வல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு.
சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை.
ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.'
அத்தனை தொற்று கிடையாது.
எப்படி இருக்கிறீர்கள் என்று யாராவது கேட்டால்
கோபம் தான் வருகிறது '
என்று பொரிந்தார் ஒரு நட்பு.
நான் கேள்விப்பட்டது ஊடகங்களிலிருந்துமட்டும் இல்லை!!!!.
பாதிக்கப்பட்ட தோழிகள், அவர்கள் குடும்பங்கள்,
உறவுகள் இவை அடங்கிய செய்திகளே.
அவர்களுக்கு என்னிடம் பொய் சொல்ல வேண்டிய
அவசியம் இல்லை.
பூனை கண்ணை மூடிய கதைதான்.
அவரோ வீட்டை விட்டு நகர்வதில்லை.
எல்லோரும் தடுப்பூசி போட்டுக்
கொண்டாகிவிட்டது.
அனாவசியமாக அமெரிக்காவையோ, லண்டனையோ
குறை சொல்லி ஆக வேண்டியது என்ன???
இந்தியாவின் அண்டை நாடுகள், தென் அமெரிக்க நாடுகள்,
துருக்கி,நெதர்லாண்ட்ஸ் என்று விரிகிறது நோய்த் தொற்று.
ஒரு அலை இங்கே பாதித்தால் அடுத்த அலை
அங்கே பாதிக்கிறது.
அடிப்படையில் நானும் ஒரு சென்னைப் பிரஜை
என்பதையே அவர் மறந்து பேசினது வருந்த வைத்தது.
மிகவும் சிரமமான காலம் தான் இது.
மக்களுடன் சகஜமாகப் பழக் முடியாமல்
மனமே நொந்து போகிறது.
எங்கேயோ தள்ளித்தள்ளி இருக்கும்
பிள்ளைகளை,அவர்களுக்குத் தடுப்பூசி
கிடைக்காத சோகத்தை என்ன சொல்லி மறக்க முடியும்.?
தினசரி பிரார்த்தனைகளைத் தவிர வேறு ஏது
செய்ய முடியும்.
தொற்று பாதித்தவர்கள் சீக்கிரம் மீளவேண்டும்.
மற்றவர்கள் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும்.
மனத் திடமும் ,நல் வார்த்தைகளும் எல்லோரையும் காக்கட்டும்.
22 comments:
விரைவில் இறைவன் துணையால் உலகம் நலம் பெறும் அம்மா.
இதுவும் கடந்து போகும்
சென்னையில் பாதிப்பு இல்லையா? என்ன சொல்ல... இதோ என்னுடன் பணிபுரியும் பெண்மணி நேற்று உடம்பெல்லாம் சில்லட்டுப் போக ஆஸ்பத்திரி கிடைக்காமல் அல்லாடுகிறார். ஆக்சிஜன் லெவல் சரியாய் இருப்பதால் ஒரு நிம்மதி. ஒரு சிறு கிளினிக்கில் தற்காலிகமாக ட்ரிப் ஏற்றிக்கொண்டு திரும்பி இருக்கிறார். என் சகநண்பர்கள் வட்டத்தில் இழப்புகளே தொடர்கின்றன. பாதிப்புகள் நிறைய இருக்கின்றன.. இந்த காலகட்டம் எப்போது தாண்டுமோ என்கிற பதைபதைப்பு நெஞ்சுக்குள். சிலருக்கு இதுபற்றி பேசவே அலர்ஜியாக இருக்கும். அதனால் அப்படிப் பேசுகிறாரோ என்னவோ...
அம்மா நீங்கள் சொல்லுவது போல் பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டது போல என்பது மாதிரிதான் தொற்று பாதிப்பு இல்லை என்று சொல்லுவது.
ஒரு வேளை அவருக்கு விரக்தியோ
என் நட்பு ஒருவரும் இப்படித்தான் நியூஸ்லதான் சொல்றாங்க ஆனா னான் ஆஃபீஸ் போறெனே அங்க எல்லாரும் நார்மலா தான் இருக்காங்க...சும்மா ஜலதோஷம் வராதா அப்படித்தான் கூட இருக்கறவங்களுகு வருது அவங்க பாட்டுக்கு நார்மலா இருக்காங்க...னு சொன்னப்ப எனக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை இத்தனைக்கும் மும்பையில்..
கீதா
'மனத் திடமும் ,நல் வார்த்தைகளும் எல்லோரையும் காக்கட்டும்.' நன்றாக சொன்னீர்கள் .
எங்களுக்கும் இங்கு இதே நிலைதான் ஊசி இல்லை.
உண்மையான நடுநிலையான செய்திகளுக்குப் பஞ்சமாகி விட்டது.. எதிலும் நாட்டமில்லாதது போல் இருக்கிறது... இன்னும் எத்தனை நாட்களுக்கோ.. இறைவனுக்கே வெளிச்சம்...
பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் - இது தான் கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது வல்லிம்மா.
பலர் இதன் தீவிரம் புரியாமல் பேசுகிறார்கள். இன்று கூட அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டியிருந்தது. பலர் மாஸ்க் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். சொன்னால் நம்மை எதிரி போல பாவிக்கிறார்கள்.
இதுவும் கடந்து போகும். தைரியமாக இருங்கள்.
பிரச்சனை, நாம் நினைப்பதைவிட மிக அதிகமாக இருக்கிறது. லைட்டாக பாதிக்கப்பட்டவர்கள், சரியாக ஆனாலும் கேரியராக இருப்பவர்கள், இவங்கள்லாம் வெளில சொல்லிக்கறதில்லை.
இங்க வளாகத்துலயே நிறையபேருக்கு இருக்கு, அதில் பலர் வெளியில் சொல்லவில்லை என்று எனக்கு சந்தேகம்.
அதனால் பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டு என்று சொல்பவர்களைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். உறவுகளில் பல இழப்புகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
அன்பின் தேவகோட்டைஜி,
நலமாக இருங்கள். கண் கூடாக நடப்பதை
நறுப்பவர்களை என்ன செய்யமுடியும்.
நான் ஒன்றுமே கேட்கவில்லை. சென்னையில்
பத்திரமாக இருங்கள் என்று மட்டுமே
சொன்னேன். சொன்ன வேளை சரியில்லை.
பிறகு தோன்றியது.
நான் ஏன் போய்க் கவலைப் பட வேண்டும்?
நெகடிவ் என்று ஏன் பட்டம் கட்டப் படவேண்டும்.
சும்மா இருக்கலாம்.
ஆமாம் ஜி இதுவும் கடப்போம்.
உண்மையே ஜெயக்குமார். கட்டாயம் கடப்போம்.
அன்பின் ஸ்ரீராம்.
இன்னும் தென் தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது.
எல்லாமே உறவினர்கள் சொல்லும் செய்தியே.
காது கொடுத்துக் கேட்க முடியவில்லை.
அறியாமையாலும் ,ஏதோ கோபத்தினாலும்
பேசிவிட்டார், இனிமே பேச மாட்டேன்:)
நமக்கென்னம்மா வேண்டும்...அவர்கள் நலம் தானே.
அதைப் பிரார்த்திக் கொள்ளலாம்.
நன்றிமா.
நீங்கள் தான் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
டெய்லி இந்தக் கோரத்தைப்
பார்க்கிறீர்கள்.
ஒரு வேளை அவருக்கு விரக்தியோ?///////
அப்படிக்கூட இருக்கலாம்.ராஜா.
அன்பு சின்ன கீதாமா.
இவர்களிடம் எல்லாம் பேசிச் சமாளிக்க முடியாது.
எப்பொழுதுமே நாம் சொல்வதுக்குக் கோணக் கட்சி
பேசுகிறவர்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோமே!!!!
இந்த மனிதருக்கு அமெரிக்கா மேலயும் யு கே
மேலேயும் கோபமாம்.
நிதானமாக யோசித்தால் பாவமாக இருக்கிறது.
போனால் போகிறது. அவரும் குடும்பமும் நன்றாக இருக்கட்டும்!!
நன்றி கண்ணா. நீங்கள் பத்திரமாக இருங்கள்.
அன்பு மாதேவி நலமாப்பா.
வெகு நாட்கள் ஆகிறதே பார்த்து.
உங்களுக்கும் ஊசி கிடைக்கவில்லையா.
வயது வரம்பு தளர்த்தி இருக்கிறார்களே.
சீக்கிரம் கிடைக்கட்டும். பாதுகாப்புடன் இருங்கள்.
அன்பின் துரை,
நலமாக இருங்கள்.
ஆமாம், செய்திகளைத் திரித்து சொல்வது சில பத்திரிக்கைகளின்
விஷம புத்தியால் நிகழ்கிறது.
நடு நிலைமை எங்கே இருக்குமா?
நம் உறவுகள், நட்புகள் வட்டத்தில் நடக்கும்
பாதிப்புகளைத்தான் நாம் உணர முடிகிறது.
நீங்கள் பத்திரமாக இருக்கவும்.
அன்பின் வெங்கட்,
ஆமாம் மா. என் சகோதரி ஸ்ரீரங்கத்தில்
இருக்கிறார். அவரும் அவர் கணவரும் மட்டும்.
அவர்கள் இருக்கும் அபார்ட்மெண்ட்டில்
தொற்று வந்திருக்கிறது. இருவரும் தடுப்பூசி
போட்டுக் கொண்ட பின்னும்
வெளியில் செல்லத் தயங்குகிறார்கள்.
நீங்களும் ,ஆதியும், குழந்தையும்
பத்திரமாக இருங்கள்.
யாரோ ஏதோ சொல்லிக் கொள்ளட்டும்.
அன்பு முரளிமா,
அந்த உண்மை நமக்குத் தெரிகிறது. மகளின் மச்சினர்
குடும்பம் பங்களூரில் தான் இருக்கு.
அங்கு பரவல் ஆரம்பித்ததும்,
ப்ளாக் ப்ளக்காக கிருமி நாசினியை மேலிருந்து தெளித்தார்களாம்.
பாவம் அந்தப் பெண்ணின் வயதான பெற்றோர்
உடன் இருக்கிறார்கள்.
நடப்பது அவர்களுக்கு மிக முக்கியம் .
இப்போது அதுவும் செய்வதில்லை.
லிஃப்ட் உபயோகிப்பதில்லை.
ஏதோ அசட்டுத்தனமாகப் பேசினால் பேசிவிட்டுப்
போகட்டும்.
நாம் சரியாக இருக்கலாம். நன்றி மா.
//தொற்று பாதித்தவர்கள் சீக்கிரம் மீளவேண்டும்.
மற்றவர்கள் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும்.
மனத் திடமும் ,நல் வார்த்தைகளும் எல்லோரையும் காக்கட்டும்.//
ஆமாம் அக்கா. நானும் உங்களுடன் சேர்ந்து பிரார்த்திக்கிறேன்.
நிறைய பேர் வந்தவர்கள் சொல்ல மறைக்க காரணம் வீட்டை ஒதுக்கி வைத்து விடுவார்கள் அதனால் இருக்கும்.
பாட்டு நல்ல பாட்டு.
அன்பு கோமதி மா,
வாழ்க வளமுடன். அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன்.
இவர்கள் சொல்லாமல் இருப்பதால் எத்தனை தீமை
என்று தெரியவேண்டும்.
அவர்கள் நிலைமை மிகவும் அனுசரித்துப் போக வேண்டியது.
இப்போது ஆறடி தள்ளி இருந்தால் கூட
இந்தப் புது வேரியண்ட் தாக்குகிறதாமே.:(
என் தோழியின் மகள் நல்ல படியாக
மருத்துவமனையிலிருந்து திரும்பி விட்டார்.
ஆனால் அதுவரை அவள் பட்ட பாடு எங்களுக்கு மட்டுமே
தெரியும்.
எல்லாம் சரியாக ஆகட்டும் அம்மா.
வீட்டை விட்டு வெளியே போகலைனாக் கூட வருது என்கிறார்கள். இதிலே ஒண்ணுமே இல்லைனு வேறே சொல்றாங்களா? எனக்கென்னமோ நோயின் தாக்கத்தைக் குறைத்துச் சொல்கிறார்கள் என்றே தோன்றுகிறது. நேற்றுச் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வாசலில் காத்திருந்த ஆம்புலன்ஸுகள். பரிதாபம்.
அன்பு கீதாமா,
அவர் ஏதோ கோபத்தில் சொன்னார் என்று தோன்றியது.
அதற்காக என்னைக் கோபித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.!!!
தினமலர், தினமணி எல்லாம் படிக்கும் போதே
மனம் கலங்குகிறது.
ஆமாம் வீட்டிலிருந்தால் கூட வரவாய்ப்பு
உண்டு என்றே சொல்கிறார்கள்.
எங்கே போகமுடியும்.?
கவசம் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறேன்.
பகவான் காப்பாற்றட்டும்.
இங்கே நிலைமை மோசம் தான் . ஆனாலும் கொஞ்ச பேர் மாஸ்க் என்பது முகவாய் மூடி என்று புரிந்து கொண்டுள்ளனர்
அன்பின் அபயா அருணா,
அதுதான் வேதனை. தெரிந்தும் தெரியாதது போல
இவர்கள் இருப்பதால் எத்தனை கேடு விளைவிக்கிறார்கள்.
Post a Comment