இங்கே எல்லோரும் அவரவர் மாமியார், அம்மா
என்று கண்டு வருவதற்காக
இந்தியா சென்றிருக்கிறார்கள்.
மகளின் நட்புகள் செல்லப் ,
பின் தங்கி இருப்பவர்கள் கணவர்கள்.
எல்லோருக்கும் சமைக்கத் தெரியும்.
இருந்தாலும் மகளும் மற்றவர்களும் வாரத்தில் இரண்டு நாட்கள்
அவர்களுக்கு
நிறைய குழம்பு,கூட்டு,ரசம் என்று
செய்து வீட்டு வாசலில் வைத்து விடுகிறார்கள்.
நேற்று அதுபோல நோய் வாய்ப்பட்டுத்
தெளிந்து வரும் ஒரு குடும்பத்துக்கும்
கொண்டு போய்க் கொடுத்தோம்.
கடவுள் நம் சோதனையை எல்லாம் தீர்த்து நல் வழிக்கு'
அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை
அந்தக் குடும்பத்தில் பார்த்தேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++
ஒவ்வொரு குடும்பங்களிலும் தாய் தந்தை மகன் மகள் என்று
எல்லோரும் வேலைக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய
நாள் வந்துவிட்டது.
இத்தனை நாட்கள் அடங்கி இருந்த தொற்றும் வேறு வடிவம் கொண்டு
வெளியே வருகிறது.
முகக் கவசம் போடு என்று அரசு சொன்னாலும்
போட மாட்டேன் என்று சொல்பவர்களும்.
தடுப்பூசி கெடுதி என்று பிரச்சாரம் செய்பவர்களும்
இருக்கிறார்கள்.
இதற்கும் இறைவனே கதி என்று தான்
டவுனுக்கும் வீட்டுக்கும் ரயில் பயணம் செய்கிறார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2012 இல் ஆகஸ்டில் நடந்த தமிழ்ப் பதிவாளர்கள்
சந்திப்பில் கலந்து கொண்டபோது எடுத்த
புகைப்படங்கள், அப்போது வலைப்பதிவர்களியே
இருந்த பாசத்தைக் காண்பித்தது.
அதற்குப் பிறகும் இப்போதும் நம்முடன்
அதே அன்போடு இருப்பவர்களின் தொடர்பு
புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெளியில் வரும் சூடு உடல் உறுப்புகளைப்
பாதிக்கிறது. தலை, வயிறு இவற்றில்
வலி அதிகமானால் எந்த விஷயத்திலும்
ஈடுபட முடியவில்லை.
இதையும் கடக்கலாம்.
அனைவரும் உடல் ,மன ஆரோக்கியத்துடன் இருக்க
இறைவன் அருள வேண்டும்.
26 comments:
பலவித எண்ணங்களின் கலவை ரசிக்க வைத்தது.
குழம்பு, ரசம், கறிவகைகள் செய்துகொடுப்பது நன்று. துபாயில், வார இறுதியில், பழக்கமில்லாத மும்பை நண்பர் வீட்டில் சென்று அவர் சமைக்க நாங்கள் சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது.
தொற்று, பலவித வடிவங்களில் தொடரும் என்றுதான் தோன்றுகிறது. பூதத்தை வெளியில் விட்ட பிறகு, அதைத் திரும்ப அடைப்பது எளிதல்ல. வெவ்வேறு வடிவங்கள் எடுக்கும். ஆனால் இனி அது fatalஆக இருக்காதுன்னு தோணுது.
நண்பர்கள் குடும்பங்களுக்கு உணவு அளிப்பது மகிழ்சி.
ரோஜா மலர் அழகு.
8 சக்தி பிக்க வார்த்தைகள் அருமை.
//மகளும் மற்றவர்களும் வாரத்தில் இரண்டு நாட்கள்
அவர்களுக்கு
நிறைய குழம்பு,கூட்டு,ரசம் என்று
செய்து வீட்டு வாசலில் வைத்து விடுகிறார்கள்//
நல்ல உதவி. உடல் நலம் இல்லாதவர்களுக்கும் உணவு கொடுத்தது மிக நல்ல செயல்.
இறைவன் மேல் நம்பிக்கை இருந்தால் வரும் இன்பம், துன்பம் அனைத்தையும் கடக்கும் மனபலம் தருவார்.
பாடல் பகிர்வு அருமை. நானும் ஒரு பதிவில் இந்த பாடலை பகிர்ந்து இருக்கிறேன், பிடித்த பாடல் எனக்கு.
உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள்.
அன்பு முரளிமா,
இன்னும் எத்தனையோ எழுத விட்டுப் போகிறது.
சுற்றி நடக்கும் விஷயங்கள். ,சமூகத்தில் நம் ஈடுபாடுகள் எல்லாமே
கடந்த ஒரு வருடமாக மாறிக் கொண்டே வருகின்றன,
உயிர், ஆரோக்கியம் பிரதானம், அதைவிட மற்றவர்களிடம் வைக்கும் நேசமும்
வளம் பெறுகிறது.
அதைத்தான் எழுதினேன் மா.
ஆமாம் இந்த நோய்த் தொற்று சற்றே சங்கடப் படுத்தி மறைகிறது என்று நம்ப முடிகிறது.
நன்றி மா.
அன்பின் மாதேவி,
நலம் எங்கும் பெருகட்டும்.
மிக நன்றி மா.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
முக்கியமாக சில நெருங்கிய உறவுகளுக்காக
இதைப் பதிவிட்டு வாட்ஸாப்பில் அனுப்பி இருந்தேன்.
தினம் தினம் நானும் படிக்கிறேன்.
நேற்று நாங்கள் உணவு கொடுத்த இடத்தின்
குடும்ப உறுப்பினர்,
உடலுருக்கும் ,சிதைக்கும் நோயிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறார்.
அவரின் குழந்தைகள்
சென்ற மாதத்தைக் கலக்கத்தில் கழித்தனர்.
இந்த ஊர் வைத்தியம் அவரை மீட்டிருக்கிறது.
இங்கே அனைத்துத் தமிழ் மக்களும், இந்தியக்
குடும்பங்களும் கடவுள் கிருபையில்
ஒற்றுமையாகச் செயல் படுகின்றனர்.
நீங்களும் இந்தப் பாடலைப் பதிந்திருப்பதைக் கேட்டு மகிழ்ச்சிமா.
மிக அருமையான சற்றே சோகம் படிந்த
கருத்துள்ள பாடல். என் மனதைவிட்டு எப்பொழுதுமே
அகலாத வரிகள்.
நீங்களும் நானும் பேசியது போல
பின்னர் நடப்பதை முன்பே அறிந்துவிட்டோமோ
என்ற சந்தேகம் வருகிறது!!
மிக நன்றி மா.
உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் அம்மா. தலை வயிறு என்று இல்லை, எந்த வெளியானாலும் வழக்கமான பணிகளில் உற்சாகமாக ஈடுபடமுடிவதில்லை.
ஊருக்குச் சென்றிருக்கும் குடும்பங்களில் தனித்து உள்ளவர்களுக்கு உதவி.. காலத்தினாற் செய்த உதவி.. நல்ல விஷயங்கள் பாராட்டுக்குரியவை.
தொற்று இல்லை என்று சொல்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். தொற்று இருக்கிறது என்று நம்பினாலும் மாஸ்க் போடாதவர்களும் இருக்கிறார்கள். எங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரர் உட்பட!!
// ..தலை வயிறு என்று இல்லை, எந்த வெளியானாலும் //
வலி என்று படிக்கவும்! வெளி இல்லை!!
இன்னும் இரண்டு கமெண்ட்ஸ் போட்டிருந்தேன்.. காணோமே....
அன்பின் ஸ்ரீராம்,
உண்மைதான் மா.
மனசு சங்கடம், உடல் சங்கடம் இருக்கும் போது
எதிலுமே ஈடுபாடு இருக்காதுதான்.
நல்ல நாளில் நன்மை நாடி நன்றாக இருங்கள்.
இறைவனை வேண்டிக் கொள்வோம்.
வணக்கம் சகோதரி
தங்கள் எண்ணப்பகிர்வுகள் அருமை. நம்பிக்கையூட்டும் வரிகள் சிறப்பானவையாக இருக்கின்றன. அனைவருக்கும் உதவும் எண்ணத்துடன் நட்புகளுக்கு சமையல் செய்து தருவதும், உடல்நிலை சரியில்லாவர்களுக்கு தங்கள் குடும்பம் செய்த உதவியும் கண்டு மனம் நெகிழ்கிறது. சீக்கிரமாக இந்த தொற்று நம்மை விட்டு பூரணமாக அகல பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
சீதோஷ்ண மாற்றத்தால் வரும் வலிகள் உடல் நிலையை பாதிப்பதுடன் மனதையும் சங்கடப்படுத்துகிறது என்பது உண்மைதான். எந்த ஒரு கவனிப்பும் குடும்பத்திற்காக அக்கறையுடன் எடுத்து கவனிக்க முடியாதபடிக்கு எனக்கும் ஒரு வார காலமாக முதுகிலும், நெஞ்சிலும் வாய்வு பிடிப்பு அவஸ்தைபடுத்துகிறது. சரியாகி விடும் என்ற நம்பிக்கை, நாட்களை தள்ளிக் கொண்டே சொல்லிச் செல்கிறது.
தாங்களும் உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள்.தேவையான மருந்து எடுத்துக் கொண்டு, ஓய்வும் நன்றாக எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு வரும் சீதோஷ்ண மாற்றங்கள் (மழை,சூறாவளி காற்று) நீங்கள் பகிரும் போது எனக்கும் வருத்தமாக இருக்கும். கவனமாக இருங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்க நாராயணனை நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி
ரோஜா மலரின் அழகு மனதை கவர்கிறது. பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போன்ற அவ்வளவு அழகு. அதன் அழகான ஒவ்வொரு இதழ்களும், நமக்கு மனபலத்தை தருவதாக உணர்ந்தேன். இதைச் சொல்ல விடுபட்டு போய் விட்டது. அழகான மலரை பகிர்ந்தமைக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எண்ணங்களின் கலவை நன்று.
உடல் நலலத்தினை கவனித்துக் கொள்ளுங்கள். நலமே விளையட்டும் அம்மா.
உடல் நலத்தை நன்றாக கவனித்துக் கொள்ளவும்...
உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் வல்லி. நீங்கள் செய்யும் தொண்டு சிறப்பானது. எனக்கு இது சென்னை வாழ்க்கையை நினைவூட்டியது. அங்கே இப்படித்தான் ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்வார்கள். மனதும் நலமாக இருக்கணும். சில நாட்களாக எனக்கு இந்த அலோபதி மருந்துகள் ஒத்துக்கொள்ளாமல் வயிற்றில் தொந்திரவு. அதற்கு மருந்து கொடுத்தால் அது வயிற்றுப் போக்கில் கொண்டு விட்டது. அதை நிறுத்திட்டேன். என்னவோ ஒண்ணு மாத்தி ஒண்ணு படுத்திக் கொண்டே இருக்கு. :(
வாசகங்கள் ஏற்கனவே படித்தததுதான், இருந்தால் என்ன? நல்ல விஷயங்களை மீண்டும் ஒரு முறை படித்தால் ஆகாதா? 2013 பஃதிவ்க்ர் சந்திப்பில் எடுத்த படங்கள் எங்கே?
@ ஸ்ரீராம், எல்லா கமெண்டும் வந்திருக்கு மா.
நலமோடு இருங்கள். மகிழ்ச்சி சேர குடும்பம்
வாழ வேண்டும்.வலியில்லாத வாழ்க்கை இல்லை.
நாம் இதையும் தாண்டி வருவோம்.
அன்பின் கமலாமா,
தங்கள் அன்பு உள்ளம் அனைத்து வார்த்தைகளிலும் வெளிப்படுகிறது.
நீங்கள் சொல்வது உண்மையே.
எதிலுமே பிடிப்பில்லாத திரிசங்கு சொர்க்கம் போன்ற
நிலையில் மனம் இருந்தால் உடல் பாதிக்கப்
படுகிறது.
மனம் உற்சாகம் அடைந்தால் உலகமே
இனிக்கிறது.
தங்கை கோமதி நேற்று ஒரு செய்தி அனுப்பி இருந்தார்.
உள்ளம் சரியானால் ,பாசிட்டிவ் செய்திகளை
உடலுக்கு அனுப்பினால் உடலும்
சமச்சீர் பெறும் என்பதுதான் அந்த செய்தி.
அதையே பின்பற்ற வேண்டியது நம் கடமை.
அன்பின் கமலாமா,
நலமுடன் இருங்கள்.
ரோஜா மலர் அப்படியொரு அழகோடு பூரித்துக் காட்சி கொடுக்கிறது.
முதல் முதலாக மஞ்சள் ரோஜா, சிவப்பாக
மாறுவதை இங்கு தான் காண்கிறேன்.
என்ன ஒரு படைப்பு!!!
இறைவன் அழகு மயமானவன். நன்றி மா.
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல என்றொரு பாடல்
வரும். இதயத் தாமரையாக இந்த ரோஜாக் குழந்தை மலர்கிறது.
அதை நீங்களும் அனுபவித்துச் சொன்னதே
அருமை. மிக அருமை.
உங்களுக்கும் வாய்வுப் பிடிப்பா!!!
ரொம்ப வலிக்குமே அம்மா. அதற்கான மருந்து எடுத்துக் கொண்டீர்களா.
உங்களுக்கே கை வைத்தியம் தெரிந்திருக்கும்.
சீக்கிரம் குணம் அடைய வேண்டும்.
உங்களை நம்பி குழந்தைகள் காத்திருப்பார்கள். வேலையும்
விடாது.
நானும் வலிக்கு ஒத்தடமும் , வலி மருந்தும் எடுத்துக் கொண்டேன்
அம்மா. மனமே முக்கிய காரணம்.
உங்களை மாதிரி நட்புகள் இருக்கும் போது நான்
கவலைப் படக் கூடாது.நன்றி மா.
அன்பின் வெங்கட்,
சரியானத் தூக்கம் இல்லாமையும், பலவித விசாரங்களும்
தான் சில நோய்களுக்குக் காரணம்.
மீண்டு வர வேண்டியது நம் கடமை.
செய்கிறேன். நலமுடன் இருங்கள்.
அன்பின் தனபாலன்,
நலமாப்பா.
இந்தத் தொற்று என்பதும், வீட்டோடு இருக்க வேண்டிய கட்டாயமும்
பல மனங்களைச் சலிக்கச் செய்கின்றன.
வேறெதாவது செய்தே மனதை மாற்ற வேண்டும்.
எல்லோரும் நலமுடன் இருப்போம். நன்றி மா.
அன்பின் கீதாமா,
நீங்கள் நலம்பெற வேண்டும். இத்தனை வலியையும் பொறுத்துக் கொண்டு
இங்கே வந்து பின்னூட்டமும்
இட்டிருக்கிறீர்கள்.
வயிற்றுச் சங்கடம் தான் படுத்தல்.
உடம்பு சௌக்கியம் உணவால் அமையும்
என்றால், மருந்தே நம்மை நிலைகுலையச் செய்கிறது.
காலம் அப்படி.!!
இங்கு பெண், நம்மூருக்கு வந்தால்
மாப்பிள்ளைக்கு முதலில் உணவு அனுப்புவது
தோழர்கள் தான்.
நிதானமான அன்பான நட்புகள்.
அதுவும் ஒரு குடும்பமே சிரமப் படுகிறது என்றால்
எத்தனை கஷ்டம் அம்மா.
இனியாவது அவர்கள் நலமாக இருக்க வேண்டும்.
என்னவோ ஒன்றும் உகப்பாக இல்லை:(
நீங்களும் ,சாரும் நல்லபடியாக இருக்க வேண்டும்
அம்மா.
அன்பின் பானுமா,
எல்லோரும் நலம் என்று நினைக்கிறேன்.
தமிழ் மணம் என்ற பெயரில் 2012இல் இயங்கிக் கொண்டிருந்த
வலைப்பதிவர்களின் மா நாடு அது. அப்போது சேகரித்த படங்களைப்'
பதிவிட்டிருந்தேன்.
ஒல்ட் மெமரீஸ் ல அது பாப் அப் ஆக வந்தது மா.
நன்றி பானு.
Post a Comment