Blog Archive

Tuesday, July 27, 2021

தமிழ் நாட்டின் கண்குளிர் காட்சிகள்.+ பார்த்த சீரியல்








வல்லிசிம்ஹன்
மலைகளில் ஏற்பட்ட காயங்கள்
வீழ்த்தப்பட்ட மரங்களின் புண்
ஒரு நாள் ஆறும்.

மீண்டும் மரங்கள் துளிர்க்கும்.
மனித மனங்களும் காயத்தின் 
வடுக்களின் மேல் அன்பைத் தூவி
நல் நினைவுகளை வளர்க்கலாம்.  

 சி போ லின்  Chi  Po Lin. 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அண்மையில் கண்டு முடித்த கொரியன் சீரியல் 

One thousand Good Nights.
ஒரு தந்தை, இரு மகள்கள். அதில் ஒரு பெண் அம்மாவால்
கைவிடப்பட்ட குழந்தை.
பல்வேறு காரணங்களுக்காக
அந்த அன்னை இந்தப் பெண்குழந்தையை
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் 
விட்டு விட்டுச் சென்று விடுகிறார்.

அங்கிருந்து கிளைவிடும் , மற்ற பல குழந்தைகளின்
மன வளர்ச்சி, அவர்கள் தங்கள் பெற்றோரை
உணர்வது,
பிறகு தங்கள் வாழ்வை ஆரோக்கியமாகத் தொடர்வது
என்று 20 எபிசோட்களாகத் தொடர்ந்து என்னைக் 
கட்டிப் போட்ட கதை.

ஒரு ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கும் கதையில் பல
பயணங்கள். பல இடங்கள். உணர்வுகள்.
நல்ல புரிதல்கள்.
யாரையும் சபிக்காமல், நோகவைக்காமல்
அலட்டாமல் ஓடும் நதி போன்ற அமைதியாக
ஓடி முடிந்தது.

எல்லாவற்றிற்கும் காரணம் அன்பும் மற்றவர் நோவைப்
புரிந்து பரிந்து செல்லும் மனங்கள். இத்தனைக்கும் காரணம்
ஒரு எளிய ஸ்டேஷன் மாஸ்டர்.

ஒரு ஆபாசம் இல்லை.கத்தல் இல்லை.

ஒரு நாள் முழுவதும்,
யாரிடமும் பேதங்கள் இருந்தாலும்
இரவு படுக்கப் போகும் முன் 
இரவு வணக்கம் சொல்லிச் செல்வது
பல மனங்களுக்கு ஆறுதல் கொடுக்கும்.

வெறுப்பை அப்படி அப்படியே விட்டு விட்டுப் 
புதுக்காலைகளை  ஆரம்பிக்கலாம்.
இது நான் கற்ற பாடம்.

இந்தப் பதிவில் அந்தத் தொடரின் காட்சிகளுக்குப்
பதில் நம் தமிழகத்தின் காட்சிகளைப் 
பொருத்தினேன்.



17 comments:

வல்லிசிம்ஹன் said...

இங்கே கொடுத்திருக்கும் காட்சியில்
ஆங்கில சப் டைட்டில்கள் வரவில்லை.

இருந்தாலும் புரிந்து கொள்வது சுலபம் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீராம். said...

நானும் இப்போது ஓடிடி தளங்களில் இரண்டு மூன்று  சீரிஸ் பார்த்திருக்கிறேன்.  ஒன்று நீங்கள் சொல்லி இருப்பது போல ஆபாசம் கலந்தது.  ஆனால் வெகு சுவாரஸ்யம்.  இன்னொன்று ஃபேமிலி மேன்... இரண்டாவதும் நன்றாய் இருந்தது.  இந்த சீரிஸ் பார்க்க முயல்கிறேன்.

ஸ்ரீராம். said...

படங்கள் பிரமாதம்.  பயணம் செல்ல ஆசை ஏற்படுத்துகிறது.  அந்தப் பாதை படம்தான் வெகுவாகக் கவர்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

இந்தப் பதிவின் வழியாகப் பல பொன் மொழிகள் அறிய முடிந்தது.
இயற்கையை ரசிக்க வைக்கும் காட்சிகள்.

ரயில்கள் போய் வந்து கொண்டிருக்கும். சிலசமயம்
கொஞ்சம் மெதுவாக நகருகிற மாதிரி இருக்கும். மொத்தத்தில் எனக்குப்
பிடித்தது மா. அந்த மானிஃபெஸ்ட் பேரன் பார்க்கிறான்.
ஹெய்ஸ்ட் பார்க்கவில்லை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.

அந்த பாதை படம் கொடைக்கானல்.
இந்த சீரிஸ் முக்கால் வாசி பயணங்களும் சந்திப்புகளும் தான் மா.
முடிந்த போது பாருங்கள். நம் அப்பாக்களைப் பார்ப்பது
போல இருக்கிறது.

KILLERGEE Devakottai said...

அழகிய புகைப்படங்கள் அம்மா

//வெறுப்பை அப்படி அப்படியே விட்டு விட்டுப்
புதுக்காலைகளை ஆரம்பிக்கலாம்.//

இனி நானும் முயல்வேன்...

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அழகு. காணொளி தற்போது பார்க்க முடியாத சூழல்.

பயணிக்க ஆசை தான். ஆனால் இப்போதைக்கு, பயணங்கள் இல்லை! விரைவில் அமைய வேண்டும்.

Geetha Sambasivam said...

நான் அம்பேரிக்காவில் இருந்தவரை பெண்ணோடு இத்தகைய சீரியல்கள் எல்லாம் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. இங்கே எங்களிடம் அமேசான் எல்லாம் இல்லை. டிஸ்னி ஹாட் ஸ்டார் இருக்கு. ஆனால் ஆக்டிவேட் பண்ணலை. பார்க்கும் ஆர்வம் இல்லாததால். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நல்ல கதையம்சம் தெரிகிறது.

Geetha Sambasivam said...

எத்தனை அழகு தமிழகம்? அதுவும் அந்தக் கொடைக்கானல் பாதை! சுத்தமாகவும் அழகாயும் இருக்கே! அந்த நீர் வீழ்ச்சியும் அருகே உள்ள படகில் உள்ள மக்களும்! மலையும் அதைச் சார்ந்த இடங்களும் எல்லாமும் அழகு. நாற்று நட்டிருக்கும் வயலைப் பார்த்தாலே புதுப் பெண்ணைப் பார்க்கும் உணர்வு தோன்றும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவ கோட்டைஜி,
வெறுப்பு நம் நிம்மதியைக் குலைத்து விடுகிறது.
அது ஆக்க பூர்வமாக ஒன்றையும்
செய்வதில்லை.
எனக்கு இதை உணர 65 வயது ஆக வேண்டி இருந்தது.

நீங்கள் நலமாகவே இருப்பீர்கள் அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், உங்களை நினைத்துக் கொண்டே பதிவிட்டேன்.
பயணம் செய்யும் காலம் வரும்.
நீங்கள் செல்வீர்கள் எங்களுக்கும் சொல்வீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
உடல் நலம் முன்னேற வேண்டும்.

இந்த சீரியல்களை என் மடிக்கணினியில் தான்
பார்க்கிறேன்.
நெட்ஃப்ளிக்ஸ் இல்.நீங்களும் காண முடிந்தால்
மிக நன்றாக இருக்கும்.

யூ டியூபிலும் பார்க்கலாம்.
ஆங்கில சப்டைட்டில்ஸ் வருமா என்று தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

தைவானில் நடக்கும் கதையாகக் காண்பிக்கிறார்கள்.
நல்ல குணவானான தந்தையின்
பலவேறு நட்புகளையும் அவர் செய்த நல்ல
காரியங்களையும்
மகள் தெரிந்து கொள்கிறாள்.
பல நபர்களின் வழியே அவள் வாழ்வு
நன்மை அடைகிறது. உங்களுக்குப் பிடிக்கும்.

நம்மூர் மாதிரியே அங்கேயும் அரிசிதான்
மெயின் உணவு.
அதற்காகவே திருனெல்வேலி அருவி, வயல்கள், ஊட்டி ,கொடைக்கானல், வால்பாறைப்
படங்களைப் பதிவிட்டேன் மா.
நன்றி.

கோமதி அரசு said...

அழகான படங்கள். கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி அளிக்கிறது.



//வெறுப்பை அப்படி அப்படியே விட்டு விட்டுப்
புதுக்காலைகளை ஆரம்பிக்கலாம்.
இது நான் கற்ற பாடம்.//


பதிவு அருமை.
பதிவின் நிறைவில் சொன்னது மிக மிக அருமை.

கோமதி அரசு said...

ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கும் கதை பல பயணங்க்களை நினைவு படுத்தும் பார்க்கிறேன்.


//யாரையும் சபிக்காமல், நோகவைக்காமல்
அலட்டாமல் ஓடும் நதி போன்ற அமைதியாக
ஓடி முடிந்தது.

எல்லாவற்றிற்கும் காரணம் அன்பும் மற்றவர் நோவைப்
புரிந்து பரிந்து செல்லும் மனங்கள். இத்தனைக்கும் காரணம்
ஒரு எளிய ஸ்டேஷன் மாஸ்டர்.//

பார்க்கும் ஆவலை தூண்டுகிறது உங்கள் விமர்சனம் பார்க்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

வாழ்க வளமுடன்
இந்தப் படத் தொகுப்பு முழுவதிலும் பெற்றோரகளுக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கிற உணர்சசி பந்தம், சில சமயம் சலிப்பு
என்று தான் வருகிறது. அதை எப்படிக் கையாள வேண்டும் என்றும் கற்கிறாரகள்.. நாமும் கற்கிறோம்.

தைவான் போட்டோக்ராஃபர் அவர்களின் படங்களும் பொன்மொழிகளும்( Chi Po Lin ) நிறைய வந்து போகின்றன.
மொத்தத்தில் மிகத் திருப்தி கொடுத்த கதை மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
உங்களுக்கும் மிகப் பிடிக்கும் மா. நெட்fllix. சானலில் வந்தது. இது போல நிறைய தொடர்கள் இருக்கின்றன் நாம் தேர்நதெடுக்க வேண்டும்.
கட்டாயம் பாருங்கள் மா.