Blog Archive

Friday, June 11, 2021

Never hurt anybody | நாக்குக்கு சரியாகப் பேசத் தெரியணும் | வல்லிசிம்ஹன் ...

அன்பின் மதுமிதா மிக நல்ல இலக்கியவாதி. 
நிறைய  புத்தகங்கள் எழுதிப்
பிரசுரித்திருக்கிறார்.
கவிதைகள் எழுதிக் கொண்டு,
அதை இசையாகப் பாடவும் முடியும்.

ஒரு பெரிய குடும்பத்தின் நிர்வாகி. அனுசரித்துப் போகும் குணம்
கொண்டவர். அதிர்ந்து பேசாத பாசம் நிறைந்த மனுஷி. என்னை 
நேர்காணல் செய்யலாமா என்று கேட்டதும் 
யோசனையாகத் தான் இருந்தது.

இதில் தப்பொன்றும் இல்லை என்று தெளிந்து ஒப்புக் கொண்டேன்.
மிக மிக மகிழ்ச்சி மதுமா. நன்றி.

17 comments:

கோமதி அரசு said...

மிக அருமையான நேர் காணல்.
மதுமிதாஅவர்களின் கேள்விகளும், உங்களின் பதில்களும் மிக அருமை.
உங்கள் நினைவுகளில் வந்த செய்திகள் அருமை.
மனதுக்குள் பொத்தி வைத்து இருக்கும் அந்த முதல் நடை பயணம் பிரியமான கணவருடன் மறக்க முடியாத இனிய நினைவுகள்.
அவர்களின் மனம் அறிந்து நடப்பது மட்டுமே வாழ்வின் குறிக்கோள் என்று இருந்த காலங்கள் அவை.அப்படித்தான் நாம் வழி நடத்த பட்டோம் பெரியவர்களால்.
பாடிய பாடல்கள் அருமை.
உன்னை ஒன்று கேட்பேன் பாடலும் உங்கள் உடையும் பொருத்தம் சரோஜா தேவி சிவப்பு ஆடைதான் அணிந்து புதியபறவையில் பாடுவார்.

நிறைவாக நீங்கள் பேசியது மிக் மிக அருமை.
மதுமிதாவிற்கு நன்றிகள்.பகிர்வுக்கு உங்களுக்கு நன்றிகள்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆஆஆஆவ்வ்வ் வல்லிம்மாவைப் பார்த்துவிட்டேன்... சூப்பராக இருக்கிறீங்கள், பாடுறீங்கள்.. ஆனா நன்கு மெலிஞ்சிட்டீங்கள் வல்லிம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா. வாழ்க வளமுடன்.
நன்றி மா.
அந்த சிவப்பு புடவை சென்ற முறை சென்னையில் வாங்கியது.

மதுமிதாவுடன். நினைவுப் பயணம் இனிதாக அமைந்தது. பாடல்கள் விஷயத்தில் எனக்குத் தயக்கம் தான்.
செய்ய மாட்டேன் என்று சொல்வதும் மரியாதை இல்லை. பழைய சரோஜாதேவி பாடல் சட்டென்று நினைவுக்கு வந்தது.
கைராசி படம்.

உன்னை ஒன்று கேட்பேன் பாடி இருந்தால் பொருத்தமாகத் தான் இருந்திருக்கும்:)

ஆமாம் அன்று பழங்காந்ததம் வழியே நடந்ததும் மறக்க முடியாதது தான்.
உங்கள் அன்பு பின்னூட்டத்துக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின். அதிரா.
நீங்களும் பார்ததீர்களா!
இளைப்பது தானேம்மா நன்மை.! பாடலும் பேச்சும் உங்களுக்கும் பிடித்ததில் மிக மகிழ்ச்சிமா.
மிக மிக நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு நேர் காணல் மா. பார்த்து ரசித்தோம்.

நேர்காணலில் என்னையும் சக வலைப்பூ நண்பர்களையும் குறிப்பிட்டு இருப்பதில் மகிழ்ச்சி.

KILLERGEE Devakottai said...

யூடியூப்பில் தங்களது பேட்டி முழுமையாக கேட்டேன் அருமை.

கருத்துரை இட்டேன் மீண்டும் கண்டால் காணவில்லை.

vaanampaadi said...

அன்புள்ள வல்லிம்மா , நேர்காணல் அருமை மா. முதல் முறை உங்களை கண்டு மகிழ்ந்தேன்! நிறைய நாட்கள் பழகியது போன்ற ஒரு உணர்வு! உங்கள் அன்பான வார்த்தைகள் கேட்க நல்லதாய் இருக்கிறது அம்மா! "Never hurt anybody " எனக்கு நானே எப்பொழுதும் சொல்லிக்கொள்வது அம்மா.பாடல்களும் அழகு!

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா உங்க வாய்ஸ் செம!! நல்ல இன்டெர்வியூ...

நீங்க பேசினதை ரொம்ப ரசித்தேன் அம்மா...நம்ம குடும்பம்னு சொன்னது, யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்பது எல்லாம் ரொம்ப ரசித்தேன். அப்பா பத்தி சொன்னதை ரொம்பவே ரசித்தேன் அம்மா...லவ்லி அப்பா!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ரொம்பரசித்துப் பார்த்தேன் அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

என்ன என்ன வார்த்தைகளோ!!

ரொம்பநல்லா பாடினீங்கம்மா...ரொம்ப ரசித்தேன் நல்ல வாய்ஸ் நல்ல அதே போன்ற ஃபீல் அதுல கொடுத்தீங்க...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நன்றி மா. ஆரம்ப கால நண்பர்களைக் குறிப்பிட்டிருந்தேன்.

நிறையப் பேசி விட்டேனோ என்னவோ.
அக்கறையுடன் கேட்டதற்கு நன்றி ராஜா.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.


வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
அப்படியா மா?
உங்கள் கமெண்ட் ஒரு தடவை பார்த்து நன்றி சொன்னேன்.
பின்னர் காணவில்லை.
ஸாரி மா. அது என் உரிமை பெற்ற காணொளி இல்லை.இன்னோருத்தரோடது.
இங்கும் வந்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வானம்பாடி,
மிக நன்றி மா. நாம் உள்ளத்தால் நெருங்கியவர்கள் தானே.
அதுதான் உடனே பாசம்
வருகிறது.
இத்தனை அன்பும் நமக்குத் தேவையாகத் தான்
இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,

பாடாத குரல் பழுதாக வாய்பபு உண்டு. அன்பு மதுமிதாவுக்கு இசை மிகப் பிரியம் முதல் தடவை சந்தித்த போதே , மாலை நேரம் கடற்கரையில் “மாலைப் பொழுதின் மயக்கத்திலே” பாடிய நினைவு வருகிறது் இது 2009 இல். உங்கள் அன்பு என்னை மீண்டும் உணர்ச்சி செய்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா,
அப்பாவுக்கு மிகப். படித்த படம் வெண்ணிற ஆடை. அடிக்கடி என்னைப் பாடச் சொல்லுவார். இதையும் நைநா பர்சேவும் நாங்கள் மிகவும் ரசித்த பாடல்கள். நன்றி நன்றி நன்றி மா.

மாதேவி said...

மிகவும் அருமை.நன்கு ரசித்துக் கேட்டேன்.

நெல்லைத் தமிழன் said...

பேட்டி நன்றாக இருந்தது. பாராட்டுகள்