ஜெய்சங்கர் சிறப்பாக நடித்தாரோ , சிறப்பாக்ச் சண்டை
போட்டாரோ தெரியாது.
ஆனால் அவர் படங்கள் வெற்றி கண்டன.
நல்ல மனிதர் என்று பெயர் வாங்கினார்.
மாடர்ன் தியேட்டர்ஸின் நிறைய படங்களில் வலம் வந்தார்.
யார் அவரைப் பற்றிப் பேசினாலும்
நல்ல விதமாகவே சொன்னார்கள்.
பஞ்சவர்ணக்கிளி படத்தில் அவர் '
இரட்டை வேடத்தில் ,ஒரு வில்லனாக
வந்த போதுகூட நம்ப முடியவில்லை:)
பூவா தலையா படத்தில் அவர் நடித்த
பாத்திரம் மிகச் சிறப்பானது.
தமிழ் உலகின் அந்த நாளைய கதா நாயகிகள்
அனைவருடனும் நடித்திருக்கிறார்.
பின்னாட்களில் ரஜினிகாந்த்,கமலஹாசன் இவர்களோடும்
நல்ல பாத்திரங்களில் படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.
இவ்வளவு சுருக்க, கலை வாழ்வில் ஜொலித்தவர்
61 வயதில் காலமானது மிக வருத்தம்.பிற்காலத்தில் அரசியலில் புகுந்த ஜெயலலிதா
அம்மாவுடன் இவர் நடித்த ஆரம்ப காலப் படங்கள் வெகுவாகப்
பேசப்பட்டன.
அவரது தாராள் குணம், கொடை மனப்பான்மை,
இன்னும் அவரது மகன் செய்யும்
மருத்துவ சேவைகளில் வெளிப்படுகிறது.
சிங்கமும் இவரும் யேற்காடு படப் பிடிப்புகளில்
சந்தித்திருக்கிறார்கள்.
பிற்காலத்தில் நிறைய வில்லன் வேடங்களில் நடித்தார்.
அவ்வளவாக எங்களால் ஏற்க முடியவில்லை.
பன்முக நடிப்புக்குச் சொந்தமான ஜெய்சங்கர் பாடல்களில் சிலவற்றைப்
பதிகிறேன்.
19 comments:
நல்ல மனிதர். வெள்ளிக்கிழமை நாயகன் என்று சொல்வார்கள். வெள்ளிக்கிழமைதோறும் இவர் படங்கள் ரிலீஸ் ஆகுமாம். என் சின்ன மாமனாருக்கு மிகவும் பிடித்த நாயகன்! ஜில்லென்று காற்று வந்தததோ நீண்ட நாட்களுக்குப் பின் கேட்கிறேன். நல்ல நாள் பார்க்கவோ சுவாரஸ்யமான பாடல். இருவரது நடனமும் வேடிக்கையாக இருக்கும். சமீபத்தில் நானும் பகிர்ந்திருந்தேன்! பூவா தலையாவை உல்ட்டா செய்து மாப்பிள்ளை எடுத்தார்கள் என்று தோன்றும் எனக்கு! நான் மலரோடு தனியாக ஹிந்தியிலிருந்து உருவியது! எல்லாப் பாடல்களுமே சுவாரஸ்யம்.
அன்பு ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.
பாடல்களின் ஆடியோ மட்டும் வெளியிட முயற்சி செய்தேன்.
ஒன்று தான் முடிந்தது.
நல்ல நாள்' பாட்டு பிடிக்கும்.
அந்த நடனம் கொஞ்சம் வேடிக்கையாக
எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
சமீபத்தில் ஒரு இந்தை நடிகையின் பேட்டியில்
அவர் சொன்னது இதுதான். ''நாங்கள் டான்ஸ் மாஸ்டர் சொல்லும்
அசைவுகளைத்தான் செய்கிறோம்.
அது சிலசமயம் மிகச் செயற்கையாகப்
போகிறது'' என்றார்.
உண்மைதான் டைரக்டர் சொன்ன படி நடிக்கிறார்கள்.
நடன மாஸ்டர் சொன்னபடி ஆடுகிறார்கள்.
உடைகள் விஷயத்திலும் அப்படியே.
கொஞ்சம் பரிதாபம் தான்.
நீங்கள் சொல்லும் மலர்ப்டு தனியாக
இந்திப் பாட்டு து ஜே ப்யார் கர்தேஹெய்ன்
பாடலின் பிம்பம் தான்.
ராம்சுந்தரம் இந்திப் பாடல் டியூனையே
போடச் சொல்வாராம்.
https://www.youtube.com/watch?v=wkYZzlDtVMM
என் அக்காவிற்கு பிடித்த நடிகர்.
என் கணவருக்கு பிடித்த பாடல் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் பாடல். கல்லூரிவிழாவில் பாடி இருக்கிறேன் என்று சொன்னார்கள்.
தென்னகத்து ஜேமஸ்பாண்ட் என்று பெயர் எடுத்தவர்.
இரண்டு மகன்களும் அப்பாவைப்பற்றி சொன்ன காணொளிகளை கேட்டு இருக்கிறேன். நல்ல மனிதர், மனிதநேயம் மிக்கவர். கருணை இல்லம் போன்ற உதவும் இல்லங்களில் தான் தன் பிறந்த நாளை கொண்டாடுவார் என்பார்கள்.
அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன் மா.
எனக்கும் மிகப் பிடித்த நடிகர்.
ஸார் அந்தப்பாடலைப் பாடி இருக்கிறாரா. சிங்கத்துக்கும் பிடிக்கும்
எப்படி இதெல்லாம் பிடிக்கிறது என்று நான் ஆச்சரியப் படுவேன். அக்காவுக்குப் பிடிக்குமா.நல்ல ரசிகை.!
ஆமாம் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப். பட்டார்:)சில படங்களில் அந்த இசை கூட வருவதைப் பார்ததிருக்கிறேன்
நம்ம ஊர் ஆக்ஷன் கிங். நன்றி மா..
அருமையான பாடல்கள்...
ஜெய்சங்கர் படங்களின் பாடல்கள் அனைத்துமே பிரபலமானவை. நிறையக் கேட்டிருக்கேன். அந்நாட்களில் பள்ளியில் கூடப் படிக்கும் மாணவிகளில் பலர் ஜெய்சங்கரின் ரசிகைகளாகவும், மற்றப் பலர் ரவிச்சந்திரனின் ரசிகைகளாகவும் இருப்பார்கள். இரண்டு கோஷ்டிகளும் சண்டை போட்டுக் கொள்ளும். நான் அதிகம் ஜெய்சங்கர் படங்கள் பார்த்ததில்லை. பின்னாட்களில் தொலைக்காட்சி தயவில் பார்த்தவையே! இருந்தாலும் பாடல்கள் அந்நாட்களில் எல்லோரையும் முணுமுணுக்க வைக்கும். முக்கியமாக "நான் மலரோடு தனியாக" ! நல்லதொரு பதிவு. இவரை நேரில் பார்த்ததில்லை. என் அண்ணா பார்த்துவிட்டுக் கரடிக்குட்டி மாதிரி இருக்கார் என வேடிக்கையாகச் சொல்லுவார்.
நல்ல மனிதர். குடிப்பழக்கத்தால் விரைவில் உயிரிழந்தார் என்பார்கள். தொண்டுள்ளம் கொண்டவர் தான். அவன் மனைவியும் மருத்துவர் மகன்களும் மருத்துவர்கள். தொண்டு தொடர்ந்து வருகிறார்கள். விஜய்சங்கர் கண் மருத்துவத்தில் சிறப்பான பெயர் பெற்றிருக்கார். ஜெயலலிதா தான் இவரை விரும்பினதாகவும் இவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் சொல்வார்கள்.
காலிஃப்ளவர் பொரியலைத் தேடி வந்தால் பக்கமே இல்லை என்கிறதே! :( !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அன்பு தனபாலன் , மிக நன்றி மா.
கீதாமா,
உங்க அண்ணா பார்த்துக் கரடி குட்டின்னு சொன்னாரா? ஹாஹ்ஹா.
அப்படி இருந்திருக்கும் அவர் தோற்றம். நான் நேரில் பார்த்ததில்லை மா.
மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் ட்ராமாவில்
அவர் நடித்திருப்பதாக மாமியார் சொல்வார்.
ரவிச்சந்திரனுக்கும் அவருக்கும் நல்ல போட்டி இருந்தது.
இருவரும் சேர்ந்து கூட நடித்தார்களோ
நினைவில்லை.
நாங்க இரண்டு பேரையுமே ரசிப்போம்.
பஞ்ச வர்ணக்கிளி, இதய கமலம்
இரண்டு படங்களையும் மதுரையில் தான்
பார்த்தேன்.
''''கேட்கிறேன். நல்ல நாள் பார்க்கவோ சுவாரஸ்யமான பாடல். இருவரது நடனமும் வேடிக்கையாக இருக்கும். சமீபத்தில் நானும் பகிர்ந்திருந்தேன்! ''''
இது எப்போ??
அன்பின் கீதாமா,
ஜெய்சங்கருக்குக் குடிக்கும் பழக்கம் இருந்ததா?
அடக் கடவுளே:(
நான் அதைக் கவனிக்கவில்லையே.
அவர் குழந்தைகளுக்காவது அந்தப் பழக்கம் இல்லாமல்
இருக்க வேண்டுமே.ஆமாம், ஜெயலலிதா விரும்பினதாகவும்
இவர் குடும்பத்தினர் விரும்பவில்லை என்றும் சொன்னார்கள். நடுவில்
மக்கள் திலகம் இந்த நட்பைத் துண்டித்ததாகவும் சொன்னார்கள்.
என்னவோ கலைஞர்களின் வாழ்க்கை இப்படி
கெட வேண்டாம்.
நன்றி கீதாமா.
அன்பு கீதாமா,
காலிஃப்ளவர் பொரியல் இப்போதுதான்
பப்ளிஷாகி இருக்கிறது மா.
உங்களுக்குப் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்.
தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்.
பல புதிய தகவல்களும் அறிந்தோம்.
அவரது படங்கள் சில பார்த்ததுண்டு. காணொளிகளை பிறகே பார்க்க இயலும்.
அன்பின் மாதேவி,
எங்க காலத்து ஹீரோ அவர்.
பாடல்கள் மிகவும் பிடிக்கும். மிக நன்றி அம்மா. நலமுடன் இருங்கள்.
அன்பின் வெங்கட் ,
நலமுடன் இருங்கள்.
மெதுவாகப் பார்க்கலாம். அவசரம் இல்லை.
Post a Comment