மேஜர் சுந்தரராஜனை நினைக்கையில்
ஏதோ வருத்தம் தோன்றும்.
நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம்.
அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார்.
எந்த ஒரு பாத்திரத்திலும் நடிக்க முடியும் என்று நிரூபித்தவர்,
மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கொட்டகையில்
அவரது நாடகங்கள், ஞான ஒளி, கல்தூண்
எல்லாம் பார்த்திருக்கிறேன்.
சிறந்த நடிப்பு.
அதுவும் அவரும் நாகேஷும் சேரும் படங்கள்
தனித்துவம் கொண்டவை.
எனக்குப் பிடித்த காட்சிகளைப்
பதிவிட்டிருக்கிறேன்.
23 comments:
மேஜர் சுந்திரராஜன் நல்ல நடிகர். பன்முக திறமையாளர். நீங்கள் பகிர்ந்த காட்சிகள் உள்ள படங்கள் எல்லாம் எனக்கும் பிடிக்கும். அருமையான நடிகர்.
நானும் சிறு வயதில் 1972 ம் வருடம் தேனீ யில் இருந்தோம் அப்பவோடும், அம்மாவோடும் மேஜர் சுந்திராஜன் நாடகம் பார்த்து இருக்கிறேன்.அதே நாடகம் திரைபடமாக வந்தது. நாடகத்தில் பத்மினி என்ற நடிகை நடித்த பாத்திரத்தில் கே.ஆர் விஜயா நடித்தார். சினிமா பேர் நினைவுக்கு வரவில்லை. கடைசி காட்சியில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து விடுவார்.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்லும் படம் “நாணலா?”
குழந்தைக்காக படத்தில் பத்மினியும் இவரும் நடித்திருப்பார்கள்.
நீங்கள் சொல்வது குமாரி பத்மினியோ?
நல்ல நடிகர்.பல வேறு காரணங்களால் அவர் முன்னேறவில்லை என்று அப்போது
குமுத செய்தி.
ஆம். இரண்டாவது பாத்திரமாகவே வந்து மறக்க முடியாமல் மனதில் நின்று போனவர். சில வசனங்களை ஆங்கிலத்தில் சொல்லி, அதனையே தமிழிலும் சொல்லும் இவர் பாணி விமர்சிக்கப்பட்டது. நீங்கள் பகிர்ந்திருக்கும் காட்சிகள் அனைத்தும் சிறப்பு. கேபி படங்களில் இவர் நடிப்பு மிளிரும். கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.
நாணல் படம் இல்லை அக்கா.
முத்துராமன், கே.ஆர். விஜயா ஒரு குழந்தை நடிப்பார்கள் முத்துராமன் தங்கையாக பானுமதி என்ற நடிகை. முத்துராமன் அப்பாவாக நடிப்பவருக்கு கண் தெரியாது. முத்துராமனாக அவர் அப்பாவிடம் நடிப்பார் சுந்தரராஜன்.
குமாரி பத்மினிதான் தற்கொலை செய்து கொண்டார் நிறைய சுந்தரராஜன் நடாகத்தில், சினிமாவில் நடிப்பார். "கண்ணாநலமா" படத்தில் சுந்தரராஜன் மனைவியாக வருவார்.
வணக்கம் சகோதரி
பதிவு அருமை. நல்ல நடிகர் சுந்தரராஜன். மறக்க முடியாதவர். எந்த ஒரு பாத்திரமானாலும் அதற்கு கனகச்சிதமாக தன்னை பொருத்திக் கொண்டு நடிப்பவர்.நீங்கள் சொல்வது போல் அவர் நாகேஷ் அவர்களுடன் நடித்த படங்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. நாகேஷும் திறமையான நடிகர். நீங்கள் பகிர்ந்த படங்களை பார்த்து ரசித்தேன். பெரும்பாலும் சிவாஜிக்கு நண்பராகவே வருவார்.
ஒரு தடவை சிவாஜி அவர்கள் தேர்தலில் நிற்கும் போது, தேர்தல் பிரசாரத்தில் இவரும் சிவாஜி யுடன் சேர்ந்து வந்ததை லஸ்ஸிலிருந்த போது பார்த்தாக நினைவு. அந்தளவிற்கு நிஜ வாழ்விலும் உண்மையிலும் நண்பர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையான நடிகர். பல பாத்திரங்களில் மிகவும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அவருடைய பல படங்களை ரசித்துள்ளேன்.
மேஜர் சுந்தரராஜன் படங்கள் நிறையவே பார்த்திருக்கேன். நாடகங்கள் பார்த்தது இல்லை. சுந்தரராஜனை அடிக்கடி நேரிலும் பார்த்திருக்கேன். மதுரை மேலாவணி மூலவீதியில் குடி இருந்தப்போ எங்க பக்கத்து வீட்டு அண்ணாவுக்கு அவர் வகுப்புத் தோழர் என்பதால் அடிக்கடி பார்க்க வருவார். அதைத் தவிரவும் எதிரில் இருந்த சித்ராலயா அலுவலகத்துக்கும் வருவார். பார்த்திருக்கேன். நீங்கள் போட்டிருக்கும் படங்கள் எல்லாமும் நானும் பார்த்திருக்கேனே! ஞானஒளி பார்க்கையில் எங்க பெண் வயிற்றில் நான்கு மாதம்னு நினைக்கிறேன். "காசே தான் கடவுளடா!" படமும் அப்போத் தான் வந்தது. அம்பத்தூரில் இருந்து தண்டையார்ப்பேட்டை வந்து பார்த்தோம்.
மேஜர் சுந்தரராஜன் பற்றி சிறந்த காட்சிகளைத்தான் தேர்வு செய்து போட்டிருக்கிறீர்கள். அவரது கம்பீரமான குரல் அவருக்கு மிகப்பெரிய ப்ளஸ்.
சிறப்பான நடிகர்...
நல்ல நடிகர். சில படங்கள் பார்த்து ரசித்திருக்கிறேன்.
நகைச்சுவைக்கு நாகேஸ்தான் அவருடைய உடம்பும் அதற்கேற்ற வகையில் அசையும்.
உண்மைதான் ஸ்ரீராம்.
கொஞ்சம் சுதந்திரமான போக்குடையவர் என்று கேள்வி.
சிவாஜிக்கு நல்ல மாற்று.
அவரது ஆங்கிலமும் அதன் மொழி பெயர்ப்பும்
நன்றாக நினைவில்.
அவருக்குக் கிடைத்த வசனங்கள் அப்படியோ.?
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
கண்ணே பாப்பா' என்று ஒரு படம் வந்தது.
அதாக இருக்குமோ.?
நல்ல தேடல்:) நன்றி மா.
படம் பார்த்துவிட்டு சொல்கிறேன்!!!
அன்பின் கோமதிமா,
குமாரி பத்மினி,
நல்ல நடிகை. நிறைய சிவகுமாருடன் நடித்தார் இல்லையா?
எதற்காகத் தற்கொலை செய்து கொண்டாரோ.
ஏ பி நாகராஜனின் எல்லாப் படங்களிலும்
அவரைப் பார்த்ததாக நினைவு.
நன்றி மா. வாழ்க வளமுடன்.
அன்பின் கமலாமா,
நலமுடன் இருக்கவும்.
ஆமாம் எனக்கும் அவர் நடிப்பு பிடிக்கும். முக்கியமாக
நாகேஷுடன் அவர் நடிக்கும் போது இருவரும் பிரகாசிப்பார்கள்
சிவாஜியும் அவரும் நல்ல தோழர்களா!!
அட...இது எனக்கு செய்தி.
லஸ்சுக்கு இருவரும் வந்தார்களா!!
நான் சரியான கிணற்றுத் தவளை.:))
மிக நன்றி மா.
அன்பின் முனைவர் ஐயா,
மேஜர் சுந்தரராஜன்
நல்ல நடிகர் என்பதில் ஆக்ஷேபணையே இல்லை.
நீங்களும் அவரை ரசிப்பதில்
மிக மகிழ்ச்சி.
திரையுலகம் நமக்கு நல்ல நடிகர்களின் நடிப்பைக்
காணக் கொடுத்திருக்கிறது மா.
மிக மிக நன்றி.
அன்பின் கீதாமா,
ஏது ஏது,
மேல ஆவணி வீதி , ஒரு மினி ஹாலிவுட்
மாதிரி இருக்கிறதே!!!!
மேஜர் சுந்தரராஜன் பழகுவதற்கு நல்லவராக
இருந்திருப்பார் போலத் தெரிகிறது.
ஆமாம் , ஞான ஒளி, காசேதான் கடவுளடா
எல்லாம் 70 களின் ஆரம்பக் காலமோ?
நாங்கள் அப்போது கோவையில்
இருந்தோம்.
குழந்தைகளைத் தம்பி ரங்கன் ,விடுமுறைக்கு வந்தபோது
அவன் பொறுப்பில் விட்டு விட்டுப் படம் பார்க்கப்
போனோம்:)
எல்லாம் கனவு மாதிரி இருக்கிறது.
மிக நன்றி மா.
அன்பின் மனோ,
மிக உண்மை. அவரது குரல் நாடக மேடைகளில் பேசிப் பழக்கப் பட்ட குரல்.
நல்ல கணீர் என்றுதான் இருக்கும்.
நம் அதிர்ஷ்டம் இவர்கள் நடிப்பை எல்லாம்
ரசிக்க முடிந்தது. நன்றி மா.
அன்பின் தனபாலன் மிக நன்றி மா.
நலமுடன் இருங்கள்.
அன்பின் வெங்கட்,
நன்றி மா.
அவர் நடித்த படங்களை அனேகமாக எல்லோருமே
பார்த்திருப்பார்கள்.
அன்பின் மாதேவி,
நாகேஷும், சுந்தரராஜனும் இயக்குனர் பாலச்சந்தர் அவர்களால் வளர்க்கப் பட்டவர்கள்.
இருவரது நடிப்பும்
மிக அருமை. நன்றி மா.
Post a Comment