Blog Archive

Friday, July 23, 2021

விழும்,எழும்,நடக்கும் ஓடும் நதி.......



வல்லிசிம்ஹன்





நதி எங்கே போகிறது
கடலைத் தேடி
நாளெங்கே போகிறது
இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது
மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது
உறவைத் தேடி
நதி எங்கே போகிறது
கடலைத் தேடி
நாளெங்கே போகிறது
இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது
மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது
உறவைத் தேடி
நதி எங்கே போகிறது
கடலைத் தேடி
ராகங்கள் நூறு வரும்
வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும்
வானம் ஒன்று
ராகங்கள் நூறு வரும்
வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும்
வானம் ஒன்று
எண்ணங்கள் கோடி வரும்
இதயம் ஒன்று
எண்ணங்கள் கோடி வரும்
இதயம் ஒன்று////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////



அண்மையில் உறங்கும் உறங்காத தண்ணீர் நிலைகளைப் பற்றிப்
பேச்சு வந்தது.

பெண்களுக்காவது உறங்கும் காலம்
சில நேரம் கிடைக்கும்.
நதிக்கு ஏது உறக்கம் என்று தான் தோன்றியது.

உயிர் காக்க ஓடிக் கொண்டே இருக்கிறது.
அதன் வேகம் மலை மடு என்று மாறி மாறி 
ஓடி, 
மடுவில் மாட்டிக் கொண்டவர்களைக் காப்பாற்ற முடியாமல்
மற்ற ஆயிரம் மனிதர்களுக்கு 
உணவளித்தபடி, நிற்காமல் சலசலத்தபடி 
ஓடிக் கொண்டபடி தான் இருக்கிறது.

ஓடும் நதியில் குளிக்க வேண்டும் என்றால்
எங்கள் தாமிரபரணியைத் தான் சொல்ல வேண்டும்.
நீச்சல் தெரியாதவர்கள் குளிக்க ஏதுவான 
இடங்கள் படித்துறைகள் உண்டு.
சுழல் இருக்கும் இடங்களில் எச்சரிக்கை பலகைகளும் உண்டு.
வெள்ளம் இல்லாத காலங்களில்
அழகான அமைதியான அம்மா போன்று
பேசியபடி ஓடும்.

நதி தீரத்தில் வசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
மலையில் பெய்தமழை நதியில் பாய்ந்து 

கரைகளை உடைக்கப் பார்த்தால் அது நதியின் 
தப்பில்லையே.
உயர்த்தப் பட்ட கரைகளும்,
தோண்டப் படாத வண்டலும் இருக்குமானால்
யாருக்கும் சேதம் இல்லை.

பெண்களுக்குக் கோபம் வந்து வார்த்தைகள்
சிதறுகின்றன என்றால், அந்த நிலைக்கு
அவளைத் தள்ளியது யார் என்று யோசித்துப் 
பார்க்கிறேன்.
''  பழைய பாடல் ஒன்றில் ஆறு ஆழம் இல்லை.
பெண்மனதே ஆழம்'' என்று வரும்.

பெண்ணைப் பேச விட்டால் 
அவள் பக்க நியாயங்களைக் கேட்டால்
எத்தனையோ பிரச்சினைகள் முடிந்திருக்கும்.





18 comments:

KILLERGEE Devakottai said...

நதியைப் பற்றிய விளக்கம் அருமை அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,

இனிய காலை வணக்கம்.
ஆடி மாதம் ,காவிரி,மற்ற ஆறுகளின் நினைவு
வருவது சகஜம் தானே.
நன்றி மா. நலமாக இருக்கிறீர்களா.

ஸ்ரீராம். said...

நதி தூங்காது என்பதே என் கட்சியும்!  அது நம் எண்ணம்!  நதியைப் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது அருமை.  நாம் படிக்கும் புத்தகங்களில் உள்ள வரிகள் இபப்டி நம் சிந்தனையைத் தூண்டுவதுதான் சிறப்பு.  என்ன சொல்கிறீர்கள்?!  பாடல்கள் இரண்டும் அருமை அம்மா.

கோமதி அரசு said...

நதி எங்கே போகிறது பாடல் வரிகள் அருமை.

//அண்மையில் உறங்கும் உறங்காத தண்ணீர் நிலைகளைப் பற்றிப்
பேச்சு வந்தது.//

தண்ணீர் உறங்குகிறதா? விழிர்த்து இருக்கா என்று பார்த்து வர குரு சீடரை அனுப்பும் கதை நினவுக்கு வந்தது.

தாமிர பரணி ஆறு பற்றி சொன்னது அருமை.


//பெண்ணைப் பேச விட்டால்
அவள் பக்க நியாயங்களைக் கேட்டால்
எத்தனையோ பிரச்சினைகள் முடிந்திருக்கும்.//

ஆமாம்.

பதிவு அருமை.



கோமதி அரசு said...

அன்னையின் அருளே பாடல் மிகவும் பிடித்த பாடல். "ஆடி பெருக்கு " படப்பாடல். சித்திப் பட பாடலும் பிடிக்கும். கேட்டேன் அக்கா இரு பாடல்களையும்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமையாக உள்ளது. நதியைப் பற்றிய உங்கள் மனவோட்டங்களை அருமையாக கூறியுள்ளீர்கள். ஆம். நதிக்கு உறக்கம் ஏது? அது இரவு பகலாக தன் கடமையை நிறைவேற்றியபடி, அலுக்காமல், சலிக்காமல் ஓடிக் கொண்டே உள்ளது. பாடல்களும் அருமை. அழகான பத்மினி பாடிய அந்தப் பாடல் எனக்கு பிடித்தமானது. என் பேத்திக்கு அந்தப் பாடலை பாடித்தான் தூங்க வைப்பேன். காவிரி தாயைப் பற்றிய சீர்காழி அவர்களின் பாடலும் அருமை. அத்தனைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

நதியைப் பற்றிய விளக்கம் மிக அருமை. காவிரியில் தண்ணீர் வருகிறது. மொட்டை மாடியில் போய்ப் பார்க்க முடியலை. :(

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா. உடல் நலம் சீராகி,
நீங்களு மாடியேறிப் பார்க்கலாம். இல்லையானால் கீழே இறங்கி
ஒரு வண்டியில் அம்மா மண்டபம் போய்ப் பார்க்கும்
சந்தர்ப்பம் வரும் மா. வலி சரியாகட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
ஆமாம் படிக்கும் எழுத்துகள் ,பார்க்கும் காட்சிகள்
நம் எண்ணங்களைத் தூண்டுகின்றன.
அதுவும் எங்கள் ப்ளாக் பக்கத்தில்
எப்பொழுதுமே நம் சுதந்திரம் மதிக்கப்
படுகிறது.நன்றிமா.

ஆமாம் தூங்கவே முடியாது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,

எல்லாப் பெண்களுக்கும் ஏதோ ஒரு நியாயம்
இருக்கிறது.
என்னைப் போன்ற வயதில் ஒரு எண்ணம் .இளம் வயதில்
ஒரு எண்ணம் என்றுதான் வாழ்க்கை சுழல்கிறது


எங்கள் ப்ளாகில் , ஏதோ ஒரு ஆசிரியரின் எண்ணமாக
நதி தூக்கத்தில் புரண்டது' என்று இருந்தது.'
எனக்கு அது சரியாகப் படவில்லை:)
அதனால் பதிவாகப் பதிந்தேன்.
நன்றி மா.
ஆமாம், இந்தப் பாடல்கள் சிரஞ்சீவித்தனம் கொண்டவை.'
நன்றி. வாழ்க வளமுடன் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
எண்ணங்கள் மனதில் வரும்போது பதிந்து விடுகிறேன்.

நதியும் அதன் சலசலப்பும் எப்பொழுதும்
பிடிக்கும்.

அன்பின் கோமதி, நீங்கள் ,நான்
என்று அனைவருக்குமே சித்தி படப் பாடல்
பிடித்திருக்கிறது.
அதுதானே உண்மை.
இதுபோன்ற பெண்களால் நம் சமுதாயம்
வளம் பெறும்.
அதற்காக ஒரே யடியாகப் பணிந்து,
பின்னால் வருத்தப் பட வேண்டாம்.
நேர்மையாக இருந்தால் நன்மை என்று உணர்வேன்.

பதிவைக் கூர்ந்து படித்துக் கருத்து சொன்னதற்கு மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
நதி எங்கே பாடல் வந்த புதிதில் பள்ளியில்

பாடுவது வழக்கம்.

அதில் பாதி பாடலை வகுப்பு சகோதரி(சிஸ்டர்)
பாட விட மாட்டார்:)

மாதேவி said...

நதியில் நீராடியதுபோல பதிவும் படிக்க குளிர்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நதியில் விளையாடிக் கொடியில் தலை சீவி
என்று பாடல் கேட்ட நினைவு வருகிறது. நதிகளின் வளமை வற்றாமல் இருக்கட்டும்.
நீங்களும் வளமுடன் இருங்கள் அம்மா.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

வெங்கட் நாகராஜ் said...

ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும் நதிகள். நீர்நிலைகள் என்றைக்கும் பிடித்த விஷயம்.

பதிவு வழி சொன்ன விஷயங்கள் சிறப்பு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார்,
வந்து கருத்திட்டமைக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,

நதிகளில் அட்டகாசமாக வரும் நதிகளும்
உண்டு.
அடக்கம் ஆர்பரிப்பு எல்லாம் உண்டு.
ப்ரம்மபுத்ரா மேல் அடிக்கடி தடம் மாறிப்
பிரவாகமாகப் பாய்வதும் உண்டு.

எல்லா குணங்களுமே பெண்களுக்குப் பொருந்திப் போவதாகத்
தோன்றியதுமா:)

. நன்றி.