Blog Archive

Friday, August 27, 2021

சாம்பல் பூசணி இலை பக்கோடா புதுவிதம்.


பூசணிக்காய் உபயோகம் தான் எனக்குத் தெரியும்
இங்க்வ் கொடுத்திருப்பது போல
அதன் இலையும் சமையல் ஆகும் 
என்று இப்போதுதான் பார்க்கிறேன்.

இன்னோரு பதிவில் இந்தப் பூசணி இலைகளைப் பறித்துக்
கீரை மாதிரி மசித்துச் சாப்பிட்டார்கள். 
குழம்பும் அதுதான். பொரியலும் அதுதான். 

கிராமங்களில் அப்படித்தானே சாப்பிடுகிறார்கள்!!

பார்க்க நன்றாக இருந்தது.

18 comments:

ஸ்ரீராம். said...

இலைகளையே பார்த்துப் பார்த்துப் பார்த்துப் பறிக்கிறார்.  எல்லா இலைகளையும் பறித்து விடுவதில்லை.  முற்றியும் இல்லாமல், ரொம்ப இலேசாகவும் இல்லாமல்...!  அப்புறம் அவர் பொறித்துத் தருவதை சுவைக்கும் ஆவல் வருகிறது!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.

மிக லாவகம். இதற்கெல்லாம் எவ்வளவு பொறுமை வேண்டும்!!
அத்தனை ஆட்கள் உட்கார்ந்திருக்கும் போது
ஆளுக்கு ஒன்று தான் கிடைக்கிறது.
பாவங்கள் . அப்புறமா செய்து கொடுப்பாரோ என்னவோ!!!

சிறப்பாக இயற்கையாகச் செய்திருக்கிறார்கள்.
இன்னும் எத்தனை வகையான
உணவுகள் இருக்கின்றனவோ!!!
ஒரு வீடியோவில் இரண்டு இலைகளை ஒன்றாகப்
போட்டு, நிறைய சாதத்தை அதில் வடித்துக் கொட்டி,
மூன்று பேர் சேர்ந்து உண்டார்கள்.
எந்த ஊரோ தெரியவில்லை.
அதனால் பதியவில்லை.

KILLERGEE Devakottai said...

ஸூப்பர் அம்மா

Geetha Sambasivam said...

நம்ம அதிரடியும், ஏஞ்சலும் பூஷணி, பறங்கி இலைகளைச் சமைத்துக் குறிப்பும் கொடுத்திருக்காங்களே! ஆகவே சாப்பிடலாம் என்றே நினைக்கிறேன். செய்து பார்த்துப் பிடித்தால் தொடரலாம்.

நெல்லைத் தமிழன் said...

இந்த இலையில் கரேமது செய்வார்கள் என்பதே அதிரா எழுதினப்பறம்தான் எனக்குத் தெரியும். நாங்கள் யாருமே இந்த இலையை உபயோகித்ததில்லை. (அதுபோலவே முள்ளங்கி இலைகளையும்)

Geetha Sambasivam said...

முள்ளங்கி இலைகளில் விதம் விதமாகப் பண்ணலாம். பஜியா போடும்போது கூட நறுக்கிச் சேர்க்கலாம். தக்காளி, வெங்காயம் போட்டு வதக்கலாம். பாசிப்பருப்புப் போட்டு இலைகளை நறுக்கிச் சேர்த்துக் கறி பண்ணலாம். பாசிப்பருப்புச் சேர்த்து தேங்காய், ஜீரகம் அரைச்சுக் கூட்டுப் பண்ணலாம்.பருப்பு உசிலி பண்ணலாம்.பொடியாக நறுக்கிச் சப்பாத்தி மாவில் சேர்த்துச் சப்பாத்தி பண்ணலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,

வந்து ,காணொளியைக் கண்டதற்கு மிக நன்றி மா.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள்.
அதிரடியும், ஏஞ்சலும் பதிவிட்டதை
நான் பார்க்கவில்லையோ,
இல்லை படித்ததை மறந்தேனோ
தெரியவில்லை.:(

சேம்பு இலையைப் பாட்டி கொண்டாடுவார். வீட்டில் இருந்தது.
அதில் அடை மாவை வைத்து
செய்யும் பலகாரம் நன்றாக இருக்கும்.
நீங்களும் வந்து பார்த்ததில் மகிழ்ச்சிமா.

இன்னோரு காணொளியில் இலையின் நரமபை எடுத்து விடுகிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

இந்த இலையில் கரேமது செய்வார்கள் என்பதே அதிரா எழுதினப்பறம்தான் எனக்குத் தெரியும்.////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

எனக்கு அது கூட நினைவில் இல்லை முரளிமா.
சில காலங்கள் வலைப்பக்கம் வராமல் இருந்திருக்கிறேன்
என்று புரிகிறது.

இது போல இன்னும் நல்ல காய்கறி இலைகளின் நன்மையைப்
படிக்க வேண்டும்.
மருமகள் மூலி பராத்தா என்று முள்ளங்கி
இலைகளை வைத்து செய்வார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
இப்போதான் நெல்லைக்கு எழுதினேன்.
மெயிலில் உங்கள் பின்னூட்டம் வந்திருக்கிறது:)

முள்ளங்கி இலைகளின் சிறப்பை
வட இந்தியாவில் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

கோயம்பத்தூரில் வளப்பமான முள்ளங்கிக்
கீரை கிடைக்கும்.
பின் வீட்டில் இருந்த சேத் மாமி இதெல்லாம் கொண்டாடுவார்.

இங்கே கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.
இங்கே இருப்பவர்களுக்கு எது பிடிக்கிறது என்று
யோசிப்பதே பெரிய வேலை:)))
நன்றி மா.

மாதேவி said...

விடியோக்கள் பார்கிறேன். பூசணி இலையில் நாங்கள் பொரியல் செய்வோம்.

கோமதி அரசு said...

பக்கோடா செய்து எல்லோருக்கும் கொடுத்து சாப்பிடுவது மகிழ்ச்சி.
வங்காள சமையல் மிக அருமையாக செய்தார்.
சின்ன அம்மியில் அரிசியை அரைத்து செய்தவிதம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
இனிய காலை வணக்கம்.

பூசணி இலை உபயோகமாகும் என்றே தெரியாதம்மா.

இயற்கையை ரசிக்கத் தெரிந்தவர்களே
நன்றாகவும் உண்ண முடியும். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

வங்காள கிராமம் அஸ்ஸாம் பார்டர் என்றார்கள்.
பொறுமையாக அந்தப் பெண்மணி
செய்கிறார்,

எனக்கு இதெல்லாம் புதிது. நன்றி மா.

மாதேவி said...

சுவையாக செய்கிறார்கள். அவர்கள் முகங்களில்தான் எவ்வளவு மகிழ்ச்சி நலமாக இருக்க வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

பூசணி இலை பகோடா... ஆஹா... சில இலைகளில் பகோடா இங்கேயும் செய்வதுண்டு. காணொளி பிறகு பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நலமுடன் இருங்கள்.
நீங்கள் சொல்லும் அந்த மகிழ்ச்சிதான் எனக்கும் பிடித்தது.
எளிமையான மக்கள்.
இருப்பதைக் கொண்டு சிறப்புடன்
வாழக் கற்றவர்கள்.
உங்களுக்கும் பிடித்ததே மகிழ்ச்சிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
எனக்கும் இது புதிது.
நிறையப் புது விஷயங்கள் கற்கிறோம்.
இறைவனுக்கு நன்றி.