளிப்படையான வாழ்வு.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

@ Geetha Rebgan,
:))))))யூகம் சரியாகத்தான் இருக்கும். ப்ரில்லியண்ட் ப்ரொஃபெஸர் மனைவியா
கொக்கா!!!!!

என் கதை என்று எப்படி சொல்வதும்மா கீதா.
இது அப்போ நடந்து அவள் என்னிடம் சொன்னது.

பழைய ஈ மெயில் எல்லாம் டெலிட் செய்யும் போது
இவள் மெயில் கிடைத்தது.
இன்றைக்கு வாட்ஸ் ஆப் செய்த களையபரத்தில்

ஜிமெயிலில் ஐக்கியமாகி இருந்தேன்:))

வல்லிசிம்ஹன் said...

மிச்சிகன் ஏரிக்கு இந்தப் பக்கம் சிகாகோ. அந்தக்கரை
டெட் ராய்ட்டுனு ஒரு ஊகம். ரொம்பப் பெரிசு.

வல்லிசிம்ஹன் said...

@ Geetha Rengan,

அன்பு கீதாமா,
உங்களுக்கு நிறைய நேரம் கிடைத்து
இன்னும் நிறைய எழுதிப் பதிவுகள் போட வேண்டும். அதற்கும் காலம் வரும்.
நலமுடன் இருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

சூழல் காரணமாக பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை. இன்று தான் மூன்றாம் பகுதி பார்த்ததால் முதல் பகுதியை படித்தேன். நல்லதொரு தொடக்கம். என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ள அடுத்த பகுதிகளையும் படிக்க வேண்டும்.