Blog Archive

Saturday, May 29, 2021

மனம்

வல்லிசிம்ஹன்

நோய்களில் எழுபது சதவீதம் மனம் சம்பந்தப் பட்டவை தான்.

ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான் வெளிப் படுத்த முடியும்.

ஆனால் நோயின் துவக்கம் என்னவோ மனத்தில்தான்.

நோய் நீங்கி விட்டது என்கிற எண்ணத்தை மனதிற்குள் செலுத்தி விட்டால் நோய் மறைந்து விடும்!

மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு.

உங்கள் உடலில் எல்லாவற்றையும் மனம்தான் நடத்திச் செல்கிறது.

உங்கள் மனதை மாற்றுவதன் மூலமாக உடலிலுள்ள எழுபத சதவீத நோய்களை மாற்ற முடியும்.

உங்கள் மனம் உங்களை சில நோய்களுக்குத் தயாராக வைத்திருக்கிறது.

சில நோய்களில் இருந்து உங்களைப் பாது காக்கிறது.

உங்கள் மனம்தான் உங்கள் உலகம்.
உங்கள் மனம்தான் உங்கள் ஆரோக்கியம்.

உங்கள் மனம்தான் உங்கள் நோய்.

நீங்கள் உங்கள் சொந்த மனதை தூக்கிப் போடுங்கள்.

அப்போதுதான் எதார்த்தம் என்னவென்று தெரிய வரும்.

அதன் பிறகு உங்கள் மனம் பிரபஞ்ச மனம் ஆகிறது.

உங்கள் சொந்த மனம் உங்களிடம் இல்லாத போது உங்கள் உள்ளுணர்வே பிரபஞ்சமாகிறது.

உங்கள் எல்லா பிரச்சினைகளுமே உள ரீதியானவை.

உடலும் மனமும் இரண்டல்ல.

உடலின் உள்பகுதி தான் மனம்.

உடலின் வெளிப்பகுதியே மனம்.

உடலில் துவங்கும் எதுவும் மனத்திற்குள் 
நுழைய முடியும்.

அதுபோல மனத்தில்  துவங்கி உன் உடலுக்குள் நுழைய முடியும்.

ஓஷோ

மருத்துவத்திலிருந்து 
மனமற்ற நிலை வரை
உடல் மனம் ஆரோக்கியம்.

A Forward from cousin Subha Srivathsan.

14 comments:

Geetha Sambasivam said...

நேற்றைய தூக்கமில்லா இரவுக்குப் பின் சிந்தனைகள் தறிகெட்டு ஓடுவதற்குக் கவலையாக இருந்தது. அதற்குப் பதிலாக அமைந்துள்ளது இந்தப் பதிவு. மனதைக் கட்டுப்படுத்தும் வித்தை இன்னமும் கைவரவில்லை. முயற்சி செய்கிறேன். நல்லதொரு கருத்துள்ள பதிவு. சிலருக்கு ஓஷோவைப் பிடிக்காது. ஆனால் ஓஷோ என்பதால் ஒதுக்கிவிட முடியாது.

ஸ்ரீராம். said...

நல்ல பகிர்வு.   இன்று காலை நாலரை மணிக்கு இதை என் மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். 

KILLERGEE Devakottai said...

அற்புதமான கருத்து அம்மா.
இன்றைய நிலையில் எனது மனதுக்கு இதமாகியது.

மனதை நாம் தூக்கி வீசிவிடவும் முடியாது. அது இறுதிவரை நம்மை விட்டு நீங்காது.

கோமதி அரசு said...

மனம் பற்றிய பகிர்வு அருமை.

மனம் வலிமையாக இருந்தால் எல்லாம் நலமாகும்.

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் சரியே அம்மா. என் மகனும் இதை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பான் இருக்கிறான்...மனதில் தான் பிரச்சனை தொடங்குகிறது. நம் மனதை மகிழ்வாகவும் அமைதியாகவும் வைத்துக் கொண்டுவிட்டால் நோய் வந்தாலும் நேர்மறை எண்ணங்களுடன் இருந்துவிட்டால் முக்கால் வாசிக்கும் மேல் பிரச்சனைகள் குறைந்துவிடும்.
ஆனால் அந்த மனதிற்கு லகான் போடுவதுதானே பிரச்சனை!!! ஹா ஹா அதற்குத்தான்மூச்சுப் பயிற்சி, தியானம், பிரார்த்தனைகள் என்று இருக்கிறதே ஆனால் மனம் அதற்கும் பயிற்சி பெற வேண்டுமே அதற்கும் மனம் ஒத்துழைக்க வேண்டும் மனப்பயிற்சி என்பது எளிதல்ல....

வெகு எளிதாகச் சொல்லிவிடலாம்....மனதை மகிழ்வாக வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தால் பிரச்சனைகள் சமாளிப்பது எளிது என்று சொல்வதுதான்...ஆனால் சொல்வது எளிது செயல்தானே ஹா ஹா ஹா...

கூடியவரை முயற்சி செய்வோம் இல்லையாம்மா?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சரணாகதி தத்துவம் நன்றாக வொர்கவுட் ஆகும் இல்லையா அதற்கும் மனம் ஒத்துழைப்பு!! அவசியம்..

கீதா

நல்ல பதிவு. கருத்து. பிரச்சனைகளுக்குக் காரணம் மனதுதான் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அது போல இறைவனை முழுவதும் நம்பினால் மனம் அமைதியாகப் பிரச்சனைகளைக் கடந்து செல்லும் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கை.

துளசிதரன்

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் பற்றிய பகிர்வு அருமை

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

நாம் ஒரு பக்கம் பசங்க ஒரு பக்கம் என்று இருக்கும் போது
ஏற்படும் கலவரம் சகிக்க முடியாதது.
அவர்கள் என்ன தான் நமக்கு
ஆறுதல் சொன்னாலும் காதுக்கு வந்து சேரும்
விஷயங்கள்
நம்மை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.

நானும் இசையில், பக்தி சொற்பொழிவுகளில்
மனம் செலுத்தி மாற்றிக் கொள்ளப்
பார்க்கிறேன்.
சென்னை செய்திகள் இப்பொழுது குறைந்திருக்கிறது.
நல்லதே நினைப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

இங்கே பேரனும் , பணி இடத்துக்கு நேரில் போக வேண்டும்.
அவனுக்கு அதில்
கொஞ்சம் தளர்வு உள்ளது. நாங்கள் தான் பேசி
மாற்றுகிறோம்.
நிறைய பெண்கள் வேலைக்கு நேரில் போக வேண்டூம்
என்றே விருப்பப் படுகிறார்கள்.
ஓவ்வொருவருக்கு ஒவ்வொரு மன நிலைப்பாடு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,

மனசை வசப்படுத்துவது எவ்வளவு கடினமப்பா.
இந்த மாதிரி தத்துவங்களைக் கேட்கும்போது
நாம் செல்ல வெகு தூரம் இருக்கிறது
என்று புரிகிறது.

நாம் இருக்கும் வரை மனமும் இருக்கும்.
நல்வழியில் செலுத்தலாம். நலமாக இருங்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

மனம் வலிமை பெற வேண்டும். பயிற்சியினால் தான் அமைய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

தியானம், பிரார்த்தனைகள் என்று இருக்கிறதே ஆனால் மனம் அதற்கும் பயிற்சி பெற வேண்டுமே அதற்கும் மனம் ஒத்துழைக்க வேண்டும் மனப்பயிற்சி என்பது எளிதல்ல./////////////////////////ஆஹா இதுவல்லவோ உண்மை.
உட்கார முடியவில்லையே சின்ன கீதாமா.

பெருமாளைப் பார்த்து ஹலோ சொல்லி காப்பாத்து சொல்லி
நீதான் பாத்துக்கணும்னு சொல்லியாறது:)

கவலைப் படாமல் இருக்க முயற்சிக்கிறேன்.

உங்கள் மகனுக்கு,என் பேரனுக்கு அளவுக்கு மேல அற்புத புத்தி.
நன்றாக இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

நோய் வந்தாலும் நேர்மறை எண்ணங்களுடன் இருந்துவிட்டால் முக்கால் வாசிக்கும் மேல் பிரச்சனைகள் குறைந்துவிடும். yes this is true.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி மா,

எல்லா நலங்களும் விளைவது மனதினால் தான்.
எல்லாக் கோளாறுகளுக்கும் காரணமும் அதுதான்.

முடிந்த வரை கசடுகள் உள்ளே சேராமல்
ஆரோக்கியமாக இருப்போம். நலமுடன் இருங்கள் மா.