Blog Archive

Friday, July 23, 2021

சரித்திரம் படைத்த சில நடனங்கள்.






முன்பு நம் ஊரில் ஸ்டார் ப்ளஸ் ஆரம்பித்த புதிதில்

டிசிஎம்    Turner classic movies திரைப்பட சானல் இருந்த போது 
பார்த்த படங்கள் அனேகம்.
எல்லாமே நான் பிறப்பதற்கு முன் 
இல்லாவிட்டால் 1950 களில் வந்தவை.

திரை அரங்குகளுக்குப் போய்ப் படம் பார்க்கும்
சந்தர்ப்பம் குறைந்தது.

அந்த அளவுக்கு ஒலியும், சங்கடமும் நிறைந்த
இடங்களில்  சினிமாவை எப்படி 
நிலைத்து ரசிப்பது?

 குழந்தைகள் திருமணங்கள் முடிந்து , கைகளில்
நேரம் தேங்கிக் கிடந்த காலம்.
பழைய தமிழ்த் திரைப்படங்கள் மதியம் பார்க்கலாம்.
ஆங்கிலப் படங்கள் எப்பொழுது வேண்டுமானாலும்
பார்க்கலாம்.
அப்போது மனதுக்கும் ஆறுதல் தேவையாக இருந்தது.

சிறிது காலத்தில் அந்த சானலை நிறுத்தி விட்டார்கள்.

பிறகு இந்த ஊருக்கு வரும்போதெல்லாம் 
பார்க்க முடியும். 
இப்போது இணையத்திலேயே  எல்லாம் 
காணக் கிடைக்கிறது.
வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு 
பொதுவாகச் சத்தம் ஆகாது.
அதனால்  நம் மடிக்கணினியே நமக்கு எல்லாம்
ஆகிறது.

ஒரு எஸ்கேப் ரூட் என்று சொல்வார்களே
அது போல.
இப்போது உலகம் எங்கும் பரந்து இருக்கும் உறவினர்களின் நலம்

மாறி மாறிச் செய்தி வந்தால்,
அவர்கள் நலம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு
இறைவனைப் பிரார்த்திக்கவும்
நம் மனம் நல்லதாக இருக்க வேண்டும் இல்லையா
திரைப்படங்களும் இசையும், இறை வழிபாட்டு

மந்திரங்களும் நம் வாழ்க்கையை வளப்படுத்த வழி.
முன்னாட்களில் ,சிங்கத்தின் பாட்டி சொல்வார்,
''வெறுமனே குழந்தைகளுக்கும் அவனுக்கும் 
சமைத்துப் போட்டால் மட்டும் போதாது.
செருப்பைப் போட்டுக்கோ வெளில போய் வா"
என்ன அர்த்தம் தெரியுமா,ராஜேஸ்வரி லெண்டிங்க் லைப்ரரிக்குப்
போ. வடுவூர் துரைசாமி துப்பறியும் த்ரில்லர் நாவல்களை
எடுத்து வா என்பதுதான்:)))))

அதற்கப்புறம் இருக்கவே இருக்கு ஆர் ஆர் ஃபார்மசி,
லஸ் பிள்ளையார், தண்ணித்துறை ஆஞ்சனேயர்
எல்லா இடங்களுக்கும் நடைதான்.
இன்னோரு நாள் ,கபாலி, முண்டகக்கண்ணி, எல்லை அம்மன்

என்று தொடரும். #ஆடி மாத நினைவுகள்


17 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான நினைவுகள்தான். அப்போதெல்லாம் லைப்ரேரிகள்தான் சொர்க்கம். தொலைகாட்சி வந்த புதிதில் நானும் சில சேனல்கள் சுவாரஸ்யமாய்ப் பார்த்ததுண்டு. ஸ்டார் மூவிஸ் அனிமல் பிளானட் டிஸ்கவரி சேனல் ஹிஸ்டரி என்று...

ஸ்ரீராம். said...

ஆங்கில நடனங்கள் வித்தியாசமாய் இருக்கும். அவர்கள் பண்பாடு அவர்களுக்கு. நமக்கு விநோதமாய் இருப்பது இயல்பு. நம் நாட்டியவகைகள் அவர்களுக்கு விநோதமாய் இருக்கலாம்!!

துரை செல்வராஜூ said...

மலரும் நினைவுகள்...
பழைய படங்களின் நடனக் காட்சிகள்..

இனிய பதிவு...

மாதேவி said...

இனிய நினைவுகளை தந்துள்ளீர்கள்.

கோமதி அரசு said...

மிக அருமையான ஆடி மாத நினைவுகள். நானும் ஆடி மாத நினைவுகளை பகிர்ந்து இருக்கிறேன்.

நூலகத்தில் எடுத்து வந்த புத்தகங்கள் மழை நாளில் மிகவும் உதவும்
இங்கு இப்போது மழை எச்சரிக்கை, அதனால் வெள்ள அபாயம் எல்லாம் பழைய நினைவுகளை கொண்டு வருகிறது.
உங்கள் நினைவுகள், பகிர்ந்த பாடல்கள் எல்லாம் அருமை.

கோமதி அரசு said...

நாலவது பாடலை மிகவும் ரசித்தேன் கஷ்டப்பட்டு படுக்கைக்கு அழைத்து போய் விடும் வரை பாடுகிறார். பெரிய இடத்து பெண் அருமை.

கோமதி அரசு said...

நடன போட்டி பாடல் காலத்தை வென்று நிற்கும் பாடலும், நடனமும். இருவர் நடனமும். பி.எஸ் வீராப்பா, ஜெமினி நடிப்பும் அருமையாக இருக்கும் பார்க்க.

Geetha Sambasivam said...

ஆடி மாத நினைவலைகளும் நாட்டியக் காட்சிகளும் அருமை. மேல்நாட்டு நடன முறையே வேறே. நூலகத்தில் புத்தகங்கள் எடுப்பதற்ககாவே வேகாத வெயிலில் சாப்பிடுவதற்கு முன்னால் போயிட்டு வருவேன் புத்தகம் எடுத்து வந்தால் கையில் அந்தப் புத்தகத்துடன் தான் சாப்பாடு. அதெல்லாம் ஒரு காலம் இப்போது தரவிறக்கி வைத்திருக்கும் புத்தகங்களையே படிக்க உட்கார முடியலை. அப்போல்லாம் எல்லோருமே அதிகமாய் நடைதான். நடராஜா சர்வீஸ் தான். இப்போத் தான் முடியலை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

அந்த நாட்கள் வீடியோ வாடகைக்கு எடுத்து,
படம் வாடகைக்கு எடுத்து 24 மணி நேரத்துக்குள் மொத்தக் குடும்பமுமே
பார்த்து முடிப்போம் எண்பதுகளின் கடைசி என்று நினைவு.
அதனால் ஸ்டார் மூவீஸ் வந்ததும் தலை கால்
தெரியாமல்
படங்கள் பார்த்தேன்:) அதற்கு முன்
புஸ்தககங்களும் துணை.
நல்ல நாட்கள் . மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் மா. நம்மைப் பார்த்து அவர்களுக்கு ஆசையும் உண்டு.
நமக்குதான்
இந்த நடனமெல்லாம் நமக்கு ஒத்து வராது:)
பார்க்க அழகு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துரை செல்வராஜு,
நலமுடன் இருங்கள் அப்பா.

ஏதோ பழைய நினைவில் பதிந்தேன்.
நம் படங்களின் நல்ல நடனங்களைப் பின்பு பதிகிறேன்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
ஊரை விட்டுத் தள்ளி இருக்கும்போது
ஊர் நினைவு நிறைய வருகிறது அம்மா.
நன்றி நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி
வாழ்க வளமுடன்.

நமக்கு இங்கே எல்லா நாட்களும் ஒன்றாகிப் போனது.

கோவிலுக்குப் போய் தேவியைக் காண வேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

நாலாவது பாடல் மை ஃபேர் லேடி படத்தில்
வரும் .
பூ விற்கும் பெண்ணை,
ஆங்கில ப்ரொஃபெஸர் அழைத்து வந்து நாகரீகம் கற்றுக் கொடுக்கும் படம்.
சோ கூட இது போலப் படம் எடுத்தாரோ என்று நினைவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா.
இனிய காலை வணக்கம்.
மிகத் தாமதமாகப் பதில் சொல்கிறேன்.
அதீத வெய்யில். தலைவலியோடு தொடர்கிறது!!

வைஜயந்தியும் பத்மினியும் சுழன்றாடும் வேகம் பிரமிக்க வைக்கும் எப்போதும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

ஆமாம் சாப்பிடும்போது புத்தகம் வேண்டும்.
இப்பொழுதும் சிங்காரமும் செங்கமலமும்
என்னுடன் சாப்பிடுகிறார்கள்:)
நீங்களும் வெய்யிலில் போய் வருவீர்களா???????
மதிய சமையலுக்கும் மாலை டிஃபனுக்கும் இடைப்பட்ட
நேரம் தான் நம்மால் வெளியே
போக முடியும்.

என்னமோ கடந்து வந்துவிட்டோம். மிச்ச நாட்களும் இறைவன் நம்மை

சிரமம் இல்லாமல் வைக்கட்டும் அம்மா.