Blog Archive

Sunday, May 30, 2021

அப்பா 100.வந்தனங்கள். வாழ்த்துகள். May 30.



வல்லிசிம்ஹன்  Happy Birthday  dearest Appa.


வெற்றிலைப் பெட்டி இல்லாமல் அப்பாவால் எங்கேயும் 
செல்ல முடியாது:)உன் செல்லமாப்பா. அதுதான் கையோடு வருகிறதா என்று நாங்கள் கேலி செய்வோம்.
எப்பொழுதுமே மெல்லிய தேகம். ஆனால் உறுதி வாய்ந்தது.

என்ன வேலை செய்யவும் அலுக்க மாட்டார்.
அம்மாவுக்கு வலது தோள் கை தூக்க முடியாமல்
போனபோது அம்மியில் கூட அரைத்துத் தந்ததாக 
அம்மா சொல்வார்.

தேவையான போது சமைக்கத் தெரியும்.
கீரைக் குழம்பு ஸ்பெஷலிஸ்ட்.
உ.கிழங்கு வதக்கல், ரசம். இதுதான் நன்றாகத் தெரியும்.
நிறைய எண்ணேய் வைத்து ,மூன்று நாளுக்கு வேண்டிய 

  அப்பளம் வடாம் பொரித்து வைத்து விடுவார்.

வானொலிப் பெட்டி எனக்காகவே வாங்கி வந்தார்.

எப்படி இயக்க வேண்டும் என்றும் அறிவுரை கூடவே வரும்.
அந்த ஸ்டேஷன் கண்டு பிடிக்கிற அவசரத்தில்
கடக்கா முடக்கா என்று திருப்பாதே!
மென்மையாகக் கையாண்டால் எப்பொழுதும் உழைக்கும்
என்று  சொல்லிக் கொண்டே இருப்பார்,

அவர் தன் சைக்கிளைக் கையாள்வதும் அது போலத்தான்.
பின்னாட்களில் தம்பி தன் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரைத் 
துடைக்கும் போது அப்பாவை நினைவு கொள்ள வைப்பான்,

பெரியவன் அப்பா சொன்ன சொல்லைத் தட்ட மாட்டான்.
நான் தான் அவர் சொல்லுக்கு 
ஏன் என்று கேட்பேன்.
தணிஞ்சு போகணும் மா. எப்பவும் அதுதான் நல்லதுன்னு
சதா அறிவுரை,.
பெற்ற மக்களிடம் அத்தனை பாசம். பொத்திப் பொத்திக் 
காப்பார்.

அந்த அப்பாவுக்கு இன்று நூறு வயது.
நல்லபடியாக இருந்து சட்டென்று இறைவனடி 
சேர்ந்தார். அவர் போல மானஸ்தனுக்கு எல்லாம்
நீண்ட நாள் வியாதி எல்லாம் திகில் 
கொடுத்திருக்கும். ராமனைத் துதித்தபடியே
கண்கள் பிரகாசமாகத் திறந்திருக்க கைகள்
குவித்து இறைவனை அடைந்தார்.
அப்பா எங்கிருந்தாலும் நன்றாக இரு.

25 comments:

கோமதி அரசு said...

வெற்றிலை பெட்டியை "வெற்றிலை செல்லம்" என்று தானே சொல்வார்கள்.
அன்பான அப்பாவின் நினைவுகள் அருமை.
அப்பாவிற்கும், அம்மாவிற்கும் வணக்கங்கள்.



கரந்தை ஜெயக்குமார் said...

வணக்கங்கள்

Bhanumathy said...

அப்பா இல்லாவிட்டால் என்ன? அப்பாவின் நினைவுகள் எப்போதும் உண்டே?

Thulasidharan V Thillaiakathu said...

தேவையான போது சமைக்கத் தெரியும்.
கீரைக் குழம்பு ஸ்பெஷலிஸ்ட்.
உ.கிழங்கு வதக்கல், ரசம். இதுதான் நன்றாகத் தெரியும்.
நிறைய எண்ணேய் வைத்து ,மூன்று நாளுக்கு வேண்டிய

அப்பளம் வடாம் பொரித்து வைத்து விடுவார்.

வெரி ஸ்வீட் தாத்தா!!!

வனொலிப் பெட்டி என் அப்பா எனக்கு வாங்கித்தந்ததில்லை ஆனால் தன்னுடையதை ரொம்ப பத்திரமாக வைத்திருப்பார் அதை நான் இயக்கிப் பார்க்கட்டா என்றால் இப்படித்தான் சொல்லிக் கையில் கொடுப்பார். என்றாலும் கெட்டுவிடாமல் ரொம்பவே பாதுகாப்பார்.

அந்த அப்பாவுக்கு இன்று நூறு வயது.//

தாத்தாவுக்கு என் வாழ்த்துகளும் அம்மா.

நல்ல நினைவுகள். ரொம்ப இனிமையான தாத்தா என்று தெரிகிறது. உங்கள் கல்யாணப் புகைப்படம் வாவ்!!! நீங்க ரொம்பக் குட்டிப் பெண்ணாக...ஆஹா என்று சொல்லிக்கொண்டேன்.

பதிவை ரசித்தேன் அம்மா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் அப்பாவின் நினைவுகளைச் சொன்ன விதம் அருமை. நல்ல பொறுமைசாலியான அப்பா.

உங்கள் அப்பாவிற்கு எங்கள் வாழ்த்துகள்! பாதங்களை வணங்குகிறோம்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அப்பா எங்கிருந்தாலும் நன்றாக இரு.//

கண்டிப்பாகத் தாத்தா இறைவனின் நிழலில் உங்கள் எல்லாருக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார் அவரது ஆசிகள் உங்கள் எல்லாருக்கும் எப்பவும் இருக்கும் அம்மா.

அவருக்கு நமஸ்காரம்.

கீதா

வெங்கட் நாகராஜ் said...

அப்பாவின் நினைவுகள் நன்று. 100 வருடங்கள்.... அவர் எங்கே இருந்தாலும் நன்றாகவே இருப்பார் - அவரது ஆசிகள் என்றைக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இருக்கும். இருக்கட்டும்.

ஸ்ரீராம். said...

நெகிழ்வான பதிவு.  அப்பாதான் எந்தெந்த வகையில் எல்லாம் ஒவ்வொருவர் நினைவிலும் நிற்கிறார்...

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்... இனிமையான நினைவுகள்...

Geetha Sambasivam said...

அருமையான அப்பா! உங்கள் நினைவுகள் அதை விட அருமை. எங்க மாமனாரிடமும் வெற்றிலைச் செல்லம் உண்டு. வெற்றிலை வாங்கி மாளாது. கவுளி கவுளியாகக் கும்பகோணம் வெற்றிலை வாங்குவோம். வடக்கே வந்ததும் அந்தக் காரமான வெற்றிலை கிடைக்காமல் கொஞ்சம் கஷ்டப்பட்டார்.

Geetha Sambasivam said...

உங்கள் அப்பாவுக்கு எங்கள் நமஸ்காரங்கள். அவர் சமையலைக் கூட நன்றாக நினைவு வைத்திருக்கிறீர்கள். போன வருஷம் என் அப்பாவுக்கு 100 வயது பூர்த்தி ஆனதாக அண்ணா குடும்ப வாட்சப்பில் போட்டிருந்தார். நானும் என் பதிவில் அப்பா/அம்மா இருவரும் சேர்ந்து இருக்கும் படம் போட்டிருந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா.
வாழ்க வளமுடன்.
ஆமாம் நீங்க சொல்வது சரிதான். அது வெற்றிலைச் செல்லம் தான்.
அதுக்குள் ரசிக்லால் பாக்கு, அந்த வாசனை
சுண்ணாம்பு, கொஞ்சம் புகையிலை....:)

எத்தனை கதையில் இந்த வெற்றிலையின் மகிமை வரும். அப்பாவுக்கு அது உயிர்.
நல்ல நினைவுகள். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார் மிக நன்றி மா.
அவரின் ஆசிகள் நம்மைக் காக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானுமா,

அப்பா இல்லை என்றே நினைப்பதில்லை:)
நான் இங்கிருந்து கிளம்பும் வரை அவர்களும் என்னிடம்
இருப்பார்கள்.

மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
அப்படிச் சொல்லுடா தப்பளைக் குஞ்சுன்னு சொல்ல ஆசை:)
அப்பா சொல்வார்.

நிறைய நட்புகளுடன் சேர்ந்திருக்க மிகப் பிடிக்கும்.

அதுதான் நீங்கள் எல்லோரும் இங்கே வந்திருக்கிறீர்கள்.
கட்டாயம் நாராயணத் தாத்தா உங்களை எல்லாம்
பார்த்துக் கொள்வார்.
அவ்வளவு விசால ஹ்ருதயம்.
அப்பா சரியான திருக்குறுங்குடி பைத்தியம்.!!!!!அவர்கள் மொத்தம்
பத்துப் பதினாறு பேரன் பேத்திகள்
கோடையில் ஒன்று கூடுவார்களாம்.
மிக மிக நன்றி மா.கல்யாணப் பொண்ணு சின்ன வயசெல்லாம் இல்லாம். பதினெட்டு வயது:)

வல்லிசிம்ஹன் said...

ஓ!! ஆமாம் அன்பு துளசிமா.
பொறுமைசாலி தான். மிகப் பொறுமை சாலி.
இல்லாவிட்டால் என்னை மாதிரி வாயாடிக்கெல்லாம்
திருமணம் செய்து அனுப்ப முடியுமா:__)))))))

உண்மையில் மிக நல்ல அப்பாவி மனிதர்.
மிக நன்றி மா. அப்பாவுக்கு வரும் பெருமைகளை
நான் வாங்கிக் கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

கண்டிப்பாகத் தாத்தா இறைவனின் நிழலில் உங்கள் எல்லாருக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார் அவரது ஆசிகள் உங்கள் எஇத்தனை பேரன் பேத்திகள் அவருக்குக் கிடைக்கப்
போவதை அறிந்திருப்பார் அன்பு சின்ன கீதாமா.
முழுக்கவும் கருணையின் பிம்பம்.
நம்மை எல்லோரையும் ஆதரிப்பார்.
நன்றி ராஜா.eல்லாருக்கும் எப்பவும் இருக்கும். அம்மா/////

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
நன்றி ராஜா.

அப்பாவின் மனம் மிகப் பெரியது.
அனைவரிடமும் நற்பெயரை வாங்கியவர்.

எப்பொழுதும் தன் சந்ததியைக் காப்பார் என்று
பூரண நம்பிக்கை உண்டு. நன்றாக இருங்கள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா.,
அப்பா தளி வெற்றிலையாகத் தான் வாங்குவார். எண்ணி நாலு வெற்றிலை தான் ஒரு
வேளைக்கு.
ஒரு நாளைக்கு நாலுதடவை போட்டுக் கொள்வார்.
முரட்டு வெற்றிலை பிடிக்காது.
உங்கள் மாமனாரும் வெற்றிலைப் பிரியரா!!
அட!

உங்கள் பெற்றோர் படத்தை முக நூலில்
பார்த்திருக்கிறேன்.
நீங்கள் உங்க அம்மா ஜாடைதான்.
எத்தனையோ நல்ல நினைவுகளும் அல்லாதவைகளும்
உண்டு,.
நல்லதை நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, உங்கள் நமஸ்காரங்கள் பெரியவர்களைச் சேர்ந்து நம் குழந்தைகளைக்
காக்கட்டும். காக்கும்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன் ,
மிக மிக நன்றி மா. என் நினைவுகளில் திண்டுக்கல்லுக்குப் பிரதான
இடம்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
உண்மைதான். அப்பா நிறைய பகவத் கீதை
பற்றி எழுதி இருக்கிறார். என்னிடம் தான் அவை இல்லை.
உங்களை மாதிரி அந்தப் பொக்கிஷங்களைக்
காக்க முடியவில்லை.

நெல்லைத்தமிழன் said...

ரசித்த நெகிழ்ச்சியான பதிவு. நீங்க அனுபவங்களை எழுதும்போது அப்படியே கண் முன் நிறுத்திவிடுகிறீர்கள்.

நல்ல நினைவைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அப்பாவைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே இருக்கலாம்.ரொம்ப நேர்மையான தொட்டியிலிருந்து தொண்டைமான் வரை என்று சொல்வார்கள்,அது போன்ற மனிதர்..நன்றி மா.

நெல்லைத் தமிழன் said...

//பெரியவன் அப்பா சொன்ன சொல்லைத் தட்ட மாட்டான்.
நான் தான் அவர் சொல்லுக்கு ஏன் என்று கேட்பேன்.// - இந்தப் பெண்களே இப்படித்தான் போலிருக்கு. என் பையன், பிடிக்குதோ பிடிக்கலையோ நான் சொல்வதைத் தட்டமாட்டான். அவனை ரோபோட் ஆக்கிடக்கூடாது என்று நான் அவனிடம் ஒன்றுமே சொல்வதில்லை. சொன்னாலும் அபூர்வம். பெண், எல்லாத்துக்கும் கேள்வி கேட்பாள். அதுக்கு நியாயமா பதில் சொல்ல முடியாது. அதுனால், உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லித் தப்பிச்சுடுவேன். ஹாஹா