Blog Archive

Tuesday, May 18, 2021

திரு கி. ராஜ நாராயணன் ஐயா.






வல்லிசிம்ஹன்

அன்பின் ஐயா திரு .ராஜ நாராயணன் இயற்கை எய்தினார்.
2006 ஆம்  ஆண்டு வீட்டுக்கு வந்து எங்களைக் கௌரவித்தது 
இன்னும் இனிமையாகத் தங்கி இருக்கிறது.
சென்று வாருங்கள் ஐயா.


பெருந்தன்மையின் வடிவம். 
அவருடையாவது எண்பதாவது வயதின் விழா சென்னையில் கொண்டாடினார்கள். 
அதற்கு முன் அவரது பாண்டிச்சேரி வீட்டிற்குத் தொடர்பு கொண்டு பேசினேன்.

விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்புக் கொடுத்தார்.
அங்கெல்லாம் போக அவ்வளவு தைரியம் 
இல்லை.
ஐய்யா நீங்களும்  அம்மாவும் எங்கள் வீட்டுக்கு வரவேண்டும் 
என்று மட்டும் கேட்டுக் கொண்டேன்.

ஏனெனில் அவரது அணுகுமுறை அவ்வளவு எளிமையாக
இருந்தது.

சிங்கமும் நானும் ,ஐயாவையும் அம்மா கணவதியையும்
வாசலில் இருந்து அழைத்து வைத்து.,
உட்கார வைத்து ,நமஸ்கரித்து வாங்கி வைத்திருந்ததையும்
கொடுத்தோம்.
மிகமிகமிகப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார்கள்.

30 நிமிடங்களே தங்கி இருந்தவர்கள்,
அதற்குள் வீடு ,செடி,மரம் ,கிணறு என்று எல்லாவற்றையும்
பார்த்துவிட்டு,
அப்போது வளர்ப்பில் இருந்த பெரிய அரோவானா
மீனையும் பார்த்து மகிழ்ந்து பேசிச் சென்றார்கள்.

என் தாய் தந்தையே வந்திருந்தது போல உணர்ந்தேன்.
அவரது புத்தகங்களில் அவரது கையெழுத்தையும் வாங்கிக் 
கொண்டேன்.
விடை பெற்றுச் சென்றவர் 
அடுத்த தபாலில் இன்னும் இரண்டு 
புத்தகங்களும் ,கடிதம் ஒன்றையும் அனுப்பி விட்டார்.

கிருஷ்ண பரமாத்மா வந்த ஆனந்தத்தில் நான் இருந்தேன்.

இவ்வளவு பெரிய எழுத்தாளர் ,இவ்வளவு
இறங்கி வந்து பாசம் காட்ட முடியுமா என்ற 
வியப்பை இன்னும் நன்றியுடன் அனுபவிக்கிறேன்.

அவரது எழுத்துகள் என்றும் நம்முடன்.
வணக்கம் அப்பா.

21 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவரது எழுத்துக்கள் என்றென்றும் வாழும்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா கி ரா அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்தாரா!! அட! எவ்வளவு பெரிய எழுத்தாளர்!

அவரது கைப்பட எழுதிய கடிதம் பொக்கிஷம். நல்ல நினைவுகள் அம்மா. அவரது மறைவு இலக்கிய உலகிற்குப் பெரிய இழப்புதான். ஆழ்ந்த அஞ்சலிகள்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அவரது புத்தகங்களைக் கொடுத்து குசேலரின் பரிசு என்று சொல்லியிருக்கிறாரே. விலைமதிப்பற்றவை இல்லையா! இப்போதும் அப்புத்தககங்கள் உங்களிடம் இருக்கும் இல்லையா...பொக்கிஷம் தான் அவையும்.

கீதா

நெல்லைத் தமிழன் said...

அவரது எழுத்துகள் மூலமாகத்தான் பரிச்சியம். நிலத்து எழுத்துக்குச் சொந்தக்காரர்.

Geetha Sambasivam said...

நல்ல மனிதர். இத்தனை ஆண்டுகள் நம்முடன் இருந்ததுக்கே நமக்கெல்லாம் பெருமையாக இருக்கும். கதைகள் அனைத்தும் வெகு எளிமையாகவும் யதார்த்தமாகவும், அந்தக் காலத்துச் சில வழக்கங்களை எடுத்துச் சொல்வதாகவும் இருப்பதோடு வட்டார வழக்கு மொழியிலும் இருக்கும். என்னிடம் கோபல்ல கிராமம் இருந்தது. தொலைந்து விட்டது. நேரில் பார்த்தது இல்லை. உங்களுக்குக் கொடுத்து வைச்சிருந்தது. நேரில் வந்திருந்ததையும் ஏற்கெனவே எழுதி இருந்தீர்கள்னு நினைக்கிறேன்.

மாதேவி said...

அவரின் அன்பும் எளிமையும் மனம்கிறங்க வைக்கிறது. அவருக்கு நமஸ்காரம் .

எனது கணவரும் 'ராஜநாராயணன் கதைகள் ' மீண்டும் படிக்க இன்று எடுத்து வைத்துள்ளார்.

yaathoramani.blogspot.com said...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கதை சொல்லி. வட்டார வழக்கில் இவரது எழுத்து மிகவும் சிறப்பு. சில நூல்களை படித்திருக்கிறேன். கோபல்ல கிராமம் உட்பட.

கோமதி அரசு said...

அருமையான மலரும் நினைவுகள்.

அவர் கைபட எழுதிய கடிதம் மிக அருமை.

//கோபல்ல கிராமம்//
தொடர்கதையாக வந்ததை பைண்ட் செய்து வைத்து இருக்கிறேன்.
என் மாமனார் வீட்டு மகன்கள் மூன்று பேருக்கும் மிகவும் நெருக்கம் அவர்கள் கல்யாணத்திற்கு வந்து இருக்கிறார்கள்.
அவர்கள் மூவரும் முக நூலில் ஐயாவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார், மிக மிக உண்மை.நமக்கெல்லாம் பெரிய சொத்தாக அவர் எழுத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
அவர் நம் வீட்டுக்கு வருவதற்கு என் தாயாரும் ஒரு காரணம்.
அம்மாதான் முதன் முதலில்
ஐய்யாவைப் பற்றி எனக்கு சொல்லி
ஜூனியர் விகடனில் வந்த தொடரைப் படிக்கச் சொன்னார்.

அதையே புத்தகமாக வந்த போது,
அம்மாவுக்குப் பரிசளித்தேன்.
அதன் பின்னால் , கடைசிப்பக்கத்தில்
எனக்கு அம்மா எழுதி இருந்தார். ''அன்புள்ள ஆண்டாள்,
இந்த எழுத்தாளருக்கு என் அன்பு நமஸ்காரங்களைச் சொல்லு''
இதை அம்மா மறைந்த பிறகு பார்த்தேன்.
அதுதான் ,என்னை அவருக்குத் தொலை பேசியில்
தொடர்பு கொள்ள வைத்தது.

நான் வரேனம்மா என்று சொன்னதுதான் உலக அதிசயம்.
பெரியவர்கள் ஆசீர்வாதம் அம்மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம், கிருஷ்ண பரமாத்மா, தன்னைக் குசேலனாகக்
காண்பித்துக் கொண்டார்.
அவரது புத்தகங்கள் அனேகமாக எல்லாமே இருக்கின்றன.

அத்தனை எளிமையை எங்கும் காண முடியாது கீதா மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
கிராமத்திலிருந்து வந்தவர். மண்ணின் மைந்தர்னு சொல்லலாம்.
எங்களை மதித்து வந்தார்கள் அதுதான்
அதிசயம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா.
இப்படியொரு கிராம மண்ணின் அறிமுகம் எல்லோருக்கும் கிடைத்தது எத்தனை
பெரிய அதிர்ஷ்டம்.
நாம் கொடுத்து வைத்தவர்கள் தான்.
அவரின் ஒரு புத்தகத்தை ஒருவருக்கு பரிசாகக் கொடுத்தேன்.
இன்னோருவர் எடுத்துக் கொண்டுபோய்த் திருப்பித்
தரவில்ல:)
புத்தகங்களைக் காப்பது பெரிய வேலைதானம்மா.
நீண்ட ஆயுளும் நிறைந்த வாழ்வும், பிறருக்கு நன்மையும் செய்து விட்டுப் போயிருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
நல்ல புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன. ஒவ்வொரு எழுத்தும்
அத்தனை ஆனந்தன் தரும்.
வேடிக்கையான கதைகள்,கருத்துள்ள நிகழ்வுகள்,
சிரிக்க வைக்கும் சொல்லாக்கம்.
உங்கள் கணவர் எடுத்துப் படிக்கும் புத்தகம்
நல்ல சுவாரஸ்யமாக இருக்கும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ரமணி சார், நன்றி.

ஸ்ரீராம். said...

அருமையான ஒரு படைப்பாளியை இழந்திருக்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்.

அப்பொழுதெல்லாம் புக் ஃபேர் போவதில் அத்தனை ஆர்வம் இருந்தது.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு எழுத்தாளர் புத்தகங்களை
வாங்கும் வழக்கமெங்கள் இருவருக்கும் இருந்தது.

ஐய்யா அவ்ர்களின் புத்தகங்கள் விலையும் குறைவு.
250 ரூபாய்க்கு. ராஜ நாராயணன் கதைகள் வாங்கிய நினைவு,.
நீங்களும் அதே போலப் படித்திருக்கிறீர்கள்.
உண்மையான கதை சொல்லி இவர்தான்.
சரியாகச் சொன்னீர்கள்.

மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
உங்களுடைய இன்னோரு பொக்கிஷமா இது.!!!

படங்களுடன் இருக்கும் என்று நினைக்கிறேன்.
மாமனார் வீட்டு மகன்கள்? நாத்தனார் பிள்ளைகள்?
முகனூலில் பதிந்திருக்கிறார்கள் என்றால் பார்க்க ஆவலாக
இருக்கிறது.நல்ல சிரித்த முகத்துடன் நகைச்சுவை
சேர அவர் பேசுவது உற்சாகமாக இருக்கும்.

உங்கள் உறவுப் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள்மா.
நன்றி.

vaanampaadi said...

அன்புள்ள வல்லிம்மா, கி.ரா அவர்களின் மறைவு பற்றய செய்தி கேட்டவுடன் நான் தங்களை நினைத்துக்கொண்டேன். தங்கள் தளத்தில் அவர் பற்றிய பதிவினை சென்ற வாரம் படித்தேன். ஆழ்ந்த இரங்கல்கள் அம்மா. எழுத்துலகம் தன்னை அன்பாய் நேசித்து எழுதிய ஒரு உயிரெழுத்தை இழந்துவிட்டது. தன்னை குசேலனென்று கூறிக் கொண்டிருக்கிறார். எத்தனை எளிமை. தன் படைப்புகளின் உரிமையை பங்கிட்டதிலும் அவருடைய குணம் விளங்குகிறது!கி. ராஜநாராயணன் பெயரிலேயே ஒரு கம்பீரம். இன்னும் இன்னும் கம்பீரமாய் உயர்கிறார் நம் மனங்களில் .

வல்லிசிம்ஹன் said...

ராஜநாராயணன் பெயரிலேயே ஒரு கம்பீரம். இன்னும் இன்னும் கம்பீரமாய் உயர்கிறார் நம் மனங்களில் .///


அன்பின் வானம்பாடி,
மிக நன்றி மா. பழைய பதிவை நினைவில் வைத்திருக்கிறீர்கள்.
நம் கீதா சாம்பசிவத்துக்கும் நினைவு இருக்கிறது.

எத்தனையோ இடர்களைத் தாண்டி வந்தவர் நம் பெரியவர்.
வாழ்க்கையை முழுதும் வாழ்ந்து ,
நல்ல வார்த்தைகளைச் சொல்லி நமக்கெல்லாம்
முன்னோடியாக இருந்தே மறைந்திருக்கிறார்.

மிகப் பெரிய சுவடை விட்டுச் சென்றிருக்கிறார்.
நம் நினைவைப் போற்றுவோம். நன்றி மா.