வல்லிசிம்ஹன்
ரயில், விமானம், பேருந்து என்று
பயணங்கள் மிக மும்முரமாக
நடந்த காலம், குழந்தைகள் உடன் தான்.
அவர்களுடைய பள்ளி விடுமுறையை ஒட்டி
சென்ற இடங்கள் மறக்க முடியாதவை.
1974இல் சொந்தமாக நாலு சக்கர வண்டி வந்ததும்
ரயிலில் போவது கூட நின்று போனது.
பிறகு பாஸ்போர்ட் எடுக்கும் வேலை.
விசா வாங்கும் நேரம்.அப்படிச் சென்ற காலங்களில்
ஆறு மாதம் வெளியூர்,
ஆறு மாதங்கள் உள்ளூர் என்று ஆனது.
சிங்கம் இருக்கும் வரை மோட்டார் பைக்கில் தொடர்ந்து,
அதன் பிறகு
அவர்கள் வெளியூர் சென்ற போது
விமானப் பயணங்களாக தொடர்ந்தது.
இப்போது மும்முரமாக பழைய பயணங்களை
மனதில் நிறுத்தி, இணையத்தில் பார்க்கும் வேலை.
அவற்றில் சில இங்கே பதிகிறேன்.
22 comments:
நல்ல ஜோடிப் பொருத்தம் இருவரும் பைக்கில் பயணம் செய்வது, உலகம் முழுவதும் சுற்றி வந்தது. இசைபட வாழ்தல் என்பது போல் பழைய இந்தி பாடல்களை பாடி ரசித்து பயணம் செய்து இருக்கிறார்கள்.
முட்டி ஆப்ரேஷன் செய்து கொண்ட பின்னும் விடாமுயற்சியால் பயணம்
இருவருக்கும் மனபலம் இருக்கிறது. எதையும் சாதிக்க விரும்புவர்கள்
வாழ்த்துக்கள்.
உங்கள் மலரும் நினைவுகளும் அருமை.
மதுரை அதிரசம் சாப்பிடுவது அருமை. சூடாய் வாங்கி சாப்பிடலாம்.புது மண்டபம் கடை அருமை, கோபு அய்யங்கார் ஓட்டல் போனது இல்லை போக வேண்டும்.விசாலம் காப்பி கடை போனது இல்லை. தங்கையிடம் கேட்க வேண்டும். தென்னைகுருத்து சாப்பிடுவார்கள் பார்த்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் தென்னையை வெட்டி கொண்டு போன போது கேட்டு வாங்கி இருக்கலாம் குருத்தை என்று சொன்னார்கள்.
பின்னனியில் பாடல் அருமை. பருத்தி பால் ஒரு முறை குடித்து இருக்கிறேன்.
ஒரே நாளில் எல்லாம் ருசி பார்த்து இருக்கிறார்கள்!
பர்மா இடியாப்பம் பார்க்கவே அருமை.43 வருட பழமையா? தெரியவில்லையே! ஆஸ்பத்திரில் எல்லோரும்வாங்கு வார்கள்.மருத்துவர்கள்
எல்லோரும் இடியாப்பம்தானே சாப்பிட சொல்கிறார்கள்.
புட்டு கடை நிறைய இருக்கும், கேப்பை புட்டு அருமை.
கர்நாடக ராகி களியை சொல்கிறார்.
முள்ளு முருங்கை பூரி, கீரை வடை எல்லாம் விற்கும் மாலை நேர கடை நிறைய இருக்கும்.மீனாட்சி பவன் ரவை தோசையும் அருமை.சபரி ஓட்டல் போய் இருக்கிறோம். சிறுமலை மலை வாழைபழத்துடன் நிறைவு பெற்றது.
மதுரை போகும் ஆசை வந்து விட்டது.
சிறு வயதிலிருந்தே பயணங்கள் அதிகம் செய்ததில்லை. வீட்டு கல்யாணம், காட்சிகளுக்கு கூட அப்பா அதிகம் அழைத்துச் சென்றதில்லை. அதே பழக்கமோ என்னவோ, இன்னமும் அப்படியே தொடர்கிறது! பயணங்கள் இனிமைதான்.
கோபு அய்யங்கார் கடை ரொம்ப பேமஸ். ஆனால் கடை சின்னதாகத்தான் இருக்கும். கீதா அக்காவுக்கும் தெரியும். சபரி ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறேன். விசாலம் காபி இரண்டு மூன்று இடங்களில் இருக்கிறது. அங்கும் காபி குடித்திருக்கிறேன். நன்றாய் இருக்கும். (இன்று எங்கள் தளத்திலும் காபி புராணம்!) மதுரையில் ஜிகர்தண்டா பேமஸ். மேலும் தென்னங்குருத்தை வெட்டி வைத்துக் கொண்டு விற்பார்கள். அப்புறம் பீமபுஷ்டி அல்வா! ஹேப்பிமென் முந்திரி அல்வா.. (நெல்லை இதைப் படிக்காமல் இருக்க வேண்டுமே...)
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
எனக்கும் அந்த பைக் தம்பதிகளைப் பார்த்து மகிழ்ச்சியாக
இருக்கிறது.
லடாக் எல்லையில் அவரை பட்டாளத்தைச் சேர்ந்தவர் என்று
நினைத்து வரிசைக்கு முன்னால்
அவரை உள்ளே விட்டது சிரிப்பை வரவழைத்தது.
எங்களுக்கும் இது நடந்திருக்கிறது. சில நபர்களின்
தோற்றம் அப்படி!!
நன்றாக நீண்ட நாட்கள் அவர்கள் பயணம் செய்யட்டும்.
நன்றி மா.
"பின்னனியில் பாடல் அருமை. பருத்தி பால் ஒரு முறை குடித்து இருக்கிறேன்."மதுரை போகும் ஆசை வந்துவிட்டது. ஆஹா!
நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள்:)
தென் மாவட்டங்களில் பின்னணியில் திரைப் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்தப் பதிவில்
காதலின் தீபமும் இங்கே ஒலிக்கிறது.
இன்னோரு பாடல் என்னவென்று தெரிய வில்லை.
காலையிலிருந்து இரவு வரை சாப்பிட்டுக் கொண்டே இருப்பது போல
ஒரு தோற்றம்.:)
எல்லாமே அருமை. கீரை வடை வேறு மாதிரி செய்கிறார்கள்
பார்த்தீர்களா!!!!
நீங்கள் முதலில் மதுரை சென்றவுடன் நானும்
வர முயல்கிறேன்.
தங்கையிடம் கேட்டு சொல்லுங்கள்.
எல்லோருமாகப் போய் வரலாம்.
இரயில் பயணம் பிடித்தது...
பயணங்கள் செய்ய முடியாத போது இது போன்ற காணொளிகள் வழி பயணிப்பது தான் எனக்கும் வழக்கமாக இருக்கிறது. தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் இப்படி பயணிக்கிறேன்.
காணொளிகளை பிறகு காண்பேன்.
//அப்புறம் பீமபுஷ்டி அல்வா! ஹேப்பிமென் முந்திரி அல்வா.. (நெல்லை இதைப் படிக்காமல் இருக்க வேண்டுமே...)// படித்துவிட்டேன் ஸ்ரீராம். உங்கள் வீட்டில் நல்ல செய்தி வரும்போது இதை எனக்கு மறந்துடாம கொடுத்திடுங்க ஹாஹா.
மதுரையில் நான் இருந்தபோது படித்துக்கொண்டிருந்தேன். ஹாஸ்டல். கையில் காசு புழக்கம் கிடையாது. அப்பால்லாம் பணம் ரொம்ப ரொம்பக் கொஞ்சமே கொடுப்பார். அனைத்துக்கும் கணக்கு வேணும் என்பார். இரண்டு வருடங்கள் படிப்பை முடித்த பிறகு, 14,000 ரூபாய்க்கு (இரண்டு வருடச் செலவு) கணக்கு எங்கே என்றார். எழுதி வச்சிருந்தேன்... எங்கயோ தவற விட்டுட்டேன் என்றேன். 'ஜந்து ஜந்து' என்று திட்டினார். ஹாஹா
மதுரையில் சீனி மட்டும் உபயோகித்துச் செய்யும் ஐஸ்க்ரீம் கடை ஒன்று அப்போது உண்டு. நாகமலைப் புதுக்கோட்டையிலிருந்து காலேஜ் ஹவுஸில், பட்டர் நான் சாப்பிடுவோம், கற்பகம் ஹோட்டலில் சாப்பிடுவோம். அசோக் ஹோட்டலுக்குச் செல்வது வெகு அபூர்வம். இருந்த காசுக்கு பஸ் ஸ்டாண்டில் மினி மீனாள் புரோட்டா கடையில் சாப்பிடுவோம் (சில வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தபோது...இங்கயா சாப்பிட்டோம் என்று நினைத்துக்கொண்டேன்). அப்புறம் என்னுடன் படித்த நாடார் நண்பர்கள் வீட்டுக்குச் செல்வேன். அவங்க ரொம்ப வற்புறுத்தி சாப்பிடச் சொல்வார்கள். தயக்கமாக இருக்கும். அவர்கள் இரவில் மோர் கொடுக்க மாட்டார்கள். அதனால் எனக்கு சாதம், ஜீனி, பால் கலந்து சாப்பிடுவேன். ஒரு நண்பன் வீட்டில் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கரேமது போட்டுக் கலங்கடித்துவிட்டார்கள்.
மதுரையில் என்ன என்னவோ நினைவுகள்.
அன்ப்ன் தனபாலன்,
நலமுடன் இருங்கள்.
எனக்கும் மிகப் பிடித்தது இரவு நேர ரயில் பயணங்கள்.
நானும் சிங்கமும் கடைசியாகச் சேலம் சென்று வந்தோம்.
ரசிக்கவில்லை அம்மா. முதல் வகுப்பிலேயே
சுத்தம் போதவில்லை.
மதுரை வண்டி சுத்தமாக இருப்பதாகச் சொன்னார்கள்.
நன்றி ராஜா.
அன்பின் ஸ்ரீராம்,
பயணம் எவ்வளவு இனிமை அம்மா.
அப்பா ஏன் அழைத்துச் செல்லவில்லையோ.:(
இப்போது உங்கள் தினசரிப் பயணமே த்ரில்லிங்காக
அமைந்துவிடுகிறது.
சீக்கிரமே நல்ல பயணங்கள் அமைய வாழ்த்துகள்.
பாட்டி தாத்தா மதுரையில் இருந்ததால்
எந்த ஊரிலிருந்தாலும் இரண்டு தடவை,
பக்கத்திலிருந்தால் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை
பழங்கா நத்தம் சென்று விடுவோம்.
கோபு ஐய்யங்கார் கடை பழைய கடை
நினைவு இருக்கிறது. கீதாமா
வந்து சொல்லாதது ஒரு குறைதான்.
சீக்கிரம் உடல் நலம் பெறட்டும்.
மதுரை மிகப் பிடித்த ஊர் அப்போது.
2019இல் சென்ற போது ஒரே இரைச்சல்.
அரசியல் பேச்சுகள். பிரேம நிவாஸ் அல்வா
வாங்க நினைவில்லை.
கோவில் மற்றும் பசுமையாக நினைவில்.
தென்னங்குறுத்து மிக இனிமை.
பெரியவன் சொல்லி தான் பார்த்தேன்.
மதுரையில் பிறந்தவனுக்கு மதுரைப் பாசம்:)
நன்றி மா.
அன்பின் வெங்கட், மெதுவாகவே பாருங்கள்.
இந்த வழியில் நம் பயணங்கள் இருக்க வேண்டும் என்பதில்லை.
நல்ல நேரங்களுக்குக் காத்திருப்போம்.
யூடியூப் இருப்பதுதான் எவ்வளவு
சௌகர்யம்!!
அன்பின் முரளிமா,
ஸ்ரீராம் வீட்டில் நல்லது சீக்கிரமே நடந்து
நம் எல்லோருக்கும் முந்திரி அல்வா
கிடைக்கட்டும்.
பலவித காலங்களில் பலவித உணவுக் கடைகள்
பிரபலம். எங்களுக்கெல்லாம் காலேஜ் ஹௌஸ் தான்
பிரதானம்.
அடுத்தாற்போல நாகப்பட்டினம் அல்வா கடை.
அதே வீதியில் பக்கோடாவும் கிடைக்கும்.
அப்பாவுடன் துணிக்கடைக்குப்
போகும் போது எல்லாம் சாப்பிடக் கிடைக்கும்.
அம்மா எல்லோரையும் கணக்கு எழுதச் சொல்வார்.
தம்பிகள் அணாக்கணக்கு சரியாக வைத்திருப்பார்கள்.
பெரிய தம்பிக்கு வருடக் கடைசியில் தான் ஸ்காலர்ஷிப்
பணம் வரும்.
மாதாமாதம் அப்பா பணம் அனுப்புவார்.
சின்னவன் சினிமாப் பிரியன்.
அப்பா அவனை அவன் போக்கில் விட்டுப்
பிடிப்பார்.
அன்பு முரளிமா,
மினி மீனாள் ஆ?
என்னெல்லாம் பெயர் வைக்கிறாங்க.:)நாகமலை காலேஜில் படித்தீர்களா?
"ஒரு நண்பன் வீட்டில் தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கரேமது போட்டுக் கலங்கடித்துவிட்டார்கள்." ஏன். கத்திரிக்காய் பிடிக்காதா?
ஓ. பால் சாதத்துக்குக் கத்திரிக்காய் எப்படித் தொட்டுக் கொள்ள முடியும்.:)
எங்க பெரியவன் கூட யார் வீட்டுக்கோ
போய் சாப்பிட்டுவிட்டு, வந்து சிரமப் பட்டான்!!
எல்லாம் அனுபவப் பாடம் தான் மா.
உணவு என்றாலே பசியும் ருசியும் சேர்ந்த அழகு.
பாதிக்காத வரையில் அருமைதான்.
மிக நன்றி மா.
ஆனால் அந்த நாடார் நண்பர்கள் வீடுகளில் ப்யூர் அன்பு. (என் பின்னணி தெரிந்திருக்கும். கீழநத்தத்தில், அடுத்த வீடுகளில் தண்ணீரே சாப்பிடாமல் இருந்தவன்).
ஆனால் அந்த நண்பர்களின் தொடர்பு பிறகு விட்டுப்போய்விட்டது.
மதுரை பேருந்து நிலையத்தில் இப்போதும் அந்தக் கடை இருக்கும் என்று நினைக்கிறேன். அவங்க குருமா, இஞ்சிலாம் போட்டு (85ல்) நன்றாக இருந்தது.
மிக மகிழ்ச்சி முரளிமா.
என் தோழி கூட விருதுனகரில் இருக்கிறாள்.
தொடர்பு விட்டுப் போச்சு. அந்தக் குடும்பமே
எனக்கு நெருங்கிய நட்புகள் தான். அவள் அண்ணன் எனக்கும்
அண்ணன்.
அவள் அம்மா எனக்கும் பள்ளிக்கூடத்துக்கு
இட்லி பூ மாதிரி அனுப்புவார்.
எல்லாம் பழங்கதை ஆனது. திண்டுக்கல்
நாடார்கள் நிறைந்த இடம்.
திருமணமாகும் வரை தெரியவில்லை.
பிறகு இப்போது வரை அந்த அன்பை மிஸ்
செய்கிறேன்மா.
உங்கள் நட்புகளுக்கு வாழ்த்துகள்.
இனிய காட்சிகள்.
எங்கள் குடும்பத்தினர்களுக்கு பயணங்கள் செல்வது மிகவும் பிடித்தமானது.தற்பொழுது செல்லமுடியாத சூழலில் நிறுத்தி உள்ளோம்.
புத்தக வாசிப்புகளில் அந்த மகிழ்ச்சியை பெறுகிறோம்.
அன்பின் மாதேவி உண்மையே.
இந்தக் காலம் எல்லோரையும் முடக்கிப் போட்டு
இருக்கிறது.
எங்கு போகவும் தயக்கமாகவும் இருக்கிறது. அதுவும் இந்த ஊரில்
புது தொற்று வேறு ஆரம்பித்த்ருக்கிறது.
பொறுமையாகத் தான் இருக்க வேண்டும் மா.
பயணம் செய்ய ஆசை தான். ஆனால் உணவு ஒரு தொந்திரவு. ஒத்துக்கொள்ளாமல் படுத்தி எடுக்கும். இப்போவும் அப்படித்தான். மருந்துகள் ஒத்துக்கொள்ளாமல் வயிற்றுத் தொந்திரவு! :(
முந்திரி அல்வா ஶ்ரீராம் சொல்லித் தான் கேள்விப் பட்டிருக்கேன். பிரேமவிலாஸ் ஓட்டலும் கூட!
Post a Comment